திங்கள், 20 ஜூன், 2011

பாட புத்தகங்களை கிழிக்கும் பணி, மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்கேல், பிளேடு,



சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் பாடங்களை கிழிக்கவும், மையிட்டு அழிக்கவும் கத்தரிக்கோல், ஸ்டீல் ஸ்கேல், பிளேடு, கருப்பு மார்க்கர் பேனாவுடன் இன்று ஆஜராகும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘கிழிக்கும்’ பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை இந்த ஆண்டும் தொடர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 1 மற்றும் 6&ம் வகுப்புகளுக்காக அச்சிடப்பட்டுள்ள சமச்சீர் கல்வி தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள், சிலரது கவிதைகள் இடம் பெற்றுள்ள பக்கங்களை கிழிக்கவும், சில பக்கங்களை கருப்பு மையால் மறைக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
புத்தகத்தின் பின்பக்கத்தில் உள்ள செம்மொழி மாநாடு ‘லோகோ’வை பச்சை நிற ஸ்டிக்கரால் மறைக்கவும் ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பச்சை நிற ஸ்டிக்கர்களை தேவையான அளவு பள்ளிக்கல்வித் துறையே ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ளது.

ஆனால் பக்கங்களை கிழிப்பதற்கு தேவையான பிளேடு, கத்தரிக்கோல், பாடங்களை மறைக்க கருப்பு நிற மார்க்கர் பேனா, ஸ்டீல் ஸ்கேல் ஆகிய பொருட்களை ஆசிரியர்களே கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

பல மாவட்டங்களில் ‘கிழிப்பு’ பணி நேற்றே தொடங்கியது. ஒன்றரை கோடி புத்தகங்கள் இருப்பதால் ஒரேநாளில் பணி முடியவில்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் புத்தக கிழிப்பு பணியில் ஈடுபட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.

அன்பன் தமிழ் செம்மொழி என்பது தமிழனின் பெருமை.ஆனால் அதை மறைக்க ஜெயலலிதா முயல்வது கருணாநிதியைப் பழிவாங்க என்று கூறிக் கொண்டு, அவரது குருவான சோ.ராமசாயின் ஆசையை(தமிழ் அளிப்பு) அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். இந்த பணிக்கு தேவையான பொருட்களையும் overtime salary அரசாங்கமே கொடுத்திருந்தால் ஆசிரியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்

தொடரட்டும் கிழிக்கும் பணி. இனிமேல் யாரும் ஆசிரியர்களை என்ன செய்து கிழித்தாய் என்று சொல்லமுடியாது
வாத்தியார்கள் படித்து கிழித்தது பத்தாமல் புது புத்தகத்தையும் பாவம் கிழிக்கிறார்கள்
வரலாறு படைக்கிறது தமிழக அரசு. பார்ப்பனீயம் தமிழ் இனத்தின் மீது எவ்வளவு  குரோதம் வைத்திருந்தால் இந்த வஞ்சனையை செய்ய மனந்துணிந்திருக்கும்?
 புத்தகங்களை கிழிக்கிறார்கள் வெட்டுகிறார்கள் அழிகிறார்கள் பசை போட்டு ஒட்டி மறைக்கிறார்கள், தமிழ் செம்மொழியானதில் பார்பனர்களுக்கு தான் எத்தனை கோபம்?
பத்ம சேஷாத்ரி குழும கல்வி நிறுவனங்களின் முதலாளியான Y,G.Paarthasarathi அம்மையார் மற்றும் சோ போன்றவர்களுக்கு வயிற்றில் பால் வார்த்தது போன்றிருக்குமே? தமிழன் எவ்வளவு தரம் தாழ்ந்து கிடக்கிறான் என்பதை விளக்க  வார்த்தைகள் தேவை இல்லை, அமைச்சர்களும் கூட ஜெயாவின் காலில் விழுந்து கிடக்கும் காட்சி ஒன்றே போதும்,

மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.


திறமையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதிவிட்டு +2 மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

சேலம் அருகே உள்ள பணமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப்பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பணமரத்துப் பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நெய்க்காரபட்டியில் உள்ளது.
கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான்.
சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தான்.

மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.

சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தாது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள்.

சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால்  தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிகொண்டிருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.

சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள்.

அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.

நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்கு, புரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம்.

கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரிய வில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன்.

அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்.... அன்று, மாலை நான் பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார்,  தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார்.

பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.

மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார்.

அப்போது பின்னல் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே...

உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.

மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு,  வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன்.

எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்குகூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும்.

எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.

என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை..

திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும். என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.

சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார்.

சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.

அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில்  சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள். கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர். அரசுததந நடவடிக்கை வண்டும் மாதிரியான ஆசிரியர்களை பணி neekkam செய்து யினி yarum இதுமாதரியான தவறுகளை eavarum seyamal இறுக்க அவர்கள் பட்டதை திரும்பபெரவேண்டும்.ஒரு naattin தலை எழுத்து அதன் வகுpparaiyel nirnaikkapaduthu,அனால் இதுபோன்ற சம்ம்பவthதை பார்த்தால் en varungala இந்திய நிலைமை என்னவாகும். அரseச இனியும் ithu போன்ற maranam aற்படதிருக்க தகுந்த நடவடிக்கை eadukkavum Kalaiselvan
Name : Anand Country : Australia
ஆசிரியர்களின் மிக கேவலமான போக்கினை தெளிவாக எடுத்து கூறியுள்ளான் இந்த மாணவன். ஆனால் இது போன்ற தற்கொலை முடிவுகளை நாம் ஆதரிப்பதில்லை, என்றாலும் கல்விதுறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் . ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பணி செய்ய வேண்டும் . முரட்டு தனமான மாணவர்களையும் கோழைத்தனமான மாணவர்களையும் கையாளுவதற்கான மனதிடன் உள்ளவர்களாக ஆசிரியர்கள் உருவாக்கப்படவேண்டும்

இந்த செய்தியை பார்த்த உடனே என் மணம் மிகவும் வேதனை அடைகிறது. சீனிவாசன் மரணத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும். இன்மேலவது தகுதியான ஆசிரியர்களை பள்ளிகூடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். 11 ம் வகுப்பு படிக்கும் சீனிவாசனின் பெற்றோர்களுக்கு எதை கொடுத்தாலும் அவனது இழப்பை ஈடு கட்ட முடியாது. எவ்வளவு எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்கள். ரொம்ப கஷ்டமா இருக்கு. தமிழக முதல்வர் அம்மா அவர்கள் தயவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கு ஏற்றவாறு ஒரு சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

மாணவனின் உயிரை வாங்கும் அளவுக்கு ஆசிரியர்களின் பொறுப்பற்ற கடமை அமைந்துள்ளது. கை நிறைய சம்பளம் பெற்று கொண்டு கடமையை சரிவர செய்ய தவறும் ஆசிரியர்களை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும. அரசு வேலை கிடைத்து விட்டால் வேலை செய்ய வேண்டாம் என்ற எண்ணம் பரவலாக் உள்ளது. அரசு வேலைக்கு ஆட்களை எடுக்கும் பொழுது சரியான தகுதி வாய்ந்த நபர்களை எடுக்கவும். மாணவனின் கூற்று உண்மையாக இருக்கவே வாய்ப்பு உள்ளது. பொய் சொல்லி உயிரை மாக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் தலையிட்டு இது போன்ற சம்பவம் நடை பெறாமல் பார்த்து கொள்ளவம்.
யார் எதை சொன்னாலும் அரசாங்கம் ஏதும் செய்யபோவது இல்லை.

கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய மறுப்பு

டெல்லி: திமுக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.

ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வவந்தது.

கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

English summary
Kanimozhi and Sharad Kumar Reddy have been denied bail by SC. The court heared their pleas today and rejected their demands.

ஹீரோயினை வெருட்டியே காதல் வர வழைப்பதாக பாலாவும்? அவன்-இவன்- எவன்?

தெகிவளையில் உள்ள கொன்கோர்ட் கொழும்பில் உள்ள நல்ல தியேட்டர்களில் ஒன்று. ஒ.டி.சி., மற்றும் பல்கனி இல் இருந்து நீங்கள் படத்தைக் கண்டுகளிக்கலாம். ( ஆனால் படம் நன்றாக இருக்க வேண்டுமே!) டிஜிட்டல் ஒலிநயம் மற்றும் அளவுக்கதிகமான குளிரூட்டல். ராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் ( பெயரைக் கொஞ்சம் சுருக்கக் கூடாதா...அவரின் இடையின் அளவைப் போல...) ஏரியில் விழுந்து கட்டையை பிடித்து எழும்பும் போதும் விக்ரமுடன் ஈரம் சொட்டச் சொட்ட மலையில் ஏறும் பொழுதும் பிறகு விறகு மூட்டி குளிர் காயும் போதும், படம் பார்த்தவர்களுக்கும் ஏதோ தாங்களும் தண்ணீரில் விழுந்து குளிரில் நடுங்குவது போல உணர்வு...எல்லாம் ஏ.சி. யின் புண்ணியம்! படம் முழுக்க தண்ணீரும் குளிரும் மழையும் என்று இருந்தபடியால், பார்ப்பவர்களுக்கும் ஏதோ 4D தியேட்டரில் படம் பார்த்த எ(f)பெக்ட் கிடைத்தது.

