ஊரை
அடித்து தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம்
தமிழகத்தில்,சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன உயர் திரு கக்கன் பிறந்த_தினம்_இன்று தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்...
கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள்
கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.
விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவ
விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின்
கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு
வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள்
எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என
ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...
புதன், 15 ஜூன், 2016
ரஜினியின் கபாலி.. மலாயா கணபதியின் கதை .. கலைஞர் கருணாநிதி எழுதியது?
கபாலி’யின் கதை மலாயா கணபதியின் வாழ்க்கைக் கதையை தழுவியது என்பதை போல தகவல்கள் கிடைக்கின்றன.
மலாயா கணபதி, பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எதிரான அவரது போராட்டங்களால்
1949ல் தூக்கிலிடப்பட்டவர். ஆரம்பத்தில் சுபாஷ்சந்திரபோஸின் இந்திய தேசிய
ராணுவத்தில் இருந்தவர் பிற்பாடு மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியில்
தீவிரமாக பணியாற்றினார். மலாயா தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புக்கு தலைவராக
இருந்தவர். பத்திரிகையாளரும் கூட. தூக்குத்தண்டனையில் இருந்து அவரை
தப்புவிக்க இந்திய அரசு செய்த முயற்சிகள் கடைசி நேரத்தில் தோல்வியில்
முடிந்தன. 37 வயதிலேயே சாவை முத்தமிட்டார் கணபதி. ரஜினி அண்ணாமலை அருணாசலம் போன்று மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சுவாமியின் வசூல் அருள் வேண்டி கபாலி என்ற சாமிபெயர் சூட்டி உள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணிக்கு பிடிவாரன்ட்... ஜாமீனில் வெளிவரமுடியாது
நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட
வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத
பிடிவாரண்ட் பிறப்பித்து நாகர்கோவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்சந்தையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதம் 27-ந் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட விஜயதரணி,
முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்டது.
டொனால்ட் ட்ரம்ப்: முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை அனுமதிக்க கூடாது
ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதலையடுத்து, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா.
ஓர்லாண்டோ துப்பாக்கிச் சூடு தாக்குதல் குறித்து, அமெரிக்கக் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார் அதிபர் ஒபாமா.
வெள்ளை மாளிகையில் ஒபாமா உரையாற்றிய போது, முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருவதை தடுக்குமாறு டிரம்ப் தெரிவித்த யோசனை, தீவிரவாதிகளின் பிரச்சாரத்தை மேலும் தூண்டும் என்றும் நாட்டின் பாதுகாப்பை அது குறைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, தனது கடந்த கால வரலாற்றில் எப்போதெல்லாம் அச்சத்தால் நடவடிக்கை எடுத்து தனது சக பிரஜைகளை தவறாக நடத்தியதோ அப்போதெல்லாம் அது வரலாற்றில் மிகவும் "வெட்கபட வேண்டிய ஒரு பகுதி" யாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் கருத்துக்கு பதிலளித்த டிரம்ப், அவர் தன்னை நோக்கி வெளிப்படுத்திய கோபத்தை, தாக்குதல் நடத்திய நபரை நோக்கி செலுத்தியிருக்கலாம் என தெரிவித்துள்ளார். tamil.thehindu.com
ஏ.சி.திருலோகச்சந்தர் காலமானார் ... ( வயது 87) பிரமாண்ட வெற்றிப்படங்களின் இயக்குனர்
திரைப்பட இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் ( வயது 87) சென்னையில் உடல் நலக்குறைவால் காலமானார்.>எம்.ஜி.ஆர்.,
சிவாஜி, சிவகுமார் என்று முந்தைய தலைமுறை நாயகர்களை வைத்து ஏராளமான
வெற்றிப் படங்களைத் தந்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். சினி பாரத் என்ற
தனது சொந்த நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.அன்பே
வா, டாக்டர் சிவா, தெய்வமகன், பாரதவிலாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய
திருலோசந்தர், எம்.ஜி.ஆர். நடித்து 1952-ஆம் ஆண்டு வெளியான "குமாரி'
படத்தில்தான் முதல் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார்.
கடைசியாக சிவாஜி, நதியாவை வைத்து ’’அன்புள்ள அப்பா’’ படத்தை இயக்கினார்.
