திங்கள், 4 செப்டம்பர், 2017

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த பாமக தயாரில்லையா?


அனிதாவுக்கு அஞ்சலி: தவிர்த்த பாமக!நீட் தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி அதில் நீதி கிடைக்காததால், மனவேதனையில் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரையுலகினரும், பொதுநல அமைப்பினரும் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தினர்.
நீட் தேர்வுக்கு எதிராக தற்கொலை செய்துகொண்ட அனிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பாமக தலைவர்கள் செல்ல வேண்டுமென பாமக தலைமைக்கு, அக்கட்சியின் சமூக வலைதளக் குழுவினர் வாட்ஸ்அப் மூலமாக தகவல் தெரிவித்தனர். ஆனாலும் பாமக தலைமை அமைதியாகவே இருந்தது. ஆகவே பாமக சமூக வலைதளக் குழுவில் உள்ளவர்கள் அனிதா உடலுக்கு கட்சித் தலைமையிலிருந்து அஞ்சலி செலுத்தப் போக வேண்டும் என்று கருத்துகளை பதிவுசெய்து வந்தனர்.

கமலஹாசன் : நீட் தேர்வு எதிராக எல்லோரும் ஒன்றுபடுவோம்


இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனிதாவின் மரணம் குறித்து பேசிய கமல்ஹாசன், 'ஒரு பொண்ணு இறந்து போச்சு! இன்னொரு புள்ள சாககூடாது! நீட் தேர்வுக்கு எதிராக என்னுடன் கற்றவர்கள் அனைவரும் வாருங்கள்.. கைக்கோர்ப்போம் என்று கூறினார். மேலும் நம் இனத்திற்கு துரோகம் செய்பவர்களை பார்த்து இனியும் கையை பிசைஞ்சுட்டு இருக்ககூடாது, கை கோர்த்துட்டு இருக்கவேண்டும்.. நானும் உங்களோடு கைகோர்த்து கொள்கிறேன்... மூச்சு விடுவதை மட்டுமே சுதந்திரம் என்று எண்ணி கொண்டிருக்க கூடாது. இது இன்னொரு சுதந்திர போராட்டமா? என்று கூறினால் ஆம் என்றே கூறுவேன். இந்த போராட்டத்தில் ஜாதி, இனம், மதம் என்ற பிரிவினை இல்லாமல் அனைவரும் ஒன்று கூடுவோம்' என்று கமல் சற்று ஆவேசத்துடன் பேசினார் வெப்துனியா

எடப்பாடி தலைமையில் நடக்கும் கூட்டத்தில் டிடிவி ஆதரவு 8 எம்எல்ஏக்கள் ......?

சென்னை:  புதுச்சேரியில் முகாமிட்டுள்ள  தினகரன்ஆதரவு எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி தலைமையில் நடக்கும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன. இது டிடிவி.தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தினகரனுக்கு 21 எம்எல்ஏக்கள் நேரடியாக ஆதரவை தெரிவித்தனர். இவர்களில் 19 எம்எல்ஏக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீதான தங்களின் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மனு அளித்திருந்தனர். இதையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அவர்கள் அனைவரையும் புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைத்தார். கடந்த 2 வாரமாக சொகுசு விடுதியில் எம்எல்ஏக்கள் தங்கி இருப்பதால் அவர்களால் தொகுதிக்கு செல்ல முடியவில்லை.

அதிமுகவின் மத்திய அமைச்சர் கனவை தகர்த்தெறிந்த டாக்டர் அனிதா!

Sutha Oneindia Tamil டெல்லி: என்னதான் நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சி என்று அதிமுகவினர் சுய தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் கூட அதை தற்போது கரிவேப்பிலை ரேஞ்சுக்குக் கொணடு போய் வைத்துள்ளது பாஜக. அமைச்சரவையில் அவர்களை சேர்க்கப் போவதாக செய்திகள் வெளியானாலும் கூட வெளியே தள்ளி கதவைச் சாத்தியுள்ளார் பிரதமர் மோடி. இன்றைய அமைச்சரவை மாற்றத்தில் அதிமுகவுக்கு இடம் கிடைக்கவில்லை. தம்பித்துரை, வேணுகோபால் அமைச்சராகப் போவதாக கூறப்பட்டது. எஸ்.ஆர்.பி பெயர் அடிபட்டது. ஆனால் யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை. இன்றைய 9 புதிய அமைச்சர்களில் கேரளா, கர்நாடகவுக்குக் கூட இடம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்திற்கு அல்வா கொடுத்து விட்டனர். அதிமுகவுக்கு ஏன் சீட் கிடைக்கவில்லை என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 3 கட்சிகளுக்கு பாஜக இன்று நாமம் போட்டுள்ளது. அதிமுக, சிவசேனா மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம். இதில் ஐக்கிய ஜனதாதளம் சமீபத்தில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்து சேர்ந்தது. அதற்கும் இடம் தரவில்லை மோடி.

