திங்கள், 9 அக்டோபர், 2017

தமிழகத்தில் 85 பேர் பலி... சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Suganthi Oneindia Tamil சென்னை:
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை காய்ச்சலால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை ஆவடியையடுத்த திருமுல்லைவாயில் பகுதியச் சேர்ந்தவர் இமயவரம்பன். இவரது மனைவி குணவதி கடந்த 15 நாட்களாக பன்றிக் காய்ச்சலால் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு காய்ச்சல் குணமாகாத காரணத்தால் அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனிறி இறந்தார். >இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன் பேசுகையில் டெங்குக் காய்ச்சலால் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்த அவர் கடந்த ஜனவரி மாதம் முதல் காய்ச்சலுக்கு 85 பேர் பலியாகியுள்ளதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் இன்று டெங்குக் காய்ச்சலுக்கு 14 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் 10 பேர் பலியாகினர். கடந்த சில நாட்களாக தினம் சராசரியாக 5-7 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கீழடி அகழ்வாராச்சி குழிகள் மூடப்படுகிறது .. ..... திட்டமிட்ட சதி?



tamiloneindia  : Mayura Akilan சென்னை: ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுவதால், நாடுமுழுவதும் 93 லட்சம் லாரிகள் ஒடவில்லை. காய்கறிகள் உள்ளிட்ட சரக்குகள் தேங்கும் அபாயம் உருவாகியுள்ளது.
லாரியை வாங்கும்போதும், விற்பனை செய்யும் போதும் 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த இரட்டை வரி விதிப்பை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். ஆனால், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இரு தினங்களுக்கு நாடு முழுவதும் லாரி ஸ்டிரைக் நடைபெறும் என்று அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அறிவித்தது.

ஆளுநர் புரோகித் டெல்லி பயணம் .. அதிமுக வட்டாரத்தில் ... திக் திக் திக் ?

தினமலர் :சென்னை: தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மாநில அரசியல் நிலவரம் குறித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவிப்ப தற்காக, நேற்று, டில்லி புறப்பட்டுச் சென்றார். கவர்னரின் பயணம், அ.தி.மு.க.,வினரிடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசியலில், அசாதாரண சூழல் நிலவு கிறது. இதை, திறம்பட கையாள வசதியாக, புதிய கவர்னராக, பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர், அக்., 6ல், பதவி ஏற்றார். பதவியேற்று மூன்று நாட்களே ஆகும் நிலையில், நேற்று பிற்பகலில், டில்லி புறப்பட்டுச் சென்றார்.ஓரிரு நாட்கள் டில்லியில் தங்கியிருந்து, ஜனாதிபதி,ராம்நாத்கோவிந்த், பிரதமர், மோடி, உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்கட்சி தலைவர்கள், ஆளுங்கட்சி மீது தெரிவித்த புகார் பட்டியல், அவற்றின் மீதான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப் படுகிறது.

அமித் ஷா மகன் ஊழல் ,, காங்கிரஸ் சி பி ஐ விசாரணை கோருகிறது Congress demand CBI probe against BJP president Son

Special Correspondent FB Wing
Bharatiya Janata Party president Amit Shah’s son Jay Shah will file a Rs 100 crore defamation suit against a website wire , the party said on Sunday after a news report said a company owned by the latter had seen a sharp spike in revenues since May 2014.
The report, published in thewire.in, said Shah’s company Temple Enterprises Pvt Limited was “engaged in negligible activity” in the financial years ending March 2013 and 2014 but “jumped to a turnover of Rs 80.5 crore in 2015-16”.
The company had taken an unsecured loan during the year for Rs 15.78 crore, the news report said, adding that it finally wound up in October 2016 after posting a loss. The news caught on fire in social media and #amitshahkiloot hashtag become top trend with in a hour .
Jay Shah issued a statement saying the article “makes false, derogatory and defamatory imputation against me by creating in the minds of right thinking people an impression that my business owes its ‘success’ to my father Sri Amit Bhai Shah’s political position.”

புலிகளின் சகோதரப்படுகொலைகள் பற்றி ஒரு ஆவணப்படம்



ஜாக்கி வாசுதேவின் நதிகளை காப்போம் அதானிகளை காப்போம்!

Anush : இந்த நதிகளை காப்போம்
பிரச்சாரத்தில் ஈஷா அறக்கட்டளை நிறுவனத்தின் ஒரு அதிகாரபூர்வ ஸ்பான்சர் அதானி குழுமம்.
இந்த அதானி குழுமத்தின் அதானி போர்ட்ஸ் & செஸ் லிமிடெட் குஜராத்தில் பல விதிமீறல்கள் புரிந்து, சுற்றுச்சூழல் அழிவு மற்றும் நிலம் கையகப்படுத்தப்படுதல் ஆகியவற்றின் முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டது. இவற்றிற்காக இந்நிறுவனம் மிக அதிகபட்ச தண்டனையை சுமத்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு இட்டுச் சென்றது. அது சுமார் 200 கோடி ரூபாய் அபராத தொகையை விதித்தது. பின்னர் மையத்தில் மாற்றம் ஏற்பட்டபோது அவை கைவிடப்பட்டது.
நதிகளை பாதுகாப்பதின் பிண்ணனியில் நாம் ஆராய வேண்டியது அதிகளவில் கட்டப்படும் அணைகள், மணல் கொள்ளை, சுற்றுச்சூழல் மாசடைதல் , காடழிப்பு மற்றும் ஆறுகள் ஒன்றிணைப்பதற்கும் அவற்றின் மீது நீர்வழிகளை உருவாக்குவதுமே உண்மையான அச்சுறுத்தல்களாக உள்ளன.
ஆனால் அவரோ விவசாய நிலங்களில் பழ மரங்களைக் நடச்சொல்லி குறிப்பிடுவதன் மூலம், நதிகளை பாதுகாப்பதில் இருந்து விலகி வேறு திசையில் செல்கிறார். விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக பலனளிக்கும் முன் இந்த மரங்கள் நீண்ட கருவூட்டல் காலங்களைக் கொண்டிருக்கின்றன. அதுபோலவே இதற்கு துறையினூடாக நல்ல நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது, இதனால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட நீர்வாழ் உயிரினங்களை மேலும் வலுவாக்குகிறது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! நினைவுதினப் பகிர்வு!.. மனைவிக்குச் சன்மானம் வழங்கிய

கல்யாணசுந்தரம்விகடன் :ஜெ.பிரகாஷ் :கிட்டத்தட்ட அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன் திரைப்படக் கவிஞர்களை ஏளனமாகவும், கேலியாகவும் விமர்சித்தார் சினிமா பத்திரிகை ஆசிரியர் ஒருவர். அதற்கு, கவிஞர் கண்ணதாசனும் பலியானார். விழா ஒன்றில்... அந்தப் பத்திரிகை ஆசிரியரைச் சந்தித்த ஒரு கவிஞர், ‘‘(கண்ணதாசனைக் குறிப்பிட்டு) கவிஞர்கள் என்றால் உனக்கு ஏளனமா? கருவாட்டு வியாபாரம் செய்கிற உனக்குக் கவிதையைப் பற்றி என்ன தெரியும்?’’என்று கோபத்துடன் கேட்டாராம். கவிஞர்கள் விஷயத்தில் யாரையும் விட்டுக்கொடுக்காத அந்தக் கவிஞர் வேறு யாருமல்ல... ‘‘பாட்டெழுதி நம்மைக் கவர்ந்த பாட்டாளி. அவன், நாட்டிலுள்ள நல்லவரின் கூட்டாளி’’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தனால் பாராட்டப்பெற்ற நம் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்தான் அந்தக் கவிஞர். அவருடைய நினைவு தினம் இன்று.

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

அமித் ஷா மகன் ஒரே வருடத்தில் ,,, 16,0000 மடங்கு எப்படி? ... இதுதான் டிஜிடல் என்கிறதா?

prakash.jp.: வாட் எ கம்பனி அமித்து ஷா மோனே..
2013 - 2014 = நஷ்டம்
2014 - 2015 = 50,000 வருமானம்
2015 - 2016 = 80,50,00,000 வருமானம் (மோடி ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 16,0000 மடங்கு அதிகரிப்பு)
2016 - 2017 = கம்பனி மூடப்பட்டது (ஒரே வருடத்தில் 80 கோடி வருமானம் "பார்த்துவிட்டு"