படம் பாராட்டுக்களைப் பெற்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. அதன்
பின்னர் நான்கைந்து தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார்.;வேலூர்
மாவட்டம் ஆற்காட்டைச்சேர்ந்த திருலோகசந்தருக்கு இரண்டு மகன்கள். ஒரு
மகள். மூவருக்கும் திருமணமாகி விட்டது. மனைவி 2010ம் ஆண்டு 72-வது வயதில்
காலமானார்.நக்கீரன்.in
நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி வரலாறு காணாத வெற்றி
நாகராஜ் மஞ்சுளேவின் சாய்ரத் திரைப்படம், மராத்தி திரையுலகில் வரலாறு
காணாத வெற்றியடைந்திருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கும்
முதல் மராத்தி திரைப்படமாக புகழ் பெற்றிருக்கிறது. அவரது முந்தைய
திரைப்படமான 'ஃபன்றி'-யை கண்டவர்களுக்கும், தமிழில் 'காதல்' திரைப்படத்தைக்
கண்டவர்களுக்கும் இப்படம் சற்றே ஏமாற்றம் அளிக்கலாம். ஆனால் அது
பிரச்சினையில்லை.
ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.
ஏனெனில், சாதி ஆணவப் படுகொலைகள் குறித்து மைய நீரோட்ட சினிமாவில் பதிவு செய்வது, அதுவும் வணிக சினிமாவின் சட்டகத்திற்குள் நின்றவாறே (பிரமிப்பூட்டும் காட்சிகள், கோணங்கள், பாடல்கள்) இயன்ற மட்டும் ஒரு காத்திரமான திரைப்படத்தை உருவாக்குவது என்பது ஒரு சாதனை. அதனை நாகராஜ் சாதித்து காட்டியுள்ளார்.
விமான நிலைய புகார் பெட்டியை உண்டியல் என்றெண்ணி பணம் போடும் அறிவுகொழுந்துகள்
பக்தியால் வந்த கேடு...
திருச்சி விமான நிலையத்தில் உண்டியல் என நினைத்து பணம் போட்டிருக்கும் கேவலம் இது.
கோவில் உண்டியலில் காலங்கலமாகப் பணத்தைப் போட்டு பழக்கப்பட்டுவிட்ட
புத்திகெட்ட பக்தர்களுக்கு புகார்பெட்டிக்கும் உண்டியலுக்கும் வித்தியாசம்
தெரியாத நிலை....
ஆட்டுமந்தைகள் போன்றே வாழ்ந்து பழகிவிட்டதால் குறைகளைச் சொல்லும் மன
தைரியம் வளராததால் புகார்ப் பெட்டியையே உபயோகித்திருக்க மாட்டார்கள் என
தெளிவாகத் தெரிகிறது.
ஏதாவது நிதி உதவி கேட்டு வரும் உண்டியல்களிலும் கோவில் உண்டிகளிலும் பணம்
போட்டு பழகி விட்ட முட்டாள் சமூகத்தில் தான் நாம் இன்னும் இருக்கிறோம்
என்பது வெட்கக்கேடு.
Feedback / Complaints / Suggestions என்று தெளிவாகப் போட்டிருந்தும் இந்த நிலை.
இதுபோன்ற முட்டாள்கள் தான் வாக்குப் பெட்டியிலும் யாருக்கு வாக்களிக்கிறோம்
எதற்கு வாக்களிக்கிறோம் எனத் தெரியாமலே வாக்கும் அளித்து நாட்டைக்
கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
கொஞ்சமாவது அறிவை உபயோகிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
இடுகையிட்டது
லதாராணி(Latharani) latharaniyinsorchithirangal.blogspot.com
SRM பச்சமுத்து: மதன்னா யாருன்னே தெரியாது.... கட்சி விரோத செயலால் 25.02.2016 தேதியே நீக்கிவிட்டேன்...
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக பெயரை பயன்படுத்தி மாணவர்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, வேந்தர் மூவிஸ் மதன் மீது அந்தக் கல்விக் குழும உரிமையாளர் பாரிவேந்தர் சார்பில் அவரது வழக்கறிஞர் பாலு, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கடந்த 40 வருடமாக எங்களது பல்கலைக்கழகம் எந்த புகாருக்கும் ஆட்படாமல் நற்பெயர் ஈட்டி நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகம் என்ற பெயரெடுத்துள்ளது. எங்கள் கல்லூரிகளில் பணமாக எந்த தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. நான் ஐஜேகே கட்சியின் நிறுவனரும் ஆவேன். என்து கட்சியில் 5 துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக மதன் என்பவர் இருந்து வந்தார்.
