திங்கள், 5 செப்டம்பர், 2011

physically challenged Suyamvaram unites castes, religions

A group of young girls that took part in a Suyamvaram for disabled persons in the city on Saturday — DC
A group of young girls that took part in a Suyamvaram for disabled persons in the city on Saturday — DC
It was a suyamvaram with a difference.
The event, meant exclusively for the physically challenged, seemed to attract even people without disabilities, including a fair sprinkling of Christians and Muslims who did not seem to attach importance to caste or religion.
“I own four shops, including an STD booth. Resources have never been a setback in my life. I don’t consider physical disabilities as a setback to leading a happy life,” said Kannan, who has studied up to Class 8.
The 32-year-old, who had come for the event from Kanchipuram, said he hoped to find his dream girl.
He was among the 25 people without any disabilities who attended the three-day mega suyamvaram that concluded here on Saturday.
The event, held under the aegis of the Tamil Nadu Differently-Abled Welfare Association since Thursday, attracted over 300 people, 210 of whom were men. Fourteen Muslims and 12 Christians attended the meeting.
“What was heartening at this suyamvaram was that all those who attended expressed their willingness to marry even out of their caste and religion,” association president N. Ravi said.
Despite their physical disabilities, grooms and brides-to-be, some of whom came with their parents, were well qualified. A few held BE or MTech degrees and most were employed in private companies.
Swathy, 25, who is physically challenged but holds an MBA and is employed in a private firm, said, “My life partner should be very caring all through our lives. He need not own a house. I can take care of him.”
Jayanthi, 32, banking on her tailoring skills and eking out a living on her own, said she nurtures similar aspirations.

மாற்றுத் திறனாளிகளுக்கான "சுயம்வரம்':சென்னையில் கோலாகலம்

சென்னை:""அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான "சுயம்வரம்' நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும்'' என்று, அமைச்சர் செல்வி ராமஜெயம் பேசினார்.கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் "சுயம்வரம்' நிகழ்ச்சி, சென்னையில் நடந்தது. இதில், தமிழகம் முழுவதும், 150க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று, மணமக்களை தேர்வு செய்தனர்.நிகழ்ச்சியில், கீதாபவன் அறக்கட்டளை தலைவர் அசோக் கொயல் வரவேற்றார். இதில், சிறப்பு விருந்தினராக, தமிழக சமூக நலத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம், குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

அப்போது, அவர் பேசியதாவது:மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு கோரிக்கைகள் அனைத்தும், இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும். அதில் முதற்கட்டமாக, அவர்களுக்கான திருமண உதவித்தொகை கேட்ட உடன் வழங்கவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.மாற்றுத் திறனாளிகளுக்கென்று, வேலை வாய்ப்பு தொடர்பாக, தமிழக அரசு அறிவித்த, 3 சதவீத இட ஒதுக்கீடு, அரசு மற்றும் தனியார் துறையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சி நடத்துவது தொடர்பாக, தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை செயலர் கண்ணகி பாக்கியநாதன், மாநில ஆணையர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செருப்பு வாங்க தனி விமானம் அனுப்பிய மாயாவதி

செருப்பு வாங்க மும்பைக்கு தனி விமானம் அனுப்பிய
 மாயாவதி: விக்கிலீக்ஸ் அம்பலம்


அரசுப்பணத்தில் மாநிலம் முழுவதும் தனக்கு சிலை வைக்க உத்தரவிட்டு சர்ச்சையை கிளப்பினார் உத்திரபிரதேச முதல்வர் மாயாவதி.  அரசு உயர் அதிகாரியை தனது ஷூவை கர்ச்சிப்பால் துடைக்கவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

மேலும் பல சர்ச்சைகளில் சிக்கிய இந்த சர்ச்சை ராணி,   மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்குகிறார்.

   விக்கிலீக்ஸ் இணையதளம் இது குறித்த ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
 "புதிதாக காலணி வாங்க வேண்டுமானால் தனது ஜெட் விமானத்தை மும்பைக்கு அனுப்பி விருப்பப்பட்டவற்றை மாயாவதி வாங்கி கொள்வார்.
மேலும் உணவில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காகவே 9 சமையல்க்காரர்கள் மற்றும் 2 சுவை அறிபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார்.

இத்தகவல் அக்டோபர் 23, 2008 தேதியில் பதிவாகியுள்ளது.
அதே போன்று, ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளின் போது, கட்சி உறுப்பினர்கள், அரசு துறை ஊழியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரிடமிருந்து கோடிக்கணக்கில் பரிசு பொருட்களை பெற்றுக்கொள்வது வழக்கம்" என்ற தகவலையும் விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.அப்துல்லா என்கிற பெரியார்தாசன்

சென்னை: பேராசிரியர் அப்துல்லா என்கிற பெரியார்தாசன் மதிமுகவில் சேர்ந்துள்ளார்.

தீவிர பெரியார் தொண்டராக விளங்கியவர் பெரியார்தாசன். திராவிடர் கழகத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். சில வருடங்களுக்கு முன்பு திடீரென அவர் மெக்கா சென்றார். பின்னர் இஸ்லாமில் தான் சேர்ந்துள்ளதாக அறிவித்தார். தனது பெயரையும் அப்துல்லா என்று மாற்றிக் கொண்டார்.

இந்த நிலையில், நேற்று மதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த பெரியார்தாசன் அங்கு கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில் மதிமுகவில் இணைந்தார்.

சொத்து குவிப்பு: ஜெயலலிதா நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சொத்து குவிப்பு: பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் உத்தரவு

டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீது பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியே தீர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் சென்னை நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கு விசாரணை பின்னர் பெங்களூர் தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதிகள் அவரது கோரிக்கையை நிராகரித்தனர். இது தொடர்பாக நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்பது நியதி. எனவே ஜெயலலிதா கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அவருக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை. கோர்ட்டில் ஆஜரவாதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள இந்த மனு, பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையை மேலும் சில மாதங்கள் தாமதப்படுத்தும் செயலாகவே தெரிகிறது. இதைத் தவிர வேறு ஏதும் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் அவர் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும், அவருக்கு எந்த விலக்கும் அளிக்கப்படாது. அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் எப்போது ஆஜராவார் என்பதை வரும் 12ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவாதால் ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறுவதையும் ஏற்க முடியாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

Valentines Day: Shameful actions of Police and 'Moral brigade' in India


The rise of the Reddy brothers


ரெட்டி சகோதரரை சி.பி.ஐ., கைது செய்தது,கர்நாடக அரசை ஆட்டிப்படைத்த


கர்நாடக மாநிலத்தில் பெரும் செல்வாக்கு கொண்ட ரெட்டி சகோதரர்களில் ஒருவரான ஜனார்த்தன ரெட்டியை சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று காலையில் கைது செய்தனர். பா.ஜ., அரசில் மாநில அமைச்சர்களில் யார் இடம் பெற வேண்டும் என்ற அளவுக்கு அதிகாரம் படைத்த இவர்கள் மீது சுரங்க மோசடி தொடர்பான குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாநில லோக்அயுக்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் மாநிலத்தில் அரசுக்கு சொந்தமான சுரங்கம் டெண்டர் விடப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பல நூறு கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தது. மேலும் சுப்ரீம் கோர்ட்டிலும் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. சுரங்கத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட் பணித்திருந்தது. சுரங்கத்தில் இருந்து கனிமத்தை வெட்டி எடுக்கவும் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை 10 பேர் கொண்ட சி.பி.ஐ., அதிகாரிகள் குழுவினர் பெல்லாரியில் உள்ள மாஜி அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் புகுந்து அதிரடி ரெய்டு நடத்தினர். தொடர்ந்து ரெட்டியை கைது செய்து ஐதராபாத் அழைத்து சென்றனர். ரெட்டியின் உறவினரும் ஒபலாபுரம் சுரங்க நிறுவனத்தின் மானேனஜிங் டைரக்டருமான சீனிவாச ரெட்டியையும் கைது செய்துள்ளனர். இருவரும் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார் என அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது.

ஜனார்த்தன ரெட்டி குற்றமற்றவர் என நிரூபிப்பார் என்று பா.ஜ., மேலிடம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த கைது மூலம் சட்டம் தனது கடமையை செய்திருக்கிறது என காங்,. கருத்து வெளியிட்டுள்ளது.