மேலும், பிஜேபி தலைவர் அமித்து மகனுக்கு வெறும் 1.2 கோடி மதிப்புள்ள 2000 சதுர அடி இடத்தின் மீது சுமார் 25 கோடி லோன் அளித்துள்ளது மத்திய அரசின் IREDA, இது அப்போது மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் நேரடி பார்வையில் இருந்த அமைப்பு. அதோடு, செக்குரிட்டி இல்லாத கடனாக பெயர் தெரியாத நபர்களிடம் இருந்து 5 கோடியை அமித்து மகனின் கம்பனி பெற்றுள்ளது..
இப்போது ரயில்வே கேபினட் அமைச்சராக உள்ள பியூஷ், வாண்டடாக வண்டியில் ஏறி, தனி நபரான அமித்து ஷா மகனுக்கு முட்டுகொடுகிறார்..
அமித்து சம்பத்தப்பட்ட இந்த ஊழலை வெளிகொணர்ந்த புலனாய்வு பத்திரிகையாளர் ரோகினி சர்மா மீது வழக்கம் போல, RSS சங் பரிவார கும்பல் கேரக்டர் அஸ்ஸாசினேஷன் செய்கிறார்கள்.. ஆனால், இதே பத்திரிகையாளர் தான் முன்பு சோனியா மருமகன் ராபட் வதேரா சம்பந்தப்பட்ட DLF விஷயத்தையும் வெளிப்படுத்தினார்.. அப்போது அவரை கொண்டாடிய பிஜேபி கும்பல், இப்போது திட்டுவது ஏன்?? மோடி பிஜேபி கும்பலின் ஊழல் எதிர்ப்பு வேஷம் கலைந்துவிட்டதா??

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 3

வினவு :சுமார் ஐந்து அல்லது ஆறு பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே மனித மூளையின் திறன் கொண்ட இயந்திரம் ஒன்றை உருவாக்குவது குறித்த விஞ்ஞான ஆராய்ச்சிகள் துவங்கி விட்டன. இந்த முயற்சியில் குறுக்கிட்ட பல்வேறு தோல்விகளையும் தடைகளையும் கடந்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து வந்தன.
அமெரிக்காவுக்கும் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்திற்குமான பனிப்போர் உச்சமடைந்திருந்த சமயத்தில், ரசிய மொழியில் இருந்த இரகசிய ஆவணங்களை இயந்திரங்களைக் கொண்டு ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பு செய்ய “தானியங்கி மொழிக் கையாள்கை ஆலோசனைக் குழு” (ALPAC – Automatic Language processing committee) ஒன்றை அமெரிக்கா அமைத்தது.
சுமார் இரண்டாண்டுகள் நடந்த ஆராய்ச்சிகளுக்குப் பின், ஒரு மொழியில் எழுதப்பட்ட வாக்கியத்தை வேறொரு மொழிக்கு மாற்றுவதென்றால் அந்தக் குறிப்பிட்ட வாக்கியம் அந்த மொத்த கட்டுரை அல்லது நூலின் சாரத்தோடு எப்படி ஒத்துப் போகிறது என்கிற புரிதல் இருக்க வேண்டியது அவசியம் என்றும். இத்தகைய புரிதல் என்பது இயந்திரத்தின் சாத்தியங்களுக்கு அப்பாற்பட்டதென்றும் முடிவெடுத்து 1966-ம் ஆண்டு ஆராய்ச்சியைக் கைவிட்டனர்.

எனது மகள் மனித வெடிகுண்டாகக்கூடாது!

எனது மகள் மனித வெடிகுண்டாகக்கூடாது!
மின்னம்பலம் : கேரள லவ் ஜிகாத் வழக்கு இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனது மகள் மனித வெடிகுண்டாக வேண்டாம் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஷபின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்தார். அதற்கு முன்பாகவே இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர் தனது பெயரையும் ஹாதியா என்றும் மாற்றிக்கொண்டார். இந்நிலையில், தனது மகள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் அவரைச் சேர்க்க சதி நடப்பதாகவும் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்தத் திருமணம் லவ் ஜிகாத் என்றும், எனவே செல்லாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜஹான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இலங்கை போரின்போது நடந்தது என்ன? - 4 மனித உரிமை ஆர்வலர்களின் நேரடி அனுபவங்கள்

