திங்கள், 1 ஆகஸ்ட், 2011

போர்க் குற்ற வீடியோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் முரளி


பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவை ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிபரப்பியமையை ஆட்சேபித்து இலங்கையர்களில் ஒரு சாரார் மெல்பேர்ன் சதுக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டனர்.
இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள், சனல் 4, ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியோருக்கு எதிராக சுலோக அட்டைகளை கைகளில் ஏந்திக் கொண்டு பலத்த எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினர்.

இலங்கை கிறிக்கெற் அணியின் நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் படத்துடன் கூடிய சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தி இருந்தமையை காண முடிந்தது.
நாங்கள் தமிழரான முரளியை நேசிக்கின்றோம்..... ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமே கண்ணைத் திறந்து பார் என்கிற அர்த்தப்பட இச்சுலோக அட்டைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது

வயித்தெரிச்சலில் வதந்தியைப் பரப்புகிறார்கள்: குத்து ரம்யா

கன்னடத்தில் நம்பர் 1 நடிகையாக இருக்கும் குத்து ரம்யா எனப்படும் திவ்யா ஸ்பாந்தனா தான் சம்பளத்தை உயர்த்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இன்றைய தேதிக்கு கன்னட சினிமாவில் நம்பர் 1 நடிகை திவ்யா ஸ்பாந்தனா. அவர் சினிமாவில் மட்டுமல்ல பிரச்சனைகள் மற்றும் வதந்திகளில் சிக்குவதிலும் நம்பர் 1 தான்.

அண்மையில் தான் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் பெரிய பிரச்சனையாகி இறுதியில் கன்னட நடிகர் அம்பரீஷ் தலையிட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார்.

திவ்யா நடித்து அன்மையில் வெளிவந்த ‘ஜானிமேரா நாம்', ‘சஞ்சு வெட்ஸ் கீதா' ஆகிய படங்கள் ஹிட்டாகிவிட்டன. இதனால் திவ்யா தனது சம்பளத்தை ரூ. 27 லட்சத்தில் இருந்து 32 லட்சமாக உயர்த்திவிட்டார் என்று கூறப்படுகின்றது.

திவ்யாவுக்கு அடுத்தபடியாக சம்பளம் வாங்குபவர் பிரியாமணி. பூஜா காந்தி ரூ. 22லட்சமும், பாவனா ரூ. 15 லட்சமும் வாங்குகிறார்களாம்.

என்ன திவ்யா திடுதிப்புன்னு சம்பளத்தை உயர்த்திட்டீங்களாமே என்று கேட்டதற்கு,

நான் எதைப்பற்றியும் பேச விரும்பவில்லை. முதலில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுடன் நான் அடிக்கடி தகராறு செய்வதாக சொன்னார்கள். அடுத்து என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாய் பரப்பிவிட்டார்கள்.

அவர்கள் அத்தனை செய்தும் நான் வெற்றிகரமாகத் தான் உள்ளேன். நான் நடிக்கவிருக்கும் ‘காந்தி நகர மகாத்மே' இந்திய சினிமாக்களில் முக்கியமானது. அதில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை பொறுக்க முடியாமல் தான் சிலர் என்னைப் பற்றி வதந்திகளைப் பரப்புகிறார்கள்.

இதில் சில நடிகைகளுக்கும் பங்கு உள்ளது என்று எனக்கு தெரியும். விரைவில் அவர்களை சந்திப்பேன். என் மார்க்கெட்டுக்கு ஏற்பத் தான் சம்பளம் வாங்குகிறேன் என்றார்.

கன்னடத்தில் நம்பர் 1 நடி்கையாக இருந்தாலும் தமிழில் இப்போது பெரிய அளவில் நடிப்பதில்லை திவ்யா என்கிற ரம்யா.

கட்டை பஞ்சாயத்து சுப இளவரசன் கைது கார் கடத்தல் கண்டுபிடிப்பு


தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுபா இளவரசனை கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் சுபா இளவரசன். தமிழ்நாடு விடுதலைப்படை எனப்படும் தமிழ் தீவிரவாத அமைப்பின் தலைவராக விளங்கிய சுபா இளவரசன், கடந்த கால அ.தி.மு.க., அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சில ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி வெளியே வந்த சுபா இளவரசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் நீதிக்கட்சி எனப்படும் புதிய அரசியல் கட்சியை துவக்கி செயல்பட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஓசூரில் காணாமல் போன ஒரு கார் சென்னையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கியது.

அந்த கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், மேற்கண்ட காரை ஓசூரிலிருந்து சுபா இளவரசன் ஆட்கள் தான் கடத்தி வந்தனர் என தெரியவந்தது.
இதையடுத்து மாலை ஜெயங்கொண்டத்துக்கு வந்த கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்படை போலீசார், ஜெயங்கொண்டம் போலீஸ் டி.எஸ்.பி., செல்லமுத்து உள்ளிட்ட போலீசார் உதவியுடன், ஜெயங்கொண்டம் புதிய மார்க்கெட் தெருவில் உள்ள சுபா இளவரசன் வீட்டுக்கு சென்று, அங்கிருந்த சுபா இளவரசனை கைது செய்து கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றனர்.  

ஞாயிறு, 31 ஜூலை, 2011

ஆனந்தசங்கரி: 9 ஆசனங்களை 6 ஆகக் குறைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது

101ல் 7 - 225ல் 6 என்பது கேலிக்கூத்து

1947ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்ற போது 101 பேர் இருந்த சபையில் 7 பேர் யாழ் மாவட்டத்திற்கு இருந்த நிலையில் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே சபையில் 225 ஆசனங்களுக்கு 6 ஆசனங்கள் மட்டுமே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்கு கிடைக்க இருப்பது வெறும் கேலிக்கூத்து என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தேர்தல் ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

அவர் தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதம் வருமாறு:-

யாழ் தேர்தல் மாவட்டத்தின் 9 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை ஆறாக குறைக்க தாங்கள் எடுத்த தீர்மானம் எனக்கு பெரும் ஆச்சரியத்தைத் தருகின்றது. இந்த விடயத்தில் மாறாட்டம் தேவையில்லை. யாழ் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டம் ஆகியவை இணைந்த யாழ் தேர்தல் மாவட்டத்தைக் குறிப்பிடுகின்றீகள் என்று நான் நம்புகின்றேன்.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து கிளிநொச்சி பிரிக்கப்படுவதற்கு முன்னர் யாழ்மாவட்டத்திற்கு இருந்த பிரதிநிதித்துவம் 11 ஆகும். ஒரு கட்டத்தில் வடக்கே சீரற்ற நிலைமை காரணமாக இரு ஆசனங்கள் குறைக்கப்பட்ட போது யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை.

தற்போது தாங்கள் 9ல் இருந்து ஆசனங்களை 6 ஆகக் குறைப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 1948ம் ஆண்டு நாடு சுதந்திரமடைய முன்னோடியாக இலங்கைப் பாராளுமன்றத்தின் முதல் தேர்தல் 1947ம் ஆண்டு நடைபெற்ற போது 95 ஆசனங்கள் தேர்தல் தொகுதிரீதியாகவும் 6 ஆசனங்கள் பிரதிநிதித்துவப்படாதவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக என மொத்தம் 101 ஆசனங்களில் யாழ் மாவட்டத்திற்கு மட்டும் கிடைத்த ஆசனங்கள் 7 ஆகும்.

சட்டரீதியான சரி, பிழை ஒருபுறம் இருக்க 101 பேர் இருந்த சபையில் 7 பேர் யாழ்மாவட்டத்திற்கு இருந்த நிலையில் 64 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே சபையில் 225 ஆசனங்களுக்கு 6 ஆசனங்கள் மட்டுமே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்திற்கு கிடைக்க இருப்பது வெறும் கேலிக்கூத்தாக எனக்குத் தோன்றுகின்றது.

இந் நிலையை நோக்கும் போது ஏதோ ஒரு தப்பான கணக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பரிகாரம் தேட நல்ல சில சிபாரிசுகளை ஐனாதிபதிக்கு அளித்து நிலைமையை சீராக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.

அவ்வேளையில் பின்வரும் விடயங்களும் கவனத்திற்கு எடுக்கப்பட் வேண்டியவையாகும்.

1. இடம் பெயர்ந்து தெற்கில் குடியேறியவர்கள் பலர் படிப்படியாக தமது வீடுகளுக்கு வந்து குடியேற இப்போதுதான் ஆரம்பித்துள்ளார்கள்.

2. நீங்கள் நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ள புதிய வாக்காளர் இடாப்பு தயாரிக்கப்பட்ட போது இடம் பெயர்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் வீடு திரும்பவில்லை.

3. பயம் காரணமாகவும் போதிய வசதிகள் இன்மை காரணமாகவும் வீடுகள் மனிதர்கள் குடியேறி வாழ முடியாத நிலையில் உள்ளதாலும் தம் வீடுகளுக்குச் செல்ல தயக்கம் காட்டுகின்றார்கள். அனேக வீடுகள் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அகப்பட்டுள்ளதாலும் மேலும் வீடுகள் இராணுவத்தினர்; பலாத்காரமாக பிடித்து வைத்துள்ளமையினாலும் அனேகர் மீளக்குடியேறவில்லை.

4. சொத்துக்கள் அனைத்தையும் இழந்தும் உயிர் உட்பட எதுவித நட்ட ஈடுகள் பெறாத மக்கள் வாழ வழியின்றி குடியேற முடியவில்லை.

5. யுத்தத்தில் உயிரிழந்த மக்களின் புள்ளிவிபரம் இன்மையால் இவற்றுள் அடங்கும் வாக்காளர்களின் நிலைமை என்னவென்று தெரியாமை மற்றும் காணாமால் போனவர்கள், கடத்தப்பட்டவர்களின் நிலைமை என்னவென்று தெரியாமல் உள்ளமையால் வாக்காளர்களின் பதிவில் சரியான கணக்குச் சொல்ல முடியாமல் உள்ளது.

6. வீட்டுத் தலைவர் தடுப்புக்காவலில் உள்ளமையால் குடும்பத்தவர் சொந்த வீட்டுக்கு போகமுடியாத நிலைமை.

7. குடிசன மதிப்பீடு எடுத்துக்கொண்டிருக்கின்ற நிலைமையில் பழைய அரசியல் சாசனத்தில் இருந்தமை போன்று கணக்கெடுப்;பு முடிந்த பின் தொகுதி நிர்ணயக் குழு நியமிக்கப்பட்டு அக்குழு முடிவுகளை எடுக்கலாம்.

8. எல்லாவற்றிற்கும் மேலாக தாங்கள் எடுக்க இருக்கின்ற நடவடிக்கை நாட்டில் நிலைமையை மேலும் மோசமடையச் செய்வதோடு இனப்பிரச்சனை தீர்வை பின் தள்ளி விடும்.


ஆகவே பூரணமான சகஐ நிலை ஏற்படும் வரைக்கும் முறையற்ற குடியேற்றங்கள் வாபஸ் பெறப்படும் வரைக்கும் தற்போது இருக்கும் நிலையை தக்கவைத்து, பொதுசன வாக்கெடுப்பினைத்; தொடர்ந்து உருவாக்கப்படும் தொகுதி நிர்ணயக்குழு தீர்மானிக்கும் வரை அங்கத்தவர்களின் எண்ணிக்கையை 225 ஆகவே இருக்குமாறு ஆலோசனையை அரசுக்கு வழங்கி இவ்விடயத்தில் முன்யோசனையோடு செயற்பட்டால் பாரிய விளைவுகளைத் தவிர்க்கலாம்.

மலேசியாவில் இருந்து இலங்கையர் இருவர் திருப்பி அனுப்பப்படலாமாம்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளவர்களின் விபரம் குறித்து மலேசியா நாளை அறிக்கை விடுக்கவுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எடியூரப்பா.ஷிமோகா ராசி: மூன்று முதல்வர்களும் பாதியிலேயே

பாரதிய ஜனதா மேலிடத்தில் இருந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் முதல்வர் பதவியில் இருந்து விலகியுள்ள எடியூரப்பா, கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியை சேர்ந்தவர். ஷிமோகா பகுதியில் இருந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து முழு ஆட்சிக்காலமும் பதவியில் நீடிக்காத மூன்றாவது முதல்வராகவும் அவர் ஆகியுள்ளார். எஸ்.பங்காரப்பா, ஜே.எச்.பட்டேல் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெறும் மற்ற இருவர்.பங்காரப்பா, காங்கிரஸில் இருந்தபோது, 1990இல் முதல்வரானார். ஆனால், காங்கிரஸ் மேலிடத்தின் வற்புறுத்தலை அடுத்து, 1992இல் பதவி விலகினார். தேவகவுடா பிரதமர் பதவிக்கு தேர்வானதை அடுத்து, அவருக்குப் பிறகு முதல்வராக 1997ல் கர்நாடக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் பட்டேல். ஆனால், அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளால் 1999ல் அவர் அரசு கவிழ்ந்து, முதல்வர் நாற்காலியை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.இன்னும் கர்நாடகத்தில் முதல்வர் பதவியை முழுதாக முடிக்காமல் பதவி விலகிய இருவரில் ஒருவர் தரம் சிங். இவர் கங்கிரஸ் - ஜேடிஎஸ் கூட்டணி முதல்வராகப் பதவியில் இருந்தார். ஆனால் ஜேடிஎஸ் காலை வார, தரம்சிங் பதவியில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று. அடுத்து, 2007ல் குமாரசாமி ஜனதா தள(ம) பாஜக கூட்டணி முதல்வராக இருந்தார். கூட்டணிக் குழப்பத்தால் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொள்ள அவரும் பதவியில் இருந்து இறங்க வேண்டியதாயிற்று.தென்மேற்கு கர்நாடகத்தின் ஷிமோகாவிலிருந்து வந்த மூன்று முதல்வர்களும் பாதியிலேயே பதவியில்  இருந்து இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

லண்டனில் நான் ஆற்றிய உரை தொடர்பாக சில இணையத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகள் சுமந்திரன் கூறுகிறா




போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இவை புத்திசாலித்தனமாக உபயோகிக்கப்பட்டால் தமிழ் மக்களின் விடிவுக்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தை தெளிவாகக் கூறியுள்ளேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ. சுமந்திரன் கூறியுள்ளார்.
லண்டனில் அவர் ஆற்றிய உரை தொடர்பாக சில இணையத்தளங்களில் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் சுமந்திரன், அது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை மேலும் தெரிவித்திருப்பதாவது;
பொதுநல நாடுகளின் பாராளுமன்றக் கழகம் கூட்டத் தொடரில் கலந்துவிட்டு இன்று காலை மீண்டும் இலங்கைக்குத் திரும்பியபோது இலங்கையில் வெளியாகும் ஊடகங்களாலும் சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் லண்டன் நகரில் செய்த உரையைக் குறித்து செய்திகள் பல வந்திருப்பதை அறிந்தேன். இவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் லண்டன் கிளை ஒழுங்குபடுத்தியிருந்த இந்தக் கூட்டத்தில் நான் சொன்னதாக சில இணையத்தளங்கள் வெளியிட்ட செய்திகளை மேற்கோள் காட்டியிருக்கின்றன. இந்த இணையத்தள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதாகவும் வேண்டுமென்றே பிழையான செய்தியைப் பரப்ப வேண்டும் என்ற நோக்கோடும் நான் சொன்னதாகச் சொல்லியிருக்கின்ற இச்செய்திகளை நான் முற்று முழுதாக மறுக்கின்றேன்.
இந்த இணையத்தளங்கள் அக்கூட்டத்தில் களவாகப் பதியப்பட்ட காணொளியின் சில பகுதிகளை இணைத்து பிரதான பேச்சையும் முக்கியமான சில பகுதிகளையும் மறைத்து தொகுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். எப்படியாயினும் இப்படி வெளியிடப்பட்ட இந்தக் காணொளி தொகுதியிலும் கூட கீழ்க்கண்ட விடயங்களைக் காணலாம்.
1. இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு சிங்கள மக்களில் ஒரு அங்கமாவது நியாயமானதென்று ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக அமைய வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். அத்தீர்வு அனைத்து சிங்கள மக்களாலேயோ, அவர்களில் பெரும்பான்மையினராலோ ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என நான் கூறவில்லை.
2. போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை. மாறாக இவை புத்திசாலித்தனமாக உபயோகிக்கப்பட்டால் தமிழ் மக்களின் விடிவுக்காக உதவியாக இருக்கும் என்ற கருத்தை நான் தெளிவாகக் கூறியுள்ளேன்.
3.புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் பங்களிப்புக் குறித்து நான் சொன்னவை இந்தக் காணொளித் தொகுப்பில் காணக்கூடிய போதிலும் இந்நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையையும் கேள்வி,பதில் முழுவதையும் இதைக் களவாகப் பதிவு செய்தவர் அதே இணையத்தளங்களில் வெளியிடுவாராக இருந்தால் நான் சொன்ன கருத்துகள் சரியானவை எனத் தமிழ் மக்களுக்குப் புலப்படும். தற்போது கூட கூட்டத்திலிருந்தோரின் கரகோஷம் இந்தத் தொகுக்கப்பட்ட காணொளியிலிருந்து நீக்கப்பட்டதாகத் தென்படவில்லை.
இப்படியாகப் பொய்ப் பிரசாரம் செய்வதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தாயகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இடையில் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்களுக்கு உதவி செய்யுமே தவிர, தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டையோ அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையோ பலப்படுத்துவதாக அமையாது.

வீரபாண்டி ஆறுமுகம் சிறையில் சுகவீனம் சிகிச்சை நடைபெறுகிறது



கோவை சிறையில் கொசுக்கடியால் வீரபாண்டி ஆறுமுகம் தூக்கம் இன்றி தவித்தார். நிலம் மற்றும் மில் அபகரிப்பு தொடர்பான வழக்குகளில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் சென்னை சேப்பாக்கம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு தொகுதி 2-வது பிளாக்கில் 2 பேரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.

வீரபாண்டி ஆறுமுகம் உடல் நலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் நேற்று இரவு 8.30 மணி அளவில் அரசு டாக்டர் நிர்மல்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். 
பரிசோதனைக்கு பின்னர் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு இரவு உணவாக சப்பாத்தி வழங்க அறிவுறுத்தினார்.

அதன்படி அவருக்கு சப்பாத்தி வழங்கப்பட்டது. சாப்பிட்டு விட்டு வீரபாண்டி ஆறுமுகம் தூங்க சென்றார். குளிர் அதிகமாக இருந்ததால் பாதிக்கப்பட்ட அவர் கடுமையான கொசு கடியாலும் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டார். இதை போல ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. வும் கொசுக்கடியால் தூக்கம் இன்றி தவித்தார்.

அழகிரியின் கார் டிரைவர் கைது : போலீசார் துருவித் துருவி விசாரனை


மத்திய அமைச்சரும், திமுக தென்மண்டல அமைப்பு செயலாளருமான மு.க.அழகிரியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அழகிரியின் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார் ராஜேந்திரன். இவர் அரசு போக்குவரத்து ஊழியர்.   மதுரையைச்சேர்ந்தவர்.
இவர் கடந்த ஆண்டு போக்குவரத்து துறையில் இருந்து ஓய்வு பெற்றார்.  ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே மதுரையில் பங்குதாரர்களுடன் இணைந்து சன் டிரைவிங் ஸ்கூல் நடத்தி வந்தார்.
இந்நிலையில்
இறந்து போன பங்குதாரரின் மனைவியை மிரட்டி டிரைவிங்க் ஸ்கூலை எழுதி வாங்கியதாக ராஜேந்திரன் மீது போலீசில் புகார் வந்தது.
இதையடுத்து போலீசார் இன்று அதிகாலை ராஜேந்திரனை கைது செய்தனர்.
அதிகாலை முதல் இன்று இரவு வரை விசாரனை நீண்டுகொண்டே போகிறது. டிரைவிங்க் ஸ்கூல் சம்பந்தமாகவும், அழகிரியிடம் கார் டிரைவராக பணி புரிந்தபோது எங்கு எங்கெல்லாம் சென்றீர்கள், அழகிரியின் மனைவி காந்தி எங்கெல்லாம் சென்றார் என்று போலீசார் துருவித் துருவி விசாரித்து வருகிறார்கள்.
கார் டிரைவர் கைது செய்யப்பட்டதால் அழகிரி தரப்பு அதிர்ச்சியில் இருக்கிறது.