வழமையாக மதிய நேரக் காட்சி மூன்று மணிக்கு நடக்கும். புதுப் படங்கள் என்றால் நான்கு காட்சிகள் என்றபடியால், மூன்று மணிக்காட்சிக்கு பதில் 4.30 மணிக்கு போடுவார்கள். இந்த நேரக் குழப்பத்தால் புதுப் படம், அதுவும் பாலாவின் படம், போதாக்குறைக்கு சனிக்கிழமை வேறு என்று மூன்று மணிக்காட்சிக்கு 2 மணிக்கே நீங்கள் போய் இருந்தால் உங்களின் நிலை பரிதாபம். இன்னும் இரண்டரை மணித்தியாலங்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் இரண்டு ஹீரோக்கள் கதை வருவதே அபூர்வம். விஷால், ஆர்யா என்று இரு முக்கியமான ஹீரோக்கள் சேர்ந்து நடிக்கும் படம், அதுவும் பாலாவின் படம் என்று எதிர்பார்ப்புகளுடன் முன் பனியா..முதல் மழையா...என்று காதோரம் பாடல் ரீங்காரம் செய்ய போய் உட்கார்ந்தவர்கள் நிச்சயம் ஏமாந்து தான் இருப்பார்கள். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் வரிசையில் இதுவும் ஒரு சீரியஸ் ஆன, பார்த்து பல நாட்கள் ஆனாலும் நெஞ்சில் தாக்கம் மிச்சமிருக்கிற படமாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்துகொண்டிருந்தால், மன்னிக்கவும்! படம் தொடங்கியதிலிருந்து, கடைசி ஒரு இருபது நிமிடம் வரை சிரிப்பு, சிரிப்பு மட்டுமே. ஆர்யா, விஷால் இருவரும் அப்பா போல பாசம் வைத்திருக்கும் ஒருவருக்கு நடக்கும் கொடூரம், அதற்கு ஹீரோக்கள் இருவரும் கொடுக்கும் தண்டனை இது தான் படத்தின் ஒரு வரிக் கதை. ( ஆங்கிலத்தில் 'one line' ). ஒரு வரிக் கதை மட்டும் அல்ல, பத்து வரி எழுதினாலும் கதை இது தான். பாலா அவர்களின் படங்களில் பொதுவாக கனமான கதை இருக்கும். இந்தப் படத்தின் கதையோ காற்று போல இருக்கிறது.

சேது படத்தில் எத்தனையோ கட்டங்கள் கண்ணீரை வரவழைத்து இருக்கும். நந்த படத்திலும் அப்படித் தான். பிதா மகன் படத்தில் லைலா கதறும் அந்த கட்டத்தில் கண்கலங்காதவர்கள் குறைவு. சேதுவில் விக்ரம் மீண்டும் மனநல மருத்துவமனைக்கு போகும் காட்சியும், நந்தாவில் சூர்யாவின் மரணமும் துக்கம் தொண்டையை இருக்கும் கட்டங்கள். பிதாமகனில் சூர்யா இறந்து விக்ரமும் கைவிடப்பட்டு திரும்பவும் சுடுகாட்டுக்கே செல்லும் கட்டமும் அப்படியே. ஆனால், அவன்-இவனில் அப்படி மனது கனக்கும் கட்டங்களோ, கண்ணீர் வரப்பார்க்கும் காட்சிகளோ எதுவும் இல்லை. முழுவதும் நகைச்சுவைப் படமாக இருந்தாலும் கூட, அடிப்படையான கதை என்று ஒன்று இருக்க வேண்டாமா? முழு நீள நகைச்சுவைப் படங்கள் கூட ஒரு கதையோட்டத்தைத் தழுவித் தானே இருப்பது வழக்கம். உதாரணத்துக்கு காதலிக்க நேரமில்லையில் தொடக்கி பஞ்ச தந்திரம், பாஸ் (எ) பாஸ்கரன் வரை. படம் முழுக்க ஒருவரை ஒருவர் திட்டுவதும் பிறகு பாசத்தைப் பொழிவதுமாக இருந்தால் எப்படி இருக்கும்?

படம் முழுவதும் தாராளமாக கெட்டவார்த்தைகள். தணிக்கையில் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.பெண்களின் உடல் பாகங்கள் என்றால் தானே பிரச்சனை வரும் என்றதாலோ என்னவோ, ஆண்கள், மற்றும் பொதுவான பாகங்கள் மற்றும் பல நாளாந்த வாழ்க்கையில் சொல்ல நா கூசுகிற வார்த்தைகள். நீங்களுமா பாலா? இரட்டை அர்த்தம் அல்ல, நேரடியான ஒரே அர்த்தம் தான். படத்தை கதை இல்லாமல், கொமெடியை கொண்டே நகர்த்துவது என்று முடிவு செய்த பிறகு கடைசியில் அத்தனை கொடூரம் எதற்கு?


விஷால் அற்புதமான நடிகர் என்று இந்த படத்தில் தெரிகிறது. விக்ரம் இற்கும் சூர்யாக்கும் ஒரு புதிய பரிமாணம் கிடைத்தது போல விஷாலுக்கும் கிடைக்கலாம். ஆர்யா படம் முழுக்க ரசிக்கும் படியான கலாட்டா. குடித்துவிட்டு ஜமீன்தாருடன் அடிக்கும் கொட்டத்தில் தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. விஷாலின் மாறுகண் இந்தப் படத்திற்கு அதிகப்படியான உழைப்பு. பெண் வேடத்தில் குத்தாட்டம் போடும் போது அவளவு தத்ரூபமான உடல் அசைவுகள். ஜமீன்தாராக வரும் G.M.குமார் மிகச் சிறந்த இயல்பான நடிப்பு. படம் ஆரம்பிக்கும் போது சிம்மாசனத்தில் படுத்திருந்து குழந்தை போல சிரிப்பதில் இருந்து ஒரு விஷால் ஆர்யா இருவருடனும் சிறு பிள்ளைபோல் பாசத்தைக் காட்டுவதில் இருந்து kungfu panda போல இருக்கிறார். போயும் போயும் இந்தப் படத்தில் இந்த கதைக்காக அவரை இந்தளவுக்கு சேனல் 4 ரேஞ்சுக்கு கொடுமைப் படுத்தியிருக்க வேண்டுமா? அபிதகுஜலாம்பாளை ராக் பண்ணுவதில் இருந்து, லைலாவை டப்பா உருட்டி செயின் அபகரிப்பதில் இருந்து, இன்னும் எத்தனை காலத்துக்கு ஹீரோ, ஹீரோயினை வெருட்டியே காதல் வர வழைப்பதாக பாலா காட்டப் போகிறார்?

ஒரே ஒரு கட்டத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்தாலும் சூர்யா அவ்வளவு ஹான்ட்சம். தியேட்டரில் விசில் சத்தம். ஏழாம் அறிவு எப்போது? நந்தாவில் கண்களில் சாம்பல் நிற லென்ஸ் வைத்து லைலாவிடம் உருகும் சூர்யா ஒருகணம் எல்லோர் ஞாபகத்திலும் வந்து போய் இருக்கக் கூடும். பிதாமகன் 'இளங்காற்று வீசுதே...' பாடல் இசையும் காட்சியும் இன்னும் பலருக்கு நினைவில் வந்துபோகும். அவன்-இவன் பாடல்கள் தெகிவளையில் இருந்து பம்பலப்பிட்டி வரை கூட தாங்காது போல இருக்கிறது.

தனது வழமையான பாணியில் இருந்து வேறுபட்டு புதிய படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் பாலா. ஆனால் ஷேக்ஸ்பியருக்கு சோகம் தான் விசேஷம் என்பது போல பாலா, பாலாவாக இருப்பது தானே அழகு. நகைச்சுவைப் படங்கள் எடுப்பதற்கு தான் சிம்பு தேவன் இல் இருந்து M.ராஜேஷ் வரை இருக்கிறார்களே. அப்படி வித்தியாசமான, நகைச்சுவைப் படமாகவே எடுத்தாலும், அதிலும் பாலா என்கிற முத்திரையின் தரம் கெடாமல் பார்த்துக் கொள்வது தானே அழகு. இல்லா விட்டால், ட்ரைலர் இல் ஆவது எதையாவது காட்டி எதிபார்ப்பைக் குறைத்திருக்க வேண்டாமா? ( பாலா இவ்வளவு விரைவாக படத்தை முடித்ததுமே உங்களுக்கு ஒரு மெல்லிய சந்தேகம் வந்திருக்க வேண்டாமா?!) முழு நீள நகைச் சுவையையை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஒருவேளை படம் ஒரு விருந்தாக இருக்கக் கூடும். மற்றபடி, பாலாவின் அடுத்த படத்துக்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டியது தான்.
நன்றி www.munpanikalam.blogspot.com/

ராஜபாட்டை’யில் விக்ரம்

அழகர்சாமியின் குதிரை படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இது ஒரு ஜாலியான கமர்ஷியல் படமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு வாண்ட்டட் படத்தின் கதாநாயகி தீக்‌ஷா ஷேத் தான் இதில் விக்ரமுக்கு ஜோடி.
சீனுவாசன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுசீந்திரன். இசை யுவன் ஷங்கர் ராஜா, கேமரா மதி, பாடல்கள் யுகபாரதி என நான் மகான் அல்ல படத்தின் கூட்டணி இதில் மீண்டும் இணைகிறது. அழகர்சாமியின் குதிரை படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி ராஜபாட்டை படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
ராஜபாட்டை முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு ஜூன் ஏழாம் தேதி முதல் 60 நாட்கள் சென்னையில் நடக்கிறது. பிரம்மாண்டமான செட் போட்டு மூன்று பாடல் காட்சிகளை படமாக்குகிறார்கள்.

