திங்கள், 4 ஏப்ரல், 2016

இளங்கோவனுக்கு சிதம்பரத்தை பிடிக்காவிடினும்......TN காங்கிரசில்தான் யாருக்கும் யாரையும் பிடிக்காதே... .டெல்லியிலிருந்து அட்ஜஸ்ட் சிக்னல் .

ப.சிதம்பரம் | கோப்புப் படம்
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் (70), டெல்லி தலைமையால் தவிர்க்க முடியாதவராகவும், தமிழக காங்கிரஸால் ஏற்க முடியாதவராகவும் திகழ்வதாக கூறப்படுகிறது.
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதியில் இருந்து 1984-ல் முதல்முறையாக எம்.பி. ஆனார். 1985 - 89, 1991-96 காலகட்டங்களில் மத்தியில் பல்வேறு துறைகளில் இணை அமைச்சராக இருந்தார். 1996-ல் தேவகவுடா அமைச்சரவையில் முதல்முறையாக கேபினட் அமைச்சரானார். 2 ஆண்டுகள் அவர் நிதியமைச்சராக பதவி வகித்தார். பிறகு 2004 முதல் 2014 வரை நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பதவி வகித்தார். இதன்மூலம், தேசிய அரசியலில் சிதம்பரத்தின் நிலை மிகவும் வலுவானது.

பெருந்தலைவர் காமராஜரின் குடும்ப வாரிசுகள் திமுகவில் இணைந்தனர்

பெருந்தலைவர்காமராஜரின் பேத்தி மயூரி கண்ணன் திமுகவில் இணைந்தார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில், பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி கண்ணன் மற்றும் அவரின் குடும்பத்தினர், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.திமுகவில் இணைந்தது குறித்து குறித்து மயூரி கூறுகையில், நான் காமராஜரின் பேத்தி என்பதில் பெருமை கொாள்கிறேன். ஆனால், மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றால் அது திமுகதான். அதனால்தான் திமுகவில் இணந்தேன் என்றார். மயூரி கண்ணன் திமுகவில் இணைந்த சேதி கேட்டு காங்கிரஸார் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.வெப்துனியா.கம

சகாயம் ஐ ஏ.எஸ் மக்கள் பாதை என்ற சமுக நேர்மை இயக்கத்தை தொடக்கி வைத்தார்

சென்னை: எங்களோடு இந்த பித்தலாட்ட சமூகம் போகட்டும். அடுத்த தமிழ்த் தலைமுறை குறித்து நாம் யோசிக்க வேண்டும், செயல்பட வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்கள் பாதை என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இதை சகாயம் நேற்று தொடங்கி வைத்தார். சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த அமைப்பு தொடங்கப்படடுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சகாயம் ஆற்றிய சிறப்புரையிலிருந்து..
நான் முதல்வரா..! நவம்பர் மாதத்தில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடுகள் பற்றி ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி "..... அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்....கேள்வி கேள்...சவால் விடு...

உண்மையை தேடல்  என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது.
சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள் இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள். இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.
நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.
என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன்.
அதில் ஈடுபாடும் கொள்பவன். இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது  என்பதை  அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு  அதீத விருப்பம். நான் ஒரு ஆத்மீகவாதியாக காட்டி கொள்ள விரும்பினால் எனக்கு ஆத்மீகம் தவிர இதர விடயங்களில் ஆர்வம் இல்லாத மாதிரி ஒரு வேஷத்தை போட்டு கொள்ள வேண்டும்.

விண்ணை முட்டிய அஜித்தின் சம்பளம்- அதிர்ந்த கோலிவுட்..!