நில மோசடிப் புகார் பிஷப் சின்னப்பா உள்பட 12 பேர் மீது

  சென்னை ஆர்ச்பிஷப் சின்னப்பா, ஜேப்பியார் உள்ளிட்ட 12 பேர் மீ்து ஏழைகளுக்காக வழங்கப்பட்ட 257 கிரவுண்ட் நிலத்தை மோசடி செய்து விட்டதாக பெரும் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகாரை கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பு எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக சென்னை காவல்துறையில் அது புகார் கொடுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் டி மாண்டி. இவர் ஏழை, எளிய மக்களுக்காக தனக்குச் சொந்தமான 257 ஏக்கர் நிலத்தை விட்டுக் கொடுத்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் இந்த இடம் உள்ளது. இந்த இடத்தை கத்தோலிக்க திருச்சபை தன் வசம் வைத்துள்ளது. இந்த இடத்தை பிஷப் சின்னப்பா, ஜேப்பியார், எம்.ஜி.எம். மாறன் உள்ளிட்ட 12 பேர் முறைகேடாக அபகரித்துள்ளதாக கத்தோலிக்க விசுவாசிகள் சபை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக போலீஸில் அது புகார் கொடுத்துள்ளது.

இந்தப் புகார் குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்புப் புகார்கள் பெருமளவில் குவிந்து கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சியினர் மீதுதான் நில அபகரிப்புப் புகார்கள் குவிகிறது என்றால் தற்போது சென்னை பிஷப் மீதும் நில அபகரிப்புப் புகார் எழுந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சாய்பாபா மறையவில்லை; ஆசிரமத்தில் அவரது ஆத்மா


சாய்பாபா மறையவில்லை; ஆசிரமத்தில் அவரது ஆத்மாஉலவுகிறது : நடிகை அஞ்சலிதேவி ;நடிகை அஞ்சலிதேவி சாய்பாபாவின் தீவிர பக்தை. 48 வருடமாக புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்துக்கு சென்று வருகிறார். நேற்று புட்டபர்த்தி வந்த அஞ்சலிதேவி சாய்பாபா சமாதியில் வழிபட்டார்.

அவர் செய்தியாளர்களிடம்,‘’புட்டபர்த்தி வந்தால் மனதில் உள்ள வேதனைகள் எல்லாம் உடனடியாக விலகி விடும். மனதில் சாந்தி ஏற்படும். நான் ஒரு இந்தி படம் எடுத்தேன். அதில் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மன அமைதி இல்லாமல் இருந்தேன்.

அப்போது நடிகர் நாகையாதான் என்னை புட்டபர்த்தி அழைத்து வந்தார். சாய்பாபாவிடம் ஆசி பெற்றேன். அதன்பிறகு எனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. நல்ல காரியங்கள் பல நடந்தன. எனது கஷ்டங்கள் மறைந்தது.

அதனால்தான் கோடிக்கணக்கான மக்கள் அவரது பக்தையாக உள்ளனர். தமிழ்நாட்டில் கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்பார்கள். அதுபோல ஆந்திராவில் பாபா பலருக்கு கல்வி வழங்கி வருகிறார். வெளிநாட்டிலும் அவர் தனது கல்வி சேவையை நடத்தி வருகிறார்.

மேலும் குடிநீர் தேவை, மருத்துவ சேவையையும் செய்துள்ளார். பாபாவிடம் வழங்கும் பணம் நல்ல காரியத்துக்கு செல்வதை பக்தர்கள் உணர்ந்து உள்ளனர். அதனால் அவர் கேட்காமலேயே தொழில் அதிபர் ரத்தன்டாடா முதல் இளைஞர் தெண்டுல்கர் வரை விளம்பரம் இல்லாமல் பாபா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
சாய்பாபா மறையவில்லை. அவரது ஆத்மா இங்குதான் உலவுகிறது. சமாதியில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். இந்த நேரம் அறக்கட்டளையினரை நான் கேட்டுக் கொள்வது “பாபா செய்த சேவையை தொடர்ந்து நடத்த வேண்டும்’’ என்று கூறினார்.

ராசாத்தி அம்மாளின் கணக்காளர் கைது நில மோசடி வழக்கில்

திமுக தலைவர் கருணாநிதியின் துணைவி ராசாத்தி அம்மாளின் கணக்காளரான ரமேஷ் இன்று திருச்சியில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தி்ல ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி உள்ளிட்ட 31 பேர் நில அபகரிப்புப் புகார் கொடுத்தனர்.

அதில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை ரமேஷ் மிரட்டிப் பறித்துக் கொண்டதாக கூறியிருந்தனர். தான் ராசாத்தி அம்மாளிடம் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும், எனவே என்னை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று மிரட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த வந்த போலீஸார் இன்று ரமேஷைக் கைது செய்தனர்.

தூத்துக்குடி கொழும்பு கப்பல்: 3,528 பேர் பயணம்


தூத்துக்குடி கொழும்பு சுற்றுலா கப்பலில் இதுவரை இருமார்க்கத்திலும் 3,528 பேர் பயணம் செய்துள்ளனர்.
வாரம் இருமுறை இயக்கப்படும் இந்த சொகுசு கப்பல் சேவையை, கடந்த ஜூன் 13ம் தேதி, மத்திய அமைச்சர் வாசன் துவக்கி வைத்தார். இதன் மூலம் தூத்துக்குடியிலிருந்து கொழும்புவுக்கு 2,147 பேரும், கொழும்புலிருந்து தூத்துக்குடிக்கு 1,381 பேரும் என மொத்தம் 3,528 பேர் இதுவரை இருமார்க்கத்திலும் பயணம் செய்துள்ளனர்.
இதற்காக, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் பயணிகள் முனையம், ஏற்கனவே இரண்டு கோடி ரூபாயில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு, இங்கு 1,350 பேர் அமரக்கூடிய வகையில், 450 சொகுசு இருக்கைகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தற்போது நடக்கும் பனிமயமாதா பேராலய திருவிழாவுக்கு தூத்துக்குடி வரும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக, ஒரு லட்சம் ரூபாயில் கூடுதலாக 150 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,500 பேர் வரை இங்கு அமரலாம். இத்தகவலை, துறைமுக தலைவர் சுப்பையா ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கி மரணம் கீரிமலையில் தந்தைக்கு ஆடி அம்மாவாசை பிதிர்கடன் செய்த மகன்

ஆடி அமாவாசையான நேற்றைய தினம் இரவு தந்தையாருக்காக மோட்ச கிரியைகளை மேற்கொண்ட நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று யாழ் வடக்கில் பதிவாகியுள்ளது.


கோவிலில் பூஜை நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டு கீரிமலை தீர்தக்கேணியில் முழுகச் சென்ற நபரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

மாணிப்பாய் சுதுமலையில் வசித்துவந்த 32 வயதான விஜிதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
கீரிமலையில் தந்தைக்கு ஆடி அம்மாவாசை  பிதிர்கடன் செய்த மகன் நீரில் மூழ்கி மரணம்   கீரிமலையில்

புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம் : ஆர். யோகராஜன்!

புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட யோகராஜன் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் உள்ள மொத்த 225 ஆசனங்களில் 29 ஆசனங்கள் தேசியப்பட்டியலுக்காக ஒதுக்கப்படுகின்றன. மிகுதியுள்ள 196 ஆசனங்களில், ஒரு மாகாணத்துக்கு நான்கு வீதமாக ஒன்பது மாகாணங்களுக்கும் 36 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன.
இலங்கையின் மொத்த வாக்காளர் தொகை 160 ஆசனங்களால் பிரிக்கப்பட்டு ஒரு ஆசனத்திற்குரிய வாக்காளர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படுகின்றது. இந்த ஒரு ஆசனத்திற்குரிய வாக்காளர் தொகையினால் ஒரு மாகாணத்திலுள்ள வாக்காளர் தொகையை பிரித்தே ஒரு மாகாணத்துக்குரிய நாடாளுமன்ற ஆசனங்களின் தொகை தீர்மானிக்கப்படுகின்றது. இதுவே தேர்தல் விதிமுறைகள் சம்பந்தமாக யாப்பில் உள்ள சரத்துக்களாகும்.
2010 ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் பதியப்பட்டுள்ள வாக்காளர்கள் தொகைக் கிணங்க தேர்தல் ஆணையாளருக்குள்ள அதிகாரங்களின் அடிப்படையிலே யாழ். மாவட்டத்திற்கு நான்கு ஆசனங்கள் குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய சில மாவட்டங்களுக்கு சில ஆசனங்கள் அதிகரித்துள்ளன.
இது குறித்து ஊடகங்களினூடாகப் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் படியும் தான் தேர்தல் ஆணையாளரை கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்ட யோகராஜன் மேலும் தெரிவித்ததாவது,
இந்தியாவில் அகதிகளாக சுமார் 80,000 பேர் இலங்கை அதிகளாகத் தங்கியுள்ளார்கள். அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெற்றுக் கொள்வது சாத்தியமில்லை. அவர்களையும் வாக்காளராகப் பதிவதற்கும் அனுமதியளித்தல் வேண்டும்.
அதே போன்று வெவ்வேறு நாடுகளிலும் புலம் பெயர் தமிழர்களாக சுமார் 10 இலட்சம் வரை தமிழ்ப் பேசும் மக்கள் வாழ்ந்து இவர்களில் அந்தந்த நாடுகளிலே குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களைத் தவிர ஏனையவர்களை இலங்கையில் வாக்காளராக பதிவதற்கு அனுமதித்தல் வேண்டும்.
இது சம்பந்தமான தமது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் தற்போது வாக்காளர் பட்டியல்கள் புதுக்கப்பிட்டு வருகின்றன. நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் சேர்க்கப்படவில்லை எனக் கண்டால் மேன்முறையீடு செய்து தமது பெயரைச் சேர்த்துக் கொள்ளலாமென ஆணையாளர் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் விளக்கமளித்த யோகராஜன் யாழ் நாடாளுமன்ற ஆசனக்குறைப்பு சம்பந்தமாக சட்ட நவடிக்கை எடுப்பதாக சிலர் கூறிவருகின்றார்கள். யாப்பின்படியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதினால் சட்டநடவடிக்கைகளினால் ஆகப்போவது ஒன்றுமில்லை. மாறாக நடைமுறை சாத்தியமான வழிகளினால் நமது வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்ள நாம் முயலவேண்டும்

-ஜெ. கடும் எதிர்ப்பு கேரளாவுக்கு சாதகமான அணை பாதுகாப்பு மசோதா

தமிழகத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் அணை பாதுகாப்பு மசோதாவை திருத்தக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:

நீர்வளத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா-2010-ல் அடங்கியுள்ள சில ஷரத்துகளைப் பற்றி உங்கள் கவனத்துக்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளேன். அவை தமிழ்நாட்டின் நலனுக்கு கேடு விளைவிப்பவையாகும்.