tamilthehindu :(இடமிருந்து) தயா சோமசுந்தரம், ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன், <
இலங்கையில்  உள்நாட்டுப் போர் சூடுபிடித்தபோது நடைபெற்ற அனைத்து தரப்பினரின் அட்டூழியங்களையும் மனித உரிமை ஆர்வலர்களும் கல்வியாளர்களுமான 4 பேர் ஆவணப்படுத்திக் கொண்டிருந்தனர். இதில் ஒருவர் கொல்லப்பட்டதால் மற்ற 3 பேர் நாட்டை விட்டு வெளியேறினர். போருக்குப் பிறகு நாடு திரும்பிய அந்த 3 பேரையும் யாழ்ப்பாணத்தில் ‘தி இந்து’ சார்பில் மீரா ஸ்ரீநிவாசன் சந்தித்துப் பேசி உள்ளார். அந்த உரையாடலில் இருந்து...
இலங்கையில் உள்நாட்டுப் போர் தொடங்கி சுமார் 5 ஆண்டுகள் கழித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கல்வியாளர்கள் பலர் இணைந்து 1988-ல் மனித உரிமை அமைப்பை (யுனிவர்சிட்டி டீச்சர்ஸ் பார் ஹியூமன் ரைட்ஸ்) தொடங்கினர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பிரிவு தலைவராக பணியாற்றிய ராஜினி திரநகமா ராஜசிங்கம் , ராஜன் ஹூலே, கோபாலசிங்கம் ஸ்ரீதரன் மற்றும் தயா சோமசுந்தரம் ஆகிய 4 பேரும் இந்த அமைப்பின் முகமாக விளங்கினர்.
வெளிநாட்டில் தத்துவப் படிப்பை (டாக்ட்ரேட்) முடித்த இந்த இளம் கல்வியாளர்கள், எந்த நாட்டு பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் பேராசிரியர்களாக பணியாற்றி இருக்கலாம். ஆனால், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்காக 1980-களில் மீண்டும் இலங்கைக்கே திரும்பி உள்ளனர்.

அமித் ஷா மகன் வருமானம் 50 ஆயிரத்தில் இருந்து 80 கோடியாக வீங்கியது ..

#ஊழல் : #Bjp தலைவர் மகன் 2014-15 : 50000 ₹ 2015-16 : 805000000 ₹ #AmithShahKiLoot கொள்ளை
அமித் ஷாவின் மகனின் ஜே ஷாவின் வருவாய் ஒரே வருடத்தில் 50,000தில் இருந்து 80 கோடிகளுக்கு 16000 மடங்கு உயர்ந்துள்ளது 
அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு எதிரான செய்திகளை வெளியிட்ட ’தி ஒயர்’ என்ற இணையதள ஊடகம் மீது ரூ.100 கோடி மான நஷ்ட இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும் என மத்திய மந்திரி பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்தது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் அவரது மகனும் தான் என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா நடத்தி வரும் நிறுவனங்களின் நிதியாண்டு அறிக்கை மற்றும் ஆண்டறிக்கை விவரங்களை இன்று வெளியிட்டிருந்தார். அதில், பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவுக்கு சொந்தமான டெம்பிள் எண்டர்பிரைசஸ் பிரைவே லிமிடெட் நிறுவனம் கடந்த 2013-14-ம் நிதி ஆண்டை காட்டிலும், 2015-16-ம் நிதி ஆண்டில் 80 கோடி அளவுக்கு நிகர லாபம் அடைந்துள்ளது என்பதை அவர் வெளியிட்டிருந்தார்.

BBC : தமிழகத்தில் டெங்கு இதுவரை 35 பேர் உயிரழப்பு

தமிழகத்தில் 2017ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பல்வேறுவிதமான காய்ச்சலுக்கு 85 பேர் இறந்துள்ளதாகவும், அதில் 35 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளதாகவும் தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் ஞாயிறு அன்று (அக்டோபர் 8) அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியபோது, மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளான 10,000க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது 165 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துவருவதாக கூறிய அவர், ''அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தகுந்த சிகிச்சை அளிக்கிறோம். டெங்கு நோய் அறிகுறிகள் பற்றியும் விழிப்புணர்வு நிகழ்சிகளை நடத்திவருகிறோம். தற்போதுவரை 392 நபர்களுக்கு ஆரம்ப கட்டத்தில் டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, உடனடி சிகிச்சை காரணமாக அவர்கள் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்,'' என்றார்.

அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா: அமைச்சர் செல்லூர் ராஜூ ... சிலீப்பர் ராசு?

tamilthehindu : அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம் என்று மதுரையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். < அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். அதில் எவ்வித மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நான் அக்கருத்தை மாற்றிக்கொள்பவனும் இல்லை.

திருக்குறளை மக்கள் சொத்தாக்கியது #திராவிடர்இயக்கமே!