செவ்வாய், 14 ஜூன், 2016
நடைபெற்றது தேர்தலே அல்ல, இது ஒரு சூது.. கண்டெயினர் சந்நிதியில் மோடி முதல் கடைகேடி வரை பஜனை
கண்டெய்னர் வாழ்க! போலி வாக்காளர் வாழ்க! அழிகின்ற மை வாழ்க! அழியாத முதல்வர் வாழ்க! ஜனநாயகம் வாழ்க… வாழ்கவே!மே 21 அன்று இரவு ஜெயா டிவியில் “இருவர்” திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. “வி-டு-த-லை, விடுதலை” என்ற பாடல் வரிக்கு, ஜெயலலிதா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது பின்புறத்தை குளோசப்பில் ரசிகப் பெருமக்களுக்கு காட்டியபடி ஆடிக்கொண்டிருந்தார்.... வளர்மதி, கோகுல இந்திரா, வைத்திலிங்கம், நத்தம் போன்ற உத்தமர்களை தனது பதவியேற்பு விழாவின் முன்வரிசையில் அமர வைத்து, குளோசப்-இல் காட்டி, அவர்களை நிராகரித்த வாக்காளர்களை அசிங்கப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா.
ஆர்லாண்டோ.. உயிரழந்தவர்களுக்கு சென்னையில் அஞ்சலி ! LGBT activists hold candlelight vigil in Chennai for Orlando victims
LGBT activists in Chennai came together on Tuesday to show solidarity with the victims of the Orlando shooting.They also condemned all forms of hatred and violence. A candlelight vigil was held at Chennai Press Club in remembrance of the victims.
“The mass shooting in Pulse, a gay nightclub in Orlando, Florida, US, on the night of June 11, resonated with those of us who have faced intolerance, hatred and violence simply for being who we are,” stated a press release. LGBT activists said their community has always been at the receiving end of bigots from all faiths. “We register our protest against initiatives by ideologues of all stripes to use this incident to advance political and personal agendas of xenophobia and Islamophobia,” the press release stated.
மாணவர்களுக்கு சூடு வைத்த வைஜயந்திமாலாவுக்கு ஜாமீன் கிடையாது.
விழுப்புரம்
மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13
பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை என்றும்
அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா, கடந்த 9ம் தேதி
கற்பூரத்தால் சூடுவைத்தார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார்
தெரிவித்தனர். ஆசிரியையால் சூடு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள்
உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
வழக்கறிஞர்களும் பிராஸ்ட்டிட்யூட்டுகளும் : மார்க்கண்டேய கட்ஜு

அண்மையில்
சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சட்டவிதிகளில் திருத்தம் கொண்டு
வந்ததற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த
திருத்தத்தைத் திரும்பப்பெறும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்றப்
புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், ஊடகங்கள் என்று அனைவரையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஸ்டேட்டஸ் நமது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை உசுப்பிவிட்டிருக்கிறது. மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் விபச்சாரிகளும்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது:
இந்நிலையில், பிரதமர், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள், ஊடகங்கள் என்று அனைவரையும் தயவுதாட்சண்யம் இல்லாமல் கடுமையாக விமர்சித்து வருபவரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட ஸ்டேட்டஸ் நமது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை உசுப்பிவிட்டிருக்கிறது. மார்க்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ‘சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் விபச்சாரிகளும்’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதாவது:
தேமுதிக உள்ளூராட்சி தேர்தலில் போட்டியில்லை..
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக
நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. முன்னாள்
எம்எல்ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் பலர் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ
இருப்பதாக விஜயகாந்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைக் கேட்டதும்,
விஜயகாந்த் மிரண்டுபோய் விட்டாராம். கட்சியின் ஆணிவேர்களாக இருக்கும்
நபர்களே மாற்றுக்கட்சிகளுக்குத் தாவ இருப்பதாக தகவல் கிடைத்தவுடன்தான்,
கட்சி நிர்வாகிகளை அழைத்து கோயம்பேடு அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
தேமுதிக-வில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்களை அழைத்து வரவேண்டும்.
