திங்கள், 2 அக்டோபர், 2017

திருமாவளவன் : சுற்றுலா தலங்கள் பட்டியலில் இருந்து தாஜ்மகாலை நீக்குவதா?

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை:’’உத்தரப்பிரதேச மாநில சுற்றுலா தலங்கள் பட்டியலிலிருந்து தாஜ்மகாலை அம் மாநிலத்தை ஆளும் பாஜக அரசு நீக்கியுள்ளது. அரசின் சுற்றுலா துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் தாஜ்மகால் இடம்பெறவில்லை.முஸ்லிம் அரசர் ஒருவரால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவே தாஜ்மகாலை உத்தரப்பிரதேச அரசு நீக்கியிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை தாஜ்மகாலின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தலையிட்டு தாஜ்மகாலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கர்நாடகாவில் மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் வருகிறது . பார்ப்பனர்களின் எச்சில் மீது தலித்கள் அங்க பிரதட்சணம் .....

minnambalam :கடந்த புதன்கிழமை (செப்டம்பர் 27) சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இந்தச் சட்டம் வரும் நவம்பர் மாதம் கூடும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மாற்றுவதாகக் கூறி ஏமாற்றுதல், நரபலி, செய்வினை, பேய் ஓட்டுவது, நிர்வாண பூஜை, குறிப்பாக மங்களூரு குக்கே சுப்ரமணிய கோயிலில் பிராமணர்கள் சாப்பிட்ட எச்சில் இலை மீது தலித்துகள் உருளும் சடங்கு ஆகியவையும் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கர்நாடகாவில் அமலாவது மகிழ்ச்சியாக உள்ளதாகச் சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா தெரிவித்திருந்தார். இந்த முடிவுக்கு முற்போக்கு அமைப்பினரும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பளித்துள்ளனர்.
இந்த நிலையில் கர்நாடகாவில் நேற்று (அக்டோபர் 1) ஒன்றரை வயது குழந்தையை நெருப்புக் கனலின் மீது சடங்குக்காகப் படுக்க வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக் பாஸ் கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா... பாதி தான் உண்மை


பிக் பாஸ்: கொண்டாட்டத்தைப் புறக்கணித்த நமீதா
மின்னம்பலம் : 100 நாள்கள் நடைபெற்ற ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் (செப் 30), பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் நமீதா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார்.
உடுமலைப்பேட்டையில் நேற்று (அக்டோபர் 1) ‘ஃபென்ட்டாஸ்டிக் மொபைல் ஷாப்’ நிறுவனத்தின் தொடக்க விழாவில் நமீதா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு நமீதா கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி என்பதால், கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நமீதாவை நேரில் பார்க்க நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் திரண்டனர்.

உத்தர பிரதேசம் ,, காவல் நிலையத்தில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் .... உதவி காவல் ஆய்வாளர்!.

மின்னம்பலம் : காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழு வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம், ராம்பூர் மாவட்டத்தில் கெம்ரி நகரின் அருகே பன்வர்க்கா பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் ஒன்றுள்ளது. நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) குடிபோதையில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தாஜ்வீர் சிங், காவல் நிலையத்துக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ஏழு வயது சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று காவலர் குடியிருப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கூச்சல் சத்தத்தைக் கேட்டு வந்த ஒரு காவல்துறை கான்ஸ்டபிள் அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தகவல் அளித்தார். அவர்கள் விரைந்து வந்து சப்-இன்ஸ்பெக்டரிடமிருந்து அந்தச் சிறுமியை மீட்டனர்.

ஸ்டாலின் :ரகசியங்கள் மோடிக்குத் தெரியும்! அதனால்தான் மோடி அப்போலோவுக்கு வரவில்லை!