அந்த மசோதாவின் 26(1)-ம் பிரிவில், `குறிப்பிட்ட அனைத்து அணைகளும், எந்தெந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்தந்த மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது மாநில அணை பாதுகாப்புப் பிரிவின் அதிகார எல்லைக்கு அவை உட்பட்டவை. அணைகள் சம்பந்தப்பட்ட அம்சங்களான, பாதுகாப்பு நிலை மற்றும் பழுது பார்த்து மேம்படுத்துவது, ஆய்வுகள், ஆய்வுத் தகவல்கள், அறிக்கைகள், பரிந்துரைகள் ஆகியவையும் இந்த அதிகாரத்துக்குள் வருகின்றன. எனவே அந்த அணையின் உரிமையாளரோ, வேறு மாநிலமோ, இந்த அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பிரிவில் கூறப்பட்டுள்ள `அணை அமைந்துள்ள மாநிலம்' என்ற வார்த்தை, எந்த ஒரு அணையும், அது அமைந்துள்ள அடுத்த மாநிலத்தின் அணை பாதுகாப்பு அமைப்பின் அதிகார எல்லைக்குள் (எஸ்.டி.எஸ்.ஓ.) வந்துவிடும் என்பதை தெளிவாக்குகிறது.

மாநில அரசுக்குச் சொந்தமான அணையின் ஒரு பகுதி மற்ற மாநிலத்தின் எல்லையில் அமைந்திருக்கும் பட்சத்தில், அதன் உரிமையாளரான மாநிலம் மேற்கொள்ளும் அணை பாதுகாப்பு, செயல்பாடு, பராமரிப்பு நடவடிக்கைகளில் நேரடியாக தலையிடுவதுபோல் அமைந்துள்ளது.

முல்லை பெரியாறு, பரம்பிக்குளம் அணை, துனகடவு அணை, பெருவாரிபள்ளம் அணை ஆகிய 4 அணைகளும் கேரள மாநில எல்லைக்குள் அமைந்துள்ளன. அவை தமிழக அரசுக்கு சொந்தமானவை. அவற்றை தமிழக அரசு இயக்கி, பராமரித்து வருகிறது.

ஆனால் நாடாளுமன்றத்தில் இந்த அணை பாதுகாப்பு மசோதா-2010 நிறைவேற்றப்பட்டால், தமிழகத்துக்கு மிகப் பெரிய இடையூறை அது ஏற்படுத்திவிடும். ஏனென்றால், தமிழ்நாட்டுக்கு சொந்தமானவை என்றாலும், இந்த மசோதா மூலம் அந்த 4 அணைகளும் கேரளா அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதனால் அந்த அணையின் பாதுகாப்பு, இயக்கம், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நடைமுறை சிக்கல்களை உருவாக்கிவிடும்.

எனவே இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மசோதாவில், சில திருத்தங்களையும், இணைப்புகளையும் கொண்டு வருவது அவசியம். அந்தந்த மாநிலங்களின் கட்டுப்பாட்டிலேயே அணைகள் இருப்பதற்கான வாசகங்களை அதில் சேர்க்க வேண்டும். அதுபோல் 26(2)-ம் பிரிவையும், `மத்திய அணை பாதுகாப்பு அமைப்பு, மாநில அணை பாதுகாப்பு அமைப்பு அல்லது அணை பாதுகாப்பு பிரிவு ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி, முதலாம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட அணைகளை சோதனையிடவோ, தேவையான விசாரணை நடத்தவோ, அந்த அணையின் எந்தப் பகுதிக்கும், அணை அமைந்துள்ள எந்த இடத்துக்கும் தேவைப்பட்ட போதெல்லாம் செல்லலாம்' என்று மாற்றி அமைக்க வேண்டும்.

அதுபோலவே 26(3), 26(4)-ம் பிரிவுகளிலும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அணையின் பராமரிப்புப் பணியில் எந்தவொரு தலையீடும் இருக்கக் கூடாது என்பதற்காக 26(6) என்ற புதிய பிரிவை மசோதாவில் இணைக்க வேண்டும். `அணை பராமரிப்பு அதிகாரிகள், ஊழியர்கள் யாரும், வனம், வனச் சரணாலயம் ஆகிய பகுதிகளுக்கு அணை பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுபுணரமைப்பு பணிகளுக்காக செல்வதற்கு உரிமை உண்டு' என்ற அந்த ஷரத்தை இணைக்க வேண்டும்.

எனவே, இந்த கருத்துகளை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் சொல்லி அணை பாதுகாப்பு மசோதாவில் தேவையான திருத்தங்கள், இணைப்புகளை செய்ய உத்தரவிட்டு, தமிழகத்தின் நலனை பாதுகாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்

இதற்கிடையே, படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் படுகர் இனத்தவரை எஸ்.டி. இனத்தவர் (பழங்குடியினர்) என்ற பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். நீண்டகாலமாக இந்தக் கோரிக்கை, நிலுவையில் இருக்கிறது.

1931-ம் ஆண்டில் படுகர் இனத்தவர், பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். அவர்களின் வாழ்க்கைத் தரம், சிறப்புத் தன்மைகள், வேற்றுமையான கலாசாரம், கூச்சத்தினால் மற்ற சமுதாயத்திடம் இருந்து விலகியிருக்கும் தொடர்பற்ற தன்மை, தனிப்பட்ட வாழ்க்கை முறை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்பட்ட நிலை ஆகியவற்றை விரிவாக ஆராய்ந்து, எனது முந்தைய ஆட்சி காலத்தில் 5.9.03 அன்று மத்திய மலைவாழ் பழங்குடியினர் விவகாரத் துறைக்கு கடிதம் எழுதினேன்.

இந்த கோரிக்கையை மீண்டும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நீலகிரி மாவட்ட படுகர் இனத்தவர் என்னை கேட்டுக் கொண்டனர். தோடர்கள் உள்ளிட்ட பல்வேறு மலைஜாதியினருடன் படுகர் இனத்தவர்கள், பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் என்பது, படுகர் இனத்தவர் தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் மூலம் தெரிய வருகிறது.

படுகர்கள் அவர்களுக்கென்று சொந்தமான பாரம்பரியம், கலாசாரத்தைக் கொண்ட, இனம், மொழி வாரியான சிறுபான்மையினர்தான். அவர்களின் பேச்சு மொழியும், நம்பிக்கை மற்றும் இறை வழிபாட்டு நடவடிக்கைகள் போன்றவை, அவர்கள் நீலகிரியோடு தொடர்பு கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

பழங்குடியினர் என்ற தன்மை, தற்போது பழங்குடியினத்தவர் பட்டியலில் இருக்கும் பல இனங்களிடம் இருக்கவில்லை. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அரசுகள் கொண்டு வந்த நல்ல திட்டங்களினால் அப்படிப்பட்டவர்களின் நிலை மேம்பட்டுள்ளது. அதுபோலவே படுகர்கள் இனத்துக்கு அதுபோன்ற மேம்பாடு தேவைப்படுகிறது.

பழங்குடியினர் என்ற பட்டியலில் இடம் பெறுவதற்கு படுகர்கள் தகுதியானவர்கள்தான் என்பதில் திருப்தி நிலை நிலவுகிறது. எனவே பழங்குடியினர் பட்டியலில் படுகர்களை சேர்ப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Army thwarts Pillayan’s bid to free bank robbery suspect

A senior army officer yesterday accused Eastern Province Chief Minister Sivanesathurai Chandrakanthan of trying to secure the release of one of the main suspects in the Puttur bank robbery.
Security Forces Eastern Commander Boniface Perera told the Sunday Times, “On hearing of what was taking place, I rushed a special motorcycle squad to the area and detained the suspect who was later taken to the police under heavy armed guard.”
The suspect along with four others had allegedly robbed some Rs. 3.5 million in cash and 27 kilos of gold with an estimated value of Rs. 150 million from the People’s Bank in Puttur in Batticaloa town.Police say the suspect identified as Pradeepan was a former frontline LTTE activist who later joined the ranks of the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP) led by Mr. Chandrakanthan who is better known as Pillayan.
The other four suspects involved in the robbery are also supporters of the TMVP and they were rounded up on the instructions of Defence Secretary Gotabaya Rajapaksha, Maj: General Perera said.
Investigators are now trying to ascertain whether the same gang was responsible for similar crimes committed in the east and elsewhere

கலைஞர்:அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க, ஜெயலலிதா முயற்சி எடுத்ததாக

"இலங்கை மீது, அமெரிக்க அரசு பொருளாதார தடை விதிக்கவில்லை. அமெரிக்க அரசின் உதவிகளை வரைமுறைப்படுத்த மட்டுமே பரிந்துரைத்தது' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:இலங்கை மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்க, ஜெயலலிதா முயற்சி எடுத்ததாக, தமிழக அமைச்சர்கள் விளம்பரம் செய்கின்றனர்.