தேமுதிக-வில் சுமார் 20 மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். இந்த மாவட்டச் செயலாளர்கள்தான் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், வேட்பாளர்களை அழைத்து வரவேண்டும்.
5500 டன் அணு கழிவுகள் புதைப்பு
ஹெல்சிங்கி, ஜூன் 9:முதன்
முதலாக அணு உலைகள் கட்டப்பட்ட நாளிலிருந்து இன்று வரை உலகின் அனைத்து
நாடுகளுக்கும் அணு உலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளை என்ன செய்வது என்பது
எந்தவித தெளிவும் கிடைக்கவில்லை. உலகம் முழுவதும் அணு கழிவுகளை தற்காலிக இடங்களை அமைத்து அதில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ந்நிலையில்
பின்லாந்து நாட்டில் உள்ள ஓன்கிலோடோ அணு உலையில் இருந்து வெளியேற்றப்பட்ட
கழிவுகளை அந்நாடு வரும் 2020 ஆண்டுவாக்கில் புதைக்க உள்ளது.
ஆறு பந்தய குதிரைகள் உயிரழந்தன... உளுந்தூர் பேட்டையில் விபத்து
விழுப்புரம்
மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே முன்சக்கரம் கழன்டு ஓடியதால் கனரக வேன்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் ஏற்றி வரப்பட்ட 6 பந்தய
குதிரைகள் பரிதாபமாகஉளுந்தூர்பேட்டை அருகே உயிரிழந்தன.கொடைக்காணலில்
அண்மையில் நடந்த மலர்க்கண்காட்சியையொட்டி அங்கு குதிரைப் பந்தயமும்
நடைபெற்றது. பார்வையாளர்களை கவர நடத்தப்பட்ட இந்த பந்திய போட்டிக்கு சென்னை
கிண்டியில் இருந்து பந்தய குதிரைகள் கனரக வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டன.
நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் நேற்று மாலை கனரக வாகனம் மூலம் 6 குதிரைகளை
ஏற்றிக்கொண்டு சென்னை கிண்டியை நோக்கி செல்லப்பட்டது.
இளங்கோவன்: ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை மீண்டும் நீதிவிசாரணை நடத்தி.....
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் இல்லை என்றால், மீண்டும் நீதி
விசாரணை நடத்தி அவர்களை விடுதலை செய்தால் ஆட்சேபனை இல்லை. மக்கள்
பிரச்சினைக்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லிக்கு செல்லவில்லை. சொத்து
வழக்கு, 570 கோடி ரூபாய் பறிமுதல் குறித்து பேசவே அவர் டெல்லி செல்ல
உள்ளார்.
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட வேண்டாம் என கேரளாவின் புதிய
முதல்-மந்திரியின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
வன்னிய அரசு : சாதிய தமிழ் தேசியவாதிகள் இருக்கும் வரை தமிழ்தேசியம் உருப்படபோவதில்லை,
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்கள் நேற்று புதிய
தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ஈழத்தின் நடந்த போரை முன்வைத்து பாமக
எம்.பி., எம்.எல்.ஏக்கள் பதவி விலகலாம் என்று ராமதாசிடம் அவர் சொன்னதற்கு,
‘என் மகன் அமைச்சராய் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா? நாயே’ என்று தன்னை
கடுமையாக ராமதாஸ் கேட்டதாக பதிவு செய்துள்ளார். தொடர்ந்து அதே பேட்டியில்
புலிகளின் அரசியல்பிரிவு தலைவர் நடேசன் அவர்களிடமிருந்து
போர்முனையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று அவருடன் பேசமாட்டேன் என்று
ராமதாஸ் மறுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2011ஆம் ஆண்டு தூக்கு தேதி குறிக்கப்படிருந்த நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மறைமலைநகரில் ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது.
2011ஆம் ஆண்டு தூக்கு தேதி குறிக்கப்படிருந்த நிலையில் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மறைமலைநகரில் ‘மரண தண்டனை ஒழிப்பு மாநாடு’ நடத்தப்பட்டது.
டெல்லி செல்லும் முதல்வர் ஏழுபேர் விடுதலைக்கு முயற்சி செய்வார்?
முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி விஜயத்தின் பொது தமிழகத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய பட்டியலில், ' பேரறிவாளன்
உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைப் பற்றிய ஃபைலும் செல்ல இருக்கிறது'
என்கின்றனர் தலைமைச் செயலக வட்டாரத்தில்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு
பேரும் சிறை சென்று 25 வருடங்களுக்கும் மேலாகிவிட்டன. இவர்களின் விடுதலையை
எதிர்நோக்கிய கோரிக்கைப் பேரணியை, கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில்
நடத்தினார் பேரறிவாளன் தாய் அற்புதம் அம்மாள். ' முதலில் வேலூரில் இருந்து
சென்னை கோட்டையை நோக்கிப் பேரணி' என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1937 இல் எம் எஸ் சுப்புலட்சுமி சிகரட் புகைத்தார்...பாலசரஸ்வதியும் சேர்ந்து புகைத்தார்
இது உண்மையாகவே அவர்கள் சிகரட் புகைக்கிரார்களா அல்லது அப்படி நடிக்கிறார்களோ என்பது நமக்கு தெரியாது. ஆனால் தெரிந்தவர்கள் ஒரு போதும் உண்மையை சொல்லப்போவதில்லை. ஏனெனில் அவாள் சுப்புலட்சுமி அம்மாவையும் நடன மேதை பாலசரஸ்வதி அம்மாவையும் சாட்சாத் சரஸ்வதி ரேஞ்சுக்கு கதை அளந்து வைத்துள்ளார்கள். ஆனால் ஒன்று மட்டும் நிஜம், இந்த போட்டோ உண்மயான போட்டோதான் . இது கொஞ்சகாலமாக முகநூல் பக்கங்களில் உலா வருகிறது.. இருவரும் மிகவும் நவ நாகரிக நங்கையர்களாக காட்சி அளிக்கிறார்கள். அவிங்க அந்த காலத்திலேயே ரொம்பவும் மாடர்ன் ஆக இருந்திருக்காக.
ஆம் ஆத்மியின் 21 எம் எல் ஏக்கள் தகுதி நீக்கம்? ஆதாய பதவி சட்டம்...ஜனாதிபதி மறுப்பு!
டெல்லி: ஆதாயம் தரும் பதவியின் அடிப்படையில் 21 ஆம் ஆத்மி
எம்எல்ஏக்கள் தகுதி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடக்கிறது.
முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம்ஆத்மி பொறுப்பேற்றது முதல்
டெல்லி அரசுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்ந்து அதிகாரப் போட்டி நிலவி
வருகிறது.
இந்த அதிகார போட்டியில், மத்திய அரசின் பிரதிநிதியான டெல்லி ஆளுனர் நஜீப்
ஜங்கிற்கு, மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் 21
ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமைச்சர்களின் சட்டபேரவை செயலாளர்களாக
நியமிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் இதன் மூலம் அவர்களுக்கு கார் மற்றும் அலுவலகம் உள்ளிட்ட வசதிகளும்
செய்து கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டெல்லி சட்டபேரவை விதிகளின்படி
எம்எல்ஏக்களுக்கு இது போன்ற நியமனம் அளிக்கக் கூடாது.
பாலியல் சில்மிஷ ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவிகள் வீடியோ
மன்சூர் நகரிலுள்ள இசைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றுபவர் நிரஞ்சன் பட்னாகர். அங்கு பயிலும் மாணவிகளை தொடர்ந்து கிண்டல், கேலி செய்ததோடு பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஆசிரியர் நிரஞ்சன் பட்னாகரை தெருவுக்கு இழுத்து வந்து ஆடையை கிழித்து சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் ஆசிரியரை மீட்டு விசாரணை நடத்தினர்.
திங்கள், 13 ஜூன், 2016
குஷ்பூ நூல் வெளியிடுவதில் என்ன தவறு ? கௌதம சித்தார்த்தன்
கௌதம சித்தார்த்தன்
திரைப்பட ஆளுமையும் “வெகுஜன அரசியல் தளத்தில் பாப்புலரான பெண்ணியக்
கருத்துக்களை முன்வைத்து ஆணாதிக்கத்தின் மீது எதிர்ப்புக் குரல் எழுப்பி
வருபவருமான குஷ்பூ என் நூலை வெளியிட்டது குறித்து “ஒழுக்கியவாதிகள்”
மத்தியில் பெரும் சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.
