திங்கள், 11 செப்டம்பர், 2017

புதுச்சேரி - கிரண்பேடியின் 3 புதிய பாஜக எம் எல் ஏக்கள் டெல்லி பயணம்

புதுச்சேரி: 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி அவசர அழைப்புஅங்கீகாரம் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளதால் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு டெல்லி அவசர அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பால் புதுவை அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்திற்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசின் பரிந்துரையின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நியமிக்கும்.
இந்நிலையில் புதுவை காங்கிரஸ் அரசின் பரிந்துரை இல்லாமலேயே மத்திய உள்துறை அமைச்சகம் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், செல்வகணபதி ஆகியோரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்தது. இவர்கள் நியமன கடிதத்தை தலைமை செயலாளரிடம் அளித்தனர். இதற்காக சிறப்பு அரசாணையும் வெளியிடப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சபாநாயகர் வைத்திலிங்கத்தை சந்தித்து பதவிப்பிரமாணம் செய்து வைக்கும்படி கேட்டனர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை!

நாளை நடைபெறவிருந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம். சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெறுகிறது. எடப்பாடி - ஓபிஎஸ் அணியின் இந்த பொதுக்குழுவிற்கு தினகரன் அணி சார்பில், கர்நாடக மாநில அதிமுக அம்மா அணியின் செயலாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில், விசாரணையை வரும் அக்டோபர் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றம். நக்கீரன்

BBC "எச்.ராஜா சாரணர் இயக்க தலைவர் ? செங்கோட்டையன் பழனிசாமி கூட்டு முயற்சி!

தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்தும் நோக்குடனேயே தான் இப்பதவிக்குப் போட்டியிடுவதாக கூறும் எச் ராஜா
இந்திய சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அவருக்கு அப்பதவியைத் தாரை வார்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சிப்பதாக திமுக பொருளாளரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதற்கு ராஜா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இன்னும் தமிழில் நல்ல Motivating books வரவே இல்லை...

karthikeyan Fastura : ஒரு ஷோ முழுதும் ஸ்டார்ட்அப் பிசினஸ் பண்றவங்களை குற்றம், குறை, நக்கல், நையாண்டி எல்லாம் செய்துவிட்டு இறுதியில் கொஞ்சம் நல்லவிதமாக அதுவும் வந்திருக்கும் விருந்தினர் சொன்னபிறகு புத்தி வந்து சொல்வதெல்லாம் #நீயாநானா வில் மட்டுமே காணமுடியும். நிஜத்தில் என்ன நடக்கிறது என்று கொஞ்சமாவது ஹோம்ஒர்க் பண்ணியிருந்தால் இப்படியெல்லாம் ஒரு விவாதத்தை கொண்டுபோயிருக்க மாட்டார்கள்.
இளைஞர்களுக்கு எந்த நாடு, எந்த சமூகம் ஸ்டார்ட்அப் பிசினசை ஊக்குவிக்கிறதோ அந்த நாடும் தான் அந்த சமூகமும் தான் உயரும்.
இங்கே அரசாங்கங்கள் ஸ்டார்ட்அப்புகளுக்கு உதவுவதற்காக நிறைய திட்டங்கள் உள்ளன என்று சொல்கிறார்கள். உண்மை என்னவென்று என்னை போல தேடியவர்களுக்கு தான் தெரியும்.
ஒரு பக்கம் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடிகளை வரி தள்ளுபடி செய்கிறார்கள். அந்த பணத்தில் பல லட்சம் ஸ்டார்ட்அப்புகளுக்கு நிதி உதவி செய்ய முடியும்.

மாணவர்கள் உட்பட 26 பேர் புழல் சிறையில் அடைப்பு .. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்:

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக சென்னையில் 13 மாணவர்கள் உள்பட 26 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும் தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடந்த 2-ம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதில் தவறு இல்லை. சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

லிட்டருக்கு 5 கி.மீ மைலேஜ் தரும் காரில், நதிகளை மீட்க பயணிக்கும் ஜக்கி வாசுதேவ்!




இந்த கட்டுரை விகடன் இணையதளத்தில் வந்திருந்தது.   என்ன
காரணமென்றே தெரியாமல், திடீரென்று அந்த கட்டுரை விகடன் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.    ஜக்கி என்ற திருட்டுப் பயலின் நீண்ட ஆக்டோபஸ் கரங்கள் விகடன் வரை நீளக் கூடியதுதான்.  ஜக்கியை இந்த அளவுக்கு வளர்த்து விட்டதே விகடன்தானே.  அந்த கட்டுரையை வாசகர்களுக்காக சவுக்கில் பதிப்பிக்கிறேன்.
லிட்டருக்கு 5 கி.மீ மைலேஜ் தரும் காரில், நதிகளை மீட்க பயணிக்கும் ஜக்கி வாசுதேவ்!
‛ரமணா’ படத்தில் ஒரு காட்சி. ஆபாச சுவரொட்டிகளை அழிக்கும் இளம்பெண்களைக் கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். இது தெரியாமல் முழிக்கும் அந்தப் பெண்களுக்கு விஜயகாந்த் விளக்கம் சொல்வார், ‛‛அந்த போஸ்டர்ல இருக்குற ஆபாசத்தை விட, நீங்க போட்டிருக்கிற டிரஸ்தான் ஆபாசமா இருக்கு!’’. அப்படித்தான் இருக்கிறது, ‛நதிகளை மீட்போம்… பாரதம் காப்போம்’ என்ற பெயரில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் மேற்கொள்ளும் விழிப்புஉணர்வு பயணம். ஆம், நதிகளை மீட்கக் கோரி, கோவை – டெல்லி வரை சாலை மார்க்கமாக, 7,000 கி.மீ தூரம் பயணித்து விழிப்புஉணர்வு பிரசாரம் செய்கிறார் ஜக்கி வாசுதேவ். அவர் பிரசாரம் செய்வதில் பிரச்னை இல்லை. அவர் செல்லும் கார்தான் மேட்டர்.

கொள்ளைக்காரன் ஜாக்கியின் ஈஷா யோகா மரக்கன்றுகள் நட தமிழக அரசு துணை நிற்கும் டெட்பாடி பழனிசாமி..

அமைச்சர்கள் கே.பாண்டியராஜன், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அப்பல்லோ குழுமங்களின் தலைவர் பிரதாப் ரெட்டி, சி.ஐ.ஐ. (தமிழ்நாடு) தலைவர் ரவிச்சந்திரன், நடிகர் விவேக், நடிகை சுஹாசினி மணிரத்னம், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா, கர்நாடக இசை கலைஞர் சுதா ரகுநாதன் உள்பட ஜாக்கியிடம் கைநீட்டும் பாஜக கூன்ஸ்
சென்னை, புறம்போக்கு நிலங்களில் ஈஷா யோகா மையம் சார்பில் மரங்கள் நடுவதற்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ‘நதிகளை மீட்போம்’ என்னும் தேசிய அளவிளான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி உள்ளார். இதன் மூலம் நதிகள் மீட்பின் அவசியத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் செப்டம்பர் 3-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரை 30 நாட்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள அவர் திட்டமிட்டார். அதன்படி ஜக்கி வாசுதேவ் கடந்த 3-ந் தேதி நதிகள் இணைப்பு விழிப்புணர்வு பயணத்தை கோவையில் தொடங்கினார். பின்னர் கன்னியாகுமரி, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும், கர்நாடக, கேரளா ஆகிய மாநிலங்களிலும் விழிப்புணர்வு பயணம் நடைபெற்றது. இந்த நிலையில், ஜக்கி வாசுதேவ் தலைமையில் ‘நதிகளை மீட்போம்’ விழிப்புணர்வு கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

ஸ்டாலின் :திருச்செங்கோடு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.246 கோடி யாருடையது?...