ரஜினிரகு +2 mark 1190 : cut off 199.50 : NEET 200/700 no medical seat.. இன்னொரு மாணவன் இறப்பதற்குள்

juliet.jenifar.: ரஜினிரகு   (+2 mark 1190 : cut off 199.50 : NEET 200/700 no medical seat)
பத்தாம் வகுப்பு தேர்வில் 497-மதிப்பெண் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். தன் மகன் நிச்சயம் மருத்துவராக வருவான் என்ற நம்பிக்கையில், இருபது ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தன்னுடைய வீட்டுக்கு கதவு வைக்காமலும், நிலத்துக்கு சிமெண்டு கான்கிரீட் கூட போடாமுடியாமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் குழந்தைகளின் கல்விக்காவே செலவு செய்து வந்துள்ளார் வடிவேலு.
வடிவேலின் எதிர்பார்ப்பு வீணாகவில்லை. கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ரஜினிரகு 1190- மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கலந்தாய்வுக்கான கட் ஆப்பில் 199.50% எடுத்துள்ளார். தமிழக கிராமப்புற மாணவர்களை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்ற நோக்கில், எதிர்பாராத நேரத்தில் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வில் மாணவர் ரஜினிரகு 200-மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதனால், வடிவேல் குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக கண்ட கனவு, வெறும் கனவாகவே போனது.
இதைத்தொடர்ந்து, மாநில அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கி கொண்டுவரப்பட்ட தமிழக அரசின் சட்டமும் செயல்வடிவம் பெற முடியாமல் உள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து விசைத்தறி நெசவு செய்து வருகிறார் மாணவர் ரஜினிரகு.
இன்னொரு மாணவன் இறப்பதற்குள் விழிது ஏழு தமிழ் சமூகமே....
Frm : wp, Adv. Dhamayanthy

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

நீட் சைலண்ட் கில்லர்கள் இவர்கள்தான்!


ஊடக மற்றும்
போராட்ட நண்பர்களே நீங்கள் கேள்வி கேட்கவேண்டியது முற்றுகையிட வேண்டியது நளினி சிதம்பரம், கி.சாமி போன்றவர்களின் வீடுகளை அல்ல...இந்த சைலண்ட் கில்லர்களைத்தான். நீட் வரக்காரணமே எம்.சி.ஐ. தான். தமிழக அரசால் நியமிக்கப்பட்ட எம்.சி.ஐ.யின் உறுப்பினர்களான (council members) டாக்டர் பிரும்மாநந்தம் (ஜெவுக்கு இதயநல மருத்துவராக இருந்தவர்), டாக்டர் சுதாசேஷய்யன் (ஜெ. இறந்தபிறகு எம்பாமிங் செய்தவர்), டாக்டர் சிவக்குமார் (சசிகலாவின் உறவினரும் ஜெவுக்கு கார்டனில் சிகிச்சை அளித்த குடும்ப மருத்துவர்) ‘உதி’ கண் மருத்துவமனை எம்.டி. டாக்டர் ரவீந்திரன் ராதாகிருஷ்ணன் (ஜெவின் கண்மருத்துவர்), டாக்டர் சாந்தாராம்(ஜெவுக்கு சர்க்கரை வியாதி நிபுணராக இருந்து கார்டனிலிருந்து விரட்டப்பட்டவர்), டாக்டர் எல்.பி.தங்கவேலு உள்ளிட்ட மருத்துவர்கள் எம்.சி.ஐ. மீட்டிங்குகளிலும் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசவுமில்லை. ஆனால், இவர்களை எதற்காக தமிழக அரசு நியமித்தது? இந்த சைலண்ட் கில்லர்களைக் கேளுங்கள்...!!! - மனோசெளந்தர் நக்கீரன்

எங்கே ஆரம்பித்தது நீட் ? தமிழகம் மீது போர்முழக்கம்?