ரகசியங்கள் மோடிக்குத் தெரியும்!மின்னம்பலம் : ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மோடிக்குத் தெரியும். அதனால்தான் அவர் ஜெயலலிதாவைப் பார்க்க வரவில்லை’ என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்திலுள்ள கலைஞர் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா சிலையை நேற்று (அக்டோபர் 1) திறந்து வைத்த திமுக செயல்தலைவர் ஸ்டாலின், பின்னர் ஏ.டி.சி. திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின், “தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிமீது மக்களுக்கு இருக்கும் கோபத்தைவிட திமுக மீதுதான் அவர்களுக்கு அதிகமான கோபம் இருக்கிறது. இந்த ஆட்சியை திமுகவால் கலைக்க முடியவில்லையே என்கிற கோபம்தான் அது.
ஜெயலலிதா உடல்நிலை குறித்து பிரதமர் மோடிக்கு நன்றாகத் தெரியும், அதனால்தான் மருத்துவமனையில் ஜெயலலிதாவைப் பார்க்க அவர் வரவில்லை. அந்த உண்மைகளை மறைக்கவே புதிய ஆளுநரின் நியமனம் நடைபெற்றுள்ளது. இடைத்தேர்தல்களில் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகைகளும் பொய்தான்.

சென்னை முகப்பேரில் டெய்லரை கொலை செய்த கறிக்கடை ஊழியர் கைது

tamilthehindu :டெய்லரை கொலை செய்து சினிமா பாணியில் உடலை 6 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய கறிக்கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
சென்னை முகப்பேர் மேற்கு, 3-வது பிளாக்கில் உள்ள மீன் மார்க்கெட் பின்புறம் உள்ள மழைநீர் கால்வாயில் கடந்த 26-ம் தேதி தலை, கை, கால்கள் இல்லாத சடலம் ஒன்று வெள்ளை கோணிப்பையில் கட்டி வீசப்பட்டிருந்தது. உடலின் இடது மற்றும் வலது கால்கள், தலை ஆகியவை வெவ்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்டன. சினிமா பாணியில் இக்கொலை நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நொளம்பூர் போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர். இந்நிலையில்தான் நொளம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஞ்சமுக சிவன் கோயில் அருகே உள்ள டெய்லர் கடை ஊழியர் பாபு (45) என்பவரும், எதிரில் சிக்கன் மற்றும் மட்டன் கடை ஊழியரான பல்லாவரத்தைச் சேர்ந்த முகமது ரசூல் (22) என்பவரும் காணாமல் போனது தெரியவந்தது.

காட்டலோனியா ஸ்பெயினில் இருந்து பிரிவதற்கு பொதுவாக்கெடுப்பு 90 வீத மக்கள் ஆதரவு வாக்கு!

தினத்தந்தி :ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து தனிநாடு கோரும் காட்டலோனியாவில் பரபரப்பான சூழ்நிலையில் பொது வாக்கெடுப்பு நடந்தது. பார்சிலோனா, ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக காட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது. வடகிழக்கு ஸ்பெயினில் செழிப்பான பகுதி, காட்டலோனியாதான். ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இங்கு வாழ்கிறார்கள். நாட்டின் ஏற்றுமதியில் 25.6 சதவீத பங்களிப்பை இந்த மாகாணம்தான் செய்கிறது. ஸ்பெயினின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் காட்டலோனியாவின் பங்கு 19 சதவீதம் ஆகும். ஸ்பெயினுக்கு வருகிற அன்னிய நேரடி முதலீட்டில் 20.7 சதவீதம் இந்த மாகாணத்துக்குப் போகிறது. இந்த மாகாணத்தில் கூடுதல் சுயாட்சி உரிமைகள் வழங்கப்பட்டிருந்தாலும், ஸ்பெயின் அரசியல் சட்டம் அதை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை.

பார்பனீயத்தை உலககெங்கும் பரப்பும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ..


Selvendhrian denmark :இலங்கை தமிழரிடையே பகுத்தறிவு சுயமரியாதை கருத்துக்கள் திராவிட கருத்துக்கள் மிகவும் செல்வாக்கு இழந்து காணப்படுகிறது.
ஐம்பதுகளில் இருந்த முற்போக்கு நிலைமைகள் இன்று காணமல் போய்விட்டது. படுவேகமாக பார்ப்பனீயத்தின் வேர்கள் ஆழமாக வேருன்றுவது போல தோன்றுகிறது
இன்றைய யாழ்மையவாதம் என்று கூறப்படும் கருத்து உண்மையில் பார்ப்பனீயத்தின் மறுவடிவம்தான்.
பார்ப்பனர்களின் ஆதிக்கம் இலங்கையில் ஒருபோதும் மேலோங்கி இருந்ததில்லை.  ஆனால் யாழ்மையவாதம் எனப்படுவது பார்பனீயத்தின் இலங்கை வெர்ஷன் என்றுதான் கூறவேண்டும் .
இலங்கை தமிழர் பகுதிகளில் கண்ணுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் எதாவது ஒரு கோவில் இருந்தே தீரும் இந்த கோவில் கலாச்சாரத்தை ஒட்டியே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் தங்கள் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டுள்ளன. அங்கு இந்துக்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவர்களும் ஜாதியை பேணுவதில் தங்கள் பங்கை முன்னிறுத்தியே வந்துள்ளார்கள்.
யாழ்ப்பாண கலாச்சாரத்தை கந்தபுராண கலாசாரம் என்று சமுகத்தின் மேல் தட்டு மக்கள் ( Jaffna Elites ) எப்பொழுதும் பெருமையோடு கூறுவர்.
இந்த யாழ் / கந்த புராண கலாசாரம் என்ற சொற்களில் குறிப்பிடப்படுவது உண்மையில் ஒரு ஜாதி கட்டமைப்பை இறுக்கமாக வைத்திருக்கும் தந்திரம்தான்
மிகவும் அதிகமாக முருகன் ஆலயங்கள் உள்ளன. இவை சரித்திர ரீதியாக எல்லா ஜாதினராலும் பூசிக்கப்பட்டு வந்தன .
ஆனால் தற்போது இக்கோவில்கள் எல்லாம் மிக வேகமாக வைதீக ஆகம முறைகளுக்கு மாறிக்கொண்டு இருக்கின்றன.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

பிரான்ஸ் . அல்லாகு அக்பர் என்று கத்திகொண்டே இருவரை குத்தி கொன்ற மர்ம .. மார்செயில்ஸ் ரெயில் நிலையத்தில் ..

Police in the southern coastal city said they had “neutralized” the assailant and cordoned off the area. A witness told Reuters she heard the assailant shouting "Allahu Akbar" ("God is great," in Arabic) during the attack. Police called the incident a "likely terrorist act." French Interior Minister Gerard Collomb said he was immediately heading to the scene of the attack.
மாலைமலர் :பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகர ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தி இருவரை கொன்ற மர்மநபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பிரான்ஸ்: ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - இருவர் பலி பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள மார்செய்ல் நகரில் உள்ள செயின்ட் சார்லஸ் சுரங்க ரெயில் நிலயத்தில் இன்று ஒரு மர்மநபர் கண்ணில் தென்படும் நபர்களை எல்லாம் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் இருவர் துடிதுடித்து உயிரிழந்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் கோரத்தாண்டவத்தில் ஈடுபட்ட அந்நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

அம்பலமாகும் அப்பல்லோ நாடகங்கள்....(வீடியோ) நக்கீரன்



ஜி எஸ் டி வரியால் சிவகாசி பட்டாசு உற்பத்தி 40 வீதம் குறைந்துவிட்டது

tamilthehindu :சிவகாசி அருகே ஆலை ஒன்றில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.  ஆடம்பர பொருட்கள் பட்டியலில் பட்டாசு சேர்க்கப்பட்டு 28 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பால் சிவகாசியில் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் இந்த ஆண்டு பட்டாசு விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்வது பட்டாசுத் தொழில். மாவட்ட வருவாய் அலுவலரின் உரிமம் பெற்ற 178 பட்டாசு ஆலைகள், சென்னையில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்ற 152 பட்டாசு ஆலைகள், நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் அனு மதி பெற்ற 437 பட்டாசு ஆலைகள் என மொத்தம் 767 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

