செவ்வாய், 21 ஜனவரி, 2020

இயக்குனர் சேரன் என்ன சார் இப்படி புளுகுறீங்க ?

Ksb Boobathi : தமிழகத்தில்_மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று சொன்னவர்களை
விட கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் வரவேண்டும் என்று சொன்னவர்கள் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை இன்றுவரை இதே நிலைதான் உள்ளது எந்தவொரு மாற்றமும் இல்லை. இயக்குனர்சேரன். என்ன சார் இப்படி புளுகுறீங்க ..!
பத்துக்கும் மேற்பட்ட படங்களை எடுத்துருக்கீங்க பல படங்களில் நடிச்சிருக்கீங்க இதெல்லாம் எப்படி என்று கேட்டால் என்னுடைய உழைப்பு என்று எதிர் பதில் வரும் மறுக்கவில்லை.
இதை மேலூரில் இருந்து வந்த ஒரு சேரனால் எப்படி செய்ய முடிந்தது..? கொஞ்சம் பின்னோக்கி செல்வோம் உங்கள் வயது தோராயமாக 50 என்று வைத்துக் கொள்வோம் .
அதாவது நீங்கள் பிறப்பதற்கு முன்பு உங்கள் தாயாரோ தந்தையாரோ அரசு வேலைகளில் இருந்தவர்கள் என்று படித்துள்ளேன். அன்றைய காலகட்டத்தில் மேலாதிக்க சாதிநிலை தாண்டவம் ஆடியபோது அந்த குக்கிராமத்தில் இருந்த இவர்கள் படித்து எப்படி வேலையில் சேர்ந்தார்கள் என்று யோசித்தது உண்டா..?
அன்றைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டுவேலை , கூலிவேல  போன்ற இடங்களில் மட்டுமே இருப்பார்கள் பிறகு எப்படி அரசுவேலைகளில் பணி அமர்த்தப்பட்டார்கள் என்று யோசித்தது உண்டா..?
 மேல்சாதியினர் மட்டுமே படிக்க வேண்டும் என்ற நிலையில் நீங்கள் ஆரம்பகல்வியை , உயர்கல்வியை, பட்டப்படிப்பை எப்படி பெற்றீர்கள் என்றாவது யோசனை செய்தது உண்டா..?

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன்

5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் - அமைச்சர் செங்கோட்டையன் மாலைமலர் ; தமிழகத்தில் 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதலாம் என்று உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 5-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு மாணவர்கள் எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியிலேயே பொதுத்தேர்வை எழுதலாம் என்று உத்தரவிட்டுள்ளோம். எந்த மாணவரும் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று பரீட்சை எழுத வேண்டிய அவசியம் இல்லை. 5 பேர், 8 பேர் இருந்தாலும் அவர்களும் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம்.<
பரீட்சையில் 100-க்கு 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். அதில் எந்த அச்சமும் மாணவர்களுக்கு ஏற்படாது. பெற்றோர்களும், கல்வியாளர்களும் இதில் அச்சப்பட தேவையில்லை.

'ஹைட்ரோ கார்பன் திட்டம்' போராட்டத்திற்கு தயாராகும் மக்கள.. 15 லட்சம் மக்களை வேலையின்றி அகதிகளாக்கபோகும்.

Farmers and fishermen preparing for protest ;'hydrocarbon project' that will turn 15 lakh people into workFarmers and fishermen preparing for protest ;'hydrocarbon project' that will turn 15 lakh people into worknakkheeran.in : ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைக்கு வந்தால் டெல்டா மாவட்டங்களில் குறைந்தது 15 லட்சம் பேர் வேலைகளை அகதிகளாக மாறும் அபாயம் ஏற்படும், மீனவர்களும் விவசாயிகளும் குடும்பத்துடன் போராட்டத்திற்கு ஆயத்தமாகி வருகின்றனர்.காவிரி படுகையை இரண்டு மண்டலங்களாக பிரித்து 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அனுமதி அளித்திருக்கிறது. ஹைட்ரோகார்பன் எடுக்க வேதாந்தா, ரிலையன்ஸ் மற்றும் ஓன்,ஜி,சி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக விவசாயநிலங்களை கையகப்படுத்தும் பணியில் நிறுவனங்கள் இறங்கியிருந்த நிலையில், பொதுமக்களும், விவசாயிகளும், மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் மீனவர்களும் போராட்டத்தில் குதித்ததால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.

