புதன், 26 நவம்பர், 2014

பாகிஸ்தானிய நடிகை வீணா மாலிக்கிற்கு 26 ஆண்டுகள் சிறை ! இவரோடு கணவர் உட்பட4 பேருக்கும் இதே தண்டனை .


இஸ்லாமிய தீவிர வாதிகளுக்கு எதிரான இவரது பேட்டிகள் இவரது   உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, அதனால் இவர் தற்போது வெளிநாடுகளில் இருக்கிறார்  இஸ்லாமாபாத்: மதத்தை நிந்தித்ததாகக் கூறி நடிகை வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், ஜியோ டிவி உரிமையாளர் மிர் ஷகீலுர் ஹர்மான் உள்ளிட்ட 4 பேருக்கு பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை வீணா மாலிக் மற்றும் அவரது கணவர் பஷீர் கடந்த மே மாதம் ஜியோ டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் மதம் சார்ந்த பாடலை போட்டு மாலிக், பஷீர் போலியாக திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மதத்தை நிந்திப்பதாக உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத நிந்தனை வழக்கு: நடிகை வீணா மாலிக், கணவருக்கு 26 ஆண்டுகள் சிறை- பாக். கோர்ட் அதிரடி வழக்கை விசாரித்த தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் வீணா மாலிக், அவரது கணவர் பஷீர், பாகிஸ்தானின் மிகப்பெரிய மீடியா குழுமமான ஜியோ மற்றும் ஜாங் குழுமத்தின் தலைவர் மிர் ஷகீலுர் ரஹ்மான், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஷைஸ்தா வாஹிதி ஆகியோருக்கு 26 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

tamil.thehindu: இந்தியா என்றால் ஹிந்தி என்பது தவறு! இந்தியா பல்வேறு மொழிகளை கொண்ட...

நாட்டு நலனுக்காக உருவாக்கப்பட்ட மொழிக் கொள்கைக்கு இப்போது குழி தோண்டிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு மொழியிலும் உள்ள சிந்தனைகளை அந்தந்த மொழியின் வழியே படிப்பது அந்தச் சிந்தனைகளை அவற்றின் முழுப் பரிமாணத்தில் புரிந்துகொள்ள உதவும். ஆனால், பள்ளிப் படிப்பில் கிடைப்பது 10 ஆண்டுகளே. இந்தக் குறுகிய ஆண்டுகளில் எத்தனை மொழிகள் படிக்க வேண்டும் என்பது கல்வியில் மொழிக் கொள்கையின் மூலம் அரசு முடிவுசெய்ய வேண்டிய ஒன்று. அரசு நாட்டின் தேவையையும், அந்தத் தேவையை நிறைவேற்றக் குடிமக்கள் பெற வேண்டிய மொழித் திறனையும் முன்னிறுத்திக் கொள்கையை வகுக்கும்.
இப்படி 1961-ல் வகுக்கப்பட்டதுதான் மும்மொழிக் கொள்கை. மாநில முதலமைச்சர்கள் மாநாட்டில் சமரசக் கொள்கையாக இது ஒப்புக்கொள்ளப்பட்டது. அப்போது கல்விக் கொள்கைகளை வகுக்கும் பொறுப்பு மாநிலங்களிடம் இருந்தது. மும்மொழிக் கொள்கை நாடு முழுவதற்கும் பொருந்தும் நாட்டுக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லண்டன் இந்திய பாட்டாவுக்கு வயது 109 பாட்டிக்கு வயது 102. world's oldest couples