யாழ் மாவட்டத்தில் ஈழப்போரின் பக்க விளைவுகள்!

கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் விளைவாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் பின்வரும்
நிலைமைகள் காணப்படுவதாக அம்மாவட்டத்தின் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்
அண்மையில் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை வருமாறு:

* யுத்தம் காரணமாக யாழ் மாவட்டத்தில் 15 ஆயிரம் பெண்கள் விதவைகள்
ஆக்கப்பட்டுள்ளனர்.

* பயங்கரவாத நடவடிக்கைகளால் பெற்றோரை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 990
ஆகும்.

* போரின் காரணமாக தாய் தந்தையரை இழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 437 ஆகும்.

* தந்தையை மட்டும் இழந்தவர்களின் எண்ணிக்கை 6321 ஆகும்.

* பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 489 ஆகும்.

* யாழ்ப்பாணக் குடாநாட்டில் 2010ல் 251 பதின்ம வயதுச் சிறுமிகள் கர்ப்பம் தரித்துள்ளனர். 2011 ஜனவரி – பெப்ருவரி மாதங்களில் மட்டும் 109 பேர் அவ்வாறு கருத் தரித்துள்ளனர்.

* 163 பேர் சிறுவர் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நிச்சயமாக இந்த நிலைமைகள் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற தேவையற்ற
கொடிய யுத்தமொன்றின் பக்க விளைவுகளாகும்.

இந்த நிலைமைகள் மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் மேலும் பல மடங்கு அதிகம்
எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில் அம்மாவட்டங்களில் வாழும் ஏழை எளிய மக்களின் பிள்ளைகள்தான் கூடுதலாக புலிகளால் பலவந்தமாகத் தமது படையணிகளில்
சேர்க்கப்பட்டு அழிவுக்குள்ளாக்கப்பட்டவர்கள்.

அந்த மக்கள் இந்த அவல நிலையை அடைவதற்கு புலிகள் மட்டுமின்றி, தமது சொந்த
சுயநலத்திற்காக, அவர்களது யுத்த சன்னதத்திற்கு பெருமளவு நிதி கொடுத்து உதவிய
புலம்பெயர் தமிழர்களும் காரணம் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

இப்பொழுது அந்த மக்களின் வாழ்க்கையைப் படிப்படியாக சீரமைப்பதற்கு அரசாங்கம்
முயற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், அதற்கு உதவுவதற்குப் பதிலாக, அவர்களை
மேலும் மேலும் துன்பத்துக்குள் தள்ளிவிடும் செயல்களை புலம்பெயர் புலித்தமிழர்கள்
செய்து வருகின்றனர். அவர்களது இந்தச் செயல்களுக்கு கடந்த காலங்களைப் போல
தெரிந்தோ தெரியாமலே உதவிகள் எதுவும் புரியாது, தம்மை விலக்கி வைத்திருப்பது
தாயகத்தில் வாழும் தமிழ் உறவுகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் செய்ய வேண்டிய
தலையாய கடமையாகும்.

ஜெயா திருந்திவிட்டாராம்! நரியைப் பரியாக்கும் கோயபல்சுகள்!!

ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதும், அவரை ஆதரிக்கும் ஊடகங்களும் பிழைப்புவாதிகளும் முதலாளிகளும் வழக்கம்போலத் துதிபாடக் கிளம்பிவிட்டார்கள். ஆட்சி மாறும்போது இப்படியெல்லாம் நடப்பது வாடிக்கையானதுதான் என்றாலும், இப்போது பழைய பிசாசை புதிய அம்மனாகச் சித்தரிக்கும் கோயபல்சு வேலையை அவர்கள் திட்டமிட்டுச் சேது வருகிறார்கள். “ஜெயலலிதா இப்போது மாறிவிட்டார், அவரது ஆட்சி வித்தியாசமான ஆட்சியாக இருக்கும்” என்ற பிரமை தேர்தலுக்கு முன்பே ஊடகங்களால் திட்டமிட்டு ஊட்டப்பட்டன. தமிழக மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குப் போராட்டமோ, மாற்றுத் திட்டமோ முன்வைக்காத போதிலும், ஜெயாவைத் துதிபாடி மக்களின் கவனத்தை அதை நோக்கிக் குவிப்பது என்று பார்ப்பன ஊடகங்கள் செயல்பட்டன
தி.மு.க.வின் இலஞ்ச-ஊழலை அம்பலப்படுத்துவதில் மட்டும் அக்கறை காட்டும் ஊடகங்கள், ஜெயா ஆட்சியில் நடந்த இலஞ்ச-ஊழல், கொள்ளைகளைப் பற்றி வாய்திறப்பதில்லை. ஜெயா மீது சட்டத்துக்குப் புறம்பான வழிகளில் சோத்து சேர்த்த வழக்குகளும் உள்ளன. இந்த வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கின்றன. ராசாவும் தயாநிதியும் சி.பி.ஐ. விசாரணை, வழக்கு காரணமாக பதவியில் இருக்கக்கூடாது என்கிற போது, ஜெயலலிதாவுக்கு மட்டும் அது பொருந்தாதா? இருப்பினும், ஜெயலலிதா கும்பலின் முந்தைய மகாத்மியங்கள் அனைத்தும் ஊடகங்களால் மூடிமறைக்கப்படுகின்றன.
அவரது முகத்தில் எப்போதுமில்லாத புன்னகை – மென்மையான தாய்மையுணர்வுமிக்க தோற்றத்தைக் கொடுக்கிறது. கருணைமிக்க அம்மாவாகக் காட்சியளிக்கிறார். மக்கள் அளித்துள்ள தீர்ப்பு அர்த்தமுள்ளது என்பதை முதல்நாள் தொட்டே நிரூபிக்கத் தொடங்கியிருக்கிறார். அவரின் முந்தைய ஆட்சிக் காலங்களில் ஆதிக்கம் செலுத்திய சர்வாதிகாரத்திற்குப் பதில், வெளிப்படைத்தன்மையும் பதில் கூறும் பொறுப்புணர்வும் இந்த முறை பிரதிபலிக்கிறது” என்று ஜால்ரா போடுகிறது, இந்தியா டுடே. “இது மக்கள் புரட்சி. மக்கள் ஒரு மவுனப் புரட்சியை நடத்தியிருக்கிறார்கள்” என்று ஜெயா துதிபாடுகிறது, குமுதம் ரிப்போர்ட்டர்.
ஜெயலலிதாவின் ஆட்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்று முடிவு செய்வதற்கு ஊகமோ, காத்திருப்போ அவசியமில்லை. தி.மு.க. வின் ஊழலால் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்துப் பெருங்கூச்சல் போட்டே ஆட்சியைப் பிடித்து விட்ட ஜெயா செய்த முதற் காரியம், 1200 கோடி ரூபாய் விரயமாக்கும் வகையில் புதிய தலைமைச் செயலகத்தை இழுத்து மூடிவிட்டு, தானே தகுதியற்றதென்று நிராகரித்து, புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு பழமை வாய்ந்த கல்லூரியை இடிக்க எத்தணித்துவிட்டு, எதிர்ப்பு கிளம்பியதும் வேறெரு இடத்தில் பூமி பூசையும் போட்ட ஜெயா, இப்போது ஜார்ஜ் கோட்டைக்குள் புகுந்துவிட்டார். ஏற்கெனவே அச்சிடப்பட்ட 200 கோடி ரூபாய் பாடப் புத்தகங்களை வீணாக்கி, மேலும் 100 கோடி செலவில் பழைய பாடப் புத்தகங்களை அச்சிட்டு ‘சமச்சீர் கல்வி’யை ஒழிக்கும் நோக்கில் உத்தரவு போட்டுள்ளார். இவற்றையெல்லாம் தனது கோயபல்சு பாணியில் நியாயப்படுத்த வாதம் புரிகிறார். இவையெல்லாம் பார்ப்பன-பாசிச ஜெயா மாறிவிட்டதையா காட்டுகின்றன?

லஞ்சம் வாங்கும் கட்டாயத்தில் போலீசார்.ஓசி'யில் தங்கும் உயர் அதிகாரிகள்

மதுரைக்கு குடும்பத்துடன் வரும் போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு உட்பட அனைத்து செலவுகளையும், அந்தந்த பகுதி போலீசார் ஏற்க வேண்டியுள்ளது. இதை சமாளிக்க, லஞ்சம் வாங்க வேண்டியிருப்பதாக போலீசார் புலம்புகின்றனர்.

தென் மாவட்டத்திற்கு சொந்த காரணங்களுக்காக வரும் உயர் அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள், மதுரையில் தங்கி வெளியிடங்களுக்குச் செல்கின்றனர். இத்தகவலை முன்கூட்டியே கமிஷனர் அலுவலகத்திற்கு தெரிவித்து விடுவர்.சில அதிகாரிகள், குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில் தான் அறை வேண்டும் என அடம்பிடிப்பர். இவர்களுக்கு தங்கும் இடம், சாப்பாடு செலவு என அனைத்தையும் பார்த்து செய்யுமாறு கமிஷனர் அலுவலகத்திலிருந்து, அந்தந்த ஸ்டேஷன் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பர்.பெரும்பாலான அதிகாரிகள், மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் தங்குகின்றனர். இதற்கு ஒருநாள் வாடகை 100 ரூபாய். மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய். சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

இதைக்கூட அதிகாரிகள் தருவதில்லை. அவர்களுக்கு மட்டுமில்லாமல், குடும்பத்திற்கே சாப்பாடு செலவு, அந்தந்த பகுதி போலீசாரின் தலையில் விழுகிறது. தவிர, திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்தால், வாகன வசதி, "பொக்கே' போன்றவற்றையும் போலீசாரே ஏற்பாடு செய்ய வேண்டும்.போலீசார் கூறுகையில், "சர்வீசில் உள்ள அதிகாரிகளை விட, ஓய்வு பெற்ற அதிகாரிகளின் அதிகாரம் தாங்க முடியவில்லை. குடும்பத்துடன் ஊர் ஊராக சுற்றுலா செல்லும் செலவு, எங்கள் தலையில் விழுகிறது. ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கும், பென்ஷன் வாங்கும் இவர்கள், ஒருநாள் வாடகையைக்கூட செலுத்தத் தயங்குகின்றனர்.