இதுகுறித்து, இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்கள் சிலரிடம் விசாரித்த போது, அப்படி எதுவும் அமெரிக்காவால் அறிவிக்கப்படவில்லை என்கின்றனர். இலங்கை அரசுக்கு செய்யும் உதவிகளை ஒரு வரையறைக்குள் நிறுத்துவதாக, அமெரிக்க பார்லிமென்ட் வெளியுறவுத் துறைக்கான குழு வாக்களித்துள்ளது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வராது. இக்குழுவின் பரிந்துரை, 2012 அக்டோபர் துவக்கத்தில், அமெரிக்க பார்லிமென்டின் செனட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அவைகளில் வைக்கப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட பின், நடைமுறைக்கு வரும்.

இதுகுறித்து, கடந்த பல வாரங்களாக அமெரிக்க குழு ஆலோசித்துள்ளது. இதற்கும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியின் இந்திய பயணத்திற்கும் சம்பந்தம் இல்லை. மற்ற நாடுகள் குறித்த விவகாரங்களை இந்திய அரசிடம் தான், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் விவாதிப்பாரே தவிர, ஒரு மாநில அரசிடம் விவாதிக்க மாட்டார்.
தமிழக முதல்வருடனான ஹிலாரி சந்திப்பில், இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது பற்றியோ, இலங்கை மீது பொருளாதார தடை விதிப்பது பற்றியோ, இருவரும் பேசியதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் எதுவும் இல்லை. ஆனால், தமிழக அரசு தீர்மானம் போட்டதால், இலங்கைக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததாக செய்தி பரப்ப முயல்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மன்மோகன், சோனியாவின் பதில் என்ன?ஆ.ராசா கடுமையான குற்றச்சாட்டுகளை

சென்னை, ஜூலை 30: 2-ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.சென்னையில் அ.தி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டங்களுக்குப் பிறகு நிருபர்களிடம் முதல்வர் ஜெயலலிதா கூறியது:-"2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணையில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார்.இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல நாள்கள் ஆகியும், இது குறித்துப் பிரதமரோ, உள்துறை அமைச்சரோ எந்தவிதப் பதிலையும் அளிக்கவில்லை. இந்த ஊழலில் உள்ள உண்மையை அறிந்துகொள்ளக் கூடிய உரிமை இந்த நாட்டு மக்களுக்கு இருக்கிறது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி இது குறித்து அறிக்கையை வெளியிட வேண்டும். நாட்டின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு எதிராகக் கூறப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதிலை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.பழிவாங்கும் நடவடிக்கை இல்லை: நிலப் பறிப்பு வழக்குகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு தொடரப்படவில்லை. இது தொடர்பான புகார்கள் கடந்த 5 ஆண்டுகளாகவே அளிக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால், இது தொடர்பாக முந்தைய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதிதாக அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன் மக்கள் இது தொடர்பான புகார்களுடன் காவல்நிலையங்களில் குவிந்தனர். இந்தப் புகார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. எனவே, இவற்றை விசாரிக்க காவல்துறையில் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டது.இப்போது இந்த வழக்குகளை விரைந்து விசாரிக்கும் வகையில் விரைவு நீதிமன்றங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் தரும் புகார்கள் அனைத்தும் உண்மையான புகார்கள். அவர்கள் எந்த அரசியல் கட்சியையும் சேராதவர்கள். எனவே, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற கேள்வியே எழவில்லை. நிலப் பறிப்பு தொடர்பாக இதுவரை 2 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன.அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆகிறது. இதுவரை யாரையும் பழிவாங்கவில்லை. பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. போலீஸார் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்கள் மீதே போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதில் பழிவாங்கும் நடவடிக்கை எதுவும் இல்லை. லோக்பால் சட்ட மசோதா: லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரைச் சேர்க்கக் கூடாது என்று ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். எந்த ஒரு தனிநபருக்காகவும் இதை நான் வலியுறுத்தவில்லை. பிரதமர் பதவியின் அதிகாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இதைக் கூறுகிறேன்.நாடாளுமன்றத்தில் இலங்கைப் பிரச்னை: இலங்கைத் தமிழர் படுகொலை தொடர்பாக எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை, மக்களவையில் பிரச்னை எழுப்புவார்கள். போரின்போது குற்றம் புரிந்தவர்களை போர்க் குற்றவாளிகளாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அவர்கள் வலியறுத்துவார்கள். கச்சத்தீவு ஒப்பந்தத்தை சட்டவிரோதம் என்று அறிவித்து அதையும் மீட்குமாறு எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துவார்கள். அரசு கேபிள் டி.வி. தொடர்பாக விளம்பரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக உங்களுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.ஸ்டாலின் கைதா? தி.மு.க. பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது தொடர்பாக நிருபர் கேட்டபோது, ""அவர் கைதுசெய்யப்படவே இல்லை'' என்றார் ஜெயலலிதா.செயற்குழுக் கூட்டத்துக்கு வந்த ஜெயலலிதா தொண்டர்களின் வாழ்த்துகளை ஏற்கிறார்.

தி.மு.க., உறவு முறிவுக்கு காரணம் பா.ம.க.,வின் சுயலாபக் கணக்கே..

சென்னை:சட்டசபைத் தேர்தலில், தி.மு.க., அணியில் போட்டியிட்டு படுதோல்வி கண்டதால், அந்த அணியிலிருந்து விலகி, உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க., அதிரடி முடிவு எடுத்துள்ளது.பொதுக்குழுவில், கட்சிப் பிரமுகர்கள் தி.மு.க., வை கடுமையாக விமர்சித்தனர். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மட்டும், தி.மு.க.,வை விட்டு வெளியேறும் முடிவை பொறுமையாக எடுக்க விரும்பினார். ஆனால் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் ஆதரவாளர்கள்,"தி.மு.க., கூட்டணி தேவையில்லை' என்ற முடிவை, உடனடியாக எடுக்க உறுதுணையாக இருந்தனர்.
அவர்கள் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் நீடித்தால், மீண்டும் மோசமான தோல்வியை நாம் சந்திக்க நேரிடும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், வேலு போன்றவர்கள் நமக்கு பச்சைத் துரோகம் செய்து, நம்மை தோற்கடித்தனர். இப்போது தி.மு.க.,வின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தோல்வி அடைந்தால், தொடர் தோல்வி மூலம் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும். எனவே தி.மு.க., கூட்டணியில் இருப்பதால், எந்த வகையிலும் பலன் இல்லை. தி.மு.க., கூட்டணியில் ஒற்றை எம்.பி.,யாக இருக்கிற திருமாவளவன், தி.மு.க., தரப்புடன் மிகவும் நெருக்கமாக உள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தாங்கிப் பிடிக்கும் கட்சியாக, விடுதலைச் சிறுத்தைகள் மாறிவிட்டது. அக்கட்சியுடன் இனிமேல் இணைந்து பணியாற்ற, நமது தொண்டர்கள் தயாராக இல்லை.இவ்வாறு அவர்கள் பேசினர்.

தி.மு.க., கூட்டணியை விட்டு, வெளியேறுவது என்ற பா.ம.க.,வின் முடிவு, அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் அதிர்ச்சியையோ, ஆச்சிரியத்தையோ ஏற்படுத்தவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரையில், இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட முடிவாகக் கருதுகிறது. தி.மு.க., கூட்டணியை முறிப்பதற்கு, பா.ம.க., வின் சுயலாபக் கணக்கு தான் காரணம் என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வரும் 2013ம் ஆண்டில், ஒரு ராஜ்யசபா சீட் பா.ம.க., வுக்கு தரவேண்டும் என, தி.மு.க., விடம் போடப்பட்ட தேர்தல் உடன்பாட்டினால், இனி லாபமில்லை. ஒரு ராஜ்யசபா சீட் பெறுவதற்கான எம்.எல்.ஏ.,க்கள் தி.மு.க.,விடம் இல்லை என்பதால், அக்கட்சியுடன் கூட்டணியை தொடர, பா.ம.க., விரும்பவில்லை.

தி.மு.க., கூட்டணியிலிருந்து வெளியேறினால், அ.தி.மு.க.,வின் கரிசனம் கிடைக்கும். அமைச்சர் சி.வி.சண்முகம் உறவினர் கொலை வழக்கில், முக்கிய எதிரிகளாகக் கருதப்படும் ராமதாஸ், அன்புமணி வழக்கு விசாரணையிலிருந்து மீளமுடியும் என்ற எதிர்பார்ப்பும், முக்கிய பங்கு வகிக்கிறது.வட மாவட்டங்களில் திருமாவளவனுடன் ராமதாஸ் கைகோர்ப்பதை, வன்னியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாவளவனை விட்டு விலகுவதால், பா.ம.க., வுக்கு லாபம் என்ற கருத்தும் கணிக்கப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை ராமதாஸ் விமர்சனம் செய்யாமல் இருந்தார். இதனால் ராமதாஸ் மீது, வன்னியர்கள் சங்கத்தினர் அதிருப்தி அடைந்தனர். இனிமேல், ஸ்பெக்ட்ரம் ஊழலை விமர்சிப்பதன் மூலம், வன்னியர்களின் அதிருப்தியைப் போக்க முடியும் என்ற கணக்கும் கணிக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, பென்னாகரம் பார்முலா மூலம், ஓட்டு வங்கியை பலப்படுத்துவது, தி.மு.க., அணியில் போட்டியிட்டு தோல்வி அடைவதை விட, வட மாவட்டங்களில் தனித்து நின்று, கட்சியின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற பேராசையும், முக்கிய காரணமாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

பா.ம.க., பொதுச் செயலர் வடிவேல் ராவணன் தலைமையில், செப்டம்பர் மாதம் 11ம் தேதி பரமக்குடியில் நடக்கும் இமானுவேல் சேகரனின் விழாவில் ராமதாஸ் கலந்து கொள்கிறார்.
அவ்விழாவின் மூலம், தென் மாவட்டங்களில் பா.ம.க.,வை வளர்ப்பதற்கு, தேவேந்திர குலவேளாளர் சமுதாயத்தினரை கையில் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படி சுய லாபத்திற்காகவே தி.மு.க., கூட்டணியிலிருந்து பா.ம.க., வெளியேறியுள்ளது என்கிறது அரசியல் வட்டாரம். -நமது சிறப்பு நிருபர்-

Kunjumani - Chennai.,இந்தியா
போடா போடா புண்ணாக்கு போடாதே தப்பு கணக்கு....!
Krish - New York City,யூ.எஸ்.ஏ
- ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராஜா, ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், இதுவரை ராமதாஸ் விமர்சனம் செய்யாமல் இருந்தார்.என்ன கொடுமை சரவணா
VIVASAYI - Salem,இந்தியா
குளத்திலே தண்ணியில்லே.. கொக்குமில்லே மீனுமில்லே... பொட்டியிலே MLA இல்லே.. கூட்டணிக்கட்சி சொந்தமில்லே.. அவன் போட்டக் கணக்கொன்று.. இவன் போட்டக் கணக்கொன்று.. இரண்டுமே தவறானது...பொன்னும் பொருளும் மூட்டை கட்டி போட்டு வைச்சாரு. இவரு போன வருஷ மழையை நம்பி விதை விதைச்சார் எட்டு கணக்க மாத்தி மாத்தி எழுதிவைச்சாரு. ஈசன் போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு.
parasuraman sharma - jeddah,சவுதி அரேபியா
இரு கழகங்களுக்கும் ரோசம் வந்து (பாமக-விற்கு அதன் அகராதியில் இல்லாத சொல்!) பாமக-வை ஒதுக்கினால் போதும்! தமிழக அரசியல் கொஞ்சமாவது உருப்படும்!