An Indian couple, both over 100 years old and said to be the world's oldest partners, has celebrated their joint birthdays this week in the UK.
Karam Chand reached 109 on the same day his wife turned 102. They marked the occasion with four generations of their family at their home in Bradford.
Karam, a retired mill worker, smokes one cigarette a day before his evening meal and drinks a tot of whisky or brandy three or four times a week.
இங்கிலாந்து நாட்டில் லண்டன் அருகே உள்ள பிராட்போர்டில் வசித்து வருபவர் கரம்சந்த். இந்தியரான இவருக்கு வயது 109. இவர் ஓய்வுபெற்ற மில் தொழிலாளி. இவரது மனைவிக்கு வயது 102. இவர்கள் இருவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிறந்த நாள் என்பதால், தங்களது பிறந்த நாளை 4 தலைமுறையினருடன் வீட்டில் உற்சாகமாக கொண்டாடினார்கள். இவர்கள் இளம்வயதில் இந்தியாவில் இருந்தபோது 1925–ம் ஆண்டு டிசம்பர் 11–ந் தேதி திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்து 89 வருடங்கள் ஆகிறது. இவர்களது திருமணம் நடந்த ஆண்டில் தான் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் மார்கரெட் தாட்சர் பிறந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 109 வயதானாலும் கரம்சந்த் இன்னும் தனது வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார். தினமும் மாலை உணவுக்கு முன்னர் ஒரு சிகரெட் புகைக்கிறார். வாரத்தில் 3 அல்லது 4 முறை சிறிதளவு விஸ்கி அல்லது பிராந்தி குடிக்கிறார். இவர்கள் தான் உலகிலேயே வயதான தம்பதிகளாக கருதப்படுகிறார்கள்.dailythanthi.com

உலக மயமாக்கலை வரவேற்கிறோம்.எனவே உலகம் சம்ஸ்கிருத மயமாக்கலை வரவேற்க வேண்டும்?

முதலீட்டாளர்கள் மாநாடு: கலைஞர் கேள்வி
திமுக தலைவர் கலைஞர் செவ்வாய்க்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்
கேள்வி :- கட்டாய சமஸ்கிருதம், இந்துக்கள் நாடு என்ற பேச்சுகள் நாட்டில் எதிரொலிக்கத் தொடங்கி விட்டனவே?
கலைஞர் :- உலக இந்து மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்திருந்த அயோத்தியா இயக்கத்தின் தலைவரும், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவருமான அசோக் சிங்கால் “மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வந்த ஜெர்மன் மொழியை நீக்கி, சமஸ்கிருத மொழியைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு மனிதவள மேம்பாட்டுத் துறையின் நடவடிக்கை சரியானதுதான். அந்நிய மொழி (ஆங்கிலம்) ஒன்று போதும். நம் நாட்டின் மொழி சமஸ்கிருதம் ஆகும். சமஸ்கிருதத்தை நீக்க வேண்டும் என்று விரும்பினால் இந்த நாட்டையே நீக்குவதற்கு ஒப்பாகும்” என்றும்; “800 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா, இந்துக்களின் கைகளில் வந்துள்ளது” என்றும் பேசியிருக்கிறார். அதே மாநாட்டில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “இந்த நாடு இந்துக்களின் நாடு. இந்தியாவில் வாழ்பவர்கள் எந்த மதத்தவரானாலும் அவர்கள் இந்துக்களே” என்று பேசியிருக்கிறார்.

Admk யின் 37+11 எம்பிக்களும் நிருபர்களோடு அன்னம் தண்ணி கூடாது! ம.மு.ஜெயலலிதா கட்டளை