பதில் சொல்ல குரல் வேண்டுமா? கோடியை வென்ற கோடீஸ்வரி!

பதில் சொல்ல குரல் வேண்டுமா? கோடியை வென்ற கோடீஸ்வரி!மின்னம்பலம் : கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளியான கௌசல்யா என்பவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ராதிகா சரத்குமார் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி கோடீஸ்வரி. முழுக்க முழுக்க பெண்களுக்கான இந்த நிகழ்ச்சியில் மதுரையைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் கலந்துகொண்டார். வாய் பேசவும் காது கேட்கவும் முடியாத இவர் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் கல்வி கற்றவர். இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது.
எந்த குறையும் சாதனை புரிய தடையாக அமைவதில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக விளையாடினார்.

சிஏஏ தேவையற்றது: வங்கதேசம், ஆப்கன் கருத்து!

மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கன் முன்னாள் பிரதமர் ஹமீது கர்சாய் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். சிஏஏ தேவையற்றது: வங்கதேசம், ஆப்கன் கருத்து!பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சிஏஏவுக்கு எதிராக அண்டை நாடுகளிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அபுதாபியில் நடைபெறும் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, கஃல்ப் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அவரிடம் இந்தியா கொண்டுவந்த சிஏஏ குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது -ரஜினிகாந்த்



தினத்தந்தி: 1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும் நான் கூறவில்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
சென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது; துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான் கூறினேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். மன்னிக்கவும், நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

திங்கள், 20 ஜனவரி, 2020

கனிமொழி : விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும்... வீடியோ


தினகரன் :  சென்னை: விவேகானந்தர் மீது காட்டும் அக்கறையை இந்த அரசு திருவள்ளுவருக்கும் காட்ட வேண்டும் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். ஆர்ப்பாட்டம், கண்டன அறிக்கை மூலமே திருவள்ளுவர் சிலையை பராமரிக்க வைக்க வேண்டியுள்ளது. மேலும் ஹைட்ரோ கார்பன் குறித்து மத்திய அரசின் அறிக்கை சுற்றுச்சுழல் மீது அக்கறை இல்லாததை காட்டுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

அடித்து தூள் கிளப்பும் புதிய தமிழ் எழுத்தாளர்கள் .. சத்தம் போடாமல் வீசும் புயல் ..

Karthikeyan Fastura இன்றுதான் அமேசான் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு
தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலை பார்த்தேன். எழுத்துலகில் ஒரு அற்புதமான கலகம் நடத்தப்பட்டிருக்கிறது. திராவிட சிந்தனை கொண்ட நண்பர்கள் பெருவாரியான இடங்களை பெற்றிருக்கிறார்கள். திரையுலகில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், கோபி நயினார், மாரி செல்வராஜ் போன்றோர் சமீபத்தில் நிகழ்த்தி கொண்டிருக்கும் கலகத்திற்கு சற்றும் குறைவில்லாத கலகமே எழுத்துலகில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தப் போட்டி முடிவுகள். அவர்களில் Sen Balan, பா.ச. பாலசிங் என் நண்பர்கள் எனும்போது இன்னும் கெத்தாக உணருகிறேன்.
சென்ற வருடம் Sen Balan தொடங்கிவைத்த இந்தக் கலகம் காட்டுத்தீ போல நம் நண்பர்களை தொற்றிக்கொண்டு பலரை எழுத ஊக்குவித்தது. இந்தியாவிலேயே அதிக அளவில் போட்டியில் பங்கேற்ற மொழியாக தமிழ் திகழ்கிறது.
இன்றைய பொழுதில் இந்த தேசத்தின் ஒவ்வொருவர் தலையிலும் கத்தி தொங்கவிடப் பட்டுள்ளது. பாசிஸம் இண்டுஇடுக்கெல்லாம் பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் ஓரொரு பிரச்சனையை உருவாக்கி கொண்டே வருகிறார்கள். இன்று காவிரி டெல்டாவில் ஹைட்ரொகார்பன் எடுக்க புதிதாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அதற்கு மக்களிடம் எந்த கருத்து கேட்பதும் நடத்த வேண்டியதில்லை.