16 வயது புலி 51 வயது அய்யாவுக்கு அண்ணனாகி பல நாளாகிற்று

புலிகளின் வதை முகாமில் எனது அனுபவங்கள் (தொடர் – 7)
- மணியம்
மீண்டும் கூண்டுக்கு வெளியே
கதவைத் திறந்தவன் முதலில் என்னைக் கொண்டு வந்து விட்ட புலி உறுப்பினன். அவனது கையில் ஒரு அலுமினியச் சட்டி இருந்தது. உள்ளே இருந்தவர்களைப் பார்த்து, “கோப்பையை எடுங்கோடா” என உத்தரவிடும் பாணியில் அவன் உரத்துக் கூறினான். அங்கு ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த, மிகவும் நெளிந்து ‘நோய்வாய்ப்பட்டு’ அழுக்குடன் காணப்பட்ட, சில அலுமினியத் தட்டுகளை அங்கிருந்தவர்கள் எடுத்து நீட்டினர். அவன் கொண்டு வந்திருந்த சட்டியிலிருந்த கொத்து ரொட்டியை, கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கோப்பைகளில் எடுத்துப் போட்டான். பின்னர் அவாகளை நோக்கி, “புதிசா வந்த ஆளையும் சேத்து சாப்பிடுங்கோ” எனச் சொல்லிவிட்டு கதவை மூட ஆயத்தமானான். அதற்கிடையில் அங்கிருந்தவர்களில் ஒருவர், “அண்ணை குடிதண்ணீர் கொஞ்சம் வேணும்” என கெஞ்சும் பாவனையில் கேட்டார்.  தண்ணீர் கேட்டவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும். வந்திருந்த புலி உறுப்பினனுக்கு 18 – 20 வயதிருக்கலாம். இன்னமும் அவனது மீசையில் சரியாகக் கருமை படரவில்லை. இருக்கும் இடம், ஸ்தானம் காரணமாக, அந்த ஐம்பது வயதுக்காரருக்கு அவன் ‘அண்ணை’யாகியிருந்தான். இந்த அண்ணை விளையாட்டு, உள்ளுக்கை மட்டுமின்றி, வெளியிலும் உலா வருவதை நான் ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். (மேலும்) 31.07.௧௧
 

ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'

வீரபாண்டி ஆறுமுகம் உள்ளே.. 'ஜெயலலிதா'வுக்கு நடந்த அவமானம் வெளியே..

'நில அபகரிப்பு வழக்குகளில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் மத்தியக் குற்றப் பிரிவு போலீஸில் சரண்டர் ஆக வேண்டும்!’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் புடைசூழ போலீஸில் சரணடைந்தார் அவர். நீதிமன்ற உத்தரவுப்படி அவரை மூன்று நாட்களில் காவலில்வைத்து விசாரித்தது போலீஸ்!
வீரபாண்டி ஆறுமுகம் போலீஸ் கஸ்டடியில் இருந்த மூன்று நாட்களில், சேலத்தில் நடந்த அத்தனை விஷயங்களும் முகம் சுளிக்கவைப்​பதாகவே இருந்தன. முதுகெலும்பு மறந்துபோய், காக்கிச் சட்டைகள் சிலர் கை கட்டி நின்று வேடிக்​கை பார்த்ததுதான் அதைவிடக் கொடுமை!

வீரபாண்டி ஆறுமுகத்தை விசாரித்த உதவி கமிஷனர் பிச்சை, சேலத்திலேயே இன்ஸ்பெக்டராக இருந்தவர். ஆறுமுகம் பந்தாவாக உட்கார்ந்திருக்க.. அவருக்கு முன்னால் தயங்கிக்கொண்டு நின்றா​ராம் பிச்சை. 'எதுக்கு நிக்குறீங்க... உட்காருங்க!’ என வீரபாண்டியார் சொன்ன பிறகுதான் உட்கார்ந்தாராம் பிச்சை. வெள்ளரிப் பிஞ்சு, பப்பாளி ஜூஸ், ஆட்டுக்கால் சூப் என விதவி​தமான உணவுகளை சேலத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து வரவழைத்து உபசரித்தார்களாம். இரவு தூங்குவதற்கு கட்டில், வீட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட பெட்ஷீட் எனக் காவல் நிலையத்தை ஒரு ஹோட்டல் ரேஞ்சுக்கு மாற்றிக் கொடுத்ததாம் போலீஸ்.

விசாரணையில் என்ன நடந்தது? போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ''பிரீமியர் மில்லை மிரட்டி எழுதி வாங்கியது, அங்கம்மாள் காலனி விவகாரம் ஆகிய இரண்டும்தான் ஆறுமுகம் மீதுள்ள குற்றச்சாட்டுகள். மொத்தமாக 120 கேள்விகளை போலீஸ் தயார் செஞ்சு இருந்தாங்க. ஒவ்வொரு கேள்வியாக உதவி கமிஷனர் பிச்சை கேட்டார். அதுக்கு இவர் நிதானமாக பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு, 'ம்... ம்... இல்லை!’ இப்படித்தான் பதில் வந்தது. சில கேள்விகளுக்கு கொஞ்சம் டென்ஷனாகிவிட்டார். 'என் பேரைச் சொல்லி எவனோ ஏதோ பண்ணிட்டுப் போவான். அதுக்கு எல்லாம் நான் பொறுப்பாக முடியுமா?’ என்றாராம். எல்லாவற்றையும் வீடியோவிலும் பதிவு செஞ்சாங்க. சில நேரங்களில், 'கேமராவை ஆஃப் பண்ணுய்யா...’னு சொல்லிட்டு, ரொம்பவும் ரிலாக்ஸ்டாகப் பேசினார். 'எனக்கே தெரியாம எவ்வளவோ விஷயங்கள் நடந்துடுச்சு. இப்போ நான் பலிகடா ஆகிட்டேன்...’னு வருத்தப்பட்டார்!'' என்கிறார்கள்.

வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்துக்குள் இருக்க... வெளியில் தி.மு.க-வினர் செய்த காரியங்கள் எல்லை மீறிப் போய்க்கொண்டு இருந்தன. சேலம் பழைய பேருந்து நிலையம் ஏரியாவில் மூன்று நாட்களுமே கடைகள் அனைத்துமே மூடப்பட்டே இருந்தன. திறந்த கடைகளையும் மிரட்டி மூட​வைத்தார்கள்.
விசாரணையின் கடைசி நாளான 27-ம் தேதி, காவல் நிலையத்துக்கு எதிரே தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருக்கு ஜெயலலிதாபோல சேலை அணிவித்து, மாலை சூட்டி நிற்கவைத்தனர். பிறகு, தி.மு.க-வைச் சேர்ந்த ஒவ்வொருவராகப் போய் அவரைக் கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதுமாக அசிங்கப்படுத்தினார்கள். உச்சகட்டமாக அந்த நபரை ரோட்டிலேயே கிடத்தினார்கள். அதன் பிறகு நடந்தவற்றை, அச்சில் ஏற்ற முடியாது. பாதுகாப்புக்காக நின்று இருந்த நூற்றுக்கணக்கான போலீஸ் முன்னிலையிலேயே இவை எல்லாம் நடந்தும், யாரும் தடுக்கவோ, கேள்வி கேட்கவோ இல்லை. சேலம் காவல் துறையினருக்கு அவ்வளவு வீரபாண்டியார் பாசமோ? அராஜகம்!
கோரிமேடு செல்வம் தலைமையில் வந்த இன்னொரு கும்பலோ, அந்த வழியில் வந்த ஆட்டோக்களை நிறுத்தி, ''ஏன்டா... சேலத்து சிங்கமே உள்ளே இருக்குது. உனக்கு ஆட்டோ கேட்குதா?'' என ஆட்டோ டிரைவர்கள் முகத்தில் குத்துவிட, சில டிரைவர்களுக்கு மூக்கு உடைந்து ரத்தம் வழிந்தது. அதையும் போலீஸ் கண்டுகொள்ளவில்லை. கண் முன் சம்பவங்கள் நடந்துகொண்டு இருந்தும், 'அடி வாங்கியவன் வந்து புகார் கொடுக்கட்டும். நடவடிக்கை எடுக்கிறோம்’ என்று நக்கலாகச் சொன்னார் ஒரு போலீஸ் அதிகாரி. மறு உத்தரவு வரும் வரை, தினமும் சேலம் மத்தியக் குற்றப் பிரிவுக் காவல் நிலையத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ என உத்தரவிட்டு இருக்கிறது நீதிமன்றம். இதற்கிடையில், 28-ம் தேதி காலை பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்த அழகிரி அவரை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார். இருவரும் நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசினர். 'இத்தனை வருஷம் கட்சிக்காக உழைச்சேன். என்னை போலீஸ் விசாரித்தபோது, யாரும் வாயே திறக்கலை. வந்தும் பார்க்கலை. மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு!’ எனக் கலங்கினாராம் ஆறுமுகம். 'கவலைப்படாதீங்க. அவங்களைப்பத்தி உங்களுக்குத் தெரியாதது இல்லை... உங்ககூட எப்போதும் நான் இருக்கேன். எது வந்தாலும் பார்த்துக்கலாம்!’ என்று தைரியம் சொல்லிவிட்டு வந்தாராம் அழகிரி!