Poompattinaththaan - KaveriPoompattinam,
இந்த 37+11 மங்குனிகளும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிழியும் கிழிக்கப்போவதில்லை. அதுவும் டில்லி குளிரில் தினமும் பாராளுமன்ற செயல்பாடுகளை வேடிக்கை பார்த்துவிட்டு, தமிழ்நாடு இல்ல அறையில் தங்கி குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டு, ஒரு மாத காலத்தையும் வீணடித்துவிட்டு ஹாயாக விமானத்தில் தமிழ்நாடு வந்து போயஸ் தோட்டத்தில் அங்கப்பிரதட்சணம் செய்துவிட்டு வீட்டுக்குத் திரும்பி விடுவர். இதைத் தவிர இந்த மங்குனி எம்பிக்களுக்கு என்ன தெரியும்? இவர்களைத் தேர்ந்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களை(?) என்னவென்று சொல்வது? இந்த லட்சணத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் இவர்களது கட்சியான அதிமுகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று தற்போதைய கருத்துக்கணிப்பு ஒன்று பிரகடனம் செய்கிறது. தமிழன் மாயையில் மாண்டாலும் மாண்டுபோவானேதவிர மீண்டுவர ஒருபோதும் முயலமாட்டான். இதுகாறும் தெரிவிப்பது என்னவென்றால், 64 கோடி(இப்போது 3000 கோடி மதிப்பு) ஊழல் செய்வதெல்லாம் ஒரு பொருட்டல்ல... என்று தமக்குத்தாமே கருதிக்கொண்டு, தன் தலையில் தானே மண்ணை (அதுவும் கொள்ளைபோகும் ஆற்றுப்படுகை மண்) வாரித் தூற்றிக்கொண்டு இந்த செயலற்ற அதிமுக அரசாங்கத்தினால் மாண்டு வருகிறான். அரசாங்கமோ பால் விலை, இல்லாத மின்சாரத்திற்கு அதிகக் கட்டணம், மீனவர் பிரச்சினை, நீதிமன்றக் கண்டனங்கள் என எதைப்பற்றியும் சிந்திக்காமல், டாஸ்மாக்கே கருவூலம், போயஸ் கார்டனே புத்தபூமி என மூழ்கிக்கிடக்கிறது. ம்ம்ஹூம் இன்னும் 10 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு திருந்தாது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. ஒரு கட்டத்தில் அனைத்து பிரச்சினைகளும் தீவிரமடைந்து உச்சத்துக்கு வரும் சமயம் தமிழ்நாடு தலைகீழ் மாநிலமாகத் தொங்கும் என்பதும் புலப்படுகிறது. அதிமுகவுக்கு சொம்படிக்கும் புண்ணியவான்களுக்கும், அந்தக்கட்சிக்கு வாக்களிக்கும் மாக்களுக்கும் இது ஒரு நாளும் விளங்காது. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வரும்போதுதான் விளங்கும். அப்போது வலி முத்திப்போயிருக்கும் என்பதே நிதர்சனம். 

நிலக்கரி ! மன்மோகன்சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? சிபிஐக்கு கோர்ட் கேள்வி

நிலக்கரி ஊழல் தொடர்பாக முன்னாள் நிலக்கரித் துறை மந்திரி மன்மோகன் சிங்கிடம் ஏன் விசாரிக்கவில்லை? என்று சி.பி.ஐ.யிடம் சிறப்பு கோர்ட்டு சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளது.2005–ம் ஆண்டு தொழில் அதிபர் குமாரமங்கலம் பிர்லாவின் ஹிந்தால்கோ நிறுவனத்துக்கு மத்திய அரசு 2 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து குமாரமங்கலம் பிர்லா மீதும், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பி.சி.பாரக் மற்றும் சில அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. வழக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 21–ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றச்சாட்டுக்கான போதிய ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்து வைக்கும்படி கோர்ட்டை சி.பி.ஐ. கேட்டுக்கொண்டது.

டில்லி-சென்னைக்கு புல்லட்ரயில் 300 கி.மீ. வேகம், 6 மணி நேரத்தில்....Delhi

பீஜிங்:டில்லி-சென்னை இடையேயான புல்லட் ரயில் திட்ட பணிகளுக்காக இந்திய உயர்மட்டக்குழு சீனா சென்றிருக்கிறது.கடந்த செப்டம்பர் மாதம் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி,டில்லி-சென்னை இடையே புல்லட் ரெயில் இயக்குவது குறித்த திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிலையில், டில்லி-சென்னை இடையே புல்லட் ரயில் திட்டம் இயக்குவது திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்துக்கான, திட்ட செயலாக்கம் குறித்த இலவச பயிற்சிக்கு சீனா ஒப்புக்கொண்டது. இந்த ஒப்பந்தப்படி இந்திய ரெயில்வே அதிகாரிகள் 100 பேருக்கு பயிற்சி, தற்போதைய ரெயில் நிலையங்களை மறுமுன்னேற்றம் செய்தல், ரெயில்வே பல்கலைக்கழகம் நிறுவுதல் போன்றவற்றுக்கு சீனா உதவி செய்கிறது.

செவ்வாய், 25 நவம்பர், 2014

ஏலத்துக்கு வந்தன பி.ஆர்.பி. கிரானைட்ஸ் சொத்துகள் 1 வங்கியில் ரூ.149 கோடி கடன் பாக்கி!