ஒரு அதிகாரி வந்தால், குறைந்தது 5,000 ரூபாய் செலவாகிறது. இதை சமாளிக்க, புகார் கொடுக்க வருபவர்களிடமும், வழக்குகளில் சிக்கியவர்களிடமும் "வசூலிக்க' வேண்டியுள்ளது. ஓட்டல்களில், "ஓசி'யில் தங்க அறை கேட்பதால், ரெய்டு செல்லவே கூச்சமாக இருக்கிறது. இதற்கு ஒரே தீர்வு, மதுரை வரும் அதிகாரிகள், அவரவர் செலவில் தங்கிச் செல்ல வேண்டும். இதை அவர்களாக உணர வேண்டும்' என்றனர்.
mangai sofiya - madurai,இந்தியா
2011-06-20 04:55:31 IST Report Abuse
பாவம் அதனால் தான் இவர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா?? இல்லாவிட்டால் நேர்மையாக இருப்பார்களா.. இந்த போலீஸ்காரர்கள் எல்லாருமே இப்படிதான்.. திருந்தவே மாட்டார்கள்.
kunjumani - Chennai ,இந்தியா
2011-06-20 04:35:22 IST Report Abuse
போலிஸ் லஞ்சம் வாங்கும் பிரச்சனைக்கு நம்ம விசயகாந்த் என்ன ஐடியா வெச்சிருக்கிறார்ன்னா, பாக்கெட் இருந்தாதானே போலிஸ் லஞ்சம் வாங்குது ? அதனால எல்லா போலிசும் இனி வேஸ்ட்டி தான் கட்டனும் முண்டா பனியன் தான் போடணும் ,இப்படி பண்ணுனா ஒரே நாள்ல லஞ்சம் ஒழிஞ்சுடும்
VIVASAYI - Salem,இந்தியா
2011-06-20 03:19:21 IST Report Abuse
ஆஹா.. படு சீப்பாக இருக்கிறதே... என்னது இவ்வளவுதானா...மாநகராட்சி எதிரேயுள்ள போலீஸ் விருந்தினர் விடுதியில் ஒருநாள் வாடகை 100 ரூபாய், மத்திய போலீஸ் அதிகாரிகள் என்றால் 200 ரூபாய், சர்க்கியூட் ஹவுசில் தங்க 150, 250 ரூபாய் ... இவ்வளவுதானா..? அதிகாரிகள் வராத நாட்களில் வெளியாளுங்களுக்கு வாடகைக்கு விட்டாலே, எத்தனை அதிகாரிகள் எத்தனை குடும்பங்களுடன் வந்தாலும் சமாளிக்கலாம் போலிருக்கிறதே? .
Sekar Sekaran - jurong west,சிங்கப்பூர்
2011-06-20 01:42:49 IST Report Abuse
இனி அது போன்ற அதிகாரிகளை பற்றி புகார் சொல்லுங்கள்..!! மீசையை எடுத்துவிட்டு கையில் "அலுமினிய' தட்டோடு குடும்பத்தினரை கொண்டுவர சொல்லுங்கள்..! பயம் வேண்டாம்..!! முடிந்தால் உப்பை நிறைய சேர்த்து உண்ண சொல்லுங்கள்..! மனைவி மக்களோடு வரும் அவர்களுக்கு "மானம்..வெட்கம்..ரோஷம்" இருக்கும் வகையில் சோற்றில் நிறைய உப்பை அள்ளிப்போட்டு கொடுங்கள்...!! பல்போன கிழட்டு ஓய்வு பெற்றவர்களை ஒதுக்குங்கள்.!! மீசையை எடுத்துவிட்டு வந்து ஓசியில் சாப்பிட்டு போக சொல்லுங்கள்..!. இந்த பிழைப்புக்கு நாண்டுகொண்டு சாகசொல்லுங்கள்..!! இதனை அச்சிலேற்றி அவர்கள் தாங்கும் இடங்களில் பிரேம் போட்டு மாட்டிவையுங்கள்..!! அப்படியாவது இவர்களுக்கு புத்தி வருமா என்று பார்ப்போமே..!! அம்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்..!! நிச்சயம் தக்க நடவடிக்கையை எடுப்பார்கள்..!!
VJ vk - chennai,இந்தியா
2011-06-20 00:48:21 IST Report Abuse
ஓய்வு பெற்ற அதிகாரிகள் உண்மையிலேயே சோறு தான் சாப்பிடுகிறார்களா? இல்ல ...........சாப்பிடுறாங்களா? . இப்போது அரசு அதிகாரிகளுமா?? காவலர்களே உங்களால் ஏன் செய்யமுடியாது என்று கூறமுடியவில்லை.? சிந்தியுங்கள். ஏனென்றால் நீங்கள் ஒரே இடத்தில ஒரே காவல் நிலையத்தில் சுலபமான பணியை பார்க்க விரும்புவதால் தானே? அதற்கு நீங்கள் உங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து இவ்வாறு அதிகாரிகள் வரும்போது செய்தால் உங்களுக்கு நீங்கள் விரும்பும் பணி விரும்பும் இடத்திலே கிடைக்கும் அல்லவா? கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

மத்திய அரசு நிறுவன பெயர் பலகைகளில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழி

மத்திய அரசு அலுவலகங்கள், அரசுத் துறை நிறுவனங்கள், அரசுடைமை வங்கிகளில் பெயர்ப் பலகைகள், அறிவிப்புப் பலகைகள் ஆகியவற்றில் ஹிந்தி, ஆங்கிலத்துடன் இனி அந்தந்த மாநில ஆட்சி மொழியும் இடம்பெற்றிருக்கும்.

இதற்கான முடிவை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அந்தந்த மாநிலங்களில் உள்ள இரண்டாவது ஆட்சி மொழியை மத்திய அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹிந்தி முதல் மொழியாக உள்ள மாநிலங்களில் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர்ப் பலகைகள், அறிவிப்புப் பலகைகளில் ஹிந்தி முதலிடம் பெற்றிருக்கும். அம்மாநிலத்தின் இரண்டாவது ஆட்சி மொழியும் ஆங்கிலமும் அதன் கீழ் இடம்பெறும்.
இவ்விரண்டு மொழிகளின் வரிசையை மாநிலங்கள் முடிவு செய்யும். ஹிந்தி முதல் மொழியாக இல்லாத மாநிலங்களில், பெயர்ப்பலகைகளில், அந்த மாநில மொழி முதலில் இடம்பெற வேண்டும். இரண்டாவதாக ஹிந்தியும், மூன்றாவதாக ஆங்கிலமும் இடம்பெற வேண்டும். இது தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே அமலில் உள்ளது.

அனைத்து மொழிகளிலும் எழுத்துகள் ஒரே அளவில் அமைந்திருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம்: திக் விஜய் சிங்



ராகுல் காந்தி பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன் என, திக் விஜய் சிங் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 41வது பிறந்த நாள் மத்திய பிரதேச மாநிலத்தில் கொண்டாடப்பட்டது. அதில் அந்த மாநில முன்னாள் முதல் மந்திரியும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான திக் விஜய் சிங் கலந்து கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: ராகுல் காந்திக்கு 40 வயது முடிந்து 41 வது வயது பிறக்கிறது. அவர் புதிய சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று எனது பிறந்த நாள் வாழ்த்தாக தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

ராகுல் காந்தியின் பிறந்த நாள் உத்தரப்பிரதேசம் முழுவதும் விவசாயிகளின் உரிமை நாளாக கொண்டாடப்படுகிறது. ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான உமா பாரதி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர், எதிர்கட்சியினரை மதிக்க ராகுல் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். ராகுல் எதிர்கட்சியினரை மதிக்க என்றும் தவறியதில்லை.
ராகுல் கடந்த 8 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்து வருகிறார். அவர் அரசியலில் நல்ல அனுபவம் பெற்றுள்ளார். காந்தி குடும்பத்தின் வழித்தோன்றலான அவர் சிறந்த பண்பு, இயற்கை அறிவு, சிறந்த அனுபவம் ஆகியவற்றைப் பெற்று பிரதமர் பதவியை ஏற்ககூடிய தகுதியைப் பெற்று விட்டார்.
எனவே அவர் பிரதமர் பதவியை ஏற்க இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். அவர் சிறுபான்மை மக்களை திருப்திபடுத்த அரசியல் செய்வதாக கூறுவதை ஏற்க முடியாது.