முதல்வரும் சீமானும் சந்தித்த படத்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்று தலைமைச்

சீமான் புகைப்படம் காணோம்!

இலங்கைக்குப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை​வேற்றிய முதல்வர் ஜெயல​லிதா​வுக்கு 'நாம் தமிழர்’ கட்சி சார்பில் நன்றி சொல்வதற்கு சீமான் சென்றார். அவருடன் இயக்குநர் மணி​வண்ணனும் சென்றார்.

''நீங்கள்தான் சைதாப்பேட்​டையில் பொதுக்கூட்டம் நடத்திப் பாராட்டி​விட்டீர்களே! அப்புறம் நேரிலும் வாழ்த்துச் சொல்ல வேண்டுமா?'' என்ற முதல்வர், ''என்னைச் சந்திக்க வந்த ஹிலாரியிடம் இலங்கைபற்றிதான் முக்கால் மணி நேரம் பேசினேன். அதைக் கேட்ட ஹிலாரி, 'நீங்களே இலங்கை அரசிடம் பேசலாமே?’ என்றார். 'இதை மத்திய அரசுதான் செய்ய வேண்டும்’ என்று நான் சொன்னேன்!'' என்றாராம்.

''நாம் மத்திய அரசுடன் இது​பற்றிப் பேசினால், அவர்கள் சம்பிரதாயமாகத்தான் பேசுகிறார்கள். என்னைச் சந்திக்க வந்த இலங்கைத் தூதரிடம், 'இன்றைய நிலவரத்தை அறிய தூதுக் குழு அனுப்பினால், நீங்கள் சொல்லும் இடத்தைத்தான் பார்க்க வேண்டுமா?’ என்று கேட்டேன். அவர் மௌனமாக இருந்தார். என்னைப் பொறுத்த வரையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில்தான் மாறுதல் வேண்டும்!'' என்று நீண்ட நேரம் பேசினாராம் முதல்வர். ஆனால், முதல்வரும் சீமானும் சந்தித்த படத்தைப் பிரசுரிக்க வேண்டாம் என்று தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து நாளிதழ்களுக்கும் சொன்னதுதான் ஆச்சர்யமான சமாசாரம்.

''சீமான் சந்திப்புக்கு முன்னதாக டி.ஜி.பி. மற்றும் சென்னை கமிஷனர் ஆகிய இருவரும் முதல்வரை சந்தித்தார்கள். சீமான் சென்ற பிறகு மறுபடியும் இவர்கள் முதல்வரைச் சந்தித்தனர். சீமான் மீது புகார் கொடுத்த விஜயலட்சுமி பற்றி ஏதாவது சொன்னார்களா எனத் தெரியவில்லை. போட்டோ போடக்கூடாது என்று சொன்னதன் பின்னணி இதுவாகக்கூட இருக்கலாம்!'' என்கிறார்கள்.

3.95 ஏக்கர் நிலம் அழகிரியின் மனைவி காந்தியின் பெயருக்குக் கைமாறியது.

மதுரையை ஒட்டிய உத்தங்குடியில் இருக்கிறது நாகர் ஆலயம். அதற்குச் சொந்தமான 17.24 ஏக்கர் நிலம்தான் இந்த சர்ச்சைக்குக் காரணம். இதில், 3.95 ஏக்கர் நிலம் அழகிரியின் மனைவி காந்தியின் பெயருக்குக் கைமாறியது. இந்த நிலத்தை, விற்கவோ, வாங்கவோ கூடாதாம். அதை மீறி, இந்தப் பரிமாற்றம் நடந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலங்களை மார்ட்டின் வாங்கியுள்ளார். அதில் 3.95 ஏக்கரை காந்தி பெயருக்கு மாற்றி உள்ளார். இந்த ஆலயத்தை உருவாக்கிய நாகேந்திர ஐயரின் பேரன்தான் இந்தப் பிரச்னை தொடர்பாக போலீஸில் புகார் கொடுத்தார். மார்ட்டினை வளைக்கும் போலீஸ், அடுத்ததாக காந்தி அழகிரியைக் குறிவைத்துக் களத்தில் குதிக்கப்போகிறது. இரண்டொரு நாட்களில் இதற்கான முஸ்தீபுகள் ஆரம்பம் ஆகலாம். இதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டார் அழகிரி. நித்தமும் வக்கீல்களைப் பார்த்து ஆலோசிப்பதிலேயே அவரது நேரம் கழிகிறது. மதுரை முதல் டெல்லி வக்கீல்கள் வரை இந்த ஆலோசனையில் மூழ்கி உள்ளார்கள்!''

ஜாஃபர் சேட் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை

ஜாஃபரின் 'சீட்டிங்' ஜாதகம்!

  தமிழ் நாடு வீட்டு வசதி வாரியத்தின் சொத்துகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் தராதரம் இல்லாமல் எப்படி எல்லாம் தாரை வார்க்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்தியது அந்தக் கட்டுரைத் தொடர். சமூக ஆர்வலர்களில் ஒருவரான சென்னை கோபால கிருஷ்ணன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்களை அடிப்படையாகக்கொண்டு அவை எழுதப் பட்டன. ஆனால், இதுநாள் வரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்த இந்த விவகாரம் இப்போது பரபரப்பில்!

வீட்டு வசதி வாரியம் மூலம் முறைகேடாக நில ஒதுக்கீடு பெற்றது தொடர்பாக, கூடுதல் டி.ஜி.பி. ஜாஃபர்சேட், கருணாநிதியின் உதவியாளர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் உள்ளிட்ட பலரின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புகுந்து புறப்பட்ட பிறகு, இந்த விவகாரத்தில் செம சூடு. சென்னையைச் சேர்ந்த ஏ.சங்கர் இது தொடர்பாக கடந்த 23-ம் தேதி எழுத்துபூர்வ புகார் ஒன்றைக் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையில் போலீஸ் இறங்கியது.

கடந்த 12-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையில் அமைக்கப்பட்ட தனிப் படைகள், அண்ணா நகரில் உள்ள ஜாஃபர் சேட் வீடு, அருகில் உள்ள கஸ்தூரி ராஜ் என்ற பொறியாளர் வீடு, மேற்கு மாம்பலத்தில் ஜெய்சங்கர் என்பவரின் அலுவல கம், எழும்பூரில் நஜ்முதீன் வீடு, வேப்பேரியில் உள்ள பர்னாஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட், திருவான்மியூரில் உள்ள ஜாஃபர் சேட் நண்பர் வீடு, தி.நகரில் உள்ள லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் அலுவலகம், நந்தம்பாக்கம் துர்கா சங்கர் வீடு, பெரியகுளத்தில் உள்ள ஜாஃபர் சேட்டின் மாமனார் சலீம் வீடு என 9 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களுடன், லேப்டாப், சி.டி-க்கள் போன்றவற்றையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அள்ளிச் சென்றிருப்பது, ஜாஃபர் ஜாதகத்தில் சறுக்கல் தொடங்கி இருப்பதன் அடையாளம்! 120, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் சதி மற்றும் சீட்டிங் குற்றச்சாட்டுகள் அவர் மீது பாய்ந்துள்ளன.

ஜாஃபரின் ஜாதகம்!

கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் ஜாஃபர் சேட், கருணாநிதிக்கு நெருக்கமானவராக வலம் வந்ததாகப் பலரும் நினைக்கிறார்கள். அது தவறு. 96-ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டார் சுகவனம். அவருக்கு ஆதரவாக பர்கூர் தொகுதியில் பிரசாரத்துக்கு சென்றார் கருணாநிதி. அப்போது தர்மபுரி மாவட்ட எஸ்.பி-யாகப் பணியாற்றியவர் ஜாஃபர்.

பர்கூரில் மதிய வேளையில் திறந்த வேனில் கருணாநிதி பிரசாரம் செய்ய, அப்போது ஒரு குடிகாரர்


வேகமாக கருணாநிதியை நோக்கி வந்தார். யாரும் கவனிக்காத சூழலில் அந்தக் குடிகாரரை கவனித்த ஜாஃபர் சேட் வேகமாக ஓடி வந்து அவரைத் தள்ளிவிட்டார். குடிகாரனின் மடியில் இருந்த கத்தி கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் கருணாநிதியின் கண்ணில் பளிச்செனப் பட்டது. அந்தத் தேர்தலில் தி.மு.க. அமோகமாக வென்று ஆட்சியைப் பிடித்தது. முதல்வரான கருணாநிதியிடம், 'உங்களுக்கு பாதுகாப்பு எஸ்.பி-யாக யாரை நியமிக்க வேண்டும் என டி.ஜி.பி. கேட்கிறார்!’ என்றார் சண்முகநாதன். சட்டென யோசித்த கருணாநிதி, 'பர்கூர் பிரசாரத்தில் ஒரு குடிகாரனை எஸ்.பி. ஒருத்தர் பிடிச்சுத் தள்ளினாரே... அவரைக் கூப்பிடுங்க’ என்றார். அடுத்த கணமே தகவல் சுகவனத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. தர்மபுரியில் இருந்து தலைமையிடத்துக்கு ஜாஃபர் வந்தது அப்படித்தான். அப்போதே கருணாநிதியிடம் ரொம்பவே நெருக்கமான ஜாஃபர், கருணாநிதியின் குடும்ப உறவுகளை சமாளிக்கவும் கற்றிருந்தார்.