பி.ஆர்.பழனிச்சாமி.
பி.ஆர்.பழனிச்சாமி.
மதுரை பிஆர்பி கிரானைட்ஸ், பிஆர்பி எக்ஸ்போர்ட்ஸ் நிறு வனங்கள் மற்றும் அவற்றின் பங்குதாரர்கள் இந்தியன் வங்கி யில் ரூ.149 கோடி கடன் நிலுவை வைத்துள்ளதால் அவர்களின் நிலத்தை ஏலம் விட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர், கீழவளவு, மேலவளவு, விக்கிரமங்கலம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதித்த அளவைவிட கூடுத லாகவும், சில இடங்களில் அனு மதியே இல்லாமலும் கிரானைட் கற்களை வெட்டியதாக 2011-ம் ஆண்டில் புகார் எழுந்தது. அப் போதைய மதுரை ஆட்சியர் உ.சகாயம் விசாரணை நடத்தி, முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்ட தாக அறிக்கை தாக்கல் செய்தார்.

ஆகம விதிகளின்படி தீண்டாமை என்பது ஒரு மத உரிமை”? உச்சநீதி மன்றம் தீர்ப்பு?

மதச்சார்பின்மை வரையறுக்கப்படாதது இருக்கட்டும். மதம் என்றால் என்னவென்று வரையறுப்பது மத உரிமையைத் தீர்மானிப்பதற்கு அவசியமாக இருந்தது. ஏனென்றால் ஆணாதிக்கத்திலிருந்து தொடங்கி சாதி ஆதிக்கம், நிலவுடைமை ஆதிக்கம் வரையிலான அனைத்து வகை ஆதிக்கங்களுமே மத ஒழுக்கமாகவும் மத சம்பிரதாயமாகவும் மதச்சட்டமாவும் பின்னர் அதுவே அரசின் சட்டமாகவும் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளன. இந்த ஆதிக்க உணர்வுகளையும் மத உணர்வுகள் என்று தான் மதவாதிகள் கூறி வருகின்றனர். இதனடிப்படையில்தான் மதத் தனிநபர் சட்டங்களையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.
நவீன “இந்தியக் குடியரசு” அமையும் சந்தர்ப்பத்தில் இதற்கு முடிவு கட்ட விரும்பிய அம்பேத்கர், “சாராம்சத்தில் மதத்தன்மை மட்டும் கொண்ட சில சடங்குகள்… ஆகியவற்றுடன் மதம் குறித்த நமது வரையறுப்பை நாம் நிறுத்திக் கொள்ள முயல வேண்டும்” என்று கூறினார்.

சகாயம் மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் தற்போது விசாரித்தால் போதும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை நடத்துவதற்கு சகாயம் கேட்கும் அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கனிம வளம் குறித்து விசாரணை நடத்த வேண்டுமா, மதுரையில் இருந்த கிரானைட் முறைகேடு பற்றி மட்டுமே விசாரிக்க வேண்டுமா என்று தனக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று விசாரணை கமிஷன் அதிகாரியான சகாயம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவிற்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

‘மானே தேனே..... கவர்ச்சி நாயகி சுபஸ்ரீகங்குலி ஹீரோயினாக நடிக்கிறார்

சென்னை: ‘மானே தேனே பேயே‘ படம் மூலம் பெங்காலி மொழி கவர்ச்சி ஹீரோயின் சுபஸ்ரீ தமிழில் அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனர் கிருஷ்ணா கூறியது: ஏற்கனவே நான் இயக்கிய ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைகளாக இருந்ததுபோல் தற்போது இயக்கும் இப்படமும் முற்றிலும் வித்தியாசமான கதையாக உருவாகி இருக்கிறது.

விஷால் : ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்த் நீக்க வேண்டும்!

கோவை,நவ.24 (டி.என்.எஸ்) என்னை தவறாக பேசிய ராதாரவி மற்றும் காளை இருவரையும் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று விஷால் கூறியுள்ளார்.பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.>இதில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.நான் என்ன தவறு செய்தேன்? என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன்.