சிறுபான்மை ஆதரவு அரசியல் நடத்துவதான என்னை குறை கூறுகின்றனர். தற்போதைய முதல் மந்திரி சிவராஜ் சிங்கை முஸ்லிம்கள் பாராட்டுகின்றனர். அதற்காக, அவரை சிறுபான்மை ஆதரவு அரசியல் நடத்துவதாக யாரும் கூறுவதில்லை. நான் மத்திய பிரதேச முதல் மந்திரியாக இருந்தபோது சிமி மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இரண்டு அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுத்தேன். பா.ஜனதாவில் இருந்து வெளியேற்றப்பட்ட உமா பாரதிக்கு வேறு எங்கும் புகலிடம் கிடைக்காததால் மீண்டும் பா.ஜனதாவிலேயே சேர்ந்து விட்டார் என்றார்.

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து சென்ற காரில் 35 லட்சம் சிக்கியது


ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது,

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

6 மாதம் படகுச் சேவை தொடர்ந்தால் தூக்கிட்டு கொள்வாராம் சீமான்

சீமான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வாராம். 
ஆஹா  சுப காரிய சீகிரமஸ்து.
யாரோ பெற்றெடுத்த குழந்தைகளுக்கு எல்லாம்  விஷக்குப்பி வழங்கிவிட்டு தாங்கள் மட்டும் வெள்ளைக்கொடி ஏந்தி, வீரவசனம் எல்லாம் மறந்து சரணடைந்த கும்பலின் தமிழ் நாட்டு குண்டனிடம் இருந்து வேறு விதமான டயலாக்குகளை எதிர்பார்க்க முடியாதுதான். 
சீமான்  பிறரை தற்கொலை செய்து கொள்ள தூண்டுவார் 
ஆனால் தான் கவனமாக சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் வைத்துகொண்டு ஜோராக செழித்து கொளுப்பார். 
தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி
இலங்கை இந்திய கப்பலை சேவையை ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும், நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன் என நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை சைதாப்பேட்டை தேடி திடலில் பாராட்டு கூட்டம் நடத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி இணைப்பாளர் சீமான் தொடர்ந்து உரையாற்றுகையில்:-

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டிருக்கிறது. எந்த தமிழன் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டுமென்று கேட்டான். வீம்பிற்காக காங்கிரஸ் அரசு சில காலத்திற்கு அந்த கப்பலை ஓட்டுவிட்டு பின்னர் நிறுத்திவிடும்.

தொடர்ந்து இந்த கப்பலை ஒரு ஆறு மாதத்திற்கு காங்கிரஸ் அரசு ஓட்டி காட்டட்டும். நான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்கில் தொங்கி என் உயிரை விடுகிறேன். என்றார்.

இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை: இலங்கை கிரிக்கெட் நாளை கூட்டம்


இலங்கை பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாட இந்திய வீரர்களை அனுமதிப்பதில்லை என்ற இந்திய கிரிக்கெட் சபையின் (பிசிசிஐ) தீர்மானம் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள இலங்கை கிரிக்கெட் இது குறித்து நாளை கலந்துரையாடவுள்ளது.
நாளை இவ்விடயம் குறித்து இடைக்கால நிர்வாகக் குழு கலந்துரையாடும். இந்நிலைமையை நாம் ஆராய வேண்டியிருப்பதால் இது குறித்து இப்போதே கருத்துக்கூறுவது கால முதிர்ச்சியற்றதாகும் என இலங்கை கிரிக்கெட் செயலாளர் நிஷாந்த ரணதுங்க கூறியுள்ளார்.
இலங்கை மாகாண அணிகளுக்கிடையிலான இப்போட்டிகளில் 12 இந்திய வீரர்கள் விளையாடவிருந்தனர். - பிரவீன் குமார், முனாவ் பட்டேல், இர்பான் பதான், தினேஸ் கார்த்திக், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, மனோஜ் திவாரி, சௌரப் திவாரி, உமேஸ் யாதவ், வினய் குமார், மனிஷ் பான்டே, போல் வால்தாட்டி ஆகியோரே இவ்வீரர்கள்.
இவர்களுக்கு ஆட்சேபனையில்லை என்ற சான்றிதழை வழங்க இந்திய கிரிக்கெட் சபை மறுப்பு தெரிவித்துள்ளது.
இப்போட்டிகள் இலங்கை கிரிக்கெட் சபையினால் அல்லாமல் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் எனும் தனியார் நிறுவனமொன்றினால் நடத்தப்படுவதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சமர்செட் என்டெர்டெய்ட்ன்மன்ட் நிறுவனமானது இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் கிளையாகும் என நிஷாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜூலை 19 முதல் ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரை இப்போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்துக்கு இந்திய நன்கொடை

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் விதவைகளானவர்களுக்கு சுய தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்திய அரசினால் முதற் கட்டமாக 203 மில்லியன் ரூபா நிதி நன்கொடையாக கிடைத்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார துனை அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலான எண்ணிக்கையில் யுத்த விதவைகளைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்திலேயே “சேவா இந்தியா ” அமைப்பின் ஊடாக நடை முறைப்படுத்தப்படவிருப்பதாக அவர் கூறுகின்றார்.
இத் திட்டத்தை நடை முஐறப்படுத்துவதற்கென 50 இளைஞர் யுவதிகள் பயிற்சிக்காக தெரிவு செய்யப்டப்டு அடுத்த வாரம் இந்தியாவிலுள்ள “சேவா இந்தியா” அமைப்பின் ஊடாக பயிற்சி பெறுவதற்காக இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும், அவர்கள் பயிற்சி பெற்ற பின்னர் 800 இளம் விதவைகளுக்கு அவர்கள் ஊடாக சுய தொழில் பயிற்சி வழங்கப்பட்டு சுய தொழில் வாயப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்த துணை அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்
ஆடைத் தொழில், கணிணீ, கைப்பணிப் பொருட்கள் உற்பத்தி, உணவு பதனிடல், கால் நடை வளர்ப்பு உட்பட 8 துறைகள் குறித்த சுய தொழில் வாயப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பயிற்சியின் பின்னர் மாதமொன்றிற்கு ஆகக் குறைந்ததது ரூபா 15 ஆயிரம் குறித்த குடும்பத்தினால் வருமானத்தை பெறக் கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.
இதற்கு மேலதிகமாக வடக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் யுத்த விதவைகளுக்கு சுய தொழில் வாயப்புகளை வழங்க தனது அமைச்சு சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்ததைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவுக்கு அனுப்பும் திட்டம் தொடரும் : அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட்!

இலங்கையர் உள்ளிட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்களை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்திற்கு எதிராக அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆட்கடத்தல் வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் அவுஸ்திரேலியாவின் இந்தத் திட்டத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள் கண்டித்துள்ளனர்.
மலேஷியாவிற்கு புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பி வைக்கும் திட்டம் மனிதாபிமானமற்றது என அவுஸ்திரேலிய க்ரீன் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, படகுப் பயணிகளை மலேஷியாவிற்கு அனுப்பி வைக்கும் திட்டத்தில் பல்வேறு பாதக நிலைமைகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சீனா.தரையையும் தரவில்லை தண்ணீரையும் விடவில்லை

இமயமலையில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமான தண்ணீரை கொண்டு வரும், பிரம்மபுத்திரா நதியை கபளீகரம் செய்யும் முயற்சியில், தற்போது சீனா ஈடுபட்டு வருகிறது. இதனால் அசாம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும்.

பிரம்மபுத்திரா நதி, திபெத் பகுதியில் இருக்கும் இமயமலையில் தோன்றி, இந்தியாவுக்குள் அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக ஓடி, வங்கதேசத்தில் நுழைந்து கடலில் கலக்கிறது. 2,800 கி.மீ., ஓடும் இந்த ஆறு இந்தியாவின் பெரிய ஆறுகளில் ஒன்று. 1,700 கி.மீ., தூரம் வரை திபெத் மலைப்பகுதிகளிலே இந்த ஆறு பாய்கிறது. பல கிளை ஆறுகளைக் கொண்ட பிரம்மபுத்திரா, சில இடத்தில் 10 கி.மீ., வரை அகலம் கொண்டது. இந்தியாவின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்களின் விவசாயம், பிரம்மபுத்திரா நதியை நம்பியே இருக்கிறது.சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் இருப்பதால் பிரம்மபுத்திரா பாயும் பகுதியில் முன்பு சீனா அணையை கட்டியது. இது நீர் மின் திட்டத்துக்காக கட்டப்பட்டது என சீனா தெரிவித்தது. இது ஒருபுறம் இருக்க, அணையிலிருந்து புதிய பாதை அமைத்து நீர் ஆதாரத்தை சீனாவுக்கு திருப்பும் முயற்சியும் மெல்ல நடந்து வருகிறது. 5,400 கோடி ரூபாய் செலவில் இதற்கான பணிகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் இந்தியாவுக்கு வரும் நீரின் அளவு குறைந்து வருவதே இதற்கு சாட்சி. இதே நிலை நீடிக்குமானால் இந்தியாவுக்கு வரும் மொத்த நீரும் திருடப்பட்டு விடும்.

சீனாவின் இந்த திட்டத்தை தடுத்த நிறுத்த, அசாம் முதல்வர் தருண் கோகோய், வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை சந்தித்து வலியுறுத்தினார். ஆனால் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடவில்லை என சீனா தெரிவித்ததாக கிருஷ்ணா கூறியுள்ளார். அணைப்பகுதியில் சில வேலைகள் நடப்பது, செயற்கோள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் இந்த பேச்சை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. இந்தியாவில் இருமாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் நதிப்பிரச்னைகளைக் கூட தீர்க்க முடிவதில்லை. இந்நிலையில் சீனாவுடனான இந்த பிரச்னை, இருநாடுகளுக்கிடையேயான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே அருணாச்சல் பிரதேசத்தை சொந்தம் கொண்டாடுவதன் மூலம், தரையில் கை வைத்த சீனா, தற்போது தண்ணீரையும் விடவில்லை.