mayura-akilan. Oneindia : சென்னை: திருச்செங்கோட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.246 கோடி டெபாசிட் செய்த அமைச்சரின் பினாமி, 45 சதவீத பணத்தை அபராதமாக கட்டியதால் நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார். அந்த அமைச்சர் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆளுநரை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கருப்புப் பணம் ஒழிக்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவிக்கும் நிலையில் 246 கோடி ரூபாய் கருப்புப் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதே? என்று கேட்டனர். அதற்கு ஸ்டாலின், ஆம், திருச்செங்கோடு ஐஓபி வங்கியில் 246 கோடி ரூபாய் கருப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாக நானும் பத்திரிகை மூலம் தெரிந்து கொண்டேன். அது தமிழகத்தின் அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான பினாமி பணம் என்றும், அதில், 50 சதவிகித பணத்தை வரியாகக் கட்டியிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அந்த அமைச்சர் யார் என்பதை ஊடகங்கள் வெளியிட்டால் நாட்டுக்கும் நன்மை கிடைக்கும் என்றார்.
கடந்த நவம்பர் 8ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணத்தை தாமாக முன்வந்து கணக்கு காட்டினால் அவர்களுக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் மத்திய அரசு அறிவித்தது.

*யார் இந்தத் தோழர் பிரின்சு கசேந்திர பாபு?*

தேச விரோதி எனத் தம்மை யார் அழைத்தாலும் கோபப்பட்டு வெகுண்டு எழாமல் பெருமைதான் கொள்கிறார்கள் தோழர் பிரின்ஸ் போன்றவர்கள்
பாகம்_1 அரியலூர் வீரத் தமிழச்சி அனிதாவின் மரணத்தைத் தாங்க முடியாமல் சாதி மத இன வேறுபாடின்றி தமிழக மக்கள் மனத் துயரத்துடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தப் போராட்டத்தைத் திசை திருப்பும் முகமாக...
பாசிச பாஜகவின் அடிவருடி, கைக்கூலி மற்றும் அரசியல் அடிமை புதிய தமிழகம் கட்சியின் தலைவர் *கிருட்டிணசாமி*, இந்தச் சாவிற்குத் தூண்டுதலாக இருந்ததாக *தோழர் பிரின்சு கசேந்திர பாபுவை* அபாண்டமாகக் *குற்றம் சாட்டியுள்ளார்.*
சமூக பிரச்சனைகளுக்காக போராடும் அனைத்துப் போராளிகளுக்கும்
தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு யார் என்பது தெரியும்.
அவரைப் பற்றி அறியாதவர்களுக்கு என் அனுபவத்தில் நான் சொல்லும் சிறிய விளக்கம்தான் இது!
நான் சென்னையின் புகழ் பெற்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன் , நான் கடந்த பத்து ஆண்டுகளாக தோழர் பிரின்ஸ் அவர்களுடன் சமூகம் சார்ந்த பல போராட்டங்களில் பங்கேற்றிருக்கிறேன்.

திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்கள்/: வீடியோவைப் பாருங்கள்


திமுகவுக்கு பதிலடி தரும்வகையில் பாஜக  திருச்சியில் பொதுக்கூட்டத்தை நடத்தியது. அந்தக்கூட்டத்துக்கு ஆட்களே வரவில்லை என சமூக ஊடகங்களில் படங்கள் போட்டு பலர் எழுதினர். இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன், கூட்டம் தொடங்கும் முன் போடப்பட்டிருந்த காலியான நாற்காலிகளை படம் பிடித்து சமூக ஊடகங்களில் சிலர் எழுதிவருவதாக குற்றம்சாட்டினார். இந்நிலையில் ஆதரத்துடன் பலர் திருச்சி பொதுக்கூட்டம் பற்றிய வீடியோக்களையும் படங்களையும் பகிர்ந்துவருகின்றனர். அதில் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் பேசும்போது எடுத்த வீடியோவை சமூக ஊடகத்தில் பதிவு செய்திருக்கிறார்.இந்த பக்த்ஸ்லாம் செம்ம டுபாகூர்ன்னு அறிஞ்சி தான்டா, ஃபோட்டா ஷாப்ல ஆட்சி நடத்துறவங்க ன்றத உணர்ந்து தான்டா
நேத்து பத்துக்கும் மேற்பட்ட பேஜ் அட்மின்ஸ் திருச்சி பாஜக பொதுக்கூட்டத்துக்கே நேர்ல போய் லைவ் போட்டாங்க 
எங்க தரப்புல இருந்து மூனு பேர் கொண்ட குழுவை அனுப்பி மேன்யுலா எத்தன பேர் வந்திருந்தாங்கன்னு எண்ணினோம்.
மொத்த ஆட்களின் எண்ணிக்கை 312
அதுல செக்யூரிட்டி 24 பேர்,