யார் இந்த ஜனார்த்தன ரெட்டி ? : கர்நாடக மாநிலத்தில் சுரங்க தொழில் நடந்தி கோலோச்சி வரும் பெரும் செல்வந்தர் ஜனார்த்தன ரெட்டி. கடந்த பா.ஜ., ஆட்சியில் சுற்றுலா துறை அமைச்சராக இருந்தார். பா.ஜ.,வில் முக்கியத்துவம் அளிக்கப்படும் இவருக்கு கருணாகரரெட்டி, சோமசேகர ரெட்டி என்ற இரு சகோதரர்கள் உள்ளனர். தான் கை காட்டும் நபர்தான் முதல்வராக வேண்டும் , அமைச்சராக இருக்க வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர். இவருக்கு 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருந்தது. சமீபத்தில் முதல்வர் எடியூரப்பா தங்களுக்கு அணுசரணையாக இருக்க மறுக்கிறார் என்றும் இவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் போர்க்கொடி தூக்கினார். தொடர்ந்து உயர் மட்ட தலைவர்கள் நடத்திய பேச்சில் சமரசம் ஏற்பட்டது. நேற்று இவரது ஆதரவாளர் ஸ்ரீராமுலு (பெல்லாரி தொகுதி) தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். தனக்கு அமைச்சர் பதவியில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஏமாற்றம் மிஞ்சியதால் ராஜினாமா செய்ததாக தெரிகிறது.

மர்ம மனிதன் வதந்தி நடவடிக்கை எடுக்குமாறு-கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவு!

மர்ம மனிதன் விவகாரத்தால் அடிக்கடி ஏற்பட்டுவரும் பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு-கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவு!

யாழ்.குடாநாட்டில் மர்ம மனிதன் விவகாரத்தால் அடிக்கடி ஏற்பட்டுவரும் பதற்ற நிலைமைகளைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவுக்கு பாதுகாப்புச் செயலாளரால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கிறீஸ் பூதம் அல்லது மர்ம மனிதன் வதந்தியால் அண்மைக் காலமாக யாழ்ப்பாணம் அல்லோலகல்லோலப்படுகின்றது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும் அச்சத்துக்கு மத்தியிலேயே மக்கள் இரவுப் பொழுதைக் கழிக்கின்றனர். இதனால் ஏற்படும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த இராணுவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகக் கேட்டபோதே கட்டளைத் தளபதி இதனை தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. இங்கு எவ்வித பதற்றமுமில்லை. கிறீஸ் பூதம் என்ற கதையின் மூலம் ஆதாயம் பெற முனையும் தரப்பினரே அவ்வாறான கட்டுக்கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.இரவு வேளைகளில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். கிராமமட்டங்களில் விழிப்புக்குழுக்களை அமைத்துள்ளோம்.

யாழ்ப்பாணத்தில் நிலவும் நிலைமைகள் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் என்னுடன் அடிக்கடி தொடர்புகொண்டு கேட்பார். அதுமட்டுமன்றி, நிலைமைகளைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.மர்ம மனிதனுக்கும் இராணுவத்துக்கும் எந்த வகையிலும் தொடர்பில்லை.இராணுவத்தரப்புக்கு சேறுபூச முனைபவர்களே சம்பவங்களைத் திரிபுபடுத்திக் கூறுகின்றனர். மர்ம மனிதன் விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என நான் கருதுகின்றேன் என ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சோனியா, ராகுல், சிதம்பரத்துக்கு நக்சலைட்டுகள் குறி?

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம், தம்தாரி மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நக்சலைட்டுகளைத் தேடும் பணியில் மத்திய போலீஸ் படையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த காட்டுக்குள் ஒரு முகாம் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த முகாமில் யாருமே இல்லை.

அங்கு சோதனை நடத்தியதில் ஏராளமான ஆயுதங்கள், வெடிகுண்டுகள் கிடைத்தன. மேலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரது புகைப்படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.

இந்த 4 பேரும் நக்சலைட்டுகள் தாக்குதல் பட்டியலில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜெயலலிதா கடந்த 3 மாதமாக சொத்து எதுவும் வாங்கவில்லை


சட்டப்பேரவையில் தனது சொத்து விவரம் பற்றிய கேள்விக்கு பதில் அளித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா. அப்போது, வேட்பு மனு தாக்கலின் போதே சொத்து விபரம் பற்றி தெரிவித்திருந்தேன். இதில் ரகசியம் எதுவும் இல்லை. இந்த மூன்று மாதமாக சொத்து எதுவும் வாங்கவில்லை என்று கூறியுள்ள முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமது சொத்து மதிப்பு சுமார் 51 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்

புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு


Rajapakse
கொழும்பு: தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்துவிட்டு, மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகள் பற்றி பேசுவதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தாக்குதல் தொடுத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அடுத்த வாரம் ராஜபக்சே கலந்து கொள்கிறார். இதற்காக நியூயார்க் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள், 40,000 அப்பாவித் தமிழர்களின் கொலைகளுக்கு இலங்கை அரசு பொறுபேற்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் கோரி வருகின்றன. இலங்கை அரசு போர்க் குற்றம் புரிந்ததாக, ஐ.நா. சபை அமைத்த விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் கொழும்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராஜபக்சே அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் பேசியதாவது:

மனித உரிமைகளை மதிப்பதில் நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல. இன்று எங்கள் மீது குற்றம் சொல்லும் நாடுகள்தான், எங்கள் நாட்டில் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதற்கு நிதி உதவி அளித்தவர்களுக்கு ஆதரவாக இருந்தன.

இலங்கையில் தீவிரவாத செயலுக்கான கொள்கை வகுத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களும் அவர்கள்தான். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக சர்வ தேச நாடுகள் குறிப்பாக மேலை நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பற்றி அவர்கள் ஒன்றும் சொல்வதில்லை. சில நாடுகள் இப்போதும் விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி உதவி அளித்து வருகின்றன.

இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளுக்கு அவை அடைக்கலம் கொடுத்தன. அவர்களுக்கு ராஜ மரியாதை கொடுத்து வருகின்றன (விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகராக இருந்த ஆண்டன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தை மறைமுகமாக சுட்டிக் காட்டி இவ்வாறு பேசினார் ராஜபக்சே)

எங்களிடம் பெரிய அளவில் பலம் இல்லாத நிலையிலும் விடுதலைப் புலிகளை ஒடுக்கி, தெற்கு ஆசியாவை தீவிரவாதத்தில் இருந்து விடுவித்தோம். ஆனால், வல்லரசு நாடான அமெரிக்கா தீவிரவாதத்துக்கு எதிரான தனது போரை இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது.

பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுத்துள்ள மற்ற நாடுகளை நாங்கள் பின்பிற்றவில்லை. அவர்களிடம் நவீன ஆயுதங்கள் ஏராளமாக உள்ளன. இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக போரை நடத்தியும் அவர்களால் வெற்றி பெறமுடியவில்லை. (ஆப்கானிஸ்தானில் அ- காய்தாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை கிண்டலடித்து இவ்வாறு கூறினார்) என்றார்.

Andhra 24 மணி நேரத்தில் 12 சிசுக்கள் மரணம்-கடவுள் காரணம் என அமைச்சர் பேச்சு!


ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 1- ம் தேதி வியாழக்கிழமை காலையில் இருந்து மறுநாள் வெள்ளிக்கிழமை காலை வரை 24 மணி நேரத்திற்குள் 12 சிசுக்கள் மரணமடைந்திருக்கின்றன என்பது அதிர்ச்சிகரமான செய்தி. ஆனால் அதை விட அதிர்ச்சி என்ன வென்றால் குழந்தைகளின் மரணத்தை அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் அலட்சியமாக வெளியிட்டதுதான். மேலும் இந்த மரணத்துக்கு கடவுள்தான் காரணம் என்று படு கேஷுவலாக பேசிய சுகாதார அமைச்சருக்கு கண்டனம் வலுத்துள்ளது.