மலேசிய பிரதமர் மகதீர் : இந்தியாவை எதிர்க்கும் அளவுக்கு நாங்க பெரிய ஆள் இல்லை!

'We Are Too Small To Retaliate': Malaysia PM On India Curbs On Palm Oil 
வெப்துனியா :மலேசியாவிலிருந்து இறக்குமதியாகும் பாமாயிலுக்கு இந்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளதை தொடர்ந்து இந்தியாவை எதிர்க்க முடியாது என மலேசிய பிரதமர் கூறியுள்ளார்.
இந்திய அரசின் ஜம்மு காஷ்மீர் விவகாரம் மற்றும் குடியுரிமை சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் மலேசிய பிரதமர் மகாதீர் முகமது. இந்நிலையில் அவரது பேச்சுக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்ததுடன் இந்திய உள்விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் கூறியிருந்தது. இந்நிலையில் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் பாமாயில் மற்றும் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது இந்தியா.
மலேசிய பொருட்கள் இறக்குமதியில் இந்தியா மிகப்பெரும் வியாபார சந்தையாகும். இதுகுறித்து சமீபத்தில் பேசியுள்ள மலேசிய பிரதமர் எங்களை போன்ற சிறிய நாடு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க முடியாது என்றும், இந்த பிரச்சினையை தீர்க்க வழிகளை யோசித்து வருவதாகவும் கூறியுள்ளார்

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியளிக்க மாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

ஹைட்ரோ கார்பனுக்கு அனுமதியளிக்க மாட்டோம்: அமைச்சர்மின்னம்பலம் : ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதியளிக்காது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைக்க சுற்றுச் சூழல் துறையிடம் அனுமதி பெற வேண்டியது இதுவரை அவசியமாக இருந்துவந்தது. அதுபோலவே, கிணறு அமையவுள்ள பகுதியின் பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதும் கட்டாயமாகும். 2006ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த விதியில் திருத்தம் செய்து, அரசிதழில் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி, இனி ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க சுற்றுச் சூழல் துறையின் அனுமதியையோ அல்லது பொதுமக்களின் கருத்துக்களையோ கேட்கத் தேவையில்லை.

பாஜக தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா போட்டியின்றி தேர்வு

பாஜக தேசிய தலைவராக ஜகத் பிரகாஷ் நட்டா போட்டியின்றி தேர்வு தினத்தந்தி :  பாரதீய ஜனதா கட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை கைப்பற்றியது. அப்போது பாஜகவின் தேசிய தலைவராக இருந்த ராஜ்நாத்சிங், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவியேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக அரசு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடியின் புதிய அமைச்சரவையில் பாஜக தலைவராக இருந்த அமித்ஷா, உள்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனால் பாஜகவின் புதிய தேசிய தலைவரை நியமிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பாஜகவின் தேசிய தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் பொறுப்பாளர் ராதாமோகன் சிங் வெளியிட்டார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் தமிழக மக்களின் கருத்து தேவை இல்லை ! மத்திய அரசு தீர்மானம் ...