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வசூல் சாதனை படைத்தது அதிலும் வேதாளம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் அஜித் அடுத்து சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்திற்காக வரிப்போக ரூ 40 கோடி அஜித் சம்பளமாக பெற்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது. nakkheeran,in

அன்புமணி : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை

தமிழக தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என அன்புமணி குற்றம் சாட்டினார்.திருவண்ணாமலை வேங்கிகாலில் ‘உங்கள் ஊர்... உங்கள் அன்புமணி’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் பாமக இளைஞர் அணி தலைவரும், பாமக முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மீது நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது  நேர்மையான நீதிபதிகளை கொண்டு நீதி விசாரணை நடத்துவோம்.தமிழக தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.  இந்த ராஜேஷ் லக்கானியும் முன்பு இருந்த பிரவீன் குமாரும் ஜெயலலிதாவுக்கு உறவினர்களோ? அதாவது பார்பனர்களோ என்று கேட்கிறேன்? 

இலங்கையில் போதை பொருள் கடத்தலில் இந்தியர் உள்பட 14 வெளிநாட்டவர் 110 kilograms of heroin worth USD 7.5 கைது

12 hours ago - Indian Among 14 Foreigners Arrested in Drug Bust in Lanka ... 14 foreigners detained by Sri Lankan police in connection with the country's biggest drug bust in nearly three years, after 110 kilograms of heroin worth USD 7.5 ...
இலங்கையில் 3 வருடங்களில் இல்லாத வகையில் கடற்பகுதியில் வைத்து 101 கி.கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியர் உள்பட 14 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 10 பேர் ஈரான் நாட்டவர்.  2 பேர் பாகிஸ்தானியர்கள்.இந்தியர் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த நபரும் கைது ஆகியுள்ளனர். கடந்த மார்ச் 30ந்தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இலங்கை கப்பற்படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 101 கி.கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு 49.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தில் நெகோம்போ நகரில் 3 பேரை சந்தேக அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.

குற்றப்பரம்பரை பாரதிராஜ இயக்கி நடிக்கிறார்...தொடக்க விழா ....பாரதிராஜா-பாலா மோதல்.....?

குற்றப்பரம்பரை பட விவகாரத்தில் பாரதிராஜாவுக்கு ஆதரவாக டைரக்டர்கள் திரண்டனர். உசிலம்பட்டி அருகே நடந்த தொடக்க விழா பூஜையில் அவர்கள் கலந்து கொண்டனர்.  குற்றப்பரம்பரை கதையை படமாக்குவதில் பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது. விஷால், ஆர்யாவை நடிக்க வைத்து இந்த கதையை படமாக்க பாலா தயாராகி வந்தார். இதன் கதையை வேல ராமமூர்த்தி எழுதி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படங்களுக்கு கதை வசனம் எழுதி பிரபலமான இயக்குனர் ரத்னகுமார் குற்றப்பரம்பரை தன்னுடைய கதை என்றார். 1997-ல் இந்த கதையை எழுதியதாகவும் சிவாஜிகணேசனை வைத்து படமாக்க பாரதிராஜா முன் வந்ததாகவும் பிறகு சில காரணங்களால் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பிரேமலதா தங்கியிருந்த ஓட்டல் முன்பாக அதிமுகவினர் ரகளை...ஜி.ராமகிருஷன் கண்டனம்

சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தங்கியிருந்த ஓட்டல் முன்பாக அதிமுகவினர் ரகளையில் ஈடுபடுவதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''பிரச்சாரத்துக்காக சேலம் சென்றிருந்த தேமுதிக மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் அங்குள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். தாதகாப்பட்டியில் கடந்த 2-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, திமுக, அதிமுகவை விமர்சித்து பேசினார். இதை பொறுத்துக் கொள்ள முடியாத அதிமுகவினர் சிலர் , பிரேமலதா தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர். 
இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஜனநாயக அரசியலுக்கும், தேர்தல் நடைமுறை விதிகளுக்கும் எதிரானதாகும். அது சரி பிரேமா அண்ணி நீங்க மட்டும் மேடையில் ஏறி குழந்தை பெற்றிருந்தால்தான் ஆம்பிளையின் அருமை புரியும் போன்ற தத்துவ முத்துக்களை வீசும்போது பதிலாக மலர்மாரியையா  எதிர்பார்த்தீர்கள்?  பேட்டை ரவுடி ரேஞ்சுக்கு நீங்களும் உங்க புருசனும் பேசினா பேட்டை ரவுடிகள்தான் பதில் சொல்ல வருவார்கள்

உலகில் அதிக விபத்து...சென்னை 2 வது இடம்...