இது எங்களுக்கு சாதாரணம் என்பதுபோல் மருத்துவமனை டீன் பேசியுள்ளார். கர்நூல் அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஏராளமான குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அங்குள்ள குழந்தைகள் சிகிச்சைப்பிரிவில் நூறு குழந்தைகள் வரை அனுமதிக்கலாம். ஆனால் அந்த மருத்துவமனையில் இரண்டு ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர் மட்டுமே உள்ளது என்பது வேதனை.

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டலோ அவசர காலத்திலோ அவர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க முடியாது என்பதுதான் உண்மை. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பும் இதுதான் நேர்ந்திருக்கிறது. ஒரே நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காததாலும் அப்பாவி சிசுக்கள் மரணமடைந்திருக்கின்றன. குழந்தைகளை பறிகொடுத்தவர்கள் அனைவரும் ஏழைத்தாய்மார்கள் என்பதுதான் ஜீரணிக்க முடியாத கொடுமை.

சிசுக்களின் மரணம் பற்றி ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்த உயரதிகாரி ஒருவரின் பதில் மிகவும் அலட்சியமாக இருந்தது. ஆந்திராவில் இதெல்லாம் சாதாரணம். ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினசரி மூன்று முதல் நான்கு சிசுக்கள் வரை மரணமடைவது இயற்கை என்று கூறினார். பிற அரசு மருத்துவமனைகளோடு ஒப்பிடும் போது கர்நூல் மருத்துவமனையில் சராசரியாக தினசரி மூன்று சிசுக்கள் மட்டுமே மரணமடையும் என்று கூறிய அவர், சம்பவ தினத்தன்று ஒரே நாளில் நாற்பது குழந்தைகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதே 12 குழந்தைகளின் மரணத்திற்கு காரணமாகிவிட்டது என்றார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டனர்.

அதை விட கொடுமை என்னவெனில் மருத்துவமனையை பார்வையிட வந்த ஆந்திர மாநில சுகாதாராத்துறை அமைச்சர் ரவீந்திரா ரெட்டி கூறியதுதான். குழந்தைகளின் மரணத்திற்கு மனிதத்தவறு காரணமல்ல இது கடவுளின் தவறுதான் என்று கடவுளின் மீது பழி போட்டுவிட்டு பணியில் இருந்த மருத்துவர்களை காப்பாற்றிவிட்டார். இதற்கு தெலுங்குதேசம் கட்சியின் மூத்த தலைவர் எர்ரான் நாயுடுவிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்து திடீரென்று சிசுக்களின் மரணம் மனிதத்தவறுதான் என்றும் அவற்றிற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பல்டி அடித்து பதில் கூறியிருக்கிறார் ரவீந்திரா ரெட்டி.

எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம், போராட்டம் என்று அறிவிக்கும் எதிர்கட்சிகள் கூட இந்த சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதுதான் உச்சபட்ச வேதனை. அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இந்த அளவிற்கு இருக்கிறது.

ஆந்திராவில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை முறை கேள்விக்குறியாகத்தான் உள்ளது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிலை ஏற்படும்முன் அரசு விழித்துக்கொள்வதே நல்லது.

ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்

சென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் ...

மறக்க முடிமா...? ராஜீவ்காந்தியின படுகொலையை

bala - toronto,கனடா
2011-09-05 03:21:18 IST Report Abuse
ராஜீவ்காந்தியை கொல்வது... அதிலும், தமிழ்நாட்டில் வைத்துக் கொல்லுவதென்பது ... தமக்கு எவ்வளவு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என்பதை அறிந்திராத சின்னக் குழந்தைகள் அல்லர் புலிகள்! அவர்களுக்கும் இதில் பங்குண்டு என்று வைத்துக்கொண்டால் கூட , "உங்கள் பெயர் இதில் வராமல் பாதுகாப்போம்" என்று அவர்களுக்கு பொய் உத்தரவாதம் கொடுத்த அந்தக் கறுப்பாடுகள் எங்கே? அந்தக் கறுப்பாடுகளை விட்டுவிட்டு ..... சமைச்சுக் குடுத்தது... 9V பேட்டரி வாங்கிக் கொடுத்தது என்று சொல்லி அப்பாவிகளை பிடித்து தூக்கில் போட்டால் இந்தியாவின் நீதி வாழுமாம்? போங்கடா உங்கள் நீதியும் மண்ணாங் கட்டியும்......
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
2011-09-05 03:20:43 IST Report Abuse
மிக அருமையான உண்மையை புட்டு புட்டு வைத்த கட்டுரையாக இருக்கிறது மேலே இருக்கும் கட்டுரை , உண்மையில் வெளிநாட்டில் சுகபோகமாக வாழும் இலங்கை தமிழர்கள் எங்கே தமிழ் ஈழம் கிடைத்துவிடுமோ என்ற பயத்தில் தினமும் அஞ்சி அஞ்சி வாழுகிறார்கள் , தனி ஈழம் கிடைத்துவிட்டால் சுக வாழ்கையை விட்டு திரும்ப போக வேண்டுமே என்ற பயத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் , அப்படியே போனாலும் இவர்களின் குழந்தைகள் தனி ஈழத்தில் தமிழில் கதைக்க மாட்டார்கள் ஆங்கிலத்தில்தான் கதைப்பார்கள் , இது தெரியாமல் செங்கொடிகள் தீக்குளிக்கிறார்கள் , இளைஞர்களின் இன உணர்வை தூண்டும் பேச்சுக்களை பேசும் சீமான் போன்றவர்கள் தீக்குளிக்காமல் இருப்பதேன் ? வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள் தீக்குளிக்காமல் இருப்பதேன் ?
Meeran Abubacker - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2011-09-05 03:12:39 IST Report Abuse
உண்மையான கருத்து, கண்டிப்பாக இவர்கள் தூக்கிலிடவேண்டும். முருகன் சிறை கைதி அவன் மகள் லண்டனில் படிப்பதற்கு பணம்?இன்னும் இவர்களுக்கு விடுதலை புலிகள் தொடர்பு உண்டு. இவர்களை வெளிய வந்தால் தமிழ் நாட்டுக்கு தான் ஆபத்து
johar m - Tamilnadu,இந்தியா
2011-09-05 02:51:29 IST Report Abuse
வைகோ,ராமதாஸ், சீமான் போன்டவர்கள் வீட்டில் யாரவது இந்த குண்டுவெடிப்பில் இறந்திருந்தால் இப்படி கொகரிபார்களா. எல்லாம் அவனவனுக்கு வந்தால் தான் தெரியும். சும்மா ஒரு கொடியும் ஒரு மைக்கும் நாலு பேரையும் வைத்துகொண்டு எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துவிட்டனர் இந்த நாட்டிற்கு வேண்டாத அரசியல்வாதிகள். இந்த 3 தூக்கு கைதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இவனுகளையும் உள்ள தள்ளணும். இவனுகலாள நாடு நாசமா போச்சு. தமிழன் தமிழன் என்று சொல்லி இருக்குற தமிழனையும் கவுக்கு கொடுதிடுவானுக. தமிழ்நாடோட சாபம் இவனுக. தூக்கு தண்டனை நிறைவேற்ற படணும். அப்போ தான் தப்பு பண்ணுறவனுக்கு பயம் இருக்கும். மனித நேயம், மனிதாபிமானம் என்று சொல்வோமேயானால் கொலைகாரர்களும், கள்வர்களுக்கும் நம் நாட்டை சின்னாபின்னமாகிவிடுவார்கள் என்பது உறுதி. ராஜீவ் மற்றும் அவருடன் இறந்தவர்களுக்கு நீதி என்பது இவர்கள் மூவருடைய தூக்கு தண்டனை. ஒரு நாட்டை ஆண்ட பிரதமருடைய கொலைக்கு 21 வருட சிறைத்தண்டனை எனில் நாட்டில் உள்ள கயவர்கள் வெடிகுண்டுகளும், அரிவாளுடனும் நாட்டை சீர்குலைக்க கிளம்பிவிடுவார்கள். சிந்தித்து முடிவெடு தமிழா. உன் அரசியல் லாபத்திற்காக நாட்டை சீர்குலைகாதே
U. Moorthy - Toronto,கனடா
2011-09-05 02:51:07 IST Report Abuse
இறந்தவர்களின் சொந்தங்கள் கூறியதை பார்த்தீர்களா? இழப்பு ஏற்பட்டவனுக்குத்தான் அதனுடைய தாக்கம் , சோகம் தெரியும். மற்றவர்கள் எல்லாம் எதோ ஒரு காரணத்திற்காக கூப்பாடு போடுபவர்களே. இதை சொல்லும் போது தமிழ் உணர்வை கொச்சை படுத்துவதாக கூறலாம் . விடுதலை புலிகள் செய்த கொலைகளுக்கு கணக்கே கிடையாது. இருபது வருடங்களுக்கு முன் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் தமிழ்ப் பிரதேசங்களான வடகிழக்கு மாகனங்களிளிருந்து புலிகள் எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு விரட்டியபோது யாரும் மனிதாபிமானம் காட்டவில்லை. அதைப்பற்றி எந்த தமிழ் பத்திரிக்கையிலும் போடப்படவில்லை. எப்படித்தான் இந்த வைகோ , சீமான், நெடுமாறன், ராமதாஸ், கருணாநிதி , போன்றோருக்கு நீதி உணர்வு மனிதாபிமான உணர்வு வருகிறதோ தெரியவில்லை. சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனைதான் சரியானது ஆகும். நாகரிக உலகத்தில் அது சரிப்பட்டு வராது என்பது எல்லாம் பித்தலாடம்.
 