அசைவ உணவைவிட சைவ உணவுதான் புனிதமானது.
8கோடி மக்கள் பேசும் தமிழைவிட, சில ஆயிரம் பார்ப்பனர்கள் அறிந்துவைத்திருக்கும் சமஸ்கிருதம்தான் புனிதமானது.
இந்த மண்ணின் மைந்தர்களான திராவிடர்களின் கறுப்பு நிறத்தைவிட, வந்தேறி ஆரியர்களின் சிவப்பு நிறம்தான் உயர்வானது.
எளிய மக்கள் வழிப்படும் மதுரைவீரன், மாடன், சுடலை முத்துமாரி போன்றவர்கள் சிறுதெய்வங்கள். பார்ப்பனர் கற்பித்த ராமன், கிருஷ்ணன் பிள்ளையார் போன்றவைதான் பெருதெய்வங்கள்!
காட்டிலிருந்த ஒரு முனிவரின் மனைவியை கற்பழித்த இந்திரனை தேவர்களின் தலைவன் என்பான். கவர்ந்துச் சென்ற சீதையை கற்போடு விட்ட ராவனனை அரக்கர்களின் தலைவன் என்பான். (அவன் எழுதிய கதைப்படியே!)
எங்கள் உணர்வோடு கலந்துவிட்ட பறை-இசை இழிவானது. கர்நாடக இசைதான் புனிதமானது.
எங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிவிட்டு, அவர்கள் ஆடிய சதிராட்டம் இழிவானது என்பான். அதே ஆட்டத்தின் பார்ப்பன வடிவமான 'பரத நாட்டியம்' புனிதமானது என்பான்.
பார்ப்பனர்கள் குவித்துவைத்திருந்த நிலங்களை கையகப்படுத்தி அதை உழைக்கிற மக்களுக்கு பிரித்தளித்த 'களப்பரர்களின் காலம் இருண்டகாலம்'. ஊரான் சொத்துக்களை எடுத்து பார்ப்பனர்களுக்கு காணிக்கை செய்த 'குப்தர்களின் காலம் பொற்காலம்'.
எம்.ஜி.ஆர் இந்திராவின் காலில் விழுந்துக் கெஞ்சியதால் அமைக்கப்பட்ட சர்காரியா கமிசனின் ஒன்றுக்கும் உதவாத, ஒரு வழக்குப்போடக்கூட வக்கற்ற குற்றச்சாட்டை வைத்து கலைஞரை 'விஞ்ஞான ஊழல்வாதி' என்பான். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றமே காறித்துப்பினாலும் பார்ப்பன ஜெயலலிதாவை வீரமங்கை என்பான்.
இவற்றின் இன்றைய நீட்சி....
மருத்துவத்துறையில் இந்தியாவிலேயே சிறந்துவிளங்கும் தமிழகத்தின் பாடத்திட்டம் போதிய தரத்துடன் இல்லையாம். சுதந்திரமடைந்து 70ஆண்டுகளாக வறண்டுக்கிடக்கும் வடநாட்டை வளமாக்க வக்கற்ற சி.பி.எஸ்.சிதான் மிகுந்தத் தரமானதாம்.
-GANESH BABU

அனிதா கொலையோடு நீட் வென்றுவிட்டது ... கொக்கரிக்கும் பார்பனீயம்

sudhagar.pitchaimuthu :  அனிதா விசயத்தில் நடந்தது ஒரு படுகொலை.
இதெற்கெல்லாம் ஒரு சில ஆட்கள் மகிழ்ச்சி அடைய முடிகிறது என்றால் ஒரு சைக்கோ சூழ் சமூகத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று மட்டும் புரிகிறது.
அனிதா எப்படி படிக்க வேண்டும், எங்கு படிக்க வேண்டும் என்று அட்வைஸ் பண்றவன் பூராவனுக்கும் ஒன்னு சொல்றேன்..
அனிதாவிற்கு சென்னை எம்.ஐ.டி யில் பொறியியல் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தும் மருத்துவப் படிப்பு கனவிற்காக அவ்வாய்ப்பை உதறினார்.
பெரும்பாலான குழந்தைகள் ஓரளவிற்கு நல்ல கட் ஆப் மார்க் வைத்திருந்தா பி.இ.கிடைச்சாலும் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக வாய்ப்பை உதறிவிட்டு காத்திருப்பார்கள்.
ஆனால் அனிதாவின் சூழலே வேறு. அவரது குடும்பத்தில் அவரே முதல் தலைமுறை பட்டதாரி. அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவரது ஒட்டு மொத்த தலைமுறைக்குமான வாய்ப்பு. அதனையே உதறிவிட்டு மருத்துவ படிப்பிற்கு காத்திருந்தார் என்றால் அந்த குழந்தையின் கனவை புரிந்து கொள்ள வேண்டும்.
நாம் ஒரு மருத்துவரை கொல்லவில்லை, தன் உரிமைக்காக போராடிய ஒரு போராளியைக் கொன்று இருக்கிறோம். அனிதா போன்றவர்கள் இம்மண்ணில் வாழ்ந்து சமூக நீதிக்காக போராடியிருக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம்..


நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
நீட் தேர்விலிருந்து விலக்களிக்க கோரி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்படாததால், வேதனையடைந்து கடந்த 1 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
மருத்துவம் படிக்கும் அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு மாணவி, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கப்படாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு பல்வேறு வடிவிலான போராட்டங்கள் நடைபெற்றன. தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டம் எதிரொலித்தது . ஜந்தர்-மந்தர், ஜவகர்லால் பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

சித்தராமையா : கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச கல்வி .. முதல் வகுப்பு முதல் முதுகலை வரை .. திராவிடண்டா!