BJP Ex மேயர் கீதா மாலன் : கவுரவ கொலைகளை செய்யலாம்? காதல் திருமணங்களை தடுக்க......

deputy mayor of Junagadh city Geeta Malan suggested "honour killings" of Koli community girls, who elope with boys from another community.அகமதாபாத்: குஜராத்தில் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பாஜ மேயர் பேசுகையில், காதல் திருமணங்களை தடுக்க கவுரவ கொலை செய்ய வேண்டும் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தில் முதல்வராக இருந்த நரேந்திரமோடி லோக்சபாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அங்கு பாஜவின் மூத்த தலைவரும், மூத்த எம்எல்ஏவுமான ஆனந்தி பென் படேல் முதல்வராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் குஜராத் அமைச்சரவையில் போதிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என கோலி சமூகத்தினர் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இனியெல்லாம் இப்படி வாந்தி வாந்தியாதான் வரும்? 

டிராபிக் ராமசாமியின் அதிமுகவுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!


அ.தி.மு.க.வுக்கு எதிராக டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் கைதானதைத் தொடர்ந்து அ.தி.மு.க. தொண்டர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் பொதுஇடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணாக்களுக்கு சட்டத்துக்கு புறம்பாக முழு அளவில் காவல் துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இவர்கள் மீது எந்த வழக்கையும் தமிழக காவல் துறை பதிவு செய்யவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மதிக்காமல் அ.தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்களின் மீது நடவடிக்கை எடுக்காத தலைமை தேர்தல் ஆணையம், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு போலீஸ் ஐ.ஜி ஆகியோரை தங்கள் கடமையில் இருந்து தவறிய குற்றத்தை இழைத்தவர்களாக அறிவிக்க வேண்டும். மேலும் இது போன்று சட்டவிரோதமான ஆர்ப்பாட்டங்களிலும், தர்ணாக்களிலும் ஈடுபடும் கட்சிகளின் மீது தலைமை தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் வழிகாட்டும் நெறிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும். அய்யா  அவாள் நீதித்துறையின் நம்மவா! திமுகவுக்கு எதிரா வழக்கு போட்டு பாருங்க நீதிபதிங்க  எல்லாம் ஓவர்டைம் வேலை பார்பாய்ங்க ! 

முல்லைபெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம்: கண்காணிப்புக்குழுத் தலைவர்!

கூடலூர்:''பேபி அணையை பலப்படுத்தியபின், பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கலாம்'' என கண்காணிப்புக் குழுத் தலைவர் நாதன் கூறினார். பெரியாறு அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு உள்ளதாகக் கூறியதன் அடிப்படையில், தமிழக, கேரள உறுப்பினர்களைக் கொண்ட கண்காணிப்புக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. ஆய்வுக்குப்பின் குழுத் தலைவர் நாதன் நிருபர்களிடம் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணையில் இனிமேல் எப்போது வேண்டுமானாலும் 142 அடி நீர் தேக்கலாம். இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணையை ஒட்டியுள்ள பேபி அணையில் நீர்க்கசிவு இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது.இருந்த போதிலும் கேரளா கூறும் புகாரைத் தொடர்ந்து பேபி அணையைப் பலப்படுத்தியபின் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் எவ்வித பிரச்னையும் இல்லை. அணைப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படையினரை நியமிப்பது குறித்து எங்கள் குழு தலையிடாது. மத்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து முடிவெடுத்து நியமிக்கலாம் என்றார். இந்தியாவிலேயே கேரளாவில் தான் படித்தவர்கள் அதிகம் என்று சொல்லறாங்க. அங்கும் இவர்களின் அரசியல் செல்லுபடியாகிறது.அணு உலையை தமிழகத்தில் வைத்து, அதில் மின்சாரம் உங்கள் மாநிலத்துக்கு பெறும் போது மக்களின் பாதுகாப்பு கேள்விகுரியாகாதா.....

மோடியின் மனைவி யசோதா: போலீசாரால் என் உயிருக்கு ஆபத்து? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் மோடியின் வாழ்க்கை அம்பலம்?

மெக்சனா:'எனக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்...? எந்த அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது?' என, பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், தகவல் உரிமை சட்டம் மூலம் விளக்கம் கேட்டுள்ளார். அதேநேரத்தில், 'முன்னாள் பிரதமர் இந்திராவை, அவரின் பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்றது போல, எனக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீசாரால், என் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ என அஞ்சுகிறேன்' என்றும், அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென். ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது தன் சகோதரர் அசோக் மோடியுடன், மெக்சனா மாவட்டம், உஞ்ஜா நகரில் வசித்து வருகிறார். சமீபத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்த யசோதா பென், தற்போது, குஜராத் மெக்சனா மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் மொதாலியாவிடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மோடியின் இருண்ட கால லீலைகள் கௌதம் அதானிக்கும் தெரியும், யசோதா பெஹன் க்கும் தெரியும்.. ஒருத்தர் பயமுறுத்தி சம்பாதிக்க பலமாக ஒட்டிக்கிட்டார்.. மானமுள்ள யசோதா பெஹன் அவரை வெட்டி விட்டார்..