"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா? இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?"-பொன்மொழிகள்
 
Amanullah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்  
2011-09-05 00:20:09 IST Report Abuse
ராஜீவ் கொலையினை மனசாட்சியுள்ள எந்த மனிதனும் ஏற்று கொள்ள மாட்டான். தனக்கு வேண்டாதவர்கள் பலரையும் மிக கொடூரமாக கொலை செய்த பிரபாகரனை தமிழன் என்ற அற்ப காரணத்தினை காட்டி இங்குள்ள பலரும் அவரை உத்தம புத்திரன் என கொண்டாடுவது கொடுமையின் உச்ச கட்டம். போராளிகளுக்கு அழகு போர் களத்தில் தன்னை நேருக்கு நேர் சந்திப்பவனை நெஞ்சில் தாக்கி கொல்வது தானே தவிர இப்படி மனித வெடி குண்டுகளை வைத்து நய வஞ்சகமாக கொல்வது அல்ல. அதுவும் பிரேமதாசாவை கொல்வதற்கு ஒரு சிறுவன் மனித வெடிகுண்டாக பயன்படுத்த பட்டான். அந்த சிறுவனுக்கு அந்த வெடிகுண்டின் தன்மை தெரியுமோ தெரியாதோ என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். மரண தண்டனை கூடாது என்பதில் நமக்கு உடன்பாடு தான். அதே நேரத்தில் இந்த 3 பேரை அப்பாவிகள் என சிலர் கூறுவது எந்த விதத்திலும் ஏற்று கொள்ள முடியாது. மணிசங்கர் அய்யர் கூறியது போல் சாகும் வரை அவர்களை சிறையில் வைக்கலாம்.

விபசார பெண்களின் குழந்தைகளை கொன்று புதைத்த கொடூரம்! 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு


லண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் விவசாய நிலத்தில் மிகத் தொன்மையான சுடுகாடு இருப்பதை கண்டுபிடித் துள்ளனர். இங்கிருந்து குவியல் குவியலாக குழந்தைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களுக்கு பிறந்த குழந்தைகளை கொடூரமான முறையில் கொன்று புதைத்தது தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் பக்கிங்காம்ஷயர், ஹாம்பிள்டன் பகுதியில் விவசாயி ஒருவரின் நிலத்தில் எலும்புக் கூடுகள் இருந்தது தெரியவந்தது. தகவல் அறிந்து அதிகாரிகள் அந்த இடத்தில் ஆய்வு செய்த போது மேலும் ஏராளமான எலும்புக் கூடுகள் இருப்பது தெரிய வந்தது. இப்பகுதியில் இருந்து குவியல் குவியலாக பிஞ்சு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் ரோமானிய காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி ஆராய்ச்சியாளர் சைமன் மேஸ் கூறியதாவது: விவசாய நிலத்தில் இருந்து 97 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாமே குழந்தைகளின் எலும்பு கூடுகள். குழந்தைகளின் எலும்புகள் கண்டறியப்பட்ட யூடன் வில்லா பகுதி, விபசாரம் நடந்த இடமாக இருந்துள்ளது. விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு, கொடூரமான முறையில் அவற்றை கொன்று புதைத்திருக்கின்றனர். குழந்தைகள் எல்லாம் நோயால் பாதிக்கப்பட்டு இறந்ததாக ஒரு கருத்து கூறப்பட்டது. ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை. கருத்தடை பற்றி தெரியாததால், பிரசவ காலம் முழுவதும் காத்திருந்து, குழந்தை பெற்று அதன் பிறகு, ஈவிரக்கமின்றி அவற்றை கொன்றுள்ளனர். எல்லாம் ஏறக்குறைய ஒரே வயது குழந்தைகள் போல உள்ளன.
இவ்வாறு சைமன் கூறினார். இங்கு தொடர்ந்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதில் மேலும் பல தகவல்கள் தெரிய வரும்

கூட்டமைப்பின் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றுள்ளது!யாழ்ப்பாணத்தில்


யாழ்ப்பாணத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இன்று (2011-09-04) தமிழ் அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள், உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்கள், மற்றும் சமயத் துறவிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாண குடாநாட்டில் கடந்த 2வாரகாலமாக நிலவி வரும் பதற்ற சூழ்நிலை விரிவாக விவாதிக்கப்பட்டு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

மர்ம மனிதர்கள் என்று அழைக்கப்படும் அநாமதேய நபர்களின் நடமாட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளால் பொது மக்கள் குறிப்பாக பெண்கள் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதுடன் அதன் தொடர் விளைவாக பல்வேறு இடங்களில் மர்ம மனிதர்களை துரத்தி பிடிப்பதில் ஈடுபட்ட பொதுமக்கள் மோசமாக தாக்கப்பட்டு குடாநாடு முழுவதும் பயப்பிராந்தியின் பிடியில் சிக்கி இருப்பது பற்றியும் மக்களின் இயல்பு வாழ்வு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பது பற்றியும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன

1.குடாநாட்டிலும் மற்றும் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும், மலையகத்தின் சில இடங்களிலும் மற்றும் புத்தளத்திலும் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஐனாதிபதியை நேரில் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதுடன், இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாண சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சமயத் தலைவர்கள், அறிவுஜிவிகள், அரசியல் நடவடிக்கையாளர்கள் என்போரை உள்ளடக்கிய ஒர் குழு கலந்து கொள்ள வேண்டும்.

2.எதிர்வரும் செவ்வாய்க்கிமை (2011-09-06) ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற கூட்ட நடவடிக்கைகளில் தமிழ்த்தேசிய (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்குகிழக்கின் குறிப்பாக குடாநாட்டில் இன்றைய நிலைமை தொடர்பாக பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

3.குடாநாட்டின் இன்றைய நிலைமையில் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை அரசாங்கத்திற்கும் வெளியுலகத்திற்கும் எடுத்துரைக்கும் நோக்குடன் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை யாழ் குடாநாட்டில் உள்ள ஒர் ஆலய முன்றலில் எதிர்வரும் சனிக்கிழமை (2011-09-10) மேற்கொள்ளுவது.