நளினி சிதம்பரம் : இனி நீட் ஐ எதிர்ப்பவர்கள் கடவுளிடம்தான் மேல்முறையீடு செய்யவேண்டும்” .. ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்

thetimestamil : இரா.முருகானந்தம்: :  அன்புள்ள திருமதி. நளினி சிதம்பரம் அவர்களுக்கு.,
இதை நான் உங்களுக்கு ஏன் எழுதுகிறேன் என்று தெரியவில்லை. இருந்தாலும் எழுதாமலும் இருக்க முடியவில்லை. நீங்கள் காங்கிரஸ் உறுப்பினரல்ல.தொழில் முறை வழக்குரைஞர். வழக்குகளை தேர்வு செய்வதும் வழக்காடுவதும் உங்கள் தொழில்சார் உரிமை. நானும் உங்களுக்கு வேண்டப்பட்டவனுமல்ல.. எனவே நீட் எழுதிய மாணவர்களுக்கு ஆதரவாக வாதாட முற்பட்டதை என்னால் திட்டவட்டமாக குறைகூற முடியவில்லை.
ஆனால் பாருங்கள்.. அனிதா கூட எனக்கு வேண்டப்பட்ட பெண் இல்லை. அவர் தானேதான் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் என்கைகளில் கூட இரத்தக்கறை இருப்பதான பிரமையில் திரிவதற்கான மனநிலை எதுவோ அதுவே இதை எழுத காரணமும் நியாயமும் ஆகிறது.
நான் ஒரு காங்கிரஸ்காரன். ஆனால் அதன்மூலம் ஒரு வார்டு மெம்பர் பதவிகூட அடைந்ததில்லை.எனது சிறிய செய்கைகூட கட்சியை பாதிக்கக்கூடாது என்கிற கவனம் இல்லாமல் ஒருகணம்கூட செயல்பட்டதில்லை. கூட்டணி தர்மத்திற்கு மாறாக கூட்டுறவு சங்கதேர்தலில் எதிர் அணியில் சேர்ந்து போட்டியிட்டார் என்பதால் எனது தந்தையுடன் சண்டையிட்டு அதில் பின்வாங்க வைத்திருக்கிறேன்.
ஆனால் உங்கள் கணவர் காங்கிரஸின் சார்பில் பல அரசுபதவிகளை வகித்த மதிப்பிற்குரிய ஒரு தலைவர். இந்தியாவின் மாபெரும் பொது நிர்வாகிகளுள் ஒருவர்.. தமிழக காங்கிரஸின் பெருமைமிகு அடையாளம் கூட. நான் பொதுத்தளத்தில் அவர் மீதான அவதூறுகளுக்கு எதிராக ஒப்பந்தமிடப்படாத வழக்குரைஞராக செயல்பட்டிருக்கிறேன்.

ஜே.என்.யூ மாணவர் தேர்தல்: இடதுசாரி கூட்டணி வெற்றி! JNU .. united-Left alliance retained all four seats

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத் தேர்தல் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. இதில், பல்வேறு மாணவர் அமைப்பினர் போட்டியிட்டாலும், இடதுசாரி மாணவர் கூட்டமைப்பு மற்றும் ஆர்.எஸ்.எஸ். பின்புலமுள்ள ஏ.பி.வி.பி. இடையே பலத்த போட்டி நிலவியது. இடதுசாரி கூட்டணியில் அனைத்திந்திய மாணவர் கூட்டமைப்பு, இந்திய மாணவர் கூட்டமைப்பு, ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு ஆகிய மாணவர் அமைப்புகள் உள்ளன.
சமீப நாள்களாக வலதுசாரி அமைப்புகள் பலம்பெற்று வருவதால், ஜேஎன்யூ தேர்தலில் இடதுசாரி கூட்டமைப்பு தனது பதவிகளை தக்கவைத்துக் கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று (செப் 9) வெளியாகின. இதில் இடதுசாரி கூட்டமைப்பினர் தலைவர், துணைத் தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர் ஆகிய முக்கிய பொறுப்புகளை வென்று தங்களின் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.