ஓரத்திலாவது வையுங்கள்.. நடிகர் பிரபு கலைஞர் திறந்த சிவாஜி சிலை ,,,,


tamiloneindia :சென்னை: சென்னை மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையில் கல்வெட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை இடம்பெற செய்ய வேண்டும் என நடிகர் பிரபு கோரிக்கை விடுத்தார். சென்னை அடையாறில் அமைக்கப்பட்ட சிவாஜி மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திறந்துவைத்தார். அப்போது விழாவில் பேசிய சிவாஜியின் இளைய மகன் பிரபு, நான் எம்ஜிஆரையும் கருணாநிதியையும் பெரியப்பா என்று தான் அழைப்பேன். எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறும் நேரத்தில் சிவாஜியின் சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது என் பணி என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்னிடத்தில் கூறினார். சிவாஜிகணேசனின் சிலையை கடற்கரையில் நிறுவியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆகையால், கருணாநிதியின் பெயரை இந்த மணி மண்டபத்தில் ஒரு ஓரத்திலாவது இடம்பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு பிரபு கூறினார்.<

மும்பை ரயில்நிலைய விபத்து .. இறந்தவர்கள் நெற்றியில் அடையாள எண்!

இறந்தவர்கள் நெற்றியில் அடையாள எண்!
மின்னம்பலம்: மும்பை, ரயில் நடை பால விபத்தில் உயிரிழந்தவர்களின் நெற்றியில், மருத்துவமனை நிர்வாகம் வரிசை எண்ணை எழுதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) மும்பை எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தது. மும்பை எல்பின்ஸ்டன் சாலை ரயில் நிலையத்தில் இருந்து, நடை பாலம் மூலம் அருகில் உள்ள பரேல் ரயில் நிலையத்துக்குச் செல்ல முடியும் என்பதால் மக்கள் எல்பின்ஸ்டன் ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர். இந்த நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு ரயில் பாதைகளில் ரயில்கள் வந்து சேர்ந்தன. மேலும், கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது, நடை பாலத்தில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் சென்றனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.

தமிழ் பேசும் நடிகைகளுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள்! - ஸ்ரீ பிரியங்கா

நேர்காணல்: தமிழ் பேசும் நடிகைகளுக்கு மறுக்கப்படும் வாய்ப்புகள்! - ஸ்ரீ பிரியங்காமின்னம்பலம்: வடசென்னை பகுதியை மையமாகக்கொண்டு விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ரீ பிரியங்கா. இவர் இதற்கு முன்பு அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்தி சாமி இயக்கிய ‘கங்காரு’ படத்தில் நடித்து, தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர். தமிழ் பேசும் நடிகைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள தமிழ்த் திரையுலகில், ஸ்ரீ பிரியங்கா தமிழ் பேசி நடிப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் இவர் நடித்த பிச்சுவாகத்தி திரைப்படம் வெளிவந்தது. இனிகோ பிரபாகருக்கு ஜோடியாக நடித்திருந்த இவருடைய நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுரேஷ் காமாட்சி இயக்கும் மிக மிக அவசரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் ப்ரீவியூ திரையரங்கில் மின்னம்பலம் நேர்காணல் பகுதிக்காக இவருடன் கலந்துரையாடினோம்.

சினிமாவில் உங்கள் முதல் வாய்ப்பு பற்றி கூறுங்கள்?
நான் சினிமாவுக்கு வருவேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே என்னுடைய அப்பாவின் நண்பர் மூலமாக முதல் பட வாய்ப்பு கிடைத்துவிட்டது. என்னுடைய முதல் படம் அகடம், கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து சில நல்ல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

MGR இன் உண்மையான நூற்றாண்டு விழா 2016ஆம் ஆண்டு தை தொடங்கி 2017ஆம் ஆண்டு தை வரை!