இக் கூட்டத்திற்கு நல்லையாதீன முதல்வர், தென்னிந்திய திருச்சபை பேராயர், பாராளுமன்ற உறுப்பினர்கள் (புலி)சுரேஷ்பிரேமச்சந்திரன்,சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், எம். கே. சிவாஜிலிங்கம், என் .சிறீகாந்தா, தமிழரசுக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். எக்ஸ். குலநாயகம்,; சூழவியலாளர் பொ. ஐங்கரநேசன், யாழ் மாவட்ட உள்ளுராட்சிச் சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், மனிதவுரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். யாழ் மாநகரசபை உறுப்பினர் இரா. சங்கையா வரவேற்புரை நிகழ்த்தினார்

தமிழ் மக்களின் விமோசனத்துக்குப் புதிய பாதை

- இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’
சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. சிங்கள விரோத உணர்வைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற உணர்வு அம்மக்களிடம் தோன்றுவதற்கு இது இடமளித்தது.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என வெவ்வேறு பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஒரே தலைமைப் பாரம்பரியமே தொடர்கின்றது. இக் காலப்பகுதியில் இத்தலைமை அதன் பகிரங்க அரசியல் செயற்பாட்டில் இனப் பிரச்சினையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் உள்ளடக்கவில்லை. அரசியலில் அறுபது வருடங்கள் சாதாரண காலப்பகுதி அல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக கருத்தீடுபாட்டுடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட்டிருந்தால் இக் காலப்பகுதியில் சிறிதளவாவது முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கும். ஆனால், தமிழ் மக்கள் பின்னடைவுகளையே தொடர்ச்சியாக சந்தித்திருக்கின்றார்கள். இழப்புகளும் அழிவுகளுமே அவர்கள் கண்ட பலன். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இதற்கான காரணம் என்னவென்று நிதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சமகால யதார்த்தத்தை விளங்கிச் செயற்படுவதும் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நட்பு சக்திகளைச் சரியாக இனங்காண்பதும் அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமானவை. தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தொடர்ச்சியாகத் தங்களிடம் வைத்திருப்பதில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலுத்தினார்களேயொழிய மேலே கூறிய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. (மேலும்