Karnataka government to provide free education for girls up to graduation ... The Congress government led by Siddaramaiah in Karnataka has ...
கர்நாடகா மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலைப் பட்டம் வரை அனைத்து மாணவிகளுக்கும் இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கு கல்வி இன்றியமையாத ஒன்று. மேற்குநாடுகளில் பெண்கள் ஆண்களை விட கூடுதலான அதி உயர் கல்வியைப் பெறுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் பெண்களின் கல்வி ஆண்களை விடப் பின் தங்கியுள்ளது. பெண்கள் கல்வி அறிவு பெற்றால் தான் வறுமை குறையும். கலாச்சார மாற்றங்கள் ஏற்படும். பெண்களுக்கு கல்வி அளிப்பது குறித்த விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில் சித்தராமைய்யா தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அம்மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ளது.

சி பி ஐ விசாரணை கோரும் கிருஷ்ணசாமி ! அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார்

தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார். அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கிருஷ்ணசாமி “அனிதாவின் மரணம் தன்னிச்சையானது அல்ல. அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் வரை போராடும் குணம் பெற்ற அனிதாவை யாரோ தற்கொலைக்கு தூண்டியுள்ளனர். எனவே, அனிதாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும். அவர் மரணத்தில் மிகப்பெரிய சதி இருக்கலாம். இது தொடர்பாக, திமுக முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கரன், கல்வியாளர் கஜேந்திர பாபு ஆகியோரை விசாரிக்க வேண்டும். அனிதாவின் மரணத்தின் மூலம் அரசியல் ஆதாயம் பெறும் முயற்சி தமிழகத்தில் நடக்கிறது. அதோபோல், இதை வைத்து தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி நடக்கிறது” என அவர் தெரிவித்தார்.

திமுகவை நீட் போராட்டத்தில் இருந்து திசை திருப்ப முயற்சி?

Devi Somasundaram : அனிதா தற்கொலைல திமுக மேல குற்றம் சொல்பவர்களுக்கு ஏன் பதில் சொல்லாம இருக்காங்க ..?? இன்பாக்ஸ்ல ஒரு கேள்வி ..
ஏன் பதில் சொல்லனும்....அல்லது என்ன பதில் சொல்லனும் ..ஸ்டாலின் கூட இருந்த புகைப்படம் போட்டு அனிதாவை திமுக தான் கொலை செய்துடுச்சுன்னு மெம் உருவாக்குவது தான் ஒரு குற்றசாட்டுக்கு ஆதாரம் என்று நினைக்கும் அளவுக்கு தான் அறிவிருக்கும் என்றால்..அவர்களுக்கு என்ன விளக்கம் தந்து பதில் சொல்லனும்...
போகிற போக்கில் ஒருத்தன் ஒரு பெண்ணை தேவிடியான்னு திட்னா. இல்ல இல்ல. நான் பத்தினின்னு அந்த பெண் தீக்குளிக்கனுமா ? .. இந்து மதம் சொன்ன தத்துவம் தன்னை நிருபித்து கொள்ளல்...சீதை தன் கற்ப நிருபித்து கொள்ள நிர்பந்திக்க பட்டாள்..
அதை தான் திமுகவும் செய்யனுமா? ..யார் குற்றவாளியோ அவர்களே திமுக மீது குற்றம் சாட்டுவது தானே ஆரம்பத்தில் இருந்து நடக்குது ..கணக்கு தர வேண்டிய பொருளாளர் கணக்கு கேட்ட அதிசயம் வேற எந்த நாட்டில் நடக்கும்.. கணக்கு கேட்டதாக நாடகம் போட்ட எம் ஜீ ஆரை நம்பி தான் ஓட்டு போட்டுச்சு இந்த நாடு..

இந்திய பாதுகாப்பு அமைச்சராக நீட் குற்றவாளி நிர்மலா சீதாராமன் ... காட்டி கொடுத்தவர்களுக்கு வெகுமதி!

 மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். nirmala பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதாராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (செப்டம்பர் 3-ம் தேதி) விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதில் நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இணை அமைச்சராக உள்ள பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சர் கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

முதல்வர் உதவித்தொகை வேண்டாம்!’ - அனிதாவின் சகோதரர் ஆட்சியரிடம் கோரிக்கை

விகடன் :அஷ்வினி சிவலிங்கம் :
மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த 7 லட்சம் ரூபாயை அனிதாவின் உறவினர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.
அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்க்கப்பட்டதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.அனிதாவின் மரணத்தை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி  'அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும்' என்று தெரிவித்திருந்தார்.

நளினி சிதம்பரம் : நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்றால் கடவுளிடம் போங்கள்! விவாகரத்து செய்வாரா சிதம்பரம்?