கச்சதீவு இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படமாட்டாது: இந்திய மத்திய அரசாங்கம்

கச்சதீவை இலங்கையிடமிருந்து மீண்டும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

கச்சதீவை மீளப் பெற வேண்டுமென்று இந்திய மத்திய அரசாங்கத்திடம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பது குறித்து தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்துக்கு கச்சதீவை திரும்ப பெற்றுக் கொள்வது குறித்து எதுவித நோக்கங்களும் கிடையாதென அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

1974ம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சதீவை திரும்பப் பெற்று அங்கு தமிழக மீனவர்களுக்கு மட்டுமே மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றின் மூலம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 19 ஜூன், 2011

சுகி சிவம்: வெளிநாட்டில் இருந்து கொண்டு வசனம் பேசாதீர்கள்

பாலாவின் ‘அவன் இவன்’வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப்

‘அவன் இவன்’
இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம்
- வித்யாசாகர்​!!
ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.
அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள் துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும் மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின் இறப்பையும் உணர்ச்சிப் பொங்க பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து, அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு திரைக் காவியம் இந்த “அவன் இவன்” திரைப்படம்.
கல்லை எடுத்து கையில் கொடுத்தால் கூட அதில் ஒரு துளி நடிப்புத் தன்மை இருக்குமெனில்  அதையும் வெளியில் கொண்டுவந்து கல்லையும் நடிக்க வைத்து உலகிற்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தை கொடுத்துவிடக் கூடிய தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த பாலா.
இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது. குறிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நம் உணர்வுகளையெல்லாம் கதாப்பாத்திரமே ஆட்கொண்டுவிட, நாடி நரம்புகளை இழுத்து சுண்டிவிட்டுச் செல்கிறது அனைத்துக் காட்சிகளும்.
பேசும் வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப் பெற்றிருக்கிறது இப்படத்தில். வார்த்தையின்றி வரிகளின்றி சப்தத்தால் நரம்புகளை மீட்டி, காணும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வாய்; அசையாமல் பேசுமெனில் அதை யுவனின் இசை என்று மெச்சிக் கொள்ளலாம். அப்படி வீரமும் காதலும் கலையும் சிறந்த தமிழரின், ஒருவகை மனிதர்களின் வாழ்வை ஒரு புல்லாங்குழலின் சந்துகளில் புகுந்து வெளிவரும் காற்றின் சப்தமாய் இசைத்துக் கொடுத்திருக்கிறார் இப்படத்திற்கென. நிச்சயம் இந்த “அவன் இவன்” திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.
பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.
அவர், அழும்  காட்சியில் நம்மை அழவைத்து, சிரிக்கும் காட்சியில் அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைத்து, பார்க்கும் பார்வையில் நடிப்பை நிரப்பி, அசையும் வாயின் கோணத்திற்கேற்ப நம்மையும் திரும்ப வைக்கும், வாய்திறந்து மலைப்பாகப் பார்க்கவைக்கும் வினோத நடிப்பும், இதுவரை திரைத்துறையினர் சிந்தித்திராத அல்லது செய்திராத சாதனைக்குரிய பாத்திரமும் தான் விஷாலின் கதாப்பாத்திரம்.
உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
 திரிசா போட்டால் ஓடும்,  ஐஸ்வர்யா நடித்தால் படம் பெரிதாகப் பேசப்படும் எனும் எண்ணங்களை இயக்குனரின் திறமையினால் உடைத்துக் காட்டும்விதமாய் பெயர்பெற்றுவிடாத நாயகிகளுக்குக் கூட பெரிய கதாநாயகி அந்தஸ்து உண்டு என்பதை தன் படத்தின் மூலம் நிரூபிக்க நினைத்திருப்பார்போல் இயக்குனர். அதை நிறைவாய் தன் நடிப்பினால் காட்டிச் சென்றுள்ளனர் இப்படத்தின் கதாநாயகிகளான தேன்மொழி, மற்றும் பேபி எனும் பாத்திரத்தினர்.
உண்மையில், அவர்கள் அசைக்கும் கண்களும் சரி, சிரிக்கும் இதழ்களும் சரி, பேசும் உச்சரிப்பும் சரி, அதை படம் பிடித்த விதமும் சரி; மொத்தமுமே காண காண ரசிக்கத் தக்க அழகு என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அதுபோல், அவர்கள் வந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் மிக இலகுவாக நம் தேசத்து தமிழச்சியை தமிழ்ப்பெண்களை படத்தில் அடையாளம் காட்டிப் போகின்றனர்.
அதிலும் காவல்துறை அதிகாரி கதாநாயகியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் என்னடா கண்ணு என்னடா கண்ணு என்று அழைக்கையில், ஓடிவந்து நிற்கும் அந்த முட்டைக்கண்ணழகு கதாநாயகியை காணும் போதெல்லாம் அவரை ஒரு சட்டப் பூர்வமாகப் பார்ப்பதைவிட ஒரு படத்திற்கு தேவையான ஒரு பாத்திரமாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது.
முக்கியமாக, இப்படத்தில் வில்லன் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு யாருமில்லை என்றாலும், முழுக்க முழுக்க சிரிப்பாகவே செல்லும் காட்சிகளுக்கிடையில் மிக சாதாரணமாக ஒரு மாட்டிறைச்சிக்காக மாடுகளை கடத்தி அறுக்கும் ஒரு மனிதமற்ற பாத்திரத்தை காட்டி, அவனின் கோரமுகத்தைப் பல்லிளிக்கவைத்து, அவனை வேண்டுமெனில் வில்லனெ எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணவைக்கும் அவர்கூட தன் ஒற்றை கையை பின்னால் கட்டிக் கொண்டு அடிக்கும் காட்சிகளிளும், கீற்று போல் இரு உதடுகளுக்கிடையில் வெற்றிலை பல் தெரிய பார்க்கும் அழகிலும் நடிப்பை துல்லியமாய் இயக்குனர் சொன்னளவிற்கே வெளிப்படுத்தியிருப்பது திறம்தான்.
மேலும், இப்படத்தின் ஒற்றை நாயகர் எனில் அது ஐயா அயனஸின் பாத்திரம். படம் முழுக்க அவரை கண்டுவிட்டு வெளியே வருகையில் தன் தாத்தாவோ தனக்கு சொந்தமான தந்தை ஸ்தானத்து யாரோ ஒருவரை அந்த வில்லன் சித்தரவதை செய்து கொன்ற கோபம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் வர, அந்த கோபத்தை காட்சிகளின் நகர்வில் தகிக்கும் விதமாக அமைந்த படத்தின் முடிவே இயக்கத்தின் உச்சம் ஆகும்.
அதிலும், வில்லனை ஒற்றை அடியில் கொன்று விடாமல் தான் கொண்டுள்ள அயனஸ் மீதான பாசம் அவ்வளவும் வெளிப்படும் அளவிற்கு விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை பாசம் உணர வைக்கிறது.
கடைசியில் வில்லன் அயனஸை சித்ரவதை செய்து நிர்வாணப் படுத்தி மரத்தில் தொங்கவிட, காமிரா திரும்பும் இடமெல்லாம் உடம்பில் பட்டை பட்டையாய் தொலுரிய அடித்திருப்பதை காட்ட; கொதித்துப் போகும் ரசிகர்களுக்கு இவனை இப்படி தாண்டா கொல்லனும் என்று புருவம் உயர்த்தி வெறித்துப் பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிப் பொங்க முடிகிறது படம்.
குறிப்பாக, தனியாக வாழும் ஒரு மனிதரின் வலியையும், சுற்றத்தை அனைத்துக் கொண்ட யாருமே இவ்வுலகில் தனிமைப் படுத்தப் படவில்லை என்கிற கருத்தையும், அன்பு மனதில் நிறைந்திருப்பின், பண்புடன் பழகத் தெரிந்திருப்பின், பிறரின் உணர்வுகளை மதிக்க மனசிருப்பின் யாருமே இவ்வுலகில் அனாதையில்லை எனும் போதனையையுமே மறைமுகமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
அதையடுத்து, சூழ்நிலைகளுக்குக் உடன்பட்டுப் போகும் மனத ஜென்மங்கள் யாருமே நிரந்தரமாய் திருந்தாத பிறப்புகளல்ல எனும் உண்மையையும் திருந்தாத மனிதர்கள் உண்டெனில் அவர்களுக்கான முடிவும் அதே விரைவில் அவர்களை தேடி வருகிறதென்பதையும் கதாப் பாத்திரங்களின் வழியே வழியும் சோகப் பாடலின் மனதுருக்கும் இசை போல் சொல்லிப் போகிறது படம்.
குறிப்பாக, ஒழுக்கம் இல்லா ஆண்களின் மதிப்பு எப்படி மனைவியின் ஒவ்வொரு வார்த்தையினாலும் சுட்டெரித்து தெருநடுவே வீசப் படுகிறது என்பதையும், வீட்டின் வெளிச்சமாக வாழும் பெண்களின் பண்பு சற்று முறை பிசகிப் போனாலும் அது எப்படி அடுத்து வரும் தலைமுறையையே சீர்குலைத்து விடுகிறது என்பதையும் விஷால் ஆர்யாவின் இரு அம்மாக்களான அம்பிகாவும் அவரின் சக்களத்தியாக வரும் நடிகையும் மிக தத்ரூபமாக காண்பவர் ரசிக்கும் அளவிற்கும், கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமளற்கும் பேசி நடித்துக் காட்டியுள்ளனர்.
அம்பிக்காவிற்கு இது ஒரு புதிய தோரணை அதுபோல் அம்மாவாக இன்னொரு பாத்திர ஆரம்பம் என்றாலும், பேச்சும் பீடியும் கொஞ்சம் உதடு கோண வைத்தாலும், இயக்குனர் இப்படத்தில் காட்ட வருவது அதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தின் கதையினை மட்டுமே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டியுள்ளது.
கள்ளென்ன இரும்பை கொடுத்தாலும் மென்று துப்பும் ஒரு சிறப்பு எந்திரம் போல், தான் எதை வேண்டுமானாலும் செய்வேன், எதை வேண்டுமானாலும் முயன்றால் செய்யலாம், என்பதைக் காட்டுமொரு படம் இது என்பதற்கு படத்தில் வரும் ஒரு லாரி ஓட்டுனரிலிருந்து, அரங்கம் அதிர்ந்து போக ஆடும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஆட்டங்களே சாட்சி. வெறும் உணர்ச்சி ததும்பும் ஆட்டங்கள் தான் என்றாலும், அந்நிலையில் தானிருந்தாலும் அப்படித் தான் ஆடியிருப்போமோ என்று ஒவ்வொரு இடத்தையும் நம்பவைக்கிறது படம்.
ஐயனஸ், விஷால், ஆர்யா எனும் கதாநாயக வரிசையில் சிறிய பையனாக வரும் இன்னொரு பாத்திரமும் அவனின் நடிப்பும், காட்சிகளை மேலும் நகைக்கத் தக்க உணர்வுகளை கூட்டவும் கதையினை அழுத்தமாக நகர்த்திச் செல்லவும் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத் தக்கது.
ஆக, காட்டு இலாக்கா அதிகாரிகளிலிருந்து காவல் துறை அதிகாரியாக நடித்தவர் முதல் காவலாளிகளாக நடித்த கதானாயகியோடு வரும் பத்மாக்கா வரை மிகச் சிறந்த ஆட்கள் தேர்வு இப்படத்தில் கையாளப் பட்டுள்ளது. அம்பிகா மட்டுமே கொஞ்சம் வசதியாக தெரிந்தாலும், நடிப்பினால் அந்த எண்ணமும் மாறியே விடுகிறது.
ஓரிடத்தில்; ஆர்யாவிடம் அந்த காவல்துறை அதிகாரி வந்து உன் பேரென்ன என்று கேட்க, என் பெயர் "கும்புடுறேங்க சாமி" என்று ஆர்யா சொல்ல, அவர் வாய் பிளந்து அதென்னயா பெயரென்று பார்க்கையில், 'வேறென்னங்க நாங்களும் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் உங்களையே பார்த்து 'கும்பிட்றேன் சாமி கும்பிட்றேன் சாமின்னு சொல்றது' என்று கேட்குமிடத்தில் 'மனிதர்களின் வஞ்சகத்தால் பின்னுக்குத் தள்ளப் பட்ட ஒருசார் மக்களின் வலியை, ஒரு தலைமுறையையே தலைதட்டி வைத்து விட்டதன் கொடுமையினை  நாம் உணர்ந்து, புரிந்தேத் தீரவேண்டிய கட்டாயம் அங்கே வலுக கொள்கிறது.
இப்படி, படத்தின் நெடுகிலும் யதார்த்தம் எனும் ஒற்றை சிறகே விருந்துப் பறக்க, பெருங்குறையாய் அழுத்திச் சொல்ல அத்தனை ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றாலும், விஜையும் அஜித்தும் ஆர்யாவும் பூர்யாவும் விசால் நடிப்புக் கண்டால் புர்ரென்று போவார்கள்' எனும் வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். இது நல்லதையும் கெட்டதையும் நேராக கொண்டு சென்று காட்டும் இடம் என்பதால் இங்கே யாரொருவரையும் மட்டப் படுத்தாமல் அல்லது வேறுமாதிரி மாற்றியேனும் காட்டி யிருக்கலாம்.
படத்தில் இன்னொரு இடை சொருகல் அல்லது திணிப்பு எப்படி வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால், படத்தின் கதாப் பாத்திரத்தை மிகை படுத்தி, பார்ப்பவரின் உணர்வுகளை சற்று நேரத்திற்கு உறைய வைத்து, பின் மயிர்க்கால் கூச்செரியச் செய்து, உடல் சிலிர்த்துப் போகும் காட்சியும், இசையால் நம்மைக் கட்டிப் போட்டுவிடும் ஓரிடமும் எனில்,  படத்தின் வெளிச்சம் மிக்கதொரு காட்சி எனில் அது சூர்யா வந்துபோகுமிடம்.
முகபாவத்தில், நடிப்பில், திறனில், மனதில், குணத்தில் என எதிலும் குறை அற்றவனாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு வெற்றியாளன் சூர்யா என்பதே நாம் அவர் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் காரணம் என்பதை உறுதிபடுத்துமொரு காட்சி அக்காட்சி. சூர்யாவின் மனதிற்கானத் தோற்றத்தையே அவர் அங்கே வருகையில் அவர் முகம் காட்டுகிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
அதிலும் குறிப்பாக உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய அவரின், அல்லது அவர் தந்தை சிவக்குமாருடைய வழிநடத்தலின், அல்லது அவருடைய குடும்பத்தின் சிறப்பு செய்திட்ட இன்னொரு சாதனையின் நேரடி உதாரணம் ஒன்று இருக்குமாயின், அது தான் 'அகரம் பவுண்டேசன்'.
இன்று  தமிழர்கள் விரிந்து வாழும் உலகில் எந்தளவிற்கு அகரம் பவுண்டேசன்' பற்றி தெரியப் பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியக உள்ளபட்சத்தில்; நம் தமிழர்களின் இமை கிழித்து தான் சொல்ல வந்ததை உணர்வுப் பூர்வமாக சொல்லுமொரு ஊடகம் சினிமா என்பதால் அதன் வழியே அகரத்தை உலகின் பார்வைக்கு திறந்து வைக்கவும், அகரம் குறித்த அனைவரின் சுய விமர்சனத்திற்கு சூர்யாவின் பொதுவான பதிலை சூர்யா மூலமே உலக மக்களுக்கு சொல்லவும் இக்காட்சி பாலாவால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இருந்தும், சூர்யா இங்கே நடிக்காமல் தன் நேர்மையான உணர்வுகளையே இங்கு படப் பிடிப்பிற்கென காட்டிச் சென்றிருக்கிறார் என்பது நாம் அறியத் தக்க உண்மை.
ஆக, இப்படி, காலங் காலமாக நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு நியாயத்தை சொல்லிச் சென்றாலும், இத்  திரைப்படம்; இப்படியொரு வெளியில் காட்டப் படாத மனிதர்களின் வாழ்க்கையை, எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்பாட்டக் கலப்புமின்றி பதிவு செய்து வைத்திருக்கிறது.
பொதுவாக, இப்படத்தை பொருத்தவரை, யார் ஒருவரை மெச்சினாலும் அதிகமாகவே மெச்சல் வேண்டும், அல்லது பாரபட்சமின்றி எல்லோரையுமே பாராட்டவேண்டும். சண்டை காட்சி, ஒளிப்பதிவு, ஒப்பனை, கட்டிடக் கலை, காட்சிப் பதிவிற்குத் தக்க இடத் தேர்வு என அனைத்துமே சிறப்பு.
அதிலும், குறிப்பாக விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!
- வித்யாசாகர்