TNA இனவாதக் கருத்துக்களை விதைத்து பிரசாரங்களை முன்னெடுத்தது


douglas-3010- ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  சண்டே ஒப்சர்வருக்கு வழங்கிய பேட்டி
  • கேள்வி : யுத்தத்தின் பின்னர் அரசு வட புலத்தைக் கட்டியெழுப்பப் பல மில்லியன்களைச் செலவிட்டு அபிவிருத்தியை முன்னெடுத்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்களையும் தீவிரமாகச் செய்து வந்தது. வட புலத் தேர்தல் முடிவுகள் உங்களுக்குத் திருப்தி அளிக்கின்றதா?
பதில் : அரசியல் ரீதியான சில விஷயங்கள் உள்ளன. அவற்றை நாம் நேர்மையாக எடுத்துரைத்தே பிரசாரம் செய்தோம். ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் பிரசாரம் இன உணர் வைத் தூண்டும் வகையில் அமைந்தது. இது தமிழருக்கும் சிங்களவருக்கும் இடை யிலான போட்டிப் பிரச்சினை. தமிழர் வாழ்வதா? சாவதா? என்ற பிரச்சினை. சிங்கள கட்சிக்குத் தமிழன் வாக்களிக்க முடியுமா என்பதை ஒவ்வொரு தமிழனும் சிந்திக்க வேண்டும் என்ற வகை யிலான இனவாதக் கருத்துக்களை விதைத்து பிரசாரங்களை முன் னெடுத்தது.
யாழ். மாநகர சபை யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னனான சங்கிலி யன் சிலையை மீளப்புனரமைத்தது. ஆனால் கூட்டமைப்பின் பிரசாரங்கள் வேறு கண்ணோட்டத்தில் அமைந்தது. அரசு வெற்றி பெறுமானால் இச்சிலை உடைக்கப்பட்டு விடும். அந்த இடத்திலே புத்தரின் சிலையே வைக்கப்படும் என்பதைத் தமிழ் நெஞ்சங்கள் உணர வேண்டும் என்றவாறு துவேஷத்தைக் கிளப்பும் பிரசாரத்தை கூட்டமைப்பு மேற்கொண்டது.
புலம்பெயர் தமிழர் கூட இப்பிரசாரத்துக்கு வழிப்போக நேர்ந்தது. இத்தகைய பொய்ப் பிரசாரத்தால் மருண்ட வாக்காளர்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தனர். அரசுக்குரிய வாக்குகள் குறைவடைந்தன. கூட்டமைப்பின் திட்டமிட்ட பிரசாரங்களால் நாம் தோற்க நேர்ந்தது.
  • கேள்வி : உங்களது கட்சியான ஈ.பி.டி. பி. அரசின் உண்மையான நிலைப்பாட்டை யும் அபிவிருத்தி நோக்கையும் மக்களுக்கு எடுத்துக் கூறி அரசின் மீது நம்பிக்கை ஏற்படுத்த முடியவில்லையா?
பதில் : ஆரம்பத்திலே வெற்றி எமது பக்கம் இருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு 6 அல்லது 7 உள்ளூராட்சி மன்றங்கள் மட்டுமே கிடைக்கும் என நம்பப்பட்டது. ஆனால் இனத் துவேஷப் பிரசாரம் கட்டவிழ்த்து விடப்பட்ட பின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
  • கேள்வி : வடக்கிலே குறிப்பாக யாழ்ப்பாணத்திலே அண்மையில் அசம்பாவி தங்கள் இடம் பெற்றன. இதற்கான காரணம் படையினர் என்றும் உங்களது கட்சியென்றும் குற்றம் சுமத்தப்படுவது பற்றி என்ன கூறவிரும்புகின்aர்கள்?
பதில் : அந்த அசம்பாவிதங்களில் ஒன்று உள்ளூர் பத்திரிகைக் காரியாலயமொன்றின் மீது தாக்குதல். அதே பத்திரிகை அரசியல் அடிப்படையில் தமிழ்க் கூட்டமைப்புக்கு ஆதரவானது. அதன் உரிமையாளர் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர். அண்மையில் அந்தப் பத்திரிகையின் செய்தி ஆசிரியரே தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியவர்கள் அடையா ளம் காணப்பட்டாலும் அதனால் அந்தப் பழி படைகளின் மீதும் எமது கட்சித் தொண்டர்கள் மீதும் போடப்படுகின்றது. அந்த அசம்பாவிதம் பற்றிய உண்மைகள் வெளிவந்துள்ளன.
தற்போது அது தொடர்பான விசாரணைகள் நடைபெறுவதால் அதுபற்றி நான் ஏதும் பேச விரும்பவில்லை. அதற்கு முன்னர் ஒரு பத்திரிகைச் செய்தியாளரும் தாக்கப்பட்டுள்ளார். அவர் பத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டு டியூசன் கொடுத்து வந்துள்ளார். டியூசன் வகுப்பில் படிக்கும் மாணவிகளிடம் பெற்ற பணம் தொடர்பில் ஒரு மாணவியின் சகோதரர்களால் தாக்கப்பட்டுள்ளார். அது தொடர்பான விபரங்களை வெளியிடாமல் படை மீதும் எமது கட்சி மீதும் அநியாயமாகப் பழி சுமத்தப்படுகின்றது. தற்போது எல்.ரி.ரி.ஈ. இல்லாத படியால் இப்பழி சுமத்தப்படுகின்றது. விசாரணைகள் முடிவடைந் ததும் உண்மை வெளிவரும்.
  • கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சில தமிழ் அமைப்புக்களும் வட புலத்தில் இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதாகக் குற்றம் சுமத்துவதில் ஏதும் உண்மை இருக்கிறதா?
பதில் : இல்லை. இந்தக் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை. உண்மையில் என்ன நடைபெறுகின்றதென்றால் இராணு வத்தைப் படிப்படியாகக் குறைத்து பொதுமக்கள் சாதாரண வாழ்வைப் பெற்றுக்கொள்ளவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. படிப்படியாகப் பொது மக்கள் சுயாதீன மான வாழ்வைப் பெற்று அதை அனுபவிக்கின்றார்கள்.
  • கேள்வி : வடக்குக்கான மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சருக்கான வேட்பாளனாகப் போட்டியிட நீங்கள் விரும்புவதாகத் தெரிவிக் கப்படுகின்றது. எந்த அடிப்படையில் இந்தத் தீர்மானத்தை எடுத்தீர்கள் என்று கூறுவீர்களா?
பதில் : வடமாகாண சபையின் முதலமைச்சராக வரவேண்டுமென்ற விருப்பம் எனக்குண்டு. ஆரம்பத்திலிருந்து அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். மாகாண சபைத் தேர்தல் நாளை நடப்பதாக இருந்தாலும் பாராளுமன்றப் பிரதிநிதித்து வத்தை இராஜினாமாச் செய்துவிட்டு நான் தேர்த லில் முதலமைச்சர் வேட்பாளனாகப் போட்டிவிட ஆயத்தமாக இருக்கின்றேன்.
  • கேள்வி : அப்படியாயின் நீங்கள் தேசிய அரசியலை விட்டுவிட்டுப் பிராந்திய அரசியலில் ஈடுபட விரும்புகின்aர்கள் எனக் கருதலாமா?
பதில் : மாதத்தின் இறுதி அமைச்ச ரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு ஜனாதிபதி விடுக்கும் அழைப்பை ஏற்று முதலமைச்சர்கள் அக்கூட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.
மாகாண முதலமைச்சர்களை அமைச்சரவையின் உறுப்பினராக இருக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தைக் கூட அரசு கொண்டு வரக்கூடும். அவ்வாறு நடைபெறுமாயின் மாகாண முதலமை ச்சர்கள் தேசிய ரீதியாகத் தீர்மானங்களை எடுக்க வும், மாகாண அல்லது பிராந் திய ரீதியாக நடைமுறைப்படுத்தவும் வாய்ப்புக் கிடைக்கலாம் அல்லவா? அவ்வாறான நிலையில் தேசிய அரசியலில் இருந்து தூரப்படுவதாக எண்ண முடியாதல்லவா?
  • கேள்வி : வடக்கு, கிழக்கு மக்களுக்கிருந்த ஒரே பிரச்சினை எல்.ரி.ரி.ஈ. யின ரின் பயங்கரவாதம் தான். அவர்கள் தோற்கடிக் கப்பட்டதால் தமிழ் மக்க ளுக்குத் தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகின்றது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : எனது கருத்துப்படி தமிழ் மக்களுக்கு இரு பிரச்சினைகள் இருந்தன. ஒன்று பயங்கர வாதப் பிரச்சினை. அது ஒழிக்கப்பட்டு விட்டது. அடுத்தது அரசியல் ரீதியான பிரச்சினை. பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயபூர்வ மான தீர்வுகாண அரசு நடவடிக்கை எடுக்கிறது. தெரிவுக்குழு மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையும் தீர்ந்துவிடும் என்று நம்பலாம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரிவரத் தீர்க்கும் தகைமை பாராளுமன்றத் தெரிவுக்குழு வுக்கு இருக்கின்றது என்றே நான் திடமாக நம்பு கின்றேன். குழுவின் தீர்மானங்கள் சட்டவாக்கம் பெற்று அரசினால் நடைமுறைப்படுத் தப்படும்.
  • கேள்வி : பாராளுமன்றத் தெரிவுக் குழு எப்போது நியமிக்கப்படும்?
பதில் : இந்த மாதக் கடைசியில் அல்லது அடுத்த மாதம் அதனை அமைப்பதற்கான ஒழுங்குகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
  • கேள்வி : இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லை தாண்டி அத்து மீறிப் பிரவேசித்து மீன்பிடிப்பதுதான் வடக்கிலுள்ள மீனவர்களுக்கான பிரதான பிரச்சினை. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சிகள் எதுவும் இதுவரை பயனளிக்கவில்லை. காலத்துக்குக் காலம் இரு நாட்டு மீனவர்களுக்குமிடையேயான இப்பிரச்சினை முற்றிக் கொண்டு வருகின்றது. இதை எவ்வாறு தீர்க்கலாம் என்பது பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : இரு நாட்டு மீனவ சமூகங்களும் சந்தித்து இப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இரு நாடுகளுக்குமிடையிலான பொதுவான கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டுமென்றும் இரு பகுதி மீனவர்களும் சண்டை, அடிதடி வன்முறையில் ஈடுபடாமல் புரிந்துணர்வுடன் தொழிலை மேற்கொள்ள வேண்டுமெனவும் பேசப்பட்டன. ஏற்கனவே இவ்வாறு உடன்பாடு கண்ட விஷயத்தை அரசுகள் இரண்டும் கவனத்தில் எடுத்து அமுல்படுத்த வேண்டும்.
  • கேள்வி : ஆனால் அரசும் அரசும் பேசி இவ்விடயத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் சில தோல்வியில் முடிவுற்றனவே?
பதில் : இரு அரசுகளும் ஒன்றிணைந்து பேசி பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சூழ்நிலைகள் இருந்தன. அவ்வேளை இருந்த பயங்கரவாத சூழ்நிலை காரணமாகவே அம்முயற்சிகள் தோல்வியுற்றன. கடலில் பயங்கரவாதப் பிரச்சினைகள் இருந்த வேளைகளில் பாதுகாப்புக் கருதி மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதை அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக் கடல் எல்லையுள் வந்து இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு வசதியாக அமைந்தது.
இலங்கை மீனவர்கள் தற்போது மீன்பிடிக்கத் தடையேதும் இல்லையாதலால் அவர்கள் தொழிலில் ஈடுபடும் இடத்துக்கு இந்திய மீனவர்கள் வருகிறார்கள். இந்திய மீனவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்து இலங்கைக் கடல் எல்லை தாண்டாமல் தமது தொழிலைச் செய்ய வேண்டும். அரசுகள் இரண்டும் பேசிக் கண்டு கொண்ட இணக்கப்பாடு அம்சங்களுக்கு மதிப்பளித்து இரு பகுதி மீனவர்களும் செயல்பட வேண்டும்.
  • கேள்வி : தமிழக அரசு இலங்கைக்கு எதிராக எடுக்கும் தீர்மானங்கள் இலங்கை - இந்திய நல்லுறவைப் பாதிக்கும் சாத்தியங்கள் உள்ளனவா?
பதில் : இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றோ அல்லது கச்சதீவு தொடர்பான தமிழ் நாட்டு அரசியல் தீர்மானங்கள் இந்திய - இலங்கையின் நல்லிணக்கம் நல்லு றவை எந்த வகையிலும் பாதிக்காது.
  • கேள்வி : ஏற்கனவே சர்வகட்சி மாநாடென்றும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவென்றும் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முயற்சிக்கப்பட்டது. முன்னைய நடவடிக்கைகளுக்கும் தற்போது அரசினால் அமைக்கப்படவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு மிடையே என்ன வேறுபாடுகள் உள்ளனவென்று கூறுவீர்களா?
பதில் : முன்னர் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு திட்டமான ஒரு குறிக்கோள் இல்லை. காலவரையறையும் இல்லை. ஆனால் ஜனாதிபதி அமைக்கவுள்ள பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு ஒரு காலவரையை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பிட்ட காலத்துள் பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது. எல்.ரி.ரி.ஈ. தற்போது இல்லாத சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் புலிகளின் நெருக்குதல் இன்றிச்சுயமாகவும், சுயாதீனமாகவும் தீர்மா னங்களை மேற்கொள்ளவும் நடவடிக்கையில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது.
அரசுக்கு மூன்றிலிரண்டு பலமும் பாராளுமன்றத்தில் இருக்கின்றது. எனவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களைப் பாராளுமன் றமே இலகுவாக அரசியல் சட்டமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் வசதிகள் உள்ளன. அமைக்கப்படவுள்ள இத் தெரிவுக் குழு தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்க மேற்கொள் ளும் தீர்மானங்களை அமுல்படுத்தத் தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள் ளார். எனவே பாராளுமன்றத் தெரிவுக்குழு மூலம் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கலாம்.
  • கேள்வி : குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசுடன் நீங்கள் எவ்வாறான உறவைப் பேணி வருகின்aர்கள்?
பதில் : தமிழ் நாட்டு அரசுடன் விசேடமாக எந்த உறவும் எமக்கில்லை. எனினும் அரசியல் விஷயங்கள் தொடர்பாக இந்திய மத்திய அரசியல் வாதிகள் சிலருடன் நான் பேச்சுவார்த்தைகளை நடத்தியதுண்டு.
  • கேள்வி : தமிழ்க் கூட்டமைப்புடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?
பதில் : அவர்கள் ஒரு காலக்கெடுவை விதித்துள்ளார்கள். அரசு அதற்கு முக்கியத்து வம் அளிக்கவில்லை. இந்தப் பிச்சினையைத் தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் தமிழ்க் கூட்டமைப்புக்கு இல்லையென்றே நான் கருதுகின்றேன். பிரச்சினையை இழுத்தடிப்ப தையே அவர்கள் விரும்புகின்றார்கள். அதுதான் அவர்களது அரசியல் போக்கு. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அவர்கள் கலந்தாலோசிப்பதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. ஆனால் மாற்று நடவடிக்கை ஏதும் சாத்தியமில்லை. அவர்கள் அரசுடன் பேசியே பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். அதைவிட வேறு வழியில் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.
  • கேள்வி : வடபுலத்திலும் வன்னியிலும் மீளக்குடியேறிய மக்களுக்கு அரசின் உதவி நிறுத்தப்பட்டதால் மக்கள் கஷ்ட துன்பங்களை எதிர்கொள்வதாகப் பத்திரிகைச் செய்திகள் வெளி வருகின்றன. அதில் உண்மை இருக்கின்றதா?
பதில் : அரசு உதவிகளை வழங்குவதில் சில இடங்களில் சில வேளைகளில் காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. எனினும் மீளக் குடியேறிய மக்களுக்கு முடியுமான அளவு அடிப்படை வசதிகளை அரசு செய்து வருகிறது. மக்களின் வாழ்வு சீரடைய அரசு இயன்றவரை உதவி வருகிறது. அரசு உதவிகள் எங்கேயும் எவ்வேளையிலும் நிறுத்தப்படவில்லை.
  • கேள்வி : வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வது பற்றிய உங்களது திட்டங்கள் எவை? எவ்வாறான திட்டங்களை நீங்கள் அமுல்படுத்த இருக்கின்aர்கள்?
பதில் : வடக்கின் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வடக்கில் இருந்த கைத்தொழில் நிலையங்களை மீளமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மீளக் குடியமர்ந்த மக்கள் தொழில் வாய்ப்பைப்பெறத் தனியார் அமைப்புகளைக் கொண்டு புதிய கைத்தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் இருக்கிறோம். மக்களது தொழிலில்லாப் பிரச்சினை தீர எமது புதிய முயற்சிகள் பெரிதும் பயன்படும்.
அச்சுவேலிக் கைத்தொழில் பேட்டையின் புனரமைப்புக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செய்வதன் மூலம் அப்பேட்டையை சிறப்பாக இயங்க வைக்க முடியும். போக்குவரத்தை இலகுபடுத்த வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. ஆனையிறவு உப்பளத்தையும் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையையும் புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இது போலவே வடக்கில் வளத்தை மேம்படுத்தப் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
-தினகரன் -

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் 3 இல் நடக்கும் பித்தலாட்டம்



விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்ஸ் 3 இல் நடக்கும் பித்தலாட்டம்.ரசிகர்கள் உலக அளவில் கண்டனம்.
விஜய் டிவி இவ்வளவு தரம் தாழ்ந்து போட்டியாளர்களை பணத்திற்கோ வேறு எதோ காரணத்துக்காகவோ பொருத்தமில்லாத பாடகர்களை தெரிவு செய்கிறார்கள். சாய் சரண் மாளவிகா போன்ற உன்னத பாடகர்களை எலிமினேட் செய்துவிட்டு பூஜாவுக்கு பாராட்டோ பாராட்டோ அடுத்தது சத்யப்ரகாஷ் இந்த இருவரையும் உன்னிக்ரிஷ்ணன் ஸ்ரீகாந்த் போன்ற நீதிபதிகள் தெரிவுசெய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும் அதாவது உன்னிக்கும் ஸ்ரீகாந்துக்கும் சாய்சரண்,மாளவிகா   போன்றோர்மீது பொறாமை. இளம் பாடகர்களான இருவரும் தங்களை விட சிறந்தவர்கள் என்ற உண்மையை தாங்கமுடியாத பொறாமை. இந்த கருத்தை ரசிகர்கள் எல்லோருமே கூறுகிறார்கள்.

Very Unfair the way Sai Charan got eliminated for Top 2, Puja is not a versatile singer and Sathya Prakash is ok, but he sings all songs with Karnatic accent, Sai Charan is the best. He sings verity of songs and very capable of singing any chalanging songs. I wish him all the best.
Posted by Shanti on 01 Sep 2011 04:00 AM 
I think Mr. Unni likes Pooja and Srinivasan likes Satya. The final three contested foour events and Sai own two. The final event Sai own and Pooja did well. Satya should be third but the judges came up with .5 score. That is real stupid on the judges part. I hate the judges. All the judges are one dimensional not wualified to judge the talented singers.
Posted by Kevin on 01
My name is Saroja Thanabalasingam and I am from Canada. For a year, I have been a religious viewer of your show, Super Singer. I am writing this as I watch your semi-final episode. Recently, my family is starting to strongly feel that the show is running on a biased term. We can’t help but notice how the judges seem to overly favour the contestant Pooja. It seems as the marks awarded to her do not reflect the judges’ comments. Let’s take the semi-final episode as an example since it is the one that is fresh in my mind. During each of the rounds the judges seemed to note that while Pooja did a ‘good’ job, there were still many aspects and specifications on which she could improve on. However, when the time came to announce marks, Pooja received great marks. We noticed that when Satya Prakash and Sai Charan were performing, the judges noted that both contests had few flaws but still awarded them with low marks. To the viewers it seems as if the judges enjoy showering Pooja with marks. It really makes us question the integrity and reliability of this program. We wonder if the competition is ‘rigged’. And trust me, we are not the only one who feel this way; on many sites, I have encountered many furious viewers who have been blasting very detailed comments about the bias in your show. I’m not writing this letter to accuse your show of being conducted in an ill-manner; I am writing this letter to let you aware of what the viewers think of your judging methods. Please take this into consideration. If you disregard this letter; take my word for it; you will regret it. By the way, please teach your hostess Divya how to not reveal her personal bias when anchoring. Honestly, it is truly irritating.
Posted by Saroja
I've been watching Super Singer 3 from the beginning. Great singers by budding artists. However, one thing you cannot miss here is how the judges are extremely biased. They has been discrimination all along, and promotion of certain favorites. I definitely thought that Pooja would go to the finals, based on favoritism, inspite of the fact that there were others who were better than her. Saicharan's elimination, giving some unworthy reasons confirmed what I believed in. Great singers, but unfair judges who have made their mind beforehand. I watch the program only to watch the amazing talent, knowing very well that the judgement is biased and skewed
Posted by KC o

மங்காத்தாவுக்கு மட்டக்களப்பில் பால் அபிஷேகம் (வீடியோ இணைப்பு)


Colombo - Mankatha Celebrations

தல தேசிய தலமட்டக்களப்பு – செங்கலடி செல்லம் திரையரங்கில் மங்காத்தா திரைப்படம் திரையிடப்பட்டது. குறித்த திரைப்படத்தை பார்க்க ஆவலாக இருந்த ரசிகர்கள் திரையரங்கை சூழ்ந்த நிலையில் கதாநாயகள் அஜித்குமாரின் கட்அவுட்க்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பாலாபிஷேகம் செய்வதையும் திரையரங்கில் கூடியிருந்த ரசிகர்களின் ஒரு தொகுதியையும் படங்களில் காணலாம்.
தமிழ் நாட்டில்,   புதுப்படங்கள்  வெளியாகும்  போது  அந்த படத்தில்   கதாநாயகனாக  நடிக்கும்  நடிகரை   தலைவராக  அல்லது  கடவுளாக  ஏற்றுக்கொண்ட   (மடமைதனமான)   ரசிகர்கள்  பாலாபிஷேகம்   செய்ததாக    நாம் கேள்ளிவிப்பட்டிருக்கிறோம்.     ஆனால்  இதே மாதிரியான  மடைமைத்தனமான  பாலாபிஷேகம்  செய்யும்  நடவடிக்கை   மட்டக்களப்பிலும்  மங்காத்தா  திரைப்படம்   திரையிடப்பட்ட போது  நடந்திருப்பது  விசித்தரமாக  இருக்கிறது.
முதன்  முதலாக  இந்தமாதிரியான  செயல்கள்   இலங்கையில்  நடப்பது  நமக்கு ஆச்சரியம், 

குஷ்புவுக்கு சென்னை மேயராகும் வாய்ப்பு!