வெப்துனியா :தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு போராட்டங்களில் ஒன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம். இந்த போராட்டம் தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் தற்போது மத்திய அரசின் புதிய உத்தரவு ஒன்றால் தஞ்சை பகுதி மக்கள் மட்டுமன்றி தமிழக மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்
இந்த உத்தரவின்படி தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்றும், அதுமட்டுமன்றி மக்களின் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
இந்த அரசாணையால் தஞ்சை பகுதியில் உள்ள விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் இருந்து பரவும் கொரானா வைரஸ் ... அச்சத்தில் உலகநாடுகள்


வெப்துனியா : சீனாவிலிருந்து பரவி வரும் கொரனா வைரஸ் என்னும் புதிய வைரஸால் உலக நாடுகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.சீனாவின் உகான் மாகாணத்தில் கொரனா என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் இந்த வைரஸுக்கு சீனாவில் இருவல் பலியாகியுள்ளனர். இந்த வைரஸ் எதனால் உருவாகிறது மற்றும் இதன் அறிகுறிகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இருவர் பலியாகியுள்ள நிலையில் இந்த வைரஸ் பாதிப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
புதிய வைரஸ் தங்கள் நாடுகளுக்குள் புகுந்துவிட கூடாது என்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தனி கவனம் செலுத்தி வருகின்றன. அமெரிக்கா விமான நிலையங்களுக்கு சீனாவில் இருந்து வரும் பயணிகள் உயர்தர சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல சீனாவுக்கு செல்லும் பயணிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

சிதம்பரத்தால் ஸ்டாலினுக்கு வந்த கோபம்!

மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை எனத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்கியது. இதுதொடர்பாக கடந்த 18ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அதன்பிறகு ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு கூட்டணி தொடர்பான பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
இந்த நிலையில் இதுபற்றிய மேலும் சில தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் இருந்து நமக்குக் கிடைத்தன.
கே.எஸ்.அழகிரி அறிக்கை தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மேலிடத் தலைவர்களைத் தொடர்புகொண்டு பேசினார். பாலுவிடம் பேசிய பிறகு குலாம் நபி ஆசாத் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, மறுப்பு வெளியிடும்படி கே.எஸ்.அழகிரியிடம் அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கூட்டணி தொடர்பான அறிக்கையைத் தெளிவுபடுத்துவதற்கான பதில் அறிக்கை ஒன்றை அழகிரி தயார் செய்தார். அந்த அறிக்கையில், ‘சில மாவட்டங்களில் எங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்களைச் சுட்டிக்காட்ட முனைந்தோமே தவிர, கூட்டணி தொடர்பாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. எங்களது அறிக்கை தவறாக அர்த்தப்படுத்தப்பட்டிருக்கிறது. திமுகவின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்’ உள்ளிட்ட திமுகவைச் சமாதானப்படுத்துவது போன்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்திருக்கிறது.

பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் சிக்கினர்.. சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை...

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை: பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் சிக்கினர்
தினத்தந்தி : களியக்காவிளையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு சிம்கார்டு வழங்கிய 6 பேர் காஞ்சீபுரத்தில் சிக்கியுள்ளனர்.
சென்னை: குமரி மாவட்டம் களியக்காவிளையில் கடந்த 8-ந்தேதி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பயங்கரவாதிகள் அப்துல் சமீம், தவுபிக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் பயன்படுத்திய செல்போன்களை வைத்து போலீசார் துப்பு துலங்கி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக கியூ பிரிவு போலீசார், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், தேசிய புலனாய்வு அமைப்பினர் உள்ளிட்டோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயங்கரவாதிகளின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஞாயிறு, 19 ஜனவரி, 2020

சோவின் துக்ளக்கிற்கும் மறுவாழ்வு கொடுத்த கலைஞர்!