Troll Trousers 2.0 : நளினி சிதம்பரம்.... நீட் தேர்வு கட்டாயம் வேணும்னு நீதிமன்றத்துல வாதாடி அனிதாவுக்கு மட்டும் தனி சட்டம் கிடையாது இனிமேலும் மேல்முறையீடு செய்யனும்னா கடவுள்கிட்டதான் போகனும்னு சொன்ன உத்தமி... கேட்டா நான் வக்கீல் என்னோட தொழிலைத்தான் செஞ்சேன் அப்டின்னு சொல்லுவா.... நாளைக்கு உன்னோட மகன தூக்கி உள்ள வைப்பானுங்க... முதல் வெடி நான்தான் வெடிப்பேன்! புருசன் நீட்டை எதிர்ப்பான் பொண்டாட்டி ஆதரிப்பாள்... நல்ல குடும்பம்.... நீட்டுக்கு எதிரா இவ்ளோ கலவரம் ஆர்ப்பாட்டம் நடக்குது ஆனா எந்த காங்கிரஸ் காரனாவது வாய திறக்குறானா??? உங்களாளதான்டா பிஜேபி அதிகாரத்துக்கு வந்தது நீங்க சரியா இருந்திருந்தா இன்னைக்கி ஏன் நாடு நாசமா போய்கிட்டு இருக்கபோகுது!!!
 
 Rajasekar Pandian : ஒரு விஷயத்தில் மையப்பிரச்சினையை கவனமாக தவிர்த்துவிட்டு பிரச்சினையை லாவகமாக வேறொன்றின் மீது திசைதிருப்புவது அப்பட்டமான தந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான ஆட்கள் அதை அப்படியே நம்புகிறார்கள்.   நளினி  ஒய்வு பெற்ற நீதிபதி கைலாசம் கவிஞர் சௌந்தரா கைலாசம் தம்பதிகளின் மகள். அசல் பார்ப்பன திமிர் குடும்பம். சிதம்பரம்  செட்டியார் ... கொஞ்சம் நேர்மையான குடும்பத்தை சேர்ந்தவர்,  சேர கூடாத இடத்தில சேர்ந்தவர். இந்த நளினி முன்பு ஹர்ஷத் மேத்தாவின் மோசடி ஸ்டாக் வாங்கி ஒரு வழியாக சிதம்பரத்தின் திறமையால் தப்பி பிழைத்த ஊழல் பேர்வழி ..  இவரின் வாரிசு கார்த்திக் கொஞ்சம் கூட சிதம்பரத்தின் கல்வி வாசனையே இல்லாதவர். பக்கா ஊழல் மகன்தான் கார்த்திக் சிதம்பரம் . சிதம்பரத்துக்கு அனுதாபங்கள் !

துரோக துரோனாச்சாரிகளின் பாஜக ஆட்சி ! அனிதாவின் உயிரை பறித்தது ஏகலைவனின் கட்டை விரலை வெட்டிய ..

GANESH BABU : அர்ஜுனன் உள்ளிட்ட சத்ரிய
மாணவர்களுக்கு 'வில்-வித்தை' கற்றுக்கொடுக்கும் பார்ப்பன குரு துரோணாச்சாரியார், ஏகலைவன் என்பவனுக்கு மட்டும் அந்த வித்தையைக் கற்றுக்கொடுக்க மறுத்துவிடுகிறார். காரணம், ஏகலைவன் பிறப்பால் ஒரு சூத்திரன் என்பதுதான். பின்னர் அதை எப்படியோ பலநாட்களாக துரோணாச்சாரியின் வகுப்புக்களை தூரத்தில் மறைந்து நின்றே கற்றுவிடுகிறான் ஏகலைவன்.
அதைத் தன் குருவிடம் சொல்வதுதான் நேர்மையெனக் கருதியவன் துரோணாச்சாரியிடம் விசயத்தைக் கூற, அவர் நம் ஏகலைவனை சோதித்துப் பார்த்ததில் ஏகலைவன்தான் இவ்வுலகின் தலைசிறந்த வில்-வீரன் என்பதை கண்டுப்பிடித்துவிடுகிறார். ஒரு சூத்திரன் தன்னிடம் பயின்ற சிறந்த வீரனான அர்ஜுனனையே முஞ்சுவதைத் துளியும் சகிக்கமுடியாத துரோணாச்சாரி, கொடூரமான ஒரு சூழ்ச்சியை மேற்கொள்கிறார்.
'மறைந்து நின்றுப் பயின்றாலும் நான் தானே உனக்கு குரு? எனக்கு குருதட்சனை எங்கே?' என்கிறார். தன்னை அவரது மாணவராகக் ஏற்றுக்கொண்டாரே என நினைத்து நெகிழ்ந்து, 'குருவே, நீங்கள் எதைக் கேட்டாலும் தருவேன்' என்கிறான் ஏகலைவன். வலதுக்கை கட்டைவிரல் இல்லாமல் வில்லை இயக்கமுடியாது என்பதை அறிந்த துரோணாச்சாரி, 'உன் வலதுக்கை கட்டை விரலை வெட்டிக்கொடு என்கிறார்'. சூத்திர ஏகலைவன் அதை வெட்டிக்கொடுத்தான்.
உலகின் ஒப்பற்ற குரு துரோணாச்சாரி என்றும், தன்னிகரற்ற வீரன் அர்ஜுன் என்றும் 'மகாபாரதம்' குறித்துக்கொண்டது.
அதன்படிதான் இந்த இரண்டு குரூரமான சதிக்காரர்களின் பெயரிலும் இந்திய அரசு விருதுகள் வழங்குகிறது.