திங்கள், 24 நவம்பர், 2014

ஸ்மிருதி ராணி ஜனாதிபதி ஆவார்! ஜோதிடர் கணிப்பு ! பில்லி சூனியம் யாகம் போன்றவைதான் இனி அரசியல்??/

ஒரு நாள் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்வீர்கள் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் கூறியுள்ளார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு ஜோதிடர். ஜோதிடரின் இந்த கணிப்பு பாஜக தலைவர்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. ஸ்மிருதி ராணி சிறுவயதில் இருந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இருந்தவர். 12ம் வகுப்பில் படிப்பை பாதியில் நிறுத்திக்கொண்டு, 2000ம் ஆண்டு துவக்கத்தில் விளம்பர மாடலாக களமிறங்கினார். தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த அவர், 2003ல் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். 2004ல் நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் போட்டியிட்டபோது, தான் ஒரு பிஏ பட்டதாரி என்று கூறிய அவர், 2014ல் நடந்த நாடமன்றத் தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்துப் போட்டியிட்டபோது, பி.காம். படித்திருந்ததாக விண்ணப்பத்தில் தெரிவித்திருந்ததால் சர்ச்சையில் சிக்கினார்.தேர்தல் சமயத்தில் அவர் ராஜஸ்தான் மாநிலம், பில்வாராவில் உள்ள கரோய் என்ற கிராமத்திற்கு சென்று, அங்கு பண்டிட் நாதுலால் வியாஸ் என்ற ஜோதிடரை சந்தித்து வெற்றி வாய்ப்பு குறித்து ஜாதகம் பார்த்துள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், மிக பிரபலமான பதவி உங்களுக்கு காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ஆனால், அமேதி தொகுதியில் ராகுல்காந்தியிடம் தோல்வி அடைந்ததால், ஜோதிடர் கணிப்பு பொய்யானது என்று கருதிய நேரத்தில், ஸ்மிருதி ராணிக்கு மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பதவியை அளித்து ஆச்சரித்தில் ஆழ்த்தினார் பிரதமர்

குஷ்பு : தற்போது எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை!

எந்தக் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்.தமிழக பாஜக நடிகர் ரஜினிக்கு வலைவீசிய நிலையில், நடிகை குஷ்பு பாஜகவில் இணைவார் என்று இணையதளங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின.இந்தநிலையில் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள குஷ்பு, தனக்கு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை பற்றி வெளியாகும் வதந்திகளையும், அடிப்படை ஆதாரமற்ற தகவல்களையும் யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்

அந்நிய முதலீடுகளால் இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகே “மேக் இன் இந்தியா”

மேக் இன் இந்தியாபாசிஸ்டுகள் அடிமுட்டாள்களாகவும், அண்டப்புளுகர்களாகவும் கோமாளிகளாகவும்தான் இருப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துக்காட்டி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அந்நிய முதலீடுகள் பெருகினால், நாட்டில் தொழில் வளர்ச்சியும் வேலைவாப்பும் பெருகி இந்தியா வல்லரசாகிவிடும் என்ற அண்டப்புளுகையே, மீண்டும் “மேக் இன் இந்தியா” என்ற பெயரில் பாலிஷ் போட்டு அவர் கடைவிரிக்கிறார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தனியார்மய – உலகமயக் கொள்கையை காங்கிரசு கூட்டணியும் பா.ஜ.க. கூட்டணியும் தீவிரமாகச் செயல்படுத்தி தோல்வியடைந்துள்ள நிலையில், அடிமுட்டாள்தனமாக மீண்டும் அதே பாதையை மூர்க்கமாகச் செயல்படுத்த கிளம்பிவிட்டார் மோடி. அந்நிய முதலீட்டின் மகிமை : நோக்கியா நிறுவனம் மூடப்பட்டதை எதிர்த்து வேலை இழந்த அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்.