நடிகை குஷ்புவுக்கு சென்னை மேயர் ஆகும் வாய்ப்பினை வழங்க திமுக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தி.மு.க.வில் சேர்ந்த குஷ்புவுக்கு முந்தைய அரசில் அமைக்கப்படவிருந்த மேலவையில் பதவி வழங்கப்படலாம் என்று முதலில் கூறப்பட்டது.
மேலவை கொண்டு வருவதற்கு முன்பே தேர்தல் வந்து விட்டதால், தேர்தலில் எம்.எல்.ஏ. சீட் வழங்கப்படும் என்று பேசப்பட்டது. ஆனால் எந்த தொகுதியும் குஷ்புவுக்கு வழங்கப்படவில்லை.   அதேநேரம் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் குஷ்பு.
தேர்தல் பிரசாரத்தில் வடிவேலுக்கு போட்டியாக களமிறங்கி பணியாற்றிய குஷ்பு, தேர்தல் தோல்விக்குப் பிறகும் வடிவேலு போல ஒதுங்கி இருக்காமல், கட்சிப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேலைப்பாடுகள், அனைத்து கட்சியிலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்ததந்த கட்சியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது.
சென்னை மாநகராட்சி தேர்தலில், திமுக சார்பாக யாரை நிறுத்தலாம் என்று பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அதில் திமுகவுக்காக தொடர்ந்து பணியாற்றும் குஷ்புவை நிறுத்தினால் என்ன…? என்று யோசித்துக் கொண்டிருக்கிறதாம் தலைமை
98 views

தில்லி போலீசில் 85 ஆயிரம் வழக்குகள் நிலுவை

புதுதில்லி, செப்.4: தில்லி போலீசில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் பதிவுசெய்யப்பட்ட 1.81 லட்சம் வழக்குகளில் 85 ஆயிரத்து 596 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.தடயவியல் சோதனை, புகார்தாரர்களின் ஒத்துழைப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக 85 ஆயிரத்து 596 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன. 96,201 வழக்குகளில் துப்பு துலங்கப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளன என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

உள்ளாட்சித் தேர்தலில் பாமக-விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணி?

: உள்ளாட்சித் தேர்தல் பணிகளின் கட்சிகள் பரபரப்பாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்களிடம் இருந்து விருப்ப மனுக்களைப் பெறத் தொடங்கிவிட்டன.  இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக அணிகள் சட்டசபைத் தேர்தலில் எதிர்கொண்டதுபோல் கூட்டணி அமைத்து போட்டியிருகின்றன. பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் களம் கண்ட பாமக, தாங்கள் சந்தித்த படுதோல்விக்குப் பிறகு, திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டதால், இந்த முறை தனியாகக் களம் காண்கிறது. இருப்பினும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் என்ற வகையில் திருமாவளவனுடன் நட்புறவு கொண்டிருப்பதால், பாமக., விடுதலைச் சிறுத்தைகளுடன் இணைந்து போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு கட்சி வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் தற்போதுள்ள சூழ்நிலையில் வெளியேறி வருமா என்ற கேள்வியும் பாமகவில் எழுந்துள்ளது.

dinamalar மரண தண்டனை: அரசியல் சலசலப்பு

சென்னை:ஈழப் பிரச்னையைக் கொண்டு மீண்டுமொரு அரசியல் களம், தமிழகத்தில் சலசலப்பாகி வருகிறது. ஈழத்தில் உள்ள தமிழர் நலனைத் தாண்டி, இந்தியாவின் இளைய தலைவர் என மக்களால் போற்றப்பட்ட ராஜிவை கொன்றவர்களைக் காப்பாற்ற, இன்று குரல் எழுப்புகின்றனர்.இன்று இவர்களுக்கு மன்னிப்பு அளித்தால், தேச விரோத சக்திகளுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் ஊறு செய்பவர்களுக்கும், ஊக்கம் அளிப்பது போல் ஆகிவிடும் என, எதிர்ப்புக் குரலும் மற்றொருபுறம் ஒலிக்கிறது.
அதே சமயம், அன்னா ஹசாரே ஊழல் எதிர்ப்பு பற்றி இளைய தலைமுறையினர் காட்டிய ஆர்வத்தில், பத்தில் ஒரு பங்கு கூட இதற்குக் காணோம்.மூன்று பேருக்குத் தண்டனைக் குறைப்பு என்பது, தமிழக கட்சிகளின் பிரதான பிரச்னையாகி உள்ளது. ஆளும் கட்சி முதல், சிறு கட்சிகள் வரை, தூக்குத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பா.ஜ., மார்க்சிஸ்ட் கட்சிகள், மரண தண்டனைக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்கின்றன. நளினி தூக்கை நிறுத்த உதவிய தி.மு.க., மற்ற மூன்று பேர் விஷயத்தில் அப்போதே அக்கறை காட்டாதது ஏன் என்று, மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்கிறார். காங்கிரசை பொறுத்தவரை, தங்களது தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்பு அளிக்கக் கூடாது என்பதில், உறுதியாக இருக்கிறது. ஆனால், அதை வெளிப்படையாக பேச அச்சப்படுகிறது.காங்கிரசின் முக்கிய கூட்டாளியான தி.மு.க.,வோ, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிறது. "21 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனையை அனுபவித்து விட்டனர்.

இதையே, அவர்களின் அதிகபட்ச தண்டனையாகக் கருதி, மூவரையும் விடுதலை செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்துகிறார். காங்கிரசின் தயவு தேவையில்லை என்ற நிலையிலிருந்தே, இப்பிரச்னையை தி.மு.க., அணுகுகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எதுவெல்லாம் நடக்கக் கூடாது என தி.மு.க., நினைத்ததோ, அதுவெல்லாம் நடந்து விட்டது. இனி, காங்கிரசின் தயவு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன என்று தான், தி.மு.க., கருதுகிறது. அதுவும், நில மோசடி வழக்குகளில் அடுத்தடுத்து தி.மு.க.,வினர் கைது என்ற நிலையில், "தமிழர் நலன்' என்ற பேச்சில் களமிறங்கி சலசலப்பை ஏற்படுத்துகிறது.
ஒருவேளை, கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றினால், அதையே தமிழர்களுக்குச் செய்த தியாகமாக வெளிப்படுத்தவும், தி.மு.க., தயாராக உள்ளது. ஆனால், காங்கிரஸ் இவ்விஷயத்தில் மவுனம் சாதிக்கிறது.

மூவரின் தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என எழுந்துள்ள நெருக்கடியால் தான், சட்டசபை தீர்மானம் வரை அ.தி.மு.க., சென்றுள்ளது. ஆனால், அதனால் பயன் பெரிதும் இருக்காது என்பதை, மத்திய சட்ட அமைச்சர் குர்ஷித் வெளிப்படையாகக் கூறிவிட்டார். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை, தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கூடாது என்கிறது. அதன் தமிழ் மாநில குழுவோ, "தூக்கு தண்டனைக்கு மக்களிடம் எதிர்ப்பு உள்ளது. தண்டனை குறைப்பு வேண்டி கோர்ட்டை அணுகியுள்ளனர். முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்' என, குழப்பமான கருத்தைக் கூறுகிறது.இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி பற்றியெல்லாம் கவலைப்படாமல், தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என வலியுறுத்துகின்றன. பொதுவாக, மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், மக்கள் மன்றத்தில் அன்னியப்பட்டு விடுவோமோ என்ற எண்ணம், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் ஏற்பட்டுள்ளது.

ராஜிவ் கொலைக்குப் பின், விடுதலைப் புலிகள் ஆதரவு, ஈழப் போராட்ட ஆதரவு என்ற நிலையிலிருந்து, தமிழக கட்சிகள் விலகியே இருந்தன. இன்று, சிலர் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர். ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் நலன் என்பதை வேறுவிதமாகவும், பயங்கரவாதச் செயலால் நடந்த ராஜிவ் படுகொலை என்பதை வித்தியாசமாகவும் அணுகும் போக்கு, மக்களிடம் தெளிவாக இருக்கிறது.மூன்று பேரையும், 11 ஆண்டுகளுக்கு முன் தூக்கிலிட்டிருந்தால், அப்போது, இந்தளவிற்கு எதிர்ப்பு வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஏனென்றால், 11 ஆண்டுகளுக்கு முன் தமிழக கவர்னரிடம், மூவரும் கருணை மனு அளித்தனர். இதை, தமிழக அரசு நிராகரித்தது. "அப்போது நிலவிய சூழலில், வேறு முடிவை எடுக்க முடியவில்லை' என, அப்போது முதல்வராக இருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியது கருத்தில் கொள்ளத்தக்கது.எஸ்.திருநாவுக்கரசு