11000 புலிகளை எதற்காக படையினர் காப்பாற்றினர்? கேள்வி எழுப்புகிறார் தயான்.


இலங்கை இராணுவம் பொது மக்களை கொன்றொழித்ததாக குற்றம் சுமத்தப்படுமாயின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுத்தினரிடம் சரணடைந்த 1100 புலிளின் உயிர்களை காப்பாற்றி அவர்களுக்கு புன்ர்வாழ்வளிக்கப்படுகின்றமை எவ்வாறு என்ற கேள்வியை பிரான்சுக்கான தூதுவர் தயான் ஜெயதிலக எழுப்பியுள்ளார்.

இலங்கையில் கொ லைக்களம் எனும் தொனிப்பொருளில் சனல் 4 தொலைக்காட்சி யில் வெளியிடப்பட்ட காணொளி குறித்து பிரான்ஸிலுள்ள ஆர்எப்ஐ என்கின்ற வானொலி அவரிடம் கேள்வி எழுப்பியபோது அவர் இக்கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் அவ்வானொலிக்கு கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதாகக் கூறி சில சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள காணொளி மூலமான குற்றச்சாட்டுக்கள் ஈராக் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு சமனானது எனவும் அவர் கூறியுள்ளார்.

பருத்தித்துறையில் வன்புணர்வின் பின் யுவதி கொலை தொடர்பாக மூவர் கைது

வடமராட்சி பருத்தித்துறையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் பருத்தித்துறை குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பருத்தித்துறை, வியாபாரிமூலைப் பகுதியைச் சேர்ந்த அரியநாயகம் துளசி (வயது – 19) என்பவர் வீட்டிலிருந்து காணாமல் போயிருந்தார். இந்த நிலையில், குறிப்பிட்ட யுவதியின் சடலம் டிசம்பர் 10 ஆம் திகதி பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டது.

