திங்கள், 4 ஏப்ரல், 2016

அன்புமணி : தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை

தமிழக தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை என அன்புமணி குற்றம் சாட்டினார்.திருவண்ணாமலை வேங்கிகாலில் ‘உங்கள் ஊர்... உங்கள் அன்புமணி’ என்ற தலைப்பில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இதில் பாமக இளைஞர் அணி தலைவரும், பாமக முதல்வர் வேட்பாளருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.முன்னதாக, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. மீது நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர்கள் மீது  நேர்மையான நீதிபதிகளை கொண்டு நீதி விசாரணை நடத்துவோம்.தமிழக தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை.  இந்த ராஜேஷ் லக்கானியும் முன்பு இருந்த பிரவீன் குமாரும் ஜெயலலிதாவுக்கு உறவினர்களோ? அதாவது பார்பனர்களோ என்று கேட்கிறேன்? 
அதிமுக-வும், திமுக-வும் எங்களை பார்த்து பயப்படுகின்றன. அதனால் தான் அதிமுக-வில் லெட்டர்பேடு கட்சிகளுக்கும் சீட் கிடைக்கிறது.கருத்து கணிப்பை நாங்கள் ஏற்கமாட்டோம். பொதுமக்களும் ஏற்கமாட்டார்கள். அது கருத்து திணிப்புதான், நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம் என்றார்.வெப்துனியா.com

கருத்துகள் இல்லை: