திமுக
கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, தொகுதிப்பங்கீட்டு
பேச்சுவார்த்தையின் போது சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு
செய்யப்பட்டது. முதலில் ஐந்து தொகுதிகள் கேட்டு கடைசியில் மூன்று
தொகுதிகளில் பிடிவாதமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இது
அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பேச்சுவார்த்தையின்
போது திருமாவளவன் திடீரென்று எழுந்து போனதாக செய்திகள் வந்தனர். பின்னர்
சமாதானமாகி, ஒரு தொகுதிக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்
திருமாவளவன்.ஒரே
ஒரு தொகுதியை ஒதுக்கிய திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து, தொகுதிப்பங்கீடு
பேச்சுவார்த்தை நடந்தபோதே, அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தொண்டர்
தீக்குளிக்க முயற்சித்தார். அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார்
திருமாவளவன்.இதையடுத்து
நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும் கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு கண்டனம்
தெரிவித்து உருவபொம்மை எரித்தனர் வி.சி.கவினர். திமுக
கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வி.சி.க. அமைப்பாளர் பாவாணன்
உள்பட வி.சி.கவினர் வலியுறுத்தி வந்தனர். இன்று இது குறித்து முடிவெடுக்க
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.இந்நிலையில்,
’’திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி ஒதுக்கீட்டை மு.க.ஸ்டாலின் உறுதி செய்தார்’’ என்று வி.சி.க.
பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.nakkheeran.in
சனி, 8 மார்ச், 2014
ஜெ.யின் கூட்டணியில் மமதா, நவீன், நிதிஷ்,ஜெகன்: இடதுசாரிகள் வெளியேறிய பின்னணி காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி
சென்னை: லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி ஆரம்பித்த வேகத்திலேயே காணாமல்
போய்விட்ட நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, புதியதாக பெடரல் கூட்டணி
ஒன்றிர்க்கு அச்சாரம் போடுவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே இடதுசாரிகள்
கழற்றி விடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறிய திரிணாமுல் காங்கிரசின்
தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ‘பெடரல் முன்னணி' என்ற
பெயரில் தேசிய அளவில் 3வது அணி அமைக்க முயற்சி செய்தார். காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்றாக பெடரல் முன்னணி அமைப்பது தொடர்பாக மமதா
பேஸ்புக் மூலம் தகவலும் வெளியிட்டார். இந்த கூட்டணியில் இணைவது தொடர்பாக
பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடமும்
அவர் கடந்த ஆண்டே பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த பேச்சு அத்துடன்
நின்றுவிட்டது.
தற்போது அதே பெடரல் கூட்டணி கோஷத்தை முன்வைத்து நிதிஷ் குமார்,
நவீன்பட்நாயக், ஜெகன், மமதா ஆகியோரை ஜெயலலிதா இணைக்கப் போவதாக தகவல்கள்
239 பயணிகளுடன் மலேசிய விமானம் திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளது ! Malaysia Loses Contact With Plane Carrying 239
கோலாலம்பூர்: மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு சென்று கொண்டிருந்த விமானம் மாயமானது.
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டு்ம். விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது. மேலு ம் பொதுமக்கள் 60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். dinamalar.com
மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில்சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் 4.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டு்ம். விமானம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.
தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதால் பயணிகளின் நிலை குறித்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விமானத்தை தேடும்பணியி்ல் சர்வதேச விமான ஆணையமும் ஈடுபட்டு்ள்ளது. மேலு ம் பொதுமக்கள் 60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். dinamalar.com
தமிழக கம்யுனிஸ்டுகள் நடிக்கும் "வருத்தப்படாத வயோதிபர் சங்கம்" திரைப்பட ஆரம்ப விழா !
இப்பதான் அம்மா கூரூப் மூத்திர சந்துல போட்டு சாத்துனாங்க. அந்த வலி போறதுக்குள்ள அய்யா கூரூப்பு ஆய் போற சந்துல அடிக்கிற கதை வேணும்னு கேட்டா எப்படி, விடுங்க சார்.
ஓவியம் : முகிலன் ஒரு வழியாக போயஸ் தோட்டத்திலிருந்து மானமிகு போலிக் கம்யூனிஸ்டுகள் விரட்டியடிக்கப்பட்டார்கள். வழக்கமாக இத்தகைய அவமானத்திற்கு ‘கொள்கை’ விளக்கம் அளித்து தங்களது தத்துவப் புலமையை காட்டும் ‘தோழர்கள்’ இந்த முறை அதையும் செய்ய முடியாத துக்கத்திலும் கோட்பாட்டு வறட்சியிலும் உறைந்து கிடக்கின்றனர். தினமணி செய்தியாளருக்கு ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் வலதின் தாபா அளித்த பதில்களில் இருக்கும் துக்கம், படிக்கும் எவருக்கும் சிரிப்பை கிளப்பும் வகையில் ஆர்ப்பரிக்கிறது.
இந்த விசயத்தில் தாபாவா, ராமகிருஷ்ணனா என்ற வேறுபாடு இல்லை என்பதால் எதற்கு இவர்கள் இரு பிரிவாய் கட்சி நடத்தி நமது நேரத்தையும் கொல்லுகிறார்கள்? ஒன்றாய் இருந்தால் ஒரு விமரிசனம் எழுதிவிட்டு மற்ற வேலைகளை பார்க்கலாம். தற்போது வேறு வழியில்லை என்பதால் நேற்று தாபாவிற்கு கொடுத்த அதே முக்கியத்துவத்தை இன்றைய ஒருவரிச் செய்திகளில் ஜி.ராமகிருஷ்ணனுக்க்கும் (கொசுறாய் தாபாவிற்கும்) கொடுக்கிறோம். செய்தி தினமணியிலிருந்து எடுக்கப்பட்டது – நன்றி.
பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக ஊக்கம் அளித்தது திமுகவே !
திமுக ஆட்சி காலத்தில் மகத்தான பல சட்டங்களையும், திட்டங்களையும்
நிறைவேற்றி நடைமுறைப்படுத்தியதால்தான் தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றம்
கண்டதாக, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி அவர் இன்று வெளியிட்ட செய்தி:
"மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு வழிவகுக்கும் "உலக மகளிர் நாள் விழா" 8-3-2014 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த
ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை
முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம்
ஆண்டின் மார்ச் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, "உலக மகளிர் நாள்" என
ஆண்டுதோறும் உலகெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த
விழிப்புணர்வை வளர்த்திடப் பெரிதும் பயன்படுகிறது.
நடுக்கடலில் பாம்பன் மீனவர்கள் மோதல்: நாட்டுப்படகை கவிழ்க்க முயற்சி 6 மீனவர்கள் உயிர் தப்பினர்
ராமேசுவரம்
நடுக்கடலில் மீனவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் நாட்டுப்படகினை
கவிழ்க்க நடந்த முயற்சியில் அதிர்ஷ்டவசமாக 6 மீனவர்கள் உயிர் தப்பினர்.கவிழ்க்க முயற்சி
பாம்பன் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு மெரில்டன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் பால முருகன், குமார், பாலா, பிரான்சிஸ், நாகராஜ் உள்பட 6 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர் கள் தென் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த னர். பின்னர் நடுக்கடலிலேயே நங்கூரமிட்டு வலைகளில் இருந்து மீன்களை பிரித்தெ டுக்கும் பணியில் ஈடுபட்ட னர்.
ஜெயலலிதா - மதுரை ஆதீனம் சந்திப்பு (
மதுரை ஆதீனம், இன்று மாலை முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ரொம்ப விசேஷங்க அப்படியே நித்தியையும் கூட்டியந்துருங்க !அல்லாரும் அம்மாதான் பிரதமர்ன்னு ஆயிரத்து எட்டு தடவை உச்சாடனம் பன்னுகோ.அம்மா பேர்ல ஒரு கோவில் கட்டப்போறேன்னு சும்மாவேனும் உல்ட்டா விட்டீங்கன்ன அடுத்த பன்னீரு நீங்கதானுங்கோ
வீரப்ப மொய்லி.: காங்கிரஸ் - தி.மு.க., இடையே நல்ல புரிந்துணர்வு இருந்து வந்துள்ளது
காங்கிரஸ் மூத்த தலைவர்களில், முக்கியமானவர், வீரப்ப மொய்லி. மத்திய
அமைச்சரவையில், முக்கியத்துவம் வாய்ந்த, பெட்ரோலிய துறையை கவனித்து வரும்
இவர், காங்கிரஸ் மேலிடத்திற்கு மிகவும் நம்பகமானவர். தமிழக காங்கிரசின்
மேலிட பொறுப்பாளராக பல ஆண்டுகள் பதவி வகித்த இவர், டில்லியில், 'தினமலர்'
நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
வரும் லோக்சபா தேர்தலில்,தமிழகத்தில் எந்த கட்சியுடன், காங்., கூட்டணி அமைக்கும்?
தமிழகத்தில், கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க., எங்களின் நட்பு கட்சி. கூட்டணி குறித்த விஷயங்கள், விரைவில் இறுதி செய்யப்படும். கலைஞரையும் அவரது குடும்பத்தினரையும் ராகுல்ஜி எப்படி நடத்தினார் என்பதை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியமா என்ன ?
வரும் லோக்சபா தேர்தலில்,தமிழகத்தில் எந்த கட்சியுடன், காங்., கூட்டணி அமைக்கும்?
தமிழகத்தில், கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புகிறோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தி.மு.க., எங்களின் நட்பு கட்சி. கூட்டணி குறித்த விஷயங்கள், விரைவில் இறுதி செய்யப்படும். கலைஞரையும் அவரது குடும்பத்தினரையும் ராகுல்ஜி எப்படி நடத்தினார் என்பதை அவ்வளவு சுலபத்தில் மறந்து விட முடியமா என்ன ?
திருமாவளவன் : பொதுவாக எல்லா கட்சிகளும், தலித்துகள் தலித்துக்களாவே இருக்க வேண்டும் என விரும்புகின்றன.
தி.மு.க.,வின் நீண்ட கால தோழமை கட்சியான, விடுதலை சிறுத்தைகள் கட்சி,
இன்றைய அரசியல் களத்தில் நெருக்கடியான கட்டத்தில் நிற்கிறது. ஐந்து கேட்ட
இடத்தில், ஒரு தொகுதி மட்டும் கொடுத்து, உடன்பாடு செய்துள்ளதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, ஊரெங்கும் வி.சி., தொண்டர்கள் குரல் கொடுத்துக்
கொண்டிருக்கும் நிலையில், இந்த தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்ற,
கவலை படர்ந்த முகத்தோடு காணப்பட்ட, அக்கட்சி தலைவர் திருமாவளவன், 'தினமலர்'
நாளிதழுக்கு அளித்த பரபரப்பு பேட்டி:
ஒரு தொகுதி தான் என்றாகி விட்டது. போட்டியிடப் போவது யார்?
சிதம்பரம் தொகுதி என்பதால், நானே மீண்டும் போட்டியிடுவேன்.
ஒரு தொகுதி தான் என்றாகி விட்டது. போட்டியிடப் போவது யார்?
சிதம்பரம் தொகுதி என்பதால், நானே மீண்டும் போட்டியிடுவேன்.
தடுமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்:
ஆளுக்கு ஒரு தொகுதி தான் என, அ.தி.மு.க., கூறியதால், அதிருப்தி அடைந்துள்ள
இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், கூட்டணியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளன.
ஆனாலும், அடுத்தது என்ன, தனித்துப் போட்டியா என்பதை வெளியிடாமல், மவுனம்
காக்கின்றன.அதற்கு காரணம், அ.தி.மு.க.,விடம் இருந்து அழைப்பு வரும் என்ற
எதிர்பார்ப்பு நீடிப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசிய தலைவர்கள்,
அ.தி.மு.க., தலைமையுடன் பேசி வருவதால், அதுவரை அமைதியாக இருக்கும்படி,
ஆலோசனை கூறியுள்ளதாகவும், கம்யூனிஸ்ட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,
வெள்ளி, 7 மார்ச், 2014
திமுகவை விட்டு வெளியேறும் திருமா? ஸ்டாலின், கருணாநிதி உருவபொம்மை எரித்து போராட்டம்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி
ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் கருணாநிதி,
பொருளாளர் ஸ்டாலின் உருவபொம்மைகளை எரித்து அக்கட்சியினர் போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன்
வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலோசிக்க அவசர கூட்டத்தை
நாளை திருமாவளவன் சென்னையில் கூட்டியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு
ஒரே ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது கட்சித் தொண்டர்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தை
கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில்
சிதம்பரத்தில் திருமாவளவன் வெற்றி பெற்றார். ஆனால் விழுப்புரம் தொகுதியில்
சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே விடுதலை சிறுத்தைகள்
கட்சி தோல்வி அடைந்தது.
இதனிடையே, தி.மு.க. கூட்டணியில் இருந்த பல கட்சிகள் வெளியேறிய நிலையில்,
விடுதலை சிறுத்தை மட்டுமே நிலைத்திருந்தது. ஸ்டாலினின் அளவுக்கு மீறிய ஆட்டம் ? எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை ...
மதுரவாயல் பறக்கும் சாலைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு
தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின்
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்கண்ட திட்டத்திற்கு
தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசு மனு மீது வரும் மார்ச்
11ம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான 3
பேர் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. dinakaran.com
குறும்படங்கள் நாளைய இயக்குநர்களுக்கு ஒரு நல்ல அறிமுகம் !
குறும்பட மோகம் கொடிகட்டிப் பறக்கிறது தமிழ்நாட்டில்! டிஜிட்டல் கேமராக்கள்
குறைந்த விலையில் / வாடகையில் கிடைக்க ஆரம்பித்த பின் ஒரு குறும்படம்
எடுப்பது இப்போது அனைவருக்கும் எளிதாகிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள்
குறும்படம் எடுப்பதை காதலிப்பதுபோல ஒரு தவமாய் செய்ய ஆரம்பித்து
இருக்கிறார்கள். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் குறும்படங்கள் வெளியிடும்
முயற்சிகள் பரவலாகத் தெரிய ஆரம்பித்தன. இலவசக் காணொளி வலைதளமான யூட்யூப்
2009-10இல் வந்த பின், எண்ணற்ற திறமைகள் வெளி உலகிற்கு அறிமுகம் ஆகும்
வாய்ப்பைத் தந்துள்ளது. ஒரு குறும்படம் எடுப்பது, செலவுபிடிக்கும்
சமாச்சாரம் என்ற நிலை மாறி, டிஜிட்டல் கேமராக்கள் மூலம், இன்று ரூபாய்
5,000 முதல் 10,000 மூலமே ஒரு குறும்படத்தை எடுக்கலாம் என்ற நிலை
வந்துவிட்டது.
இயக்குநர் மீரா கதிரவன் 2009இல் அவள் பெயர் தமிழரசி என்ற குறும்படத்தை
என்னிடம் காட்டினார். அது பெரிய திரைப்படமாக 2010இல் வெளிவந்தது. அன்றைக்கு
யூடுயூப் இல்லாத காரணத்தால் மீரா கதிரவன், அந்தக் குறும்படத்தைக்
குறுந்தகடாக எடுத்துவந்து தயாரிப்பாளர்களிடம் வாய்ப்புக் கேட்டார். இன்று
நிலைமை வேறு.
அழகிரி: பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டேன்: இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் !
திருவள்ளூரை
அடுத்த பூண்டியில் முன்னாள் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பாஸ்கரன் தாயார்
மங்கம்மாள் திருவுருவ பட திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மு.க.அழகிரி கலந்து கொண்டார். உருவப் படத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:–
அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது. தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது.
நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் அதன் பிறகு எனது வழியில் வாருங்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
பின்னர் அவர் திருவாலங்காடு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மு.க. அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூண்டி சந்திப்பில் இருந்து பாஸ்கரன் வீடு வரை அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.maalaimalar.com அண்ணன் பொடி வச்சு பேசுறாக அப்பாவுக்கு தப்பாத அஞ்சா நெஞ்சன்தான்
விழாவில் தி.மு.க.வில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட மு.க.அழகிரி கலந்து கொண்டார். உருவப் படத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது:–
அன்னை இந்திரா காந்தி காலத்தில் தனித்து நின்று எதிர்த்து போராடிய தி.மு.க. தற்போது உதிரி கட்சிகளுடன் கூட்டணிக்காக பேச்சு நடத்தும் நிலைக்கு வந்துள்ளது. தி.மு.க. தலைவருக்கு தெரியாமல் கட்சியில் சில நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கிறது.
கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வரும் தொண்டர்களை விட்டு விட்டு மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தி.மு.க. முக்கியத்துவம் அளிக்கிறது.
நான் இந்த தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை எனது ஆதரவாளர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன். இன்னும் 2 மாதங்கள் பொறுத்திருங்கள் அதன் பிறகு எனது வழியில் வாருங்கள்.
இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
பின்னர் அவர் திருவாலங்காடு புறப்பட்டு சென்றார்.
முன்னதாக மு.க. அழகிரிக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பூண்டி சந்திப்பில் இருந்து பாஸ்கரன் வீடு வரை அவரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.maalaimalar.com அண்ணன் பொடி வச்சு பேசுறாக அப்பாவுக்கு தப்பாத அஞ்சா நெஞ்சன்தான்
லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்
உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று
காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம்
பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார்.
இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி
வசனம் இவர் தான் எழுதினார்
'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்
சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக
சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை
மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட
பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார்.
காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.
பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர்
பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
Dr.முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் உதித்த ஒரிஜினல் புரட்சி தலைவி !
இந்தியாவில் முதன்முதலில் மருத்துவப் பட்டம் பெற்ற
பெண்மணியும், தமிழக சட்ட மேலவையில் முதல் பெண் உறுப்பினர் என்ற பெருமையும்
பெற்றவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. நாட்டிலேயே முதல் பெண்கள் இயக்கமான
இந்திய மாதர் சங்கத்தை துவக்கி கடைசிவரை அதன் தலைவியாக இருந்தவர் என்கிற
பல சாதனைகளுடன் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பிடித்தவர்.
புற்று நோய் என்றாலே அனைவருக்கும் ஒரு மரணபயம் ஏற்படும். அப்படிப்பட்ட
ஒரு ஆட்கொல்லி நோயான புற்று நோய்க்கு நம் நாட்டிலேயே, அதுவும் நமது
சென்னையிலேயே மிகத்தரமான சிகிச்சையை பெற முடிகிறது என்றால் அதற்கு காரணம்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
பிறப்பு: “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”,-என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி அய்யருக்கும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மா தம்பதியருக்கு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மூத்தமகளாகப் பிறந்தார்.
இவரது காலத்திலேயே வாழ்ந்த மகாகவி பாரதியார் யார் யாரை பற்றிஎல்லாம் பாடியிருக்கிறார் எழுதியிருக்கிறார்,அந்தகாலத்தில் வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி யை பற்றி தப்பி தவறி கூட எங்கேயும் தனது கருத்தை பதிவு செய்யவில்லை,பாரதியாருக்கு இருந்த ஜாதி வெறி யாருக்கும் தெரியாது, மிகவும் புத்திசாலிதனமாக அதை மறைத்தார். டாக்டர் முத்துலக்ஷ்மி அம்மையாரின் தாயார் இசைவேளாளர் குடும்பத்தை சேர்ந்தவர்,என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கலப்பு திருமணத்தை ஆதரிக்க கூடாது என்பதில் பாரதியார் உறுதியாக இருந்தார்.ஒரு பாரதியின் அங்கீகாரம் ஒன்றும் உன்னதமான விடயம் அல்ல . கஞ்சாவில் மிதந்த காரியகிருக்கன்தான் பாரதி என்றால் நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும் தமிழ்நாட்டில் உதித்த ஒரிஜினல் புரட்சி தலைவி இவர்தான்
பிறப்பு: “மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”,-என்ற கவிமணியின் கூற்றிற்கு ஏற்ப புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த நாராயண சுவாமி அய்யருக்கும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த சந்திரம்மா தம்பதியருக்கு 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி மூத்தமகளாகப் பிறந்தார்.
இவரது காலத்திலேயே வாழ்ந்த மகாகவி பாரதியார் யார் யாரை பற்றிஎல்லாம் பாடியிருக்கிறார் எழுதியிருக்கிறார்,அந்தகாலத்தில் வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி யை பற்றி தப்பி தவறி கூட எங்கேயும் தனது கருத்தை பதிவு செய்யவில்லை,பாரதியாருக்கு இருந்த ஜாதி வெறி யாருக்கும் தெரியாது, மிகவும் புத்திசாலிதனமாக அதை மறைத்தார். டாக்டர் முத்துலக்ஷ்மி அம்மையாரின் தாயார் இசைவேளாளர் குடும்பத்தை சேர்ந்தவர்,என்பதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. கலப்பு திருமணத்தை ஆதரிக்க கூடாது என்பதில் பாரதியார் உறுதியாக இருந்தார்.ஒரு பாரதியின் அங்கீகாரம் ஒன்றும் உன்னதமான விடயம் அல்ல . கஞ்சாவில் மிதந்த காரியகிருக்கன்தான் பாரதி என்றால் நம்புவதற்கு கடினமாகதான் இருக்கும் தமிழ்நாட்டில் உதித்த ஒரிஜினல் புரட்சி தலைவி இவர்தான்
ஓவர்டேக் செய்த காங்கிரஸ்! பாலக்கரையில் மெகா எழுச்சி!! பிச்சையெடுப்பவர்களை பிடித்து !
தமிழகத்தில் காங்கிரஸ் நிலைமை இந்த அளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என யாரும் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். அரசியல் கட்சியினர் தங்கள் பலத்தைக் காட்ட மாநாடுகளுக்கு குவார்ட்டர், பிரியாணி, கைச்செலவுக்கு பணம் இதுதவிர சம்பளம் எனக் கொடுத்து ஆள் பிடிப்பது வழக்கம் (ம.தி.மு.க. போன்ற சில கட்சிகள் விதிவிலக்கு).
ஆனால், ஆர்ப்பாட்டத்துக்கே ஆள் பிடிக்கும் நிலைமை யாருக்கு ஏற்பட்டுள்ளது பாருங்கள்… தேசிய, பாரம்பரியம் மிக்க, இந்தியாவை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு அப்படி ஒரு நிலைமை.
சரி போகட்டும், பிடித்ததுதான் பிடித்தார்கள் ஊரில் எத்தனையோ பேர் சும்மா இருக்கிறார்கள். அல்லது, வெட்டிக்கதை பேசித்திரிவோரைக் கூட அழைத்து வந்திருக்கலாம். ஆனால், போயும் போயும் பிச்சையெடுப்பவர்களை பிடித்து வந்ததுதான் தமிழக காங்கிரஸின் பெரிய காமெடி.
தொல்.திருமாவளவன் : வருத்தம் இருந்தாலும் மதவாத சக்திகளுக்கு வாக்குகள் சென்றுவிடக்கூடாது!
தி.மு.க.