மக்களை வதைக்கவா எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா?
மின்னம்பலம் : ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் நோக்கம் மக்களை வதைப்பதுதானா? இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான செயல்கள் கண்டிக்கத்தக்கவை’ என்று பாமக தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 1) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் மக்களுக்கும், மாணவர்களுக்கும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படக் கூடாது என்று அஞ்சப்பட்டதோ, அவை அனைத்தும் ஆளுங்கட்சியால் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையிலான இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

குமரி அனந்தன் பாரதமாதா கோவில் அமைக்க நடைபயணம் ... தமிழிசையோடு சேரப்போகிறாரோ?

குமரி அனந்தன் நடைபயணம்!மின்னம்பலம் : தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரத மாதா கோயில் அமைக்கக் கோரி காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தன் சென்னையிலிருந்து அக்டோபர் 2 ஆம் தேதி (நாளை) நடைபயணத்தை தொடங்கவுள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையில் அருகில் இருந்து நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் நடைபயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் தொடங்கி வைக்கின்றனர். இந்த நடைபயணம் அக்டோபர் 21 ஆம் தேதி பாப்பாரப்பட்டியில் நிறைவடைகிறது.

சிதம்பரம் : புல்லெட் ரயில் பொருளாதாரத்துக்கு விழுந்த அடுத்த அடி ! பணமதிப்பு நீக்கம் போறதுதான் .

பாதுகாப்பை புல்லட் ரயில் திட்டம் கொன்றுவிடும்!மின்னம்பலம் : மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் பணமதிப்பு நீக்கத்தைப் போன்றதாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
மும்பை முதல் அகமதாபாத் வரையில் புல்லட் ரயில் சேவை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஜப்பான் அரசு 88,000 கோடி ரூபாய் கடன் தொகையை 0.1 சதவிகித வட்டி விகிதத்துக்கு வழங்கவுள்ளது. 50 ஆண்டுகளுக்கு இத்தொகையை இந்திய அரசு ஜப்பானுக்குச் செலுத்த வேண்டும். ஏற்கனவே இதுபற்றி ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மும்பை அகமதாபாத் நகரங்களுக்கு இடையே விமானத்தில் பயணிப்பதை விட புல்லட் ரயிலில் பயணிக்க அதிக செலவாகும். மேலும் விமானத்தில் விரைவில் சென்றுவிட முடியும். இத்திட்டத்துகாக ஜப்பான் அரசிடம் பெறும் கடனால் வருங்கால தலைமுறையினர் மீது ஏராளமான கடன் சுமை திணிக்கப்படும் என்றும் விமரசனங்கள் எழுந்துள்ளது.

விட்ட இடத்தை பிடிக்க போராடும் வடிவேலு!

விட்ட இடத்தை பிடிக்க போராடும் வடிவேலு!
மின்னம்பலம் :தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ரசிகர்கள் உண்டு. சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் கத்தி சண்டை படம் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி தந்தார். இதை தொடர்ந்து 'சிவலிங்கா' படத்தில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்நிலையில் தற்போது அவர், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'மெர்சல்' படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன், வடிவேலு கூட்டணியில் 2006 ஆம் ஆண்டு வெளியான 'இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடியில் கலக்கிய அந்த படம் வசூல் ரீதியாகவும், பாக்ஸ் ஆபீஸிலும் முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை அள்ளியது.