இந்த பட்டியலில் இந்திய நகரங்களான ஜெய்பூர் 4வது இடத்திலும், இந்தூர் 16-வது இடத்திலும் உள்ளன.இந்த பட்டியலில் கொல்கத்தா 23-வது இடத்திலும், டெல்லி 24-வது இடத்திலும், பெங்களூர் 25-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும் உள்ளது உலகிலேயே அதிக விபத்துக்கள் நடக்கும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் நமது சிங்கார சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO- World Health Organization) ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்து மூலம் இறக்கின்றனர் என்ற அடிப்படையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் அந்த பட்டியலில் முதலிடத்தில் பிரேசில் தலைநகர் போர்ட் எலிசா உள்ளது.இதற்கு அடுத்தபடியாக உலகில் அதிக விபத்து நடக்கும் நகரமாக சென்னை இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

தலைவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யபோகும் தொகுதிகள்.....ஒரே பார்வையில்

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., - தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ., - பா.ம.க., என, ஐந்து முனை போட்டி நிலவுகிறது. வரும், 22ம் தேதி வேட்புமனு தாக்கல் துவங்கவுள்ள நிலையில், கட்சிகளின் கூட்டணி பெரும்பாலும் முடிந்த நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. இதனிடையே, கட்சி தலைவர்கள் தங்களுக்கான வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.

கொங்கு மக்களின் முடிவு மாறுமா?....மது ஒழிப்பு?... கள் விற்பனை?..

பூரண மதுவிலக்கு - கட்சிகள் கையில் எடுத்திருக்கும், தேர்தல் பிரம்மாஸ்திரம். 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், பூரண மதுவிலக்குக்கு தான் முதல் கையெழுத்து' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். 'பூரண மதுவிலக்குக்காக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது ஆட்சி அமைந்ததும், மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என, பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணியும் விடாமல் கூறி வருகிறார். மக்கள் நல கூட்டணி, குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், மதுவிலக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. பா.ஜ., - தே.மு.தி.க., - காங்., கட்சிகளும், இப்பிரச்னையை கையில் எடுத்துள்ளன. இந்நிலையில், 'கள், போதை பானம் அல்ல; இயற்கையான பானம்; உடலுக்கு உகந்தது; உடலுக்கு தீங்கு ஏற்படும் என நிரூபித்தால், ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்ற பிரசாரமும் எழுந்துள்ளது.

மதுபான அதிபர்கள் கூட்டணி அமைத்து திமுகவை தோற்கடிக்க கடும் பிரயத்தனம்

ஊததி மூடிய மதுபான அதிபர்கள் விஜயகாந்த், 'தனித்து போட்டி' என அறிவித்தவுடன், மதுபான அதிபர்கள் கூட்டணி, பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கூடி பார்ட்டி வைத்து  கொண்டாட்டங்களில்....   சில காரியங்கள் நினைத்த நேரத்தில் நடக்காமல் இருந்தால், பெரியவர்கள், 'காலம் சரியில்லை' என்று சொல்வார்கள். அதாவது, அந்த காரியங்கள் நடக்காமல் இருப்பதற்கு, தெரிந்ததும், தெரியாததுமாய் காரணிகள் ஒன்று சேருமாம். அது போன்று தான் தே.மு.தி.க., கூட்டணி என, தி.மு.க., நினைத்துக் கொண்டது.
இருப்பினும், காரணங்களை அலசுவது இயல்பு தானே. அந்த அலசலில், தெரிந்த காரணமாக, ஸ்டாலினும், 'ஒன் மேன் குரூப்'பும் தென்பட்டனர். அ.தி.மு.க.,வின் பெயரும் அங்கு அடிபட்டது. இதுவரை தெரியாத காரணமாக இருந்து, தற்போது, தி.மு.க., தலைமைக்குதென்பட்டுள்ளது, மதுபான ஆலை அதிபர்கள்!

திமுக - அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு....இன்று இறுதி விபரம் வெளியாகும்?

இரண்டு பெரிய கட்சிகளான, தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், இழுபறியில் இருந்து வந்த தொகுதி பங்கீடு பேச்சு, இன்று நல்ல முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை, இக்கட்சிகளின் வட்டாரத்தில் ஏற்பட்டு உள்ளது. தி.மு.க., கூட்டணியில் கிடைக்க போகும் தொகுதிகள் எண்ணிக்கையை அறிய காங்கிரசாரும், போயஸ் தோட்ட கதவு திறப்புக்காக, த.மா.கா.,வினரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான, தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய, இன்று காலை, தி.மு.க., தலைவர் கருணாநிதியை, அவரது கோபாலபுரம் இல்லத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர் குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசுகிறார். காங்கிரசுக்கு, 40 முதல், 43 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அதுபற்றிய, தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருப்பதாகவும், காங்கிரசார் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

கம்யுனிஸ்ட் பாண்டியன்: சிறுதாவூர் காண்டேயினர் பணத்தை வைகோவே பிடித்து கொடுக்கலாமே?

வைகோ மீது தா.பாண்டியன் கடும் தாக்கு! இந்தி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’சிறுதாவூர் பங்களாவில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதாக தொடர்ந்து புகார் தெரிவிப்பவர்கள் அந்த பணத்தை பிடித்தும் கொடுக்கட்டும்’’என்று கூறினார்.nakkhheeran.in  நமக்கு வாய்த்த அடிமைகளுக்குள்  தமது விசுவாசத்தை காட்ட நடக்கும் குழாயடி சண்டைதான் இது.......இன்னும் வரும் 

மொரீஷியஸ் கடற்பகுதியில் காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகம்?

இந்தியப் பெருங்கடலில் இருக்கும் மொரீஷியஸ் தீவின் கடற்பகுதியில் கண்கெடுக்கப்பட்ட உலோகப் பகுதி ஒன்றை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பரிசோதிக்கவுள்ளனர் எம் எச் 370 விமானத்தை தேடும் பணி தொடருகிறது அந்த உலகோகப் பகுதி இரண்டு ஆடுகளுக்கு முன்னர் காணாமல் போன மலேசிய விமானம் எம் எச் 370ன் ஒரு பகுதியா என்பதை அதிகாரிகள் ஆராய்வார்கள்.
இதேவேளை கிழக்கு ஆப்ரிக்க கடற்பகுதியில் கிடைக்கப்பெற்ற இரண்டு விமானத் துண்டுகள் காணாமல் போன அந்த விமானத்துடையதே என்பதை தாங்கள் கிட்டத்தட்ட உறுதியாக நம்புவதாக கடந்த மாதம் விசாரணையாளர்கள் தெரிவித்திருந்தனர்.tamil.bbc.com

மக்கள் நல கூட்டணியில் தொகுதி பங்கீடு இழுபறி....

தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் இட பங்கீடு தொடர்பான சிக்கல்  நீடிப்பதாக தெரிகிறது.
நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை தேமுதிக- மக்கள் நல கூட்டணி இணைந்து சந்திப்பது என்று முடிவெடுத்துள்ளது. இதற்கான பேச்சு வார்த்தை முடிவுற்று தேமுதிகவுக்கு 124 தொகுதிகளும் மக்கள் நல கூட்டணிக்கு 110 தொகுதிகளும் என தொகுதி பங்கீட்டை முடித்து கொண்டனர். மக்கள் நல கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் 110 தொகுதிகளை பங்கிட்டு கொள்வதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.
மதிமுக 45 தொகுதிகளில் போட்டியிட முடிவெடுத் திருக்கிறது. அதற்கு அடுத்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் சுமார் 30 தொகுதிகளில் போட்டியிட  வேண்டுமென்று விரும்புகிறது. 