#திருக்குறள் .. #திராவிடர்இயக்கம்
இன்று நமக்கு திருவள்ளுவர் என்றால்
நன்றாகத் தெரிகிறது.
திருக்குறள் என்றால் என்னவென்று ஆரம்பக் கல்வி கற்றவருக்கு கூடத் தெரியும்.
திருக்குறள் அனைத்தையும் அர்த்தத்துடன் அறியாத ஒருவர்கூட திருக்குறள் உயர்வானது என்பதை அறிந்திருக்கிறார்.
தங்கள் எழுத்திலும், பேச்சிலும் திருக்குறளை மேற்கோள் காட்டாதவர்கள் எவருமில்லை.
பல நூற்றுக்கணக்கானவர்கள் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
திருவள்ளுவரையும், திருக்குறளையும் தற்போதைய அரசுகள் ஆவணங்களில் பயன்படுத்துகின்றன.
இவையனைத்தும், நூற்றாண்டு காணும் திராவிடர் இயக்கத்தின் அளப்பரிய சாதணை!
இல்லையென மறுப்போர் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடைகூறட்டும்....
திருக்குறளின் உண்மையான பெயரென்ன?
திருவள்ளுவரின் உண்மைப் பெயரென்ன?
திருக்குறள் எழுதப்பட்ட காலமென்ன?
இந்த மூன்று கேள்விகளுக்கும் நம்மிடத்தில் தோராயமான பதில்தான் உள்ளதே தவிர உறுதியான பதிலில்லை.
சுமார் இரண்டாயிரம் ஆண்டு காலத்திற்குள் நமது வரலாறு இவ்வளவு தடுமாற வேண்டிய காரணம் என்ன?

மருத்துவர்களை பார்த்து கைகூப்பி அழுத சசிகலா ,, எப்படியாவது காப்பாற்றுங்கள் ...

வெப்துனியா :பரோலில் இருந்து வெளியே வந்த சசிகலா இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவர் நடராஜனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ,தனது கணவர் நடராஜனின் உடல் நிலையைக் காரணம் காட்டி 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த சசிகலாவிற்கு 5 நாட்கள் மட்டுமே பரோல் கொடுத்து சிறைத்துறை நிர்வாகம் நேற்று அனுமதியளித்தது. அதைத் தொடர்ந்து சென்னை வந்ந சசிகலா, தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கியுள்ளார்.இந்நிலையில், சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது கணவர் நடராஜனை சந்திக்க பலத்த பாதுகாப்புடன் இன்று காலை அவர் சென்றார்.அங்கு நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார். அந்த சந்திப்பு மிகவும் உருக்கமாக இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, நடராஜன் உடல் நலம் தேறி வருகிறார்.

தண்ணீர் கலந்த டீசல்.. திருசெங்கோடு பங்க் மோசடி!

டீசலுக்குப் பதில் தண்ணீர்: பங்க் மோசடி!
மின்னம்பலம்: திருசெங்கோட்டில் செயல்பட்டுவரும் பெட்ரோல் பங்க் ஒன்று டீசலில் தண்ணீர் கலந்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி. அவருக்குச் சொந்தமான கார்த்திகேயா பெட்ரோல் பங்க் சங்ககிரி சாலையில் உள்ளது. அந்த பெட்ரோல் பங்க்கில் டீசலுடன் தண்ணீரைக் கலந்து விற்பனை செய்து நூதன மோசடி நடந்துள்ளது.
செங்குட்டுவேல் என்பவர் நேற்று (அக்டோபர் 7) அவரது லாரிக்கு டீசல் நிரப்பியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் அந்த லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றது. மெக்கானிக் வந்து பார்த்தபோது, லாரியின் என்ஜினில் தண்ணீர் புகுந்திருப்பது தெரியவந்தது. டீசல் வழியாகத் தண்ணீர் வந்திருப்பதாக மெக்கானிக் கூறியுள்ளார். எனவே, லாரி உரிமையாளர் ஒரு பாத்திரத்தில் பெட்ரோல் பங்கில் உள்ள டீசலை நிரப்பச்சொல்லி அதைப் பரிசோதனை செய்து பார்த்தபோது அது பால் போன்ற தண்ணீர் எனத் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் கலைஞர் 2006இல் ஒரு தனிச் சட்டம் (Act 15 of - 2006)

கலைஞர் 1970இல் பாரம்பரிய அர்ச்சகர் முறையை ஒழித்துத் தகுதி அடிப்படையில், அனைத்து ஜாதியினரிலிருந்தும் அர்ச்சகர் நியமனம் நடக்கும் என்று சட்டம் இயற்றினார் (2.12.1970). உடனே தமிழ்நாட்டு பார்ப்பனர்கள்,  மடாதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதன் பின் 2006இல் ஒரு தனிச் சட்டம் (Act 15 of - 2006)  நிறைவேற்றினார்.