''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன்... பேராசிரியர் அனில் சடகோபால்.

நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு.'
நீட் : அனில் சடகோபால்
து  ஏறத்தாழ ஆறு தசாப்தங்களுக்கு முன் நடந்த சம்பவம்.  ஒல்லியான தேகம்கொண்ட அந்த இளைஞர் பிரபலமான ஒரு கல்லூரியில் சேர்வதற்கான நேர்காணலுக்குச் செல்கிறார். நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே அவருக்கு அந்தக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதற்குக் கூறப்பட்ட காரணம், “நீங்கள் இந்திவழியில் கற்றவர்” என்பதுதான். அந்த இளைஞர் பதற்றப்படாமல் சொல்கிறார், “ஓ, அப்படியா... சரி நீங்கள் எனக்கு வாய்ப்பு மறுக்கும் காரணத்தை ஒரு துண்டுச் சீட்டில் எழுதித் தாருங்கள். அந்தச் சீட்டை எடுத்துக்கொண்டு நான் ராஷ்டிரபதி பவனுக்குச் செல்கிறேன். நான் இந்தியில் படித்ததால் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று கூறுகிறேன். பன்மைத்துவமான ஒரு தேசத்தில், ஒருவனுக்குத் தன் தாய்மொழியில் படிக்க உரிமையில்லையா...? என்று ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.” என்கிறார். தேர்வுக் குழு வாயடைத்துப் போகிறது. அவரது கேள்வியில் உள்ள நியாயம் புரிந்து இப்போது அந்த மாணவனைக் கல்லூரியில் சேர்த்துக்கொள்கிறது. அந்த மாணவர் இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.

இதுதாண்டா மெரிட்டு! குடிசையில ஒண்ணுமே இல்லை ...இருந்தாலும் 1176 ....

வீட்டில் தனி அறை இல்லை!
ஏசி, மின் விசிறி இல்லை!
செல் போன் இல்லை!
பத்து நாள் ஆபீசுக்கு லீவு போட்டு மகளுடன் கூடவே இருந்து சொல்லித்தரும்
தகுதியும், வசதியும் பெற்ற
அம்மா அப்பா இல்லை!
கண்விழித்துப் படிக்கும்போது
பக்கத்தில் பிளாஸ்க் காபி இல்லை!
அந்தக் காலத்துல நாங்க கவர்ன்மெண்டு சர்வீஸ்ல இருக்கும்போது யூ நோ என்று சொல்லும் தாத்தா இல்லை!
அமெரிக்காவில் ஐடியில் டாலர் சம்பளம் வாங்கி ஆண்டுக்கொரு முறை வீட்டுக்கு வரும் ரே பான் கண்ணாடி மாமா இல்லை!
ஒரு மணி நேரத்திற்கு 500, 1000 வாங்கும் டியூஷன் டீச்சர் இல்லை!
வீக் எண்ட் சினிமா, ஹோட்டல் இல்லை!
விடுமுறைக்கு செல்ல ஊர் இல்லை!
இருந்தாலும் 1176!
இதுதாண்டா மெரிட்டு!
- Vijayasankar Ramachandran

S.V.சேகர் போன்ற பார்ப்பனர்கள் .... இவனுக்கு அனிதாவின் பெயர்கூட சரியாக தெரியவில்லை .. அவ்வளவு அலட்சியம்!


Steephan Raj :ஏண்டா நாயே இறந்த பொண்ணு பேரு கூட தெரியல நீயெல்லாம் கருத்து சொல்ல வந்துட்ட ! மூடிக்கிட்டு போடா எச்சை ,போய் மாட்டு கோமியம் இருந்தா குடிச்சிட்டு சந்தியா வதனம் பண்ணு .

