சட்டமன்றத்தில் அரசுக்கு எதிராக ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் வெற்றி பெறுவோம்: எடப்பாடி பழனிச்சாமி உறுதி புதுடெல்லி: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியிடம், தேவைப்பட்டால் தமிழக அரசு மீது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக கூறியது பற்றி கேள்வி எழுப்பினர்.






