BBC : ஜெர்மனியில் இரு ஆண்கள் சட்டப்படி திருமணம்

கார்ல் க்ரைல்லா மற்றும் போடோ மாங்ட் தம்பதி 38ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 
ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில், ஜெர்மனியின் பல நகரங்களில் உள்ள பதிவாளர் அலுவலகங்கள் திறந்து இருந்தன. ஆஸ்திரேலியாவில், ஒருபால் உறவு திருமணத்தை அனுமதிப்பது குறித்து பொது வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு ஒருபாலுறவுக்காரர்கள் திருமணத்துக்கு ஜெர்மனி அனுமதி பிற தம்பதிகள் போலவே, திருமணத்திற்கு பிறகு ஒருபால் தம்பதிகளுக்கு ஒரே மாதிரியான வரி சலுகைகளும், தத்தேடுப்பு உரிமைகளும் கிடைக்கின்றது.

சசிகலா விடுப்பில் வரமுடிவு .. நடராஜன் உடல் நிலை கவலைக்கிடம் ?

மாலைமலர் :நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. நடராஜன் உடல்நிலை கவலைக்கிடம்: சசிகலா பரோலில் வர முடிவு பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சிறுநீரகம் உள்பட பல உறுப்புகள் செயல் இழந்துள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக் கிடமாக உள்ளது. இந்த தகவல் ஜெயிலில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கணவரை சந்திக்க சசிகலா முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக பரோல் கேட்டு சிறைத்துறை அதிகாரிகளிடம் விண்ணப் பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பரோல் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? பரோல் பெற தகுதி உள்ளதா? என்று சிறை கண்காணிப்பாளரிடம் சசிகலா கேட்டு தெரிந்து கொண்டதாக தெரிகிறது. மேலும் பரோல் பெறு வதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

கலைஞர் பெயர் நீக்கம் திட்டமிட்டு நடந்திருக்கிறது: மு.க.ஸ்டாலின் பேட்டி,, சிவாஜி மணிமண்டபம் ,

நக்கீரன் : தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம்:
;எதற்கும் லாயக்கற்ற வகையில் நடக்கும் இந்த ஆட்சியில் அவர்களுடைய பதவிகளை, அதிகாரங்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், கமிஷன் வாங்கவும், கொள்ளையடிக்கவும் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இன்னல்களைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ;அதுமட்டுமல்ல, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் மக்களின் வரிப் பணமான அரசுப் பணத்தை, நியாயமாக அவரது பெயருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் செலவழித்திருந்தால் நான் வரவேற்றிருப்பேன். ஆனால், உட்கட்சி விவகாரங்கள், எதிர்கட்சிகளை விமர்சனம் செய்வது போன்ற செயல்களுக்குதான் அந்தப் பணம் செலவழிக்கப்படுகிறது. அதேசமயம், நீதிமன்றமே மாணவர்களையெல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துவரக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், நேற்றைக்கு அதையும் மீறி மாணவர்கள், பள்ளிப் பேருந்துகளில் அந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்பட்ட காட்சிகளைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதை நாம் பார்த்தோம்.

பிக் பாஸ் - கமல் ஒரு வைணவ தொண்டரடிப்பொடி .. ஆழ்வார்!

Surya Xavier : நேற்று பிக்பாஸ் நிறைவு விழாவை.
பார்க்க வேண்டும் என பார்த்தேன்
கமல் நிச்சயம் அரசியல் மாதிரி எதாவது பேசுவார் என எனக்குள் ஒரு அசரீரி ஒலித்தது
அவர் அதே போல் உணர்ச்சி பிழம்பாய் மாறி பேசவும் செய்தார்
அவர் இப்படித்தான் பேசுவார் எனவும் எனக்குள் ஒரு அனுமானம் இருந்தது,
அப்படித்தான் பேசினார். அதில் உச்சகுரலில் அவர் சொன்ன ஒரு வார்த்தையை யாரும் கவனித்தார்களா என தெரியவில்லை,
ஏனெனில் அதையொட்டிய பதிவுகள் எதுவும் இதுவரை இல்லை,
நான் மக்களுக்காக "தொண்டரடிபொடி"யாய் பணியாற்றுவேன் என்பது தான் அவர் உச்சகுரல் தொண்டரடிபொடி என்றால் என்ன?
வைணவ ஆழ்வார்களில் பத்தாவது (தசரா) ஆழ்வார் பெயர்

விஜயகாந்த் : நான்கு நாட்களில் ஆட்சி கவிழும் ( சுப்பிரமணியம் சாமி சொல்லிருப்பார்லே)

மின்னம்பலம்: காரைக்குடியில்  நடைபெற்ற தேமுதிக பொதுக்குழுவில் பேசிய விஜயகாந்த், ‘இன்னும் நான்கு நாள்களில் ஆட்சி கவிழ்ந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார். நான்கு நாள்களில் ஆட்சி கவிழும்: விஜயகாந்த்தேமுதிக மாநிலச் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பி.எல்.பி. திருமண மண்டபத்தில் விஜயதசமி தினமான நேற்று (செப்டம்பர் 30) நடைபெற்றது. எப்போதும் இல்லாத அளவுக்குச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாக இருந்தன. சீருடை அணிந்த தொண்டர்கள் நூறு பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளே வருபவர்கள் பல சோதனைகளுக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தீப்பெட்டி, பீடி, சிகரெட், குறிப்பாக செல்போன், கேமராவுக்கு உள்ளே அனுமதியில்லை. எனவே பொதுக்குழு உறுப்பினர்கள் அனைத்துப் பொருள்களையும் கார்களிலும், பேருந்துகளிலும் பத்திரப்படுத்திவிட்டு காலை 9 மணியளவில் மண்டபத்துக்குள் சென்றனர்.

புதிய மின்சார ஊழல் : குஜராத் யூனிட் விலை ரூ.2.65 ஆனால் தமிழகம் கொடுப்பது ரூ.3.47... குஜராத்தின் வளர்ச்சி அதிமுகவின் இலட்சியம்!

மின்னம்பலம் : டி.எஸ்.எஸ். மணி : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 27ஆம் நாள் தமிழ்நாட்டுக்குச் சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்காக, 1500 மெகா வாட் மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு அதாவது யூனிட் ரூ.3.47 முதல் ரூ.3.97 விலைக்கு வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத்தில் உள்ள நான்கு ஆலைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த நான்கு ஆலைகளில், குறைவான டெண்டர் அளித்த ராசி கிரீன் ஒரு யூனிட்டுக்கு, ரூ.3.47 எனக் கொடுத்திருந்ததையே எல்லா ஆலைகளுக்கும் அடிப்படை விலையாக நிர்ணயித்து இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு மின் வாரியத் தலைவர் சாய் குமார் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

பாஜக : எங்களுக்கு எப்போ வசதியோ வாய்ப்போ அப்போ அதிமுக ஆட்சியை கலைப்போம்! வீரமணி கடும் கண்டனம்!

tamilthehindu : அதிமுக ஆட்சி கவிழ்ந்தால், அதன் பயன் திமுகவுக்கே சாதகமாக ஆகிவிடும் என்பதால், அதற்கு இடந்தர மாட்டோம். எங்களுக்கு எப்போது வசதியோ, வாய்ப்போ அப்போது அதிமுக ஆட்சியைக் கவிழ்ப்போம். தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்வோம் என்று பாஜக தேசிய தலைவர் முரளிதர ராவ் கூறிய கருத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மோடி பிரதமரான பின்பும்கூட அவர் தொடர்ந்து பெற்ற தேர்தல் வெற்றிகளில்கூட, 2014-ல் அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை!<0> 2014-ல் வேலை வாய்ப்புக்கும், மாற்றத்திற்கும் ஏங்கிய 18 வயது இளைஞர்கள், அப்போது மோடியின் தேன் தடவிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பினர்; வாக்களித்து இன்று ஏமாந்து கைபிசைந்து, கண் பிதுங்கி இருந்த வேலை வாய்ப்பினையும்கூட ஐ.டி. போன்ற துறைகளில் இழந்து வேதனைத் தீயில் வெந்து கருகுகின்றனர்!