குஷ்பூ பாஜகவில்? ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் தோற்கடிக்க சபதம்?

ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும்... - குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக! 
சென்னை: முக ஸ்டாலின் எந்தத் தொகுதியில் நின்றாலும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்ற குஷ்புவின் 'லட்சியத்துக்கு' தோள்கொடுக்க தயாராகிறது தமிழக பாஜக என்ற செய்தி தமிழக அரசியலில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. திமுகவில் குஷ்பு இணைந்தது, அங்கு அவருக்குக் கிளம்பிய எதிர்ப்புகள், சொந்தக் கட்சியினரே குஷ்பு மீது செருப்பு வீசியது, திமுக தலைவருடன் அவரை இணைத்துப் பரப்பப்பட்ட அநாகரீக அவதூறுகள்... இவையெல்லாம் 'குஷ்பு அரசியலில்' மறக்க முடியாத நிகழ்வுகள்குறிப்பாக தன்னை திமுகவிலிருந்து விரட்ட ஸ்டாலின் தரப்பும் அவரது குடும்பத்தினரும் செய்தவற்றை அத்தனை சுலபத்தில் மறக்கமுடியாமல் தவிக்கிறாராம் குஷ்பு. திமுகவிலிருந்து விலகி, இப்போதைக்கு அரசியல் பற்றி எதுவும் பேசாமலிருந்தாலும், குஷ்புவுக்கு தமிழகக் கட்சிகளிடம் ஏக வரவேற்பு உள்ளது. இப்போதும் கூட  குஷ்புவிடம் சமாதானம் பேசலாம்.  கலைஞர் மீது அன்பும் பகுத்தறிவு சுயமரியாதை கொள்கையும் கொண்ட  ஒரு  பெண்ணியவாதிதான் குஷ்பு !அவருக்கு பெண்களின் ஆதரவு அதிகமாக உண்டு ,ஸ்டாலின் மனைவிக்கு இது எங்கே புரிய போகிறது? குஷ்புவை பார்த்து பொறாமை கொண்டவர்கள் செய்த சூழ்ச்சியில் ஸ்டாலின் அகப்பட்டு கொண்டார்,என்ன செய்வது ஜால்ரா போதை ஏறிவிட்டதால் ஸ்டாலினுக்கு  யாரும் நல்லது சொல்ல முடியாமல் இருக்கிறது?

நடிகை ஜீவிதாவுக்கு இரண்டு வருட சிறை! காசோலை திரும்பிய வழக்கு


நடிகை ஜீவிதாவுக்கு 2 வருட சிறை!நடிகை ஜீவிதா ராஜசேகருக்கு இரண்டு வருட சிறை மற்றும் 25 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது ஆந்திர கோர்ட்.   காசோலை திரும்பிய வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: விளையாட்டு துப்பாக்கியை காட்டிய சிறுவனை போலீஸ் சுட்டு கொலை!


அமெரிக்காவின் கிளீவ்லண்ட் நகரில், விளையாட்டுத் திடல் ஒன்றில் கையில் துப்பாக்கி வைத்திருந்த 12 வயது கறுப்பினச் சிறுவன் ஒருவனை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவத்தில், அச்சிறுவன் கையில் ஏந்தியிருந்தது ஒரு விளையாட்டு துப்பாக்கி எனத் தெரியவந்துள்ளது. பொலிசால் சுடப்பட்ட டாமிர் ரைஸ் பின்னர் மருத்துவமனையில் உயிர்விட்டார் >கையை உயர்த்தி நிற்கும்படி பொலிசார் சொன்ன வார்த்தைகளை அச்சிறுவன் கேட்டு நடக்காமல் போகவே பொலிஸ்காரர் ஒருவர் அச்சிறுவன் மீது இரண்டு தடவை சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட 14 ரயில்வே திட்டங்கள் ரத்து : ரயில்வே அமைச்சகம்

: தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்புள்ள 14 திட்டங்களை கைவிட ரயில்வே அமைச்சகங்கள் முடிவு செய்துள்ளது. 1992-1993 முதல் 2012 ஆண்டு வரை அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களில் 160 திட்டங்களின் பணிகள் முடிவடியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் பெங்களுருவில் இருந்து தமிழகத்தில் சத்தியமங்கலம் வரை 260-கிமீ தூரத்திற்கு சுமார் ரூ. 14,000 கோடி மதிப்பில் ரயில் பாதை அமைத்தல் உட்பட தென் இந்தியாவில் மட்டும் 39 திட்டங்களுக்கான பணிகள் சிறிது கூட நடைபெறவில்லை. இதையடுத்து பணிகள் தொடங்காத ரயில்வேக்கு இழப்பை ஏற்படுத்தும் 160 திட்டங்களையும் கைவிட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட ரூ. 19,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் உள்பட தென் இந்தியாவில் மட்டும் 47 திட்டங்கள் கைவிடப்பட்டஉள்ளன. இவற்றில் 9 திட்டங்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மம்தா பேனர்ஜி ரயிவே அமைச்சராக அறிவிக்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் dinakaran.com

பொங்கி எழு மனோகரா ! ஏன் எதுக்காக என்று யாருக்கு தெரியும்?

ரமேஷ் ரங்கசாமி இயக்கும் படம் ‘பொங்கி எழு மனோகரா'. இர்பான், அர்ச்சனா, அருந்ததி நாயர் நடிக்கின்றனர். எஸ்.ஏ.பரந்தாமன் தயாரிக்கிறார். இப்படம்பற்றி இயக்குனர் கூறியது: பொங்கி எழு மனோகரா என்பது பிரபலமான வசனம். அந்த வசனம் என் வாழ்க்கையில் ஒரு பாடமாக அமைந்தது. நான் கஷ்டப்பட்டபோது உடன்பிறந்தவரிடம் உதவி கேட்டேன். செய்ய மறுத்தனர். அப்போது என் மனதில் பொங்கி எழு மனோகரா என்ற வசனம்தான் தோன்றியது. அப்போதுதான் இந்த கதை உருவானது. அந்த வசனத்தை பட தலைப்பாக்கினேன். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து நான் அடி வாங்கி இருக்கிறேன். என்னை உருட்டிவிட்டு அடித்திருக்கிறார்கள்.

முதலமைச்சர் பன்னீர்செல்வம்? பிச்சை எடுக்கினும் பதவி நன்றே! ஒரு அடிமையின் Art of survival?

திமுக தலைவர் கலைஞர் எழுதியுள்ள கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை: கேள்வி:- நீங்கள் சட்டசபைக்கு வருவ தில்லை என்றும் பேரவையை எப்போது கூட்டுவது என அரசுக்குத் தெரியும் என்றும் ‘பினாமி’ முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீண்டும் பிதற்றி யிருக்கிறாரே?கலைஞர் :- தமிழக மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகள் பல எழுந்துள்ளன; அவசர முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பிரச்சினை களைப் பற்றி விவாதிப்பதற்காகச் சட்டப்பேரவை யைக் கூட்ட வேண்டுமென்று நான் மட்டுமல்ல, பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “சட்டப்பேரவையைக் கூட்டுக” என்றால் பன்னீர்செல்வம் பெரிதும் பதற்றமடைகிறார். ஒருவேளை சட்டப் பேரவையைக் கூட்டினால், தான் எங்கே அமர்வது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமர்ந்திருந்த இடத்திலேயே அமர முடியுமா? என்றும்; தலைமைச் செயலகத்தில் இன்னும் முதலமைச்சர் அறைக்கே செல்ல முடியாமல், முதலமைச்சரின் ஆசனத்தில் அமர முடியா மல், ஏன்? முன்னாள் முதலமைச்சரின் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலேகூட தன்னுடைய காரை நிறுத்த முடியாமல், முதலமைச்சர் என்றே
அழைத்துக் கொள்ள முடியாத வெட்கக் கேடான நிலை ஏற்பட்டிருக்கிறதே என்றும்; இருதலைக் கொள்ளி எறும்பாகத் தத்தளித்துக் கொண்டிருக்கும் தன்னைப் பார்த்து, இப்படியெல்லாம் எதிர்க் கட்சித் தலைவர்கள் தன்னை சங்கடப் படுத்து கிறார்களே என்ற பதற்றம் பன்னீர் செல்வத்தைப் பற்றிக் கொண்டு பாடாய்ப் படுத்துகிறது.