பிரேமலதா : தொங்கு சட்டப்பேரவை ஏற்பட்டால் விஜயகாந்த் வீட்டின் வாசலில் நிற்க வேண்டியது வரலாம்...அப்போது ரேட் எவ்வளவாக இருக்கும்?

தேமுதிக தேர்தல் அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் தாதகாப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க. மகளிர் அணி செயலர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றுப்பேசினார். அவர், ‘’தே.மு.தி.க.வினர் யாரையும் நாங்கள் அழைக்கவில்லை, அவர்களாகவே வருகிறார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூறியபடி, தானாகக் கரைவதற்கு தேமுதிக சோப்புக் கட்டியல்ல. இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இரும்புக் கோட்டை. திமுக வீசும் மாய வலையில் தே.மு.தி.க.வினர் சிக்க மாட்டார்கள். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலர்கள் எத்தனைப் பேரிடம் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். ஸ்டாலின் பேசும் அனைத்து விவரங்களையும், கட்சியினர் எங்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகின்றனர்.

பால சாயி பாபா ! ஆந்திராவில் புதிய பாபா அவதாரம் இந்த கோடீஸ்வரர் .


சனிபகவான் கோவில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு : நீதிமன்ற உத்தரவை தூக்கி எறிந்த கும்பல்



 நீதிமன்றம் உத்தரவிட்டும் பெண்கள் கோயிலில் நுழைவதை தடுத்த போலீஸார்!
அகமத்நகர்: நீதிமன்றம் உத்தரவிட்டும், மகாராஷ்ட்ரா மாநிலம் ஷிங்னாபூரில் உள்ள புகழ்பெற்ற சனி பகவான் ஆலயத்துக்குள் நுழைய முயன்ற பெண்களை உள்ளூர் கிராம மக்களும், போலீசாரும் தடுத்து நிறுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
ஷிங்னாபூர் சனி பகவான் ஆலயத்திற்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. வெட்டவெளியில் 5 அடி உயரத்தில்  நிறுவப்பட்டுள்ள சிலையின் அருகில் பெண்கள் சென்று வழிபடக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இதனை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மேலும் ஆலயத்திற்குள் நுழைய அனுமதி கேட்டு மும்பை உயர் நீதி மன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ்வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், கோயில்களில் நுழைந்து சாமி தரிசனம் செய்வது பெண்களின் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது.

அதிமுக பி டீமின் அதிகாரபூர்வ பேச்சாளர் வைகோ: திமுகதான் பேரம் பேசியது, விஜயகாந்த் பேரம் பேசவில்லை...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேரம் பேசவில்லை. கொடுப்பதற்கு திமுக முன் வந்தது " என்று எனக்கு தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு வைகோ இன்று அளித்த பேட்டியில், "விஜயகாந்த் ஊழல் செய்பவராக இருந்தால் இத்தனை கோடி பணம் பேரம் பேசப்பட்டது என்று அத்தனை பத்திரிகைகளிலும் எழுதப்பட்டிருக்கும். பணம் பேசப்பட்டது, தொகுதி கொடுப்போம் என்று சொல்லப்பட்டது. இது உண்மை. திரும்பவும் சொல்கிறேன், இன்னொரு கேஸ் போடட்டும். ஆனால் அதை நிராகரிக்க கூடிய துணிச்சல் இருக்கிறதே, அந்த நேர்மை அவரிடம் ( விஜயகாந்த்) இருக்கிறதே.< பேரம் அவர்கள் (தேமுதிக) பேசவில்லை. கொடுப்பதற்கு அவர்கள் (திமுக) முன் வந்தார்கள் என்று எனக்கு தெரியும். அந்த மாதிரியான ஆசாபாசங்களுக்கு அவர் (விஜயகாந்த்) இடம் கொடுக்கவில்லை. ஆகவே, இது திமுகவை தூக்கி பிடிக்க நினைக்கிறவர்களுடைய முயற்சி. நாங்கள் நாட்டு நலனில் அக்கறை உள்ளவர்கள், நாங்கள் யோக்கியர்கள். நாங்கள் நேர்மையானவர்கள்.ரொம்ப நல்லா தெரியுமே கொஞ்சம் "அந்த கடல்" பக்கம் போயி கேட்டு பாருங்க? உங்க நேர்மையை பற்றி காவியமே பாடுவாய்ங்க...உங்க பாவத்தை கழுவ எந்த கடல் நீரும் போதாது

நீதிபதி மகேந்திரபூபதி ! கிரானைட் தீர்ப்பு தந்த தங்க பூபதி சாதிப் பூபதியாம்

தமிழகத்தையே உலுக்கிய கிரானைட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி. ஆர். பழனிச்சாமியை இரண்டு வழக்கிலிருந்து விடுதலைச் செய்ததுடன், வழக்கு தொடர்ந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் மேலூர் மாவட்ட நீதிபதி மகேந்திரபூபதி.
இந்நிலையில் நீதிபதி மகேந்திரபூபதி, சாதி பார்த்து தீர்ப்பு வழங்குபவர் என  விடுதலைச்சிறுத்தைகள் துணைச்செயலாளர் வன்னியரசு குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அடிக்கடி நீதிமன்றத்துக்கு குடிபோதையில் வருவது, வழக்குகளை விசாரிக்கும்போது நீதிமன்றத்திலேயே குற்றம்சாட்டப்பட்டவரின் சாதி என்னவென்று கேட்பது, குற்றம் சாட்டப்பட்டவர் தலித்தாக இருந்தால் அவரை அங்கேயே அவதூறாக பேசுவது, தலித்துகளின் வழக்குகளில் அவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவது என மதுரை வட்டாரத்தை சேர்ந்தவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

புதுச்சேரி : திமுக - காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதி : கருத்து கணிப்பில்

புதுச்சேரி,ஏப்ரல் 02 (டி.என்.எஸ்) தற்போது நடைபெற உள்ள புதுவை சட்டப்பேரவை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பது உறுதி, என கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
புதுசேரியில் முன்னணி கட்சியாக உள்ள என்.ஆர்.காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. அதேபோல அதிமுக-வும் தனித்து போட்டியிட, திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதன் மூலம் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று இந்தியா டி.வி.யும் – சி வோட்டர்ஸ் அமைப்பும் கருத்துக் கணிப்பு நடத்தின. அதில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு 17 இடங்களில வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்களுக்கு கடிதம்


காமராஜர் உயரத்தை எட்டுவாரா ஜெ., 'தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் நாமே வெற்றி பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். எந்த தலைவரும் பாதி தொகுதிகளில் ஜெயித்தால் போதும் என, அறிவுறுத்தப் போவதில்லை. அன்புணியும், சீமானுமே அப்படித்தான் அறிவுறுத்துவார்கள். இருப்பினும், இந்த முறை, அ.தி.மு.க., தனித்து போட்டியிடுவதில் ஒரு முக்கியமான மைல்கல் விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது.
சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அ.தி.மு.க.,வும் கிட்டத்தட்ட அதே நிலையில், இன்று இருப்பதாக ஜெயலலிதா எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.அதனால் தான், முக்கிய கூட்டணி கட்சிகளை கழற்றிவிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்து உள்ளார்.   இவனுக அழுது அழுதே சாவப் போராய்ங்க

சனி கோவில் பெண்களை அனுமதிக்க மீண்டும் மறுப்பு


இந்தியாவின் மராட்டிய மாநிலத்திலுள்ள சனி கோவிலில் நுழைய முயன்ற பெண் செயற்பாட்டாளர்களை உள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தடுத்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை மீறி பெண்களுக்கு கோவிலினுள் அனுமதி மறுப்பு ஆண்கள் உள்ளே செல்ல அனுமதி இருக்கும் இந்துக் கோவில்கள் அனைத்திலும் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னற்றப்படுகிறதா என்பதை சோதிப்பதற்காகவே அவர்கள் அந்தக் கோவிலுக்குள் செல்ல முற்பட்டனர்.