ஆளுநருக்கு ஸ்டாலின் ஒரு வாரம் கெடு... சட்டசபையை கூட்டுக!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (10-9-2017) காங்கிரஸ் – இ.யூ.முஸ்லீக் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர். இந்நிகழ்வில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.இராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம்.முகமது அபுபக்கர், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான ஜெ.அன்பழகன், க.பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். ஆளுநரை சந்தித்த பின் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’ஆளூநருக்கு உடனடியாக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. 19 பேர் முதல்வருக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். 119 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக உள்ளனர். திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ-க்களும், தினகரன் அணியில் 21 எம்.எல்.ஏக்கள் முதல்வருக்கு எதிராக உள்ளனர். 14 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே முதல்வருக்கு தற்போது உள்ளது. இதன் காரணமாக ஆளுநர் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிடவேண்டும். ஒரு வாரத்திற்குள் சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதி மன்றத்தை நாட வேண்டியிருக்கும். இனி ஆளுநரை சந்திக்க மாட்டோம்’’ என்று கூறினார்.
நக்கீரன்
;தமிழக எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின்  இன்று (10-9-2017) காங்கிரஸ் – இ.யூ.முஸ்லீக் உள்ளிட்ட தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து கடிதத்தை வழங்கினர்.

Paarppaan's Think Tank நிரம்பி வழிகிறது. எல்லாம் சாக்கடை.

barathithambi   : அதான் அனிதாவோட அண்ணன்லாம் படிச்சிருக்காங்கல்ல... அவங்க எடுத்து சொல்லியிருக்கலாமே’’ என்று கேட்கிறார் ஞாநி சங்கரன்
அனிதாவின் பிணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதாக அருவெருப்பான கார்ட்டூன் வரைகிறார் குருமூர்த்தி. ‘ப்ளூவேல் கேம் போல இது Dravidian whale game.. உஷாரா இருங்க’ என எச்சரிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.
’வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறதா?’ எனக் கேட்கிறார் சுமந்த் சி.ராமன்.
மாண வர்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதால் படிப்பு கெடுகிறது என கண்ணீர் வடிக்கிறார் டி.என்.கோபாலன்.
"வெட்டியா நீட்டி முழக்காதீங்க. வெகுண்டு எழாதீங்க. புத்தியால ஜெயிக்கனும்" என புத்திமதி சொல்கிறார் கமல்ஹாசன்.

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மாகாரஷ்டிராவிலும் ஆக்சிஜன் இன்மையால் 55 குழந்தைகள் உயிரிழப்பு

;மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்கிஜன் பற்றாக்குறை காரணமாக 55 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் உத்தர பிரதேசத்தில் ஆக்ஸிஜன் வசதி இல்லாததால், 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த்து. இந்த சோகத்தில் இருந்து மீள்வதற்குள் அடுத்த 5 நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிழந்தனர்.தற்போது மகாராஷ்டிரா மாநில, நாசிக் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் ஆக்கிஜன் பற்றாக்குறையால் 55 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறுகையில், இறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, இக்கட்டான நிலையில் கொண்டு வரப்பட்டவர்கள்.குறைபிரசவம் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் ஏற்பட்ட குழந்தைகள்தான் இறந்துள்ளனர் என்று கூறினார். மேலும், அரசு மருத்துவமனையில் 18 இன்குபேட்டர்கள் உள்ள காரணத்தால், ஒரு இன்குபேட்டரில் 2 - 3 குழந்தைகளை வைக்க வேண்டிய நிலை உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்.  மாலைமலர்