என்னிடம் நேரில் “நாங்கள் எப்பொழுதும் எங்கள் கருத்துக்களை நேரில்தான்
பேசுவோம்” என்கிற ரீதியில் தங்களது புனித பிம்பங்களை முன்வைத்து என்னைக்
கிண்டல் செய்தார்கள். ஒரு சிலர் என் காது பட பின்னால் பேசினார்கள்
ஆரம்ப காலத்தில் பெண்களின் உடல்மொழியை முன்வைக்கும் பெண்ணியக் கவிதைகள்
வெளிவந்தபோது இதுபோன்ற கலாய்ப்புகள் கேலி கிண்டல்களை முன்வைத்தவர்களின்
தொடர்சியானவர்கள்தான் இவர்கள்.
உட்தா பஞ்சாப் திரைப்படம் உயர்நீதிமன்றம் அனுமதி... தணிக்கை உத்தரவு ரத்து!
உட்தா பஞ்சாப்' படத்துக்கு 13 வெட்டுகளைப் பரிந்துரைத்த
தணிக்கைக் குழுவின் உத்தரவை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்து, படம் ஏ
சான்றிதழுடன் வெளியாக அனுமதி அளித்துள்ளது.
இயக்குநர் அபிஷேக் சௌபே இயக்கத்திலும், இயக்குநர்
அனுராக் காஷ்யப்பின் இணைத் தயாரிப்பிலும் உருவாகியிருக்கும் படம் ‘உட்தா
பஞ்சாப்'. இந்தப் படத்தின் கதைக்களமானது, பஞ்சாப் மாநிலத்தின் போதைப்
பொருள்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாகத்
தெரிகிறது. இந்நிலையில், இப்படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காக
மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தை படக்குழு அணுகியுள்ளது. அப்போது,
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், பஞ்சாப் மாநிலம் தொடர்புடைய சில
சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு பரிந்துரைத்திருந்தனர். இதற்கு
திரைப்படக் குழுவினர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
பிரசவ கால ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர் காக்கும் ஆடை வழங்குவது நிறுத்தம்
பிரசவத்துக்குப் பிறகு பெண் களுக்கு ஏற்படும் ரத்த ப்போக்கை
கட்டுப்படுத்துவதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், 108
ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வந்த உயிர் காக்கும் ஆடை
திடீர் என நிறுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
மகப்பேறு காலத்தின்போது பெண்களுக்கு அதிக ரத்தப் போக்கு காரணமாக 30 சதவீதம்
உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது என ஆய்வின்போது கண்டறி யப்பட்டது. இதில்
குறிப்பாக கிராமப்புறங்களில் உயிரிழப்பு அதிகரித்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரத்தப்போக்கினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க அரசு மருத்துவக்
கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்து வமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள்,
108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் உயிர்
காக்கும் ஆடை என்கிற பாதுகாப்பு உபகரணத்தை மத்திய அரசு வழங்கி வந்தது.
கலைஞர் சவுக்கடி :எந்த மொழி மக்களிடமும் சமஸ்கிருதத்தை திணித்தால் ஓடஓட விரட்டுவோம்
திமுக
முன்னாள் அமைச்சர் பூங்கோதை அருணா - பாலாஜி தம்பதியரின் மகள் சமந்தா -
ஷ்ரிநாத் ஜோடியின் திருமணம், சென்னை சாந்தோம் எம்.ஆர்.சி. சென்டர் -
வள்ளியம்மை திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. திருமண விழாவை திமுக
தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார். பின்னர், அவர் மணமக்களை
வாழ்த்திப் பேசியபோது, ‘தமிழ்நாட்டில், தமிழ்மொழிக்கு மூவேந்தர்
காலந்தொட்டு இருக்கும் அதனுடைய மூப்பு, அதனுடைய மொழி ஆதிக்கம், அந்த
மொழிக்கிருந்த செல்வாக்கு, அதைக் கையாண்ட மூவேந்தர்களின் பரம்பரை என ஒரு
வரலாறு உண்டு. அந்தப் பரம்பரையை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு, நாங்கள்
தமிழுக்கு இடம் தரமாட்டோம், வட மொழிக்குத்தான் இடம் தருவோம் என்று
சொல்வார்களானால், தமிழன் ஒவ்வொருவரும் கையில் சவுக்கை எடுத்துக்கொண்டு
வடமொழி ஆதிக்கத்தை வேரறுக்கக் கிளம்பவேண்டும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