 கேரளாவில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்!தமிழகம் அலட்சியம் காட்டலாமா? கி.வீரமணி தந்தை பெரியார்  ஜாதி, தீண்டாமை ஒழிப்பின் ஒரு முக்கிய அம்சமாகவும், மனித உரிமைக் காப்பு நடவடிக்கையாகவும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக வேண்டும் என்ற தனது போராட்டத்தின் விளைவாக தற்போது கேரளாவில் எளிமையான நியமனங்கள் மூலம் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக்கி உள்ளது. எனவே தமிழக அரசும் 69 சதவிகித இடஒதுக்கீடு அடிப்படையில், பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை  உடனே நியமனம் செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள முக்கிய அவசர அறிக்கை வருமாறு:>கேரளாவில் 6 தாழ்த்தப்பட்ட (தலித்) ஜாதியினர் உட்பட 36 பார்ப்பனரல்லாதாரை அர்ச்சகர்களாக நியமனம் செய்துள்ள செய்தி எல்லா ஏடுகளிலும் வந்துள்ளது!

நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் மாத்திரமே சந்திப்பு ,, குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர்

 தினத்தந்தி : ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் கணவர் நடராஜனை, சசிகலா நேற்று 15 நிமிடங்கள் சந்தித்தார்.
 அப்போது அவரது கையை பிடித்து சசிகலா கண் கலங்கினார்.
 சென்னை, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் 15–ந் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 10–ந் தேதி சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ="குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் சந்திப்பு"குளோபல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் கணவர் நடராஜனுடன், சசிகலா 15 நிமிடங்கள் சந்திப்பு" கடந்த 4–ந் தேதி அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. தற்போது அவர் கல்லீரல் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

மது போதையில் கார் ஓட்டி விபத்து; நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து:

tamilthehindu : மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதம் ரத்து செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ஜெய் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் அடையாறு பாலத்தின் மீது காரை மோதினார். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, வேகமாக காரை ஓட்டியது, ஆவணங்கள் இல்லாதது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் நடிகர் ஜெய்யை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை குற்றவியல் 4வது நடுவர் மன்றத்தின் முன் நடந்தது ஒரு தடவை ஆஜரான ஜெய் அதன் பின்னர் ஆஜராகவில்லை.

சசிகலா சவால் : என்னை ஒழித்துவிட்டால் அ.தி.மு.கவை வீழ்த்திவிடலாம் என சிலர் ........ அது நடக்காது ..

tamil.oneindia.com:   என்னதான் கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் சசிகலா வெளியே வந்திருந்தாலும் அதிமுகவில் இழந்து போன பிடியை இறுக்கிக் கொள்ளவும் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ள தினகரனை ஓரம்கட்டவும் இந்த வாய்ப்பை பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜனின் இரண்டு சிறுநீரகமும் கல்லீரலும் நன்றாகச் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
‘ சிறுநீரகம் பழுதான நேரத்திலேயே அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரகசியம் காத்ததன் விளைவை தற்போது அனுபவிக்கிறார்.
சசிகலாவைப் பொறுத்தவரையில், கணவரைப் பார்ப்பதைவிடவும் கட்சியைக் காப்பதற்காகவே பரோலில் வந்திருக்கிறார் என்கின்றனர் அவரது உறவினர்கள். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து உறவினர்களைச் சந்திக்க இருக்கிறார் சசிகலா.

கலவரத்தைத் தூண்டிய ஹனிபிரீத் சிங்! ஹரியான உல்டா சாமியாரின் லீலைகள்

நக்கீரன் : குர்மீத் சிங் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதும், மிகப்பெரிய கலவரத்தைத் தூண்ட ஹனிபிரீத் சிங் அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கியதும், உடனடியாக அதற்காக ரூ.1.25 கோடியை பணப்பட்டுவாடா செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் சிங்கை, ஆக்ஸ்ட் 25ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளித்தது ஹரியானா சிபிஐ நீதிமன்றம். அப்போது ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. இதில், 40 பேர் உயிரிழந்தனர். பலகோடி மதிப்பு பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டு நாசமாகின.