ஆம்.. இந்தியாவில் தமிழ்நாடு தனிதான்... Govi Lenin


எந்த மாநிலமும் எதிர்க்காத நீட் தேர்வை
தமிழ்நாடு மட்டும் எதிர்ப்பதும்-விலக்கு கோருவதும் ஏன்? என்ற முதல் கேள்வியில் தொடங்கி, அரியலூர் மாணவி அனிதா ‘நீட்’ கொடுமையால் (தற்)கொலையானதைக் கொச்சைப்படுத்தும் வகையில் பல கேள்விகளை எழுப்பி, தமிழ்நாட்டுக்கு மட்டும் தனிச் சட்டமா எனக் கேட்கிறார்கள் நேரடி-மறைமுக பா.ஜ.க.வினர்.
பிரிட்டிஷ் அதிகாரத்திற்குட்பட்ட இரட்டையாட்சி முறையில் 1928ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் சென்னை மாகாணத்தில் இடஒதுக்கீட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்டது. வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ). இதன் வாயிலாகக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிமை கிடைத்தது.
சுதந்திர இந்தியாவில் அந்த இடஒதுக்கீட்டிற்கு எதிரான உச்சநீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து பெரியாரும் அண்ணாவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாகக் களம் கண்டதால் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிரதமர் நேருவிடம் வலியுறுத்த, தமிழ்நாட்டின் நலன் காக்கும் வகையில் 1951ல் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் செய்யப்பட்டது.
1989-91 கலைஞர் ஆட்சியில் இடஒதுக்கீட்டின் அளவு 69% என்ற அளவை எட்டிய நிலையில்,1991-96 ஜெ ஆட்சிக்காலத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தால் அந்த இடஒதுக்குட்டிற்கு நெருக்கடி உருவானது. அப்போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முயற்சியால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின் அடிப்படையில் புதிய சட்ட மசோதவை செல்வி.ஜெயலலிதா அரசு நிறைவேற்றி அதனை இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதலுடன் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்த்தது. இதன்காரணமாக 69% இடஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது.

அத்தனை பேரும் கூண்டோடு பதவி விலகுங்கள்... ஸ்டாலின் ஆவேசம்!

tamil.oneindia.com/authors/gajalakshmi. அரியலூர் : அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் அரியலூர் மாவட்டம் குழுமூர் கிராமத்தில் அனிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது : மாணவி அனிதா மருத்துவம் படிக்க வேண்டிய வாய்ப்பை இழந்துவிட்டார். +2 தேர்வில் 1176 மதிப்பெண் பெற்று கட்ஆப் மார்க்காக 196 மதிப்பெண் பெற்றிருக்கக் கூடிய சூழலில் நீட் இல்லாவிட்டால் அவர் மருத்துவராகியிருப்பார். உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் பலன் கிடைக்கவில்லை. மத்தியில் இருக்கும் ஆட்சியும், குதிரை பேர ஆட்சியும் ஒவ்வொரு முறையும் தவறான தகவலைச் சொன்னது தான் கொடுமையின் உச்சம். ஒவ்வொரு முறையும் முதல்வர், அமைச்சர்கள் டெல்லி சென்று வந்த போதெல்லாம் நீட் விலக்கிற்காக செல்லவில்லை அடித்த கொள்ளையை அதிகரிப்பதற்காகவே சென்றார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
அது மட்டுமல்ல மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்டமசோதாக்கள் என்ன நிலையில் இருக்கிறது என்று தெரியாது என்று சொன்னார். அதற்கு பிறகு கடந்த வாரம் குறைந்த பட்சம் ஓராண்டாவது விலக்கு கிடைக்கும் என்று சொன்னார்.

அனிதாவின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் .


Final rites will be done for Anitha by this evening lakshmi-priya. Oneindia Tamil: சென்னை: நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதாவின் உடலுக்கு திமுக செயல் தலைவார் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்திய பின்னர் இறுதி சடங்குகள் செய்யப்பட்டு தகனம் செய்யப்பட்டது. அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவரது உடல் வீட்டருகே உள்ள திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடலுக்கு அரசியல் கட்சி பிரமுகர்களும், திரைப்பட பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சித்தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி விட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தனர்.

பார்ப்பனர்களுக்கு சட்டப்படி corrupt செய்ய தெரியும்... NEET ஒரு சட்டப்படி தில்லாலங்கடி திருட்டு!