தலைமையிலான ‘ஜனநாயக முற்போக்கு கூட்டணி’யில் விடுதலை சிறுத்தைகள்
கட்சியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்ததையடுத்து சென்னை அண்ணா
அறிவாலயத்தில் தொல்.திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தொல்.திருமாவளவன் பேட்டி
கேள்வி: விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் எத்தனை தொகுதிகள் கேட்கப்பட்டது?
பதில்:
நாங்கள் 5 தொகுதிகளை கேட்டோம். அதில் 3 தொகுதிகளை எதிர்பார்த்தோம்.
கடைசியாகவும், இறுதியாகவும் 2 தொகுதிகளை கேட்டு வற்புறுத்தினோம். எனினும்
சிதம்பரம் என்ற ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதவாத சக்திகளுக்கு
வாக்குகள் சிதறிவிடக்கூடாது என்பதில் கவனமாகவும், அக்கறையாகவும்
இருக்கிறோம். மேலும் பலமுனைபோட்டி இருப்பதால் வாக்குகள் சிதறிவிடக்கூடாது
என்பதை கருத்தில் கொண்டு, எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும், இந்த
முடிவை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொள்கிறது. இந்த நேரத்தில்
தி.மு.க. கூட்டணியில் சேர இடதுசாரி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி
சார்பில் அழைப்பு விடுக்கிறேன். விழுப்புரம் தொகுதியை விடுதலை சிறுத்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று பொன்முடி நச்சரிதாராமே ?அதனாலேதான் இரண்டு ஒண்ணாச்சு என்று ஒரு கிசு கிசு! அரசியலில் கிசு கிசு இருக்க கூடாதா என்ன ?
கெஜ்ரிவால் : அம்பானிகளுக்குத்தான் மோடி வளர்ச்சி நாயகன்
குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த்
கெஜ்ரிவால், கட்ச் பகுதி முந்ரா தாலுகாவில் அமைந்துள்ள அதானி துறைமுகம்
மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஆய்வு செய்து அங்குள்ள விவசாயிகளிடம்
கலந்துரையாடினார். அவர்கள் தங்கள் விவசாய நிலங்களை குஜராத் அரசு
கையகப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,
‘‘அதானி மற்றும் அம்பானிகளுக்குத்தான் மோடி வளர்ச்சி நாயகன். மிகப் பெரிய
தொழில் நிறுவனங்கள் அரசுடன் கூட்டு சேர்ந்து நிலங்களை கையகப்படுத்துகின்றன.
குஜராத்தில் உள்ள நிலங்கள் எல்லாம் விற்கப்படுவதுபோல் உள்ளது.
பரிதவிக்கவிட்ட ஜெ.,: தி.மு.க., அணியில் இணையும் கம்யூனிஸ்டுகள்!
அ.தி.மு.க.,வால் கழற்றி விடப்பட்ட, கம்யூனிஸ்ட் கட்சிகள்,
தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க தயாராகி விட்டன. சென்னையில், நேற்று நடந்த,
இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தில், இதற்கான முடிவு
எடுக்கப்பட்டதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.கம்யூனிஸ்ட்
கட்சிகளுக்கு, அ.தி.மு.க., 'கல்தா' கொடுத்ததை அடுத்து, அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள்,
பரஸ்பரம் ஆலோசித்தனர். தங்கள் முடிவை, கட்சியின் மாநில நிர்வாகக் குழு
கூட்டத்துக்குப் பின், தெரிவிப்பதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட், நேற்று
நிர்வாகக் குழுக் கூட்டத்தை கூட்டியது.
செந்தமிழ் கார்த்திக் - Namakkal to chennai,இந்தியா
07கம்யூனிஸ்ட் கட்சியினரின் வாக்கு வங்கி பற்றி அனைவருக்கும் நன்கு
தெரியும்.. சிறிது வெற்றிக்கு உதவுவார்கள் அவ்வளவே.. மற்றபடி பெரியஅளவில்
ஒன்றும் கிடையாது. ஏற்கனவே ராஜ்யசபா சீட் 2 கட்சிக்கும் தலா ஓன்று
கொடுத்தாகி விட்டது, மற்றும் இருவருக்கும் சேர்த்து 4 தொகுதிகள் என்று
அதிமுக தலைமை தரலாம் என்று நினைத்தது. ஆனால் இருவருக்கும் தலா 4 தொகுதிகள்
வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் அடம் பிடித்தால் எப்படி ? சட்டியில்
இருந்தால் தானே அகப்பையில் வரும் ??? பிறகு அதிமுக கூட்டணி வேண்டாம் என்று
அவர்களே தான் முடிவு செய்து விலகி உள்ளனர். அதற்காக ஜெயலலிதாவை இங்கு பலர்
விமர்சிப்பது வடிகட்டிய முட்டாள்தனம்.. ஜெயலலிதாவை வாயாரா புகழ்ந்தால் ,
சீட்டுகளை வாரி வழங்குவார் என்று நினைத்தால் என்ன செய்ய முடியும்.? ஜெயா
அதற்கு எல்லாம் மசிபவர் கிடையாது. தில்லுக்கு பெயர் போன அதிரடியான ஆள்..