பாஜகவை திடீரென புகழும் நமது எம்ஜிஆர்! தினகரன் அணியோடு பாஜக அரசியல் வி ....ம்?

Prabha ,,  Oneindia Tamil   :  சென்னை: திடீரென பாஜகவை புகழ ஆரம்பித்துள்ளது டிடிவி தினகரன் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நமது எம்ஜிஆர் நாளிதழ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு பா.ஜ.கவைப் புகழும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது நமது எம்.ஜி.ஆர் நாளிதழ். ' தமிழ்நாட்டில் தற்போது தேசத்துரோகச் சட்டம் தவறாக பயன்படுத்துவதை மத்திய அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் பா.ஜ.கவினர் மீது தேசத்துரோக சட்டம் போடப்பட்டதை கடுமையாக எதிர்த்தவர் மோடி' என வெகுவாகப் புகழ்ந்திருக்கிறது நமது எம்.ஜி.ஆர். 
 தமிழக அரசை அவமதிக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததாக சேலம் மாவட்டத்தில் தினகரனால் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட ஆறு பேரை தேசத்துரோக வழக்கில் போலீஸார் கைது செய்தனர். நீட் தேர்வுக்கு எதிரான வாசகங்களோடு, கட்சியில் களையெடுப்பு தொடரும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலையாளிகள் பிடிபட்டனர் .. இந்துத்வா பயங்கரவாதிகள்

Subramanian Ramakrishnan : கௌரி கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது
குற்றவாளிகள் பட்டியலில் சங்பரிவாரைச் சேர்ந்த சனாதன் சன்ஸ்தா அமைப்பினர் பெயர்
பெங்களுரு, அக். 7- மூத்த பத்திரிகையாளரும் சங்பரிவார்அமைப்புகளை விமர்சித்து வந்தவருமான கௌரி லங்கேசை செப்டம்பர் 5ஆம்தேதி இரவு அவரது வீட்டருகே துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.சங்பரிவாரில் உள்ள தீவிர இந்துத்துவ அமைப்பு சனாதன் சன்ஸ்தாஇன்டர்போல் தேடி வரும் நான்கு பேர் உட்பட ஐந்து நபர்கள் கௌரி லங்கேஷ் கொலையில் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.
2009 இல் கோவாவில் மட்காவில் நடந்த குண்டு வெடிப்பிலும் இவர்களுக்கு தொடர்புள்ளது தெரியவந்துள்ளது.
கொலையாளிகள் கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீண் ரிங்கார் (34), மங்களுருவைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (45),
புனேவைச் சேர்ந்த ஸாரங் அகோல்கர் (38),
ஸாங்க்ளியைச் சேர்ந்த ருது பாட்டீல் (37),
சத்தாராவைச் சேர்ந்த வினய்பவார் (32)
ஆகியோர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண்களையும் கோவில்களில் அர்ச்சகராக. .. கேரள அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

sukirtha.rani :பிராமணப் பெண்கள் உட்பட எல்லா சாதிப் பெண்களையும் கோவில்களில் அர்ச்சராகராக நியமனம் செய்வது குறித்தும் கேரள அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் திட்டத்தின்படி பயிற்சிபெற்ற 206 பிராமணர் அல்லாத அர்ச்சகர்கள் இன்னும் கோயில்களில் நியமிக்கமுடியாத நிலைமை.
ஆனால் கேரளாவில் 6 தலித்துகள் உட்பட பிராமணர் அல்லாத 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம். வரவேற்கத்தக்க நிகழ்வு. திருவிதாங்கூர் தெவசம் போர்ட்டுக்கும் கேரள அரசுக்கும் நன்றி.
தமிழ்நாட்டில் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சில அரசுப் பள்ளிகளில் தலித் சமையலர்கள் சமைத்த சத்துணவை தங்கள் குழந்தைகள் சாப்பிடுவதை விரும்பாத வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியது வரலாறு.
கேரளாவில் நியமிக்கப்பட்ட தலித் அர்ச்சகர்கள் தங்கள் கைகளால் தரும் பிரசாதத்தை வேறு சாதியைச் சேர்ந்த பக்தர்கள் வாங்கி உண்பார்களா என்னும் சந்தேகமும் எழுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம்.