BBC :மெக்சிகோ நிலநடுக்கம்: 90 பேர் பலியானதாக தகவல்

கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மெக்சிகோவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.2 என்ற அளவில் பதிவான அந்த நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின்போது மொத்தமாக 721 நில அதிர்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக மெக்சிகன் சீஸ்மோலஜிக்கல் சர்வீஸ் தெரிவித்துள்ளது. மெக்சிகோவின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வுஹாகு மாகாணத்தில் அதிகபட்சமாக 71 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். மெக்சிகோவில் கடந்த 100 ஆண்டுகளை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவே சக்தி வாய்ந்தது. மீட்புப் படையினர், அவசரகாலப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த நாளான வெள்ளிக்கிழமையன்று, அந்நாட்டின் கிழக்கு கடலோரப் பகுதிகளை 'கேட்டியா' என்று பெயரிடப்பட்டுள்ள வெப்பமண்டலப் புயலொன்று தாக்கியது. அந்தப் புயலால் உண்டான கனமழை ஏற்படுத்திய நிலச்சரிவுகளில் இருவர் கொல்லப்பட்டனர்.

நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் .. ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை!

எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினார். பெரும்பான்மை இழந்த எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒரு வாரத்திற்குள் உத்தரவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு வாரத்தில் சட்டசபையை கூட்ட வேண்டும்: கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், ஜே.அன்பழகன், வேலு, பொன்முடி மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.எல்.ஏ. அபுபக்கர் ஆகிய 10 பேரும் இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதால் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது:- அ.தி.மு.க.வைச் சேர்ந்த 19 எம்.எல்.ஏ.க்கள் முதலில் தங்கள் ஆதரவை திரும்பப் பெருவதாக அறிவித்தனர். அதைத்தொடர்ந்து ஜனாதிபதியை சந்தித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தமிழ்நாட்டில் நிலவிவரும் சூழ்நிலை பற்றி விலக்கி பழனிச்சாமியை பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறினார்கள். இதற்கிடையில், மறுபடியும் ஆளுநரை சந்தித்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி ஆட்சிக்கு எதிரான உறுப்பினர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என்பதை தெரிவித்தனர். தமிழ்நாட்டில் 89 தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

இது தவிர பழனிச்சாமிக்கு எதிராக 21 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். மொத்தம் 119 எம்.எல்.ஏ.க்கள் தமிழக அரசுக்கு எதிராக உள்ளனர். எனவே பழனிச்சாமி அரசுக்கு பெரும்பான்மை இல்லை. அதனால் இன்னும் ஒருவார காலத்திற்குள் சட்டசபையில் எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிருபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்.

Bangla மேற்கு வங்கம்: பங்களா எனப் பெயர் மாற்றம்!

மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ எனப் பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்வது தொடர்பான தீர்மானம் மாநிலச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, ஆங்கிலத்தில் ‘பெங்கால்’, பெங்காலியில் ‘பங்களா’ மற்றும் இந்தியில் ‘பங்கால்’ என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
ஆனால், காங்கிரஸ், பாஜக, இடதுசாரி முன்னணி ஆகியவை அரசின் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. இது தொடர்பான விவாதத்தின்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இடதுசாரி கட்சிகள் தீர்மானத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பாரதிய ஜனதா கட்சி தீர்மானத்தை எதிர்த்தது. எனினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேறியது.

தமிழகமெங்கும் கொழுந்து விட்டு எரிகிறது நீட் தீ ! வலைதளங்களில் / சமுக களங்களில் எங்கும் ,,,,,

பல நாடுகளின் உரிமைப் போராட்டங்களைப் பற்றித் தெரிந்தும் தெரியாமலும் போராடிக்கொண்டிருக்கும், ஒவ்வொரு தமிழக மாணவனும் மாணவியும் அவர்களது நோக்கத்தில் தெளிவாக இருக்கிறார்கள்
சமூக வலைதளங்களில் பரவும் ‘தீ’!மின்னம்பலம் : சிவா: நுங்கம்பாக்கத்தின் மகாலிங்கபுரம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் செய்த சாலை மறியல், தமிழகம் முழுவதும் போராடிக்கொண்டிருக்கும் மக்களிடமுள்ள உரிமைத் தீயை மேலும் உயர்ந்து எரிய வழிவகை செய்திருக்கிறது.
டிவிக்களில் காட்டப்பட்ட அந்தப் போராட்டம், மாணவிகளின் உரிமை வேட்கையை வெளிப்படுத்தியது போலவே; நமது பத்திரிகையாளர் எடுத்த போட்டோக்கள் அவர்களது நெஞ்சுரத்தைத் தமிழகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே தெரிவித்திருக்கிறது.

தியானன்மென் சதுக்கப் போராட்டம் 1989 - சீனா
உலோக உடலால் ஆன இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களைக் கைகளைப் பிடித்துக்கொண்டு மறித்து நின்ற அந்த தைரியத்தை யாராலும் திணித்துவிடவோ, தூண்டிவிடவோ முடியாது என்பதை இந்நாடு புரிந்துகொள்ளாதது ஒன்றே, இப்போராட்டம் இத்தனை நாள்கள் தொடர்ந்துகொண்டிருப்பதற்குக் காரணம். அடுப்பில் பற்ற வைத்த தீ அணையலாம். தானே பற்றிக்கொண்ட காட்டுத் தீ இறுதிவரை செல்லாமல் நிற்காதென்பதை வரலாற்றின் சிவப்புப் பக்கங்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

சமூகநீதியை முதலில் அமுல்படுத்திய முதல்வர் ஓமந்தூரார்


44% பிற்பட்ட வகுப்பினருக்கு 14% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 14% ஆங்கிலோ இந்தியருக்கு 7% இஸ்லாம் மதத்தினருக்கு 7% பிராமணர்களுக்கு 14%
RadhakrishnanKS முதல் சமூக நீதியின் முதல்வர் ஓமந்தூரார்!
 சமூக நீதி கொள்கையில் ஓமந்தூராருடைய பணியை யாரும் பேசுவதுமில்லை, அடுத்தவர்களுக்கு சொல்வதுமில்லை. நீதிக்கட்சியில்
வகுப்புரிமை ஆணைக்குப்பின் சென்னை ராஜதாணியின் பிரிமியராக (முதல்வர்) இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சமூக நீதியை
பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தென்னேட்டி விசுவநாதம் 1947 இல் வகுப்புவாரி
இடஒதுக்கீடு ஆணையை ரத்து செய்யக் கோரி சட்டமன்றத்தில் தனி நபர் தீர்மானம் கொண்டுவந்த போது ஓமந்தூரார்
தலைமையிலான அரசு அதை தோற்கடித்தது.

அதுமட்டுமல்லாமல், அவர் ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கென தனி இடஒதுக்கீடும் ஒதுக்கப்பட்டன. பிராமின்
அல்லாதோர் 44% பிற்பட்ட வகுப்பினருக்கு 14% ஒடுக்கப்பட்ட மக்களுக்கு 14% ஆங்கிலோ இந்தியருக்கு 7% இஸ்லாம் மதத்தினருக்கு 7%
பிராமணர்களுக்கு 14% என அவரது காலத்தில் இடஒதுக்கீடு அமைந்தது. இது தான் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீட்டிற்கான
அடிப்படையும், முதல் ஆணையும் ஆகும். அப்போது ஓமந்தூராரை எதிர்த்து பலர் குரலெழுப்பினர்.

உள்ளூராட்சி தேர்தலை நடத்த பயப்படும் அதிமுக + பாஜக+ தேர்தல் ஆணையம் கூட்டணி !

Special Correspondent FB தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் ஒரு வருடமாகியும் நடத்தாமல் நீதிமன்றம் தஞ்சம் . உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
இப்படி மனுத்தாக்கல் செய்து இடைக்கால தடை உத்தரவை பெற்று விடுவார்கள் என்பதற்காகத் தான் திமுக எம்பி ஆர் எஸ் பாரதி
சார்பில் முன்கூட்டியே கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருப்பதால் திமுக கட்சியின் கருத்தை கேட்பதும் அவசியம் ஆகியுள்ளது.

தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் நடத்தாமல் இருப்பதற்கு நீதிமன்றம் போக வேண்டிய அவல நிலையை மாநிலத்தில் அதிமுக அரசும் மத்தியில் மோடி அரசும் ஏற்படுத்தி உள்ளன ..இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் ..
தேர்தல் ஆணையம் தாக்கல் செய்துள்ள இடைக்கால மனு அடுத்த வாரம் செவ்வாய் கிழமை அல்லது புதன் கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது திமுக சார்பில் தொடரப்பட்டுள்ள கேவியட் மனுவையும் அவர்கள் தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு தான் உச்சநீதிமன்றம் உத்தரவை வழங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது

பள்ளியில் மாணவன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை .. பாலியல் வன்முறை .... killed by staff at Ryan International School

டெல்லியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர் அந்த பள்ளி ஊழியர் ஒருவரால் பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி குருகிராமில் உள்ள ரியான் இண்டர்நேஷனல் பள்ளியில் பிரத்யுமன் தாக்கூர் என்ற 7 வயது மாணவன் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவன் நேற்று பள்ளியின் கழிவறையில் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்தனர். பள்ளியின் பேருந்து ஓட்டுநருக்கு உதவியாளராக இருக்கும் 42 வயதான அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர்.

கர்நாடகா ...18 எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு!

18 எழுத்தாளர்களுக்குப் பாதுகாப்பு!பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் கொலைக்குப் பின், 18 எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்கள், மற்றும் முற்போக்குச் சிந்தனையாளர்கள் ஆகியோருக்குப் பாதுகாப்பு வழங்கப் புலனாய்வு துறை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கௌரி லங்கேஷ் (55), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (செப்டம்பர், 5) பெங்களூருவில் உள்ள அவரது வீட்டு வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, பீகாரில் இந்திப் பத்திரிக்கையாளரான பங்கஜ் மிஸ்ரா மீது இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, கிரிஷ் கர்னாடு, பரகூர் ராமசந்திரப்பா, பாட்டீல் புட்டப்பா, சென்னவீர கனவி உள்ளிட்ட 18 எழுத்தாளர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாதவ சமையல்காரி தனது சாதியை மறைத்ததாக பார்ப்பன பெண் போலீசில் புகார்! உத்தரபிரதேசம்

சாதியை மறைத்து தன்னிடம் சமையல் வேலை செய்ததாக பெண் மீது
போலீஸில் புகார் கொடுத்துள்ளார் பெண் அதிகாரி. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் வானிலை ஆய்வு மையத்தில் துணை இயக்குநர் ஜெனரலாக பணியாற்றுபவர் மேதா விநாயக் கோலே. இவரிடம் கடந்த ஆண்டு முதல் சமையல் வேலை செய்து வந்தவர் நிர்மலா யாதவ் என்ற பெண். வியாழக்கிழமை மாலை சின்ஹாகாட் காவல் நிலையத்தில் மேதா அளித்த புகாரில், ‘‘தன்னிடம் சமையல் பணி செய்து வந்த நிர்மலா யாதவ் என்ற பெண், தனது சாதியை மறைத்து உயர் சாதியைச் சேர்ந்தவர் போல நடித்து தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் சமீபத்தில்தான் அவர் உயர் சாதியைச் சேர்ந்தவர் அல்ல என்பது தெரியவந்ததாகவும் நிர்மலா யாதவ் தன்னை தாக்கியதாகவும் புகார் அளித்துள்ளார்.

ஆட்களே இல்லாத கூட்டத்தில் வெளுத்து வாங்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

சி.ய.ஆனந்தகுமார் .என்.ஜி.மணிகண்டன் :
கடந்த 8-ம் தேதி தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக நடந்த கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திய அதே திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில், மறுநாளான நேற்று இரவு பி.ஜே.பி கட்சி சார்பில் சந்தர்ப்பவாத கூட்டணியின் அவதூறு பிரசாரத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தியது. கூட்டத்தில் பேசிய பலரும், தி.மு.க உள்ளிட்ட அனைத்துக்கட்சியினரை சகட்டுமேனிக்கு விளாசினார்கள்./>கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம்,
” மோடி நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னாள், தான் வெற்றி பெற்றால், இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும், 15லட்சம் வழங்குவதாகக் கூறி மோசடி செய்து விட்டதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறினார். அப்படி ஒருபோதும், பிரதமர் மோடி உறுதி அளிக்கவில்லை.சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டால் அதற்கு வாய்ப்புள்ளது” என்றார்.