கலைச்செல்வி : ரஜினி என்றஅரிதாரம் பூசிய அடிமைகிழவருக்கு இந்த
வரலாறு எல்லாம் தெரியுமா.
முரசோலியால் காப்பாற்றப்பட்ட துக்ளக்*
தொடங்கியதில் இருந்தே துக்ளக் இதழ் ஆனந்த விகடன் அச்சகத்தில்தான் அச்சிடப்பட்டு வெளியானது.
சோவின் அரசியல் கருத்துகளால் பல இடர்பாடுகள் வந்தபோதிலும் எஸ்.எஸ்.வாசன் உறுதியாக இருந்து சமாளித்தார்.
அப்போதுதான் எமெர்ஜென்ஸி வந்தது. பத்திரிக்கைக்கான கச்சா பொருள் பேப்பர். அப்போது அது மொத்தமும் இறக்குமதி என்பதால் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கோட்டா முறையில் வந்தது.
இப்போது வாசனுக்கு வேறு வழியில்லை. விகடனைக் காப்பாற்ற துக்ளக்கை கைவிட வேண்டியிருந்தது.
சென்னையில் வேறு யாரும் துக்ளக்கை அச்சடிக்க முன்வரவில்லை. சோ தற்காலிகமாக பத்திரிக்கையை நிறுத்த முடிவு செய்தார். அப்போது ராம்நாத் கோயங்கா மட்டும் துணிச்சலாக உதவ முன்வந்தார்.
அச்சடிக்க துவங்கிய அதே இரவில் எக்சைஸ் ரெய்டு தொடங்க, முதல் ஃபாரமே நிறுத்தப்பட்டது.
இதைக் கேள்விப்பட்ட *முதல்வர் கலைஞர்* ராஜாராமை அழைத்து சோ துணிச்சல்காரன்., இந்த நேரத்துலே அவனை கஷ்டப்பட விடக்கூடாது.,

வேலூர் . காதலனை கத்திமுனையில் வைத்து காதலி மீது பாலியல் பலாத்காரம் வேலூர் கோட்டை அருகே ...

tamil.oneindia.com : வேலூர்: வரலாற்று சிறப்புமிக்க வேலூர் கோட்டையிலேயே வைத்து இளம்பெண்ணை 3 பேர் நாசம் செய்துள்ள சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்!
வேலூரின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றுதான் கோட்டை.. வெளி மாநிலம், வெளியூர்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த கோட்டையை வந்து பார்வையிட்டு போவார்கள்.. உள்ளூர் மக்களும் பொழுதுபோக்கிற்காக இங்கு வந்து செல்வது வழக்கம்.
இதைதவிர, காதலர்கள் என்ற பெயரில் பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் அத்துமீறல்களும் கோட்டையை சுற்றி உள்ள பூங்கா பகுதிகளில் அரங்கேறும் உண்டு.. பெரும்பாலான இடங்கள் இங்கு புதர்போல மண்டி கிடப்பதால் இளம்ஜோடிகளுக்கு வசதியாக போய்விட்டது.
 இந்நிலையில், வேலூரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையில் இளம்பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார்.. அவருக்கு வயது 24.. அதே கடையில் காட்பாடியை சேர்ந்த ஒரு இளைஞரும் வேலை பார்க்கிறார்.. இவரும் காதலித்து வந்தனர்.. வேலூர் கோட்டை அருகே தனியாக சந்தித்து பேச முடிவு செய்தனர். அதன்படி, கோட்டை பூங்காவிற்கு சென்று, ஒரு ஓரத்தில் அகழி கரையை ஒட்டி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

மார்ச்சில் வெளியே வரும் சசிகலா?

மார்ச்சில் வெளியே வரும் சசிகலா?மின்னம்பலம் : சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததால் 2017 பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். வரும் பிப்ரவரி வந்தால் அவர்கள் சிறை சென்று மூன்று வருடங்கள் முடிகிறது.
சசிகலா சிறை சென்றபிறகு தினகரனுடன் ஏற்பட்ட மோதலால் சசிகலாவின் சகோதரர் திவாகரன், புதிய கட்சியைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, சசிகலாவின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. இதையடுத்து சசிகலா என்னுடைய முன்னாள் சகோதரி என்று திவாகரன் தெரிவித்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனக் கசப்பால் சகோதரி சசிகலாவை சந்திக்காமல் இருந்துவந்த திவாகரனை, தற்போது அடிக்கடி பெங்களூரு சிறை வளாகத்தில் காண முடிகிறது.