தன்னுடைய எடை என்ன என்று அவருக்கு தெரியும். என்ன தான் சொம்பு அடித்தாலும்,
அப்போதைக்கு சிரிப்பார், ரசிப்பார்.. ஆனால் காரியத்தில் கண்ணாகவே
இருப்பார். இப்போது கருணா வலை விரிக்கிறார். ஏற்கனவே அங்கு துக்கட கட்சிகள்
அதிகம். அவர் மட்டும் என்ன 4+4 என்று கொடுத்து விடவா போகிறார்.. ??? இங்கே
நடந்தது தான் அங்கேயும் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒட்டுண்ணி என்று
முடிவாகி விட்டது பிறகு யாருடன் ஓட்டினால் என்ன ??? ஒழியட்டும் விடுங்கள்.கூட்டணி வியாபாரத்தில் சாதனை படைக்கும் தேமுதிக ? Latest ஆக பாஜகவுடன் கூட்டணி ! ???
கூட்டணி தொடர்பான மெகா சீரியலில், முக்கிய திருப்பமாக, 'பா.ஜ.,வுடன்
கூட்டணி பேச்சு துவங்கியுள்ளது' என, தே.மு.தி.க., சார்பில், நேற்று தான்
முதன்முதலாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.இதை வரவேற்று மகிழ்ச்சி
தெரிவித்துள்ள, தமிழக பா.ஜ., தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இன்னும் இரண்டு
நாளில், பா.ஜ., - தே.மு.தி.க., கூட்டணி முடிவாகி விடும் என்றும், பா.ஜ.,
தேசிய தலைவர், ராஜ்நாத் சிங் சென்னையில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார்
என்றும் தெரிவித்தார்.இதற்கிடையில், நிர்வாகக் குழுவை கூட்டி விவாதித்த,
பா.ம.க., தலைவர், ராமதாஸ், பா.ஜ., கூட்டணியில் சேரும் முடிவை
வெளியிட்டுள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை, தே.மு.தி.க., வருகைக்கு பின்
தெரியவரும் எனவும் கூறியுள்ளார்.இதனால், தி.மு.க.,வுடன் நேற்று காலையில்,
தே.மு.தி.க.,வினர் நடத்திய பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகி உள்ளது.
Sridhar - Nagercoil,இந்தியா பொட்டி கிடைச்சா, பி.ஜே.பி என்ன, கூவம் அதிமுகவுடன் கூட கூட்டணி வைக்க துடிக்கும் இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி.. தூ.. அரசியல் வியாதி. ஜெயாவின் பிளான் படி, எதிர்கட்சிகள் ஒன்று சேரவிடாமல் செய்து, அதன் மூலம் ஜெயித்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். எப்படி, வைகோவை, அடிமை தா.பாண்டியனை, சிபிஎம்மை, கேவல படுத்தி வெளியேற்றியது போல, தண்ணீரில் மிதக்கும் கப்பல் கேப்டனின் தேமுதிகவையும் ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு பாடம் புகட்டவும், மக்கள் விரோத செயல்களின் மொத்த உருவமான ஜெயாவுக்கு ஆப்பு அடிக்க வாய்த்த சந்தர்பத்தை பயன்படுத்த தெரியாதவன் அரசியலுக்கு கொஞ்சமும் லாயக்கற்றவன். வெறும் வாய்பேச்சில் உதார் விடும் நீயெல்லாம் ஒரு சராசரி மனிதன் கூட இல்லை...தரம் தாழ்ந்தவன். கூலிக்கு மாரடிக்கும் குடிகாரன். உன்னை நம்பியும் உன் பின்னால் ஒரு கூட்டம் எனபது, கூவத்தில் கலக்கும் சாக்கடைகள் தான். உனக்கு இனி அழிவு தான் முடிவு.