அப்போதைய ஆட்சி மாறி (2001-ம் ஆண்டு) ஜெயலலிதா முதல்வர் ஆனபோது, கருணா நிதியை உடனடியாகக் கைது செய்ய முடிவு எடுக்கப்பட்டது. கருணாநிதியின் நிழலாக விளங்கிய ஜாஃபரிடம் கைது நடவடிக்கையை ஒப்படைக்கலாம் என முடிவானது. ஆனால், அவர் எப்படியும் முன்னெச்சரிக்கையாக கருணா நிதியை உஷாராக்கிவிடுவார் எனத் தயங்கி, முத்துக் கருப்பன், ஜார்ஜ், கிறிஸ் டோபர் நெல்சன், முகமது அலி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளே கைது விவகாரத்தில் களம் இறங்கினார்கள். இவர்கள் ஆலோசனை நடத்திக் கொண்டு இருந்தபோதே, கோபாலபுரத்துக்கு மொத்தத் தகவலும் போய்ச் சேர்ந்தது. அங்கே இருந்து சன் டி.வி-க் கும் தகவல் பறக்க, போலீஸ் படை போனபோது ஏக ரசாபாசம். கைதுத் தகவலை கருணாநிதிக்குக் கசிய விட்டதே ஜாஃபர்தான் எனப் பரபரப்பு கிளம்பியது. அடுத்த கணமே ஜாஃபர் ஒரு டம்மி போஸ்ட்டுக்குத் தூக்கி அடிக்கப்பட்டார். ஐந்து வருடக் காத்திருப்புக்குப் பிறகு, கடந்த தி.மு.க. ஆட்சியில் (2006-ம் ஆண்டு) திருச்சி ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டார். முட்டை ரவி, மணல்மேடு சங்கர் உள்ளிட்ட தாதாக்களைச் சுட்ட பெருமையுடன் உளவுத் துறைக்கு அழைக்கப்பட்டார்.

தமிழக போலீஸ் சர்வீஸில் உளவுத் துறை ஐ.ஜி-யாக அதிக நாட்கள் இருந்தவர் ஜாஃபர்தான். அனைத்து மாநிலங்களிலும் உளவுத் துறைக்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் உள்ளவர்கள்தான் தலைவராக நியமிக்கப்படுவார்கள். அப்படி நியமிக்கப்பட்ட அனுப் ஜெய்ஸ்வால்பற்றியே கருணாநிதியிடம் போட்டுக்கொடுத்துத் தூக்கும் அளவுக்கு, தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டார். ஜாஃபர் ஏ.டி.ஜி.பி-யாக பதவி உயர்வு பெறும் வரை அந்தப் பொறுப்பு காலியிடமாகவே வைக்கப் பட்டது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாதிக்குப் பாதி ஜெயிப்பதுகூட கஷ்டம் என துரைமுருகன் உள்ளிட்ட சீனியர் நிர்வாகிகள் சொன்னபோது, அவர்களின் முன்னால் ஜாஃபரை அழைத்தார் கருணாநிதி. 'எத்தனை ஸீட் ஜெயிப்போம்னு சொல்லுங்க?’ என கருணாநிதி கேட்க, 'சரியா 28 ஸீட் ஜெயிப்போம். குறிப்பா விருதுநகர் தொகுதியில் வைகோ தோற்பது உறுதி!’ எனச் சொன்னார். அமைச்சர்கள் கூட்டம் வாயடைத்துப்போனது. தேர்தல் முடிவு வெளியான நாளில் அத்தனை நிர்வாகிகளின் முன்னால் ஜாஃபரை, 'மிஸ்டர் 28...’ என அழைத்து கௌரவப்படுத்தினார்.

கணிப்பு விஷயத்தில் இவ்வளவு சரியாக இருந்த ஜாஃபருக்கு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கணிப்பு கைகொடுக்கவில்லை. '119 ஸீட் உறுதி... 60 இடங்களில் இழுபறி’ என கடைசிக் கட்டக் கணிப்புகளை கருணாநிதியிடம் சொன்னார் ஜாஃபர். தேர்தல் முடிவுகள் வேறு விதமாக வெளியாக... மிக இறுக்கமான சூழலில் கருணாநிதியை சந்தித் தார் ஜாஃபர். 'என் கணிப்பு தவறாகிடுச்சு!’ என்பதை ஒப்புக்கொண்டார். தேர்தலில் தோல்வி அடைந்த நேரத்தில் கருணாநிதியின் வீட்டில் இருந்த போலீஸ் அதிகாரிகள் ஜாஃபரும் உளவுத் துறை எஸ்.பி.யான சந்திரசேகரும்தான்!

ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற உடன், அத்தனை போலீஸ் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தார்கள். சந்திரசேகரும் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்றார். ஆனால், கடைசி வரை ஜாஃபர் சேட் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவே இல்லை. எதிர் பார்த்ததுபோலவே மண்டபத்துக்கு ஜாஃபர் மாற்றப்பட்டார்.

இதில் ஒரு சுவாரஸ்யத் திருப்பம் என்ன தெரியுமா? ஐ.பி.எஸ். முடித்த உடன் முதல் பணியிடமாக ஜாஃபர் நியமிக்கப்பட்டதும் ராமநாதபுரம் மாவட்டத்தில்தான். உளவுத் துறையின் உச்ச புள்ளியாக மாறி, இப்போது அவர் தூக்கி வீசப்படும் இடமாகவும் அந்த மாவட்டமே அமைந்தது!

சீட்டிங் நடந்தது எப்படி?

வீட்டு வசதி வாரியத்தில் மனை கேட்டு ஜாஃபர் சேட் விண்ணப்பம் கொடுத்தபோது, 'அப்பழுக்கற்ற அரசு ஊழியர்’ என்கிற பிரிவில் இவருக்கு திருவான்மியூர் காமராஜர் நகரில் வீட்டு மனை எண் 540 ஒதுக்கப்படுவதாக வீட்டு வசதித் துறை 23.4.2008 அன்று உத்தரவிட்டது. ஆனால், இந்த மனையை ஏனோ அவர் வாங்கவில்லை. அதன் பிறகு அவர் மகள் ஜெனிஃபர் 'சமூக சேவகர்’ பிரிவில் மனை கேட்டு மனு கொடுக்கிறார். ஜெனிஃபருக்கு அதே 540 எண் கொண்ட மனையை ஒதுக்கீடு செய்வதாக 6.6.2008 தேதியிட்ட வீட்டு வசதித் துறையின் அரசு ஆணை தெரிவிக்கிறது. 4,756 சதுர அடிகொண்ட இந்த மனையின் மதிப்பு 1.15 கோடி. இதற்கான பணத்தையும் ஜெனிஃபர் கட்டுகிறார். ஆனால், 'மனை வேண்டாம்’ என்று சொல்லி பணத்தைத் திருப்பி வாங்கிவிடுகிறார். அதன் பிறகு அந்த மனை, ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் பெயருக்கு மாற்றப்பட்டது. இது குறித்து கடந்த 15.12.2010 ஜூ.வி இதழில் விரிவாக எழுதி இருந்தோம்.

இந்த மனை எண் 540-க்கு சற்றுத் தள்ளி இருக்கும் மனை எண் 538. இது கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் அவரிடம் செயலாளராக இருந்த ராஜ மாணிக்கத்தின் மகன் துர்கா சங்கருடையது. இவருக்கும் 'சமூக சேவகர்’ என்கிற பிரிவில்தான் மனை ஒதுக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.12 கோடி. இந்த இரண்டு மனைகளுக்கும் நடுவில் இன்னொருவருக்கு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு 1.15 கோடி. இந்த மூன்று பேரும் சேர்ந்துதான் தனியாக அபார்ட்மென்ட் கட்டும் வேலையில் இறங்கினார்கள். லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற பெயரில் 12 அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்று, அதன் மூலம் சுமார் 20 கோடி ரூபாய் வரையில் லாபம் பார்ப்பதுதான் நோக்கம். இது அப்பட்டமான விதிமுறை மீறல் என்கிறது போலீஸ். இந்த அடிப்படையில்தான் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர், ஜாஃபரின் நண்பர் ஜெய்சங்கர், கவர்னர் மாளிகையில் பர்னாலாவுக்கு நெருக்கமாக இருக்கும் நஜ்முதீன் எழும்பூர் வீடு, வேப்பேரி அலுவலம், தி.நகர் லேண்ட்மார்க் கன்ஸ்ட்ரக்ஷன் ஆகிய இடங்களை குறி வைத்து ரெய்டு நடத்தியது போலீஸ்.

''வீட்டு மனை கேட்டு அரசுக்கு முதலில் ஜாஃபர் சேட் மகள் ஜெனிஃபர் விண்ணப்பித்த போது, அவர் கொடுத்த முகவரி ராஜா தெரு, கல்யாணி நகர், திருவான்மியூர். இந்த முகவரிக்கு போலீஸ் போனபோது அங்கே வெறும் காலியிடம்தான் இருந்தது. இதேபோல ஜாஃபர் சேட்டின் மனைவி பர்வீன் ஜாஃபர் அனுப்பிய விண்ணப்பத்தில், 6.சி பிளாக், 14-வது தெரு, அண்ணா நகர் என்ற முகவரி இருந்தது. அதாவது, இப்போது ரெய்டு நடந்த வீடு இதுதான். இந்த இரண்டு வீடுகள் இருக்கும்போதே ஜாஃபர் சேட், தி.மு.க. ஆட்சியில் வாலாஜா சாலையில் உள்ள அரசுக் குடியிருப்பில் இருந்து வந்தார். தனக்கோ அல்லது தன்னைச் சார்ந்து இருப்பவர்கள் பெயரிலோ வீடுகள் இருந்தால், அரசுக் குடியிருப்பு கிடையாது என்பது விதி. மகள் மற்றும் மனைவி பெயரில் வீடுகள் இருக்கும்போதே, அரசுக் குடியிருப்பை அவர் பயன்படுத்தியதும் விதிமீறல். இப்படி மூன்று இடங்களில் வீடுகள் இருந்தும், மீண்டும் புதிதாக வீட்டு மனை வாங்கியது அப்பட்டமான விதிமீறல்...'' என்றார்கள் அதிகாரிகள். இந்த மனைக்காகக் கட்டிய பணத்துக்கும் ஜாஃபர் முறையான கணக்குகளைக் காட்டியாக வேண் டும்!

அடுத்தடுத்த நாட்களில் ஜாஃபர் மீதான வழக்குகள் வரிசையாக அணி வகுக்கும்!