சிஏஏவை மாநிலங்கள் எதிர்ப்பது சட்டவிரோதமானது: கபில் சிபல்

சிஏஏவை மாநிலங்கள் எதிர்ப்பது சட்டவிரோதமானது: கபில் சிபல்மின்னம்பலம் : குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த முடியாது என்று கூறுவது சட்டவிரோதமானது என காங்கிரஸ் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறியிருந்த நிலையில் அதற்கு மாறாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து சிஏஏவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் கேரள அரசு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாபிலும் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து...!!!

polio நக்கீரன் - ஜீவா தங்கவேல் : உலகில் பல நாடுகளில் போலியோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் போலியோ இல்லாத நிலையை சமீபகாலமாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை நடைபெற்று வருகிறது. பெருநகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இதற்கென சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது.
இன்று இந்தியா முழுக்க இந்த முகாம் காலை முதல் மாலை வரை நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சுமார் 43 ஆயிரம் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் இரண்டு லட்சம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். ஏறக்குறைய 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.

பாலபாரதியை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சுங்க சாவடி ஊழியர்கள்... முன்னாள் கம்யுனிஸ்டு எம் எல் ஏ..

ex mla Balabharathi accusationநக்கீரன் : துப்பாக்கியைக் காட்டி மிரட்டல் விடுத்தார்கள்" - கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு...! கரூர் மாவட்ட சுங்க சாவடி ஊழியர்கள் தன்னை துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஎம்) பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருச்சியில் இருந்து சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி இன்று மாலை அவரது காரில் ஈரோடு வந்தார். அப்போது, கரூர் மாவட்ட டோல்கேட்டில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் துப்பாக்கியுடன் மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலபாரதி ஈரோட்டில் இன்று இரவு செய்தியாளர்களிடம் கூறுகையில்,"திருச்சியில் இருந்து கரூர் செல்லக்கூடிய மணவாசி சுங்கசாவடி உள்ளது. அங்கு எனது கார் வந்தவுடன், எனது அனுமதி சீட்டினை காட்டியபோது, ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.அதோடு எங்களது டிரைவரிடம் அவர்கள் மரியாதைக்குறைவாக பேசினார்கள்.

மத்திய அமைச்சரவையில் கேவி காமத்.. தாஸ் குப்தா? நிதியமைச்சகத்தில் வருது மாற்றம்

மத்திய பல்கலைக்கழகங்கள் நிதியமைச்சராகலாம் tamil.oneindia.com/authors/VelmuruganP.: டெல்லி: புதிய அபிவிருத்தி வங்கித் தலைவர் கே வி காமத் மற்றும் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா ஆகியோரை தனது அமைச்சரவையில் பிரதமர் மோடி சேர்க்கக்கூடும் என்று ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
72 வயதான காமத், நிதி அமைச்சகத்திற்கான இணை அமைச்சராக (MoS) வாய்ப்பு உள்ளதாகவும், 64 வயதான தாஸ்குப்தா மனிதவள மேம்பாட்டு (HRD) துறை அமைச்சகத்தின் இணை அமைச்சராக MoS ஆக மாறக்கூடும் என்று அந்த நிறுவனம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
மோடி அரசாங்கம் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் கிட்டத்தட்ட எட்டு மாதங்களை நிறைவு செய்துவிட்டது. இந்த நிலையில், அமைச்சரவையின் முதல் பெரிய மறுசீரமைப்பு மற்றும் புதிதாக அமைச்சர்களாக வரப்போகிறார்கள் என்று ஊகங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை

மாலைமலர் : விவசாயிகளைவிட, வேலை இல்லாதவர்கள் தற்கொலை அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை
புதுடெல்லி: இந்தியாவில் விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்துவிட்டதாக பரவலாக ஒரு பேச்சு உள்ளது. ஆனால் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் அதற்கு மாறான தகவல் வெளியாகி உள்ளது.
2018-ம் ஆண்டில் நடைபெற்றுள்ள குற்றங்கள் தொடர்பான அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து, 34 ஆயிரத்து, 516 பேர் தற்கொலை செய்துள்ளனர். இது 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் அதிகம். இதில் மராட்டிய மாநிலம் முதலிடத்திலும் (17,972 பேர்), தமிழ்நாடு 2-ம் இடத்திலும் (13,896 பேர்), மேற்குவங்காளம் 3-ம் இடத்திலும் (13,225 பேர்), மத்தியபிரதேசம் 4-ம் இடத்திலும்
(11,775 பேர்), கர்நாடகம் 5-ம் இடத்திலும் (11,561 பேர்) உள்ளது. இந்த 5 மாநிலங்களிலேயே நாட்டின் பாதி தற்கொலைகள் (50.9 சதவீதம்) நடைபெற்றுள்ளது.