Sridhar - Nagercoil,இந்தியா பொட்டி கிடைச்சா, பி.ஜே.பி என்ன, கூவம் அதிமுகவுடன் கூட கூட்டணி வைக்க துடிக்கும் இவனெல்லாம் ஒரு அரசியல்வாதி.. தூ.. அரசியல் வியாதி. ஜெயாவின் பிளான் படி, எதிர்கட்சிகள் ஒன்று சேரவிடாமல் செய்து, அதன் மூலம் ஜெயித்து விடலாம் என்று பகல் கனவு காண்கிறார். எப்படி, வைகோவை, அடிமை தா.பாண்டியனை, சிபிஎம்மை, கேவல படுத்தி வெளியேற்றியது போல, தண்ணீரில் மிதக்கும் கப்பல் கேப்டனின் தேமுதிகவையும் ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரிக்கு பாடம் புகட்டவும், மக்கள் விரோத செயல்களின் மொத்த உருவமான ஜெயாவுக்கு ஆப்பு அடிக்க வாய்த்த சந்தர்பத்தை பயன்படுத்த தெரியாதவன் அரசியலுக்கு கொஞ்சமும் லாயக்கற்றவன். வெறும் வாய்பேச்சில் உதார் விடும் நீயெல்லாம் ஒரு சராசரி மனிதன் கூட இல்லை...தரம் தாழ்ந்தவன். கூலிக்கு மாரடிக்கும் குடிகாரன். உன்னை நம்பியும் உன் பின்னால் ஒரு கூட்டம் எனபது, கூவத்தில் கலக்கும் சாக்கடைகள் தான். உனக்கு இனி அழிவு தான் முடிவு.
வியாழன், 6 மார்ச், 2014
தமிழகத்தில் பாஜ கூட்டணியில் அதிரடி மாற்றம் ? மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்ன? -
சென்னை: பாஜ அணியில் அதிரடி மாற்றம் ஏற்பட போகிறது. இதனால், பாஜ
அணியில் இடம் பெற்றுள்ள மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கதி என்னவாக போகிறது
என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பாஜ
கூட்டணியில் மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே, புதிய
நீதிக்கட்சி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேமுதிக, பாமகவுடன் பேச்சுவார்த்தை
நடத்தப்பட்டது. ஆனால், தேமுதிக 20, பாமக 14 தொகுதிகளை கேட்டது. இதற்கு பாஜ
ஒப்புக் கொள்ளவில்லை. இதனால் கூட்டணியில் 2 கட்சிகளும் இடம் பெறுவதில்
சிக்கல் ஏற்பட்டு வந்தது. கூட்டணியில் சேர பாஜ விதித்த கெடுவை 2 கட்சிகளும்
மதிக்கவில்லை. இதனால், இரண்டு கட்சிகளும் பாஜ அணியில் சேருவதை
விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
தாபா.: எம்ஜிஆருக்கு அரசியல் கற்றுக் கொடுத்து, அம்மாவுக்கு அடியாள் வேலை பார்த்தும், கேவலம் ஒரு லெக் பீஸ் கூட கிடையாதா?
இன்னைக்கு பழையது முடிஞ்சு போச்சு, நாளைக்கு பார்க்கலாமென்று போயஸ் கதவுகள் மூடிய பிறகு, கையேந்தியவன் திரும்பிச் செல்வதிலும் ஒரு தீர்க்கம் உண்டு என்று நெஞ்சு நிமிர்த்துகிறார் தாபா.
போலிக் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி என்று அறிவித்து விட்டு 40 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களை நியமித்து அந்தக் கூட்டணிக்கு மரியாதை செய்த கையோடு பிரச்சாரத்திற்கும் கிளம்பி விட்டார் ஜெயலலிதா. கூட்டங்களில் மறந்தும் பாஜகவை அவர் விமரிசிப்பதில்லை. சொல்லப்போனால் மோடி பேசுவதைப் போலவே பேசுகிறார். என்ன, அதில் குஜராத் வளர்ச்சி மட்டும் இடம் பெறுவதில்லை.
மேலும் மத்தியில் அதிமுக இடம்பெறும் ஆட்சியை உருவாக்க ஆதரியுங்கள் என்று அவர் பேசுவதை வைத்து மத்தியில் அதிமுக ஆட்சி சாத்தியமில்லை எனும் யதார்த்தத்தை அவர் அங்கீகரிக்கிறார் எனலாம். கூடவே இடம்பெறும் ஆட்சி பாஜகவினதாக இருக்கலாம் என்பது ஊரறிந்த ஒன்று. இந்நிலையில் கூட்டணி தொகுதி உடன்பாட்டிற்காக பேசும் போலிக் கம்யூனிஸ்டுகள் மனமொடிந்த நிலையில் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் இந்த நிலையிலும் தாபா அவர்கள் சோர்வோ, விரக்தியோ அடையவில்லை. அதனால்தான் அவர் தாபா.
அப்பேற்பட்ட தாபாவை மரியாதை செய்யும் பொருட்டு இன்றைய ஒருவரிச் செய்திகளில் அவர் மட்டுமே நாயகன். அவர் பேசியது மட்டுமே செய்தி.
_______________________
செய்தி: எக்காரணம் கொண்டும் மரியாதையை இழக்க மாட்டோம்.
நீதி: உண்மை. இல்லாத ஒன்றை இழக்க முடியாதல்லவா?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














