கேபிள் சங்கர்
:
சமீபத்தில்
இயக்குநர் நண்பருக்குப் போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
ஒன்றுக்காகப் பாடல் ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாக நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங்
ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு
செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக்
குறைவாக இருந்தது.
இயக்குநர் நண்பர்களை அழைத்து, “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டுவந்திருக்கீங்க?” என்றதுதான் தாமதம். ஆளாளுக்கு ‘ஓ’வென அழாத குறைதான்.
“சார்… ஒரு பாட்டு நல்லா வரணும்னா சிச்சுவேஷனுக்கு ஏத்தபடி ரெண்டு அல்லது மூணு நாள் ஷூட் பண்ணணும். இவங்க கொடுக்குற காசுக்கு ஒருநாள் ஷூட் பண்ணவே முடியாது. இதுல எப்படி குவாலிட்டியும் கொடுக்குறது?”
“ஏன் நல்ல தரமான குறும்படங்கள் சின்ன பட்ஜெட்டுல பண்றது இல்லையா?”
“நூறு படம் பட்ஜெட்டுல பண்ணா ஒண்ணு தேறுறதே கஷ்டம். அப்படித்தான் இந்த நிகழ்ச்சியும்” என்றார்.

சமீபத்தில்
இயக்குநர் நண்பருக்குப் போன் செய்தேன். பிரபல தொலைக்காட்சி நிறுவனம்
ஒன்றுக்காகப் பாடல் ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
படப்பிடிப்பு முடிந்து இரண்டாவது நாளிலேயே பாடல் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது. அதன் தொடர்ச்சியாக நிறைய பாடல்களை அவர்களது ஸ்ட்ரீமிங்
ஆப்பில் பார்த்தேன். நிறைய உழைத்திருக்கிறார்கள். நல்ல பாடல்களைத்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஓரளவுக்கு நல்ல நடிகர், நடிகைகளையும் தெரிவு
செய்திருக்கிறார்கள். எல்லாம் இருந்தும் பாடல்களின் மொத்த தரம் மிகக்
குறைவாக இருந்தது.இயக்குநர் நண்பர்களை அழைத்து, “என்னங்க எல்லாம் நல்லா ப்ளான் பண்ணி மேக்கிங்கில் இவ்வளவு மோசமா கொண்டுவந்திருக்கீங்க?” என்றதுதான் தாமதம். ஆளாளுக்கு ‘ஓ’வென அழாத குறைதான்.