நடிகை ஷபான ஆஸ்மி விபத்தில் சிக்கினர் .. மருத்துவ மனையில் அனுமதி வீடியோ


மின்னம்பலம் : திரைத்துறையில் ஐந்து முறை தேசிய விருது வெற்றி, ஒரு முறை எம்.பி-யாக பதவி வகித்தது, பதவியில் இல்லாவிட்டாலும் சமூக சேவையில் ஈடுபடுவது என பல்வேறு முகங்கள் கொண்ட ஷபானா அஸ்மி, மும்பை-புனே தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்தபோது விபத்தில் சிக்கிய நிகழ்வு அரசியல் தலைவர்கள், பாலிவுட் பிரபலங்கள், ஷபானாவின் ரசிகர்கள் எனப் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மும்பைக்கு காரில் திரும்பியிருக்கிறார் ஷபானா. மும்பைக்கு 60 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் இடத்தில், ஒரு மிகப்பெரிய் டிரக்கின் பின்பக்கத்தில் ஷபானாவின் கார் மோதியதால் ஷபானா, டிரைவர் மற்றும் அவருடன் பயணித்த இன்னொருவர் ஆகிய மூவரும் விபத்தில் சிக்கினர். இதில் டிரைவருக்கு மட்டுமே பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், ஷபானாவுக்கு மூக்கில் மட்டும் சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரஜினிக்கும் தமிழகத்துக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா?

ரஜினிக்கும் எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு சண்டையா ஏன் அவரை விமர்சிக்கிறோம்*
*கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் தமிழகத்தோடு தன் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொண்டவர்*
*அம்மக்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது என்று இன்னும் அவருக்கு தெரியவில்லை*
*அவர்களிடம் என்ன பேச வேண்டும் எதை பேசக்கூடாது என்றும் தெரியவில்லை*
*நடிகர் விவேக்கின் திறமையையும், ஆற்றலையும், பேச்சையும் அறிவையும் பார்த்து அவர் பிராமணன் என கருதினேன் என்கிறார்*
*தன் உறவினர் அனிருத்தை முன்னிறுத்துவதற்காக இளையராஜா இடத்தில் அனிருத்தை பார்க்கிறேன் என்கிறார்*
*மலையை மடுவோடு ஒப்பிடுகிறார்*
*திரைப்படத்தில் மக்களை போராட தூண்டுகிறார், தரையில் மக்கள் போராடினால் நாடு சுடுகாடு ஆகிவிடும் என்கிறார்*
*போராடும் போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்கிறார்*
*நிராயுதபாணியாக இருந்த ஜே.என்.யூ.மாணவர்களை கொடூரமாக தாக்கியவர்களை கண்டிக்காமல், போராடும் மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்*
*45 - ஆண்டுகளாக பணம் சம்பாதிப்பதை குறிகோளாக கொண்ட இவர் பண மதிப்பிழப்பை வரவேற்கிறார்*
*என்ன பேச வேண்டும்,எப்படி பேச வேண்டும் என்பதறியாமல் உளறுகிறார்*
*பொதுமக்களுக்கு துளியும் தொடர்பில்லாத தமிழருவி மணியன்,ஏ.சி.சண்முகம்,கராத்தே தியாகராஜன் போன்றோரை அரசியல் ஆலோசராக வைத்துள்ளார்*
*தமிழனின் ஒரு துளி வேர்வைக்கு ஒரு தங்ககாசு தருவேன் என்கிறார்,தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி எனது பூர்வீகம் என்கிறார்*
*தமிழகத்தை தாண்டியவுடன் நான் மராட்டியன் நான் வாழ்ந்தது கர்நாடகத்தில் என்கிறார் தமிழகத்தை லாவகமாக தவிர்த்து விடுகிறார்*