வாசுகி பாஸ்கர் : உலகம் முழுக்க மத நிறுவனங்களின் பிடியில் தான் பொருளாதாரமும், அரசும், சமூக கட்டமைப்பும் இருக்கிறது, இது எப்படி சாத்தியமாகிறது என்பது பெரிய சப்ஜெக்ட். அது விட்டுடுவோம், தமிழ்நாட்டிலேயே   எடுத்துக்கொள்ளுங்கள், காஞ்சி காமகோடி பீட கிளைகளுக்கு சொந்தமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் என்று விஸ்தரித்து அவர்தம் சார்ந்தவர்களுக்கு பயன்படும் படி முன்னுரிமை கொடுக்கப்படுகிறது, அதனால் பலனடைகிறவர்களும் அதிகம்.
தமிழ்நாட்டில் ஆட்சி செய்ய கிடைத்த மிக நீண்ட கால வாய்ய்ப்பை திராவிட அரசியல்வாதிகள் அப்படியான நிறுவனங்களை நிறுவ தவறி விட்டார்கள் என்றே சொல்வேன். கல்வியால் நிகழ்ந்த சாதனைகள் அசாதாரணமானது தான், யாரும் மறுப்பதற்கில்லை, ஆனால் தமிழ்நாட்டை போல ஒரு மாநிலத்தில் கடவுள் மறுப்பு, முற்போக்கு, விளிம்பு நிலை மனிதர்களுக்கான அரசியல் பேசி நீண்ட காலமாக மக்களிடையே அங்கீகாரத்தை பெற முடிந்த இயக்கங்கள், கட்சிகள் இந்தியாவுக்கே முன்னோடி, ஏன் உலகத்துக்கே முன்னோடி என்று கூட சொல்லலாம்.

NEET ..அனிதா போன்ற குடிசை வாழ் மக்கள் 80 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்படுவார்கள்!

Vijay Bhaskarvijay  : மூன்று மாதம் முன்பு ஷேர் ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரிடம் பேசிக் கொண்டு வந்தேன்.
அந்த டிரைவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கு வயது முப்பது. அவர் படித்த படிப்பு பத்தாம் வகுப்புதான்.

அவர் தம்பி என்ன படித்திருக்கிறார். அவரும் பத்தாம் வகுப்புதான்.
இன்னொரு தங்கை இருக்கிறார். அவரும் பத்தாம் வரைதான் படித்திருக்கிறாராம்.
ஆக 2017 - 30 = 1987. அவர் அப்பா அம்மாவுக்கு 1986 யில் திருமணம் முடிந்திருக்கும். நினைத்துப் பாருங்கள்.
1986 யில் உலகம் எவ்வளவு முன்னேறின காலம். அந்த முன்னேறின சமயத்திலும் ஒரு தம்பதியினருக்கு கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி தெரிந்தாலும் அதை எப்படி போதிக்க என்று தெரியாமல் இருந்திருக்கிறது.
அப்படி போதிக்க தெரிந்தாலும் அவர்கள் வீடு இருந்த சுற்றுச் சூழல், குழந்தைகள் மனம் அங்கிருந்து திசை திரும்பாமல் வளர்க்க தடையாய் இருந்திருக்கிலாம்.

நீட் எதிரிகளை இனம் காட்டிய Dr.அனிதா ... நீட்டுக்கு / குலக்கல்விக்கு வக்காலத்து வாங்கும் துரோகிகள் !

நடிகர் விவேக், நடிகை கஸ்தூரி , சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமிகிருஷ்ணன் ஞானி போன்றவர்கள்   அனிதா மரணத்துக்கு நீலி கண்ணீர் வடித்து கொண்டே நீட்டுக்கு எந்த பங்கமும் ஏற்பாடவண்ணம்  வார்த்தை ஜாலம் செய்கிறார்கள் ..  பாஜகவின் கைகூலிகள் 
Don Ashok மன உறுதி வேணும், மயிரு உறுதி வேணும் என பேசிக்கொண்டிருக்கும் ஞாநி மாதிரியான பைத்தியங்களுக்கு... அனிதா தோல்வி அடைந்து மன உறுதியை இழந்து தூக்கில் தொங்கவில்லை. வெள்ளைத்தோல் மனிதர்களைவிடவும், காரில் செல்லும் மனிதர்களைவிடவும், கோச்சிங் சென்டருக்கு லட்ச லட்சமாக ஃபீஸ் கட்ட முடிந்த பணக்காரர்களைவிடவும் தனக்கு அதிகமான தகுதி இருந்தும்கூட அவர்களுக்கு கிட்டியது இவளுக்கு கிடைக்கவில்லையே என்கிற கோபத்தில் செத்திருக்கிறாள். நீங்கள் ‘நீட்’ என்ற பெயரில் அவளது அடிப்படை உரிமையை பறித்திருக்கிறீர்கள். அவள் இங்கே வாழ்வதற்கான உரிமையை பறித்திருக்கிறீர்கள்.
ஒற்றைக் கனவைக் கண்டு, அக்கனவை நோக்கி கடுமையாக உழைத்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த அவளது கால்களை இலக்கை அடையும் கடைசி நேரத்தில் அநியாயமாக வெட்டி எறிந்திருக்கிறீர்கள். அவளுடைய கோபம் பெருங்கோபம். “உணர்ச்சிவசப்படாமல் அணுகுவோம்,” என மடத்தனமாக தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் மனசாட்சி இல்லாத மிருகங்கங்களுக்கு அந்த ஏழை இலட்சியவாதியின் கோபம் புரியவே போவதில்லை.