பின்னர் இவரின் சடலம் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டபோது அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது.

இதனை அடுத்து பொலிஸ் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. இதன்போது இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பருத்தித்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ரஷ்யா சென்றடைந்தார்


ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பேர்க் நகரில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று அங்கு சென்றடைந்தார். சென் பீட்டர்ஸ் பேர்க் நகரின் புல்கோவோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சென் பீட்டர்ஸ்பேர்க் பிரதி ஆளுநர் செர்களாஸ் அஸெக்ஸி ஜவனோவிச் வரவேற்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ் விஜயத்தின் போது ரஷ்யா, சீன ஜனாதிபதிகள் உட்பட பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார். ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜிட் நிவார்ட் கப்ரால் ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.

நெடியவன் நெருக்கடியில்.....?நெதர்லாந்து அதிகாரிகள் 13 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் விசாரணை

புலம் பெயர் புலிகளை வளைக்கிறது நெதர்லாந்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நெதர்லாந்து அதிகாரிகள் 13 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த விசாரணைகள் நடத்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சில தினங்களுக்கு விசாரணைகள் நடத்தப்படும் என நெதர்லாந்து தூதரகம் அறிவித்துள்ளது. யார் யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்பது பற்றியோ அல்லது எவ்வாறான விசாரணைகள் நடத்தப்படும் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்பட மாட்டாது என நெதர்லாந்து அறிவித்துள்ளது. பொதுவாக புலிகளினால் நெதர்லாந்தில் மேற்கொண்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைகளின் ஓர் கட்டமாக ஏற்கனவே 90 பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தன்னார்வ அடிப்படையில் சாட்சியங்களை அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும், எவரையும் கட்டாயப்படுத்தி சாட்சியமளிக்க நிர்ப்பந்திப்பதில்லை எனவும் இலங்கை அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.நோர்வேயில் நெடியவன் கைது ஐ தொடர்ந்து இந்த விசாரணைகள் முடுகிவிடபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன் அடுத்த கட்டமாக கனடா, அமெரிக்கா புலிகள் சிலருடன் இரகசியமாக விசாரணைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.

லயோலா கருத்து கணிப்பு.காங்கிரசின் இரட்டை வேடம்தான் தோல்விக்கு காரணம் ?


லயோலா கல்லூரி சார்பாக கடந்த நில நாட்களாக 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அதில், திமுக அணியில் மிகப்பெரிய அங்கமாகிய காங்கிரஸைப் பொருத்த வரையில், ஈழத் தமிழர் பிரச்சனையில் அக்கட்சி போட்டுவரும் இரட்டை வேடம் அதன் படுதோல்விக்கு மிக முக்கிய காரணமாக மிகப் பெரும்பாலோரால் (61.5) முன்வைக்கப்படுகிறது. உள்கட்சிப் பிரச்சனை என 20.3 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்டி லேயே ப.சி. மீது எழுந்த எரிச்சலை படபடவென்று கொட்டி

காங்கிரஸுடனான கூட்டணிக்கு ஜெ. க்ரீன் சிக்னல் தெரிவிப்பாரா? அவரை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பிரதமர் மன்மோகன்சிங்கிடமிருந்து ஜெ.வுக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கப் போகிறது? -என்ற ரீதியில் பலரது கவனத்தையும் திருப்பிய ஜெ.வின் டெல்லி விசிட், ஒருவழியாய் முடிந்திருக்கிறது.

சென்னை ஏர்போர்ட் தொடங்கி ஜெ.வின் டெல்லி சந்திப்புகள், மீடியா பேட்டி வரை அரங்கேறிய சில சுவாரஸ்ய சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.

13-ந்தேதி மதியம் கார்டனில் இருந்து சென்னை விமான நிலையம் கிளம்பினார் ஜெ. ஏர்போர்ட்டில் ப்ளூ கேட் என்பது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கான ஸ்பெஷல் வழி. இதில் மற்றவர்களுக்கு அனுமதியில்லை. 5-ஆம் நெம்பர் கேட் என்பது எஸ்.பி.ஜி. பாதுகாப்பு உள்ள வி.ஐ.பி.கள் மட்டும் போய் வருவதற்கான வழி. குறிப்பாக சோனியா, தமிழக முதல்வர், ராகுல்காந்தி போன்றவர்களுக் கானது. இந்த வழியில் செல்கிறவர்கள்... ஃப்ளைட் ஏறும் வரை ஓய்வெடுக்க மிகப்பெரிய லாபி உண்டு.

கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெ.வின் கார் 5-ஆம் நெம்பர் கேட்டை தவிர்த்து 6-ஆம் நம்பர் கேட்டில் "சர்'ரென நுழைந்தது. இந்த 6-ஆம் நம்பர் கேட், சொந்தமாக விமானம் வைத்திருப்பவர் கள் மட்டும் பயன்படுத்தக் கூடிய வழியாகும். ஜெ. வின் காருக்கு முன்னால் வந்த மாநில காவல்துறை யின் காரை தடுத்து நிறுத் திய மத்திய பாதுகாப்பு போலீஸ் டீம், ""ஐந்தாம் நெம்பர் கேட்டின் வழியாகத்தான் முத லமைச்சர் போக வேண்டும். அந்த கேட்தான் அவர்களுக்கு உரியது. 6-ஆம் கேட்டுக்கு வந்தது தவறு'' என்று சொல்ல, ""கடந்த 5 வருஷமா இந்த கேட்டைத்தான் ஜெயலலிதா பயன்படுத்தினார். அதனால் இந்த வழியாகத்தான் போவார்'' என்று வாதம் செய்தனர் மாநில போலீ ஸார். இந்த சம்பவத்தால், இரண்டு, மூன்று நிமிடம் ஜெ.வின் கார் காத்திருக்க வேண்டியதாயிற்று.

மாநில காவல்துறை சொன்ன தை ஏற்றுக் கொண்டு, ஜெ.வின் காரை அனுமதித்தனர். அதேசமயம், ஜெ.வுடன் வந்த 30-க்கும் மேற்பட்ட போலீஸார், உள்ளே செல்ல முயற் சிக்க, ""பாஸ் இருக்கிறவங்களை மட்டும்தான் அனுமதிக்க முடியும்'' என்று மத்திய பாதுகாப்பு போலீ ஸார் ஆர்கியூ பண்ண, மாநில போலீஸார் எதிர்விவாதம் பண்ண... அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் பாஸ் வைத் திருந்த போலீஸ் ஆபீசர் ஒருத்தரை யே வெளியே தள்ளி விட்டு விட்டது மத்திய போலீஸ் டீம். இதனால் ஜெ. வுடன் வந்த போலீஸ் டீம் உள்ளே போக அனுமதி கிடைக்கவில்லை.

விமான நிலையம் முழுக்க ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. மத்திய போலீஸ் டீம் மற்ற அதிகாரிகளை அனுமதிக் காதது குறித்தும் தள்ளுமுள்ளு நடந்தது குறித்தும் ஜெ.வின் காதுக் குத் தகவல் போனதோடு... "தமிழக காவல்துறையையே அவமதிப்பது போல் மத்திய டீம் நடந்து கொண்டது' என்றும் முறையிடப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சி.யால்தான் மாநில அதிகாரிகளிடம் இத்தனை கெடுபிடி காட்டப்பட்டிருக்கிறது என நினைத்த ஜெ., ப.சி. மீது அப்போதே எரிச்சலடைந்தார். ஜெ. டெல்லிக்கு புறப்பட்டதும் மத்திய போலீஸ் டீமுக்கும் மாநில போலீஸுக்கும் மீண்டும் வாக்குவாதம் நடந்திருக்கிறது.

2009-ல் எம்.பி. தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் வசந்த் கன்ச்சில் என்ற பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்தார். இந்த பங்களாவில்தான் முதலில் தங்க முடிவெடுத்தார். இதற்காக அந்த பங்களா சுத்தப்படுத்தப்பட்டு ரெடியாக வைக்கப்பட்டிருந்தது. பின்னர் திடீர் முடிவால் தமிழ்நாடு இல்லத்திலே தங்கினார் ஜெ.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த ஜெ.வை டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் சந்தித்து அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். சோனியாவுக்கு நெருக்கமான, நம்பிக்கைக்குரியவரான ஷீலாதீட்சித் ஜெ.வை சந்தித்ததால்... ஷீலாதீட்சித் மூலம் வெளிநாட்டில் இருக்கும் சோனியா ஏதேனும் ஜெ.வுக்கு தகவல் சொல்லி அனுப்பி இருப்பாரோ என்று டெல்லியில் செய்தி பரவியது.

இந்த பரபர தகவலும், ஷீலாதீட்சித் சந்திப்பும் தி.மு.க. தலைமைக்குத் தெரிய வர... "சோனியா ஏதேனும் சீக்ரெட்டாக காய் நகர்த்துகிறாரா?' என்கிற சந்தேகம் தி.மு.க. தலைமைக்கு உண்டா னது. டி.ஆர்.பாலு மூலம் இதை விசாரிக்கச் சொன்னது. பாலுவும் அகமது படேலிடம் விசாரித்தார். இதுபற்றி நாம் நமது டெல்லி சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, ""ஜெ.வும் ஷீலாவும் நண்பர்கள். டெல்லிக்கு ஜெ. வந்து ரொம்ப நாளாகி விட்டது. அதேசமயம் தற்போது ஜெ. முதல்வராகிவிட்டார். முதல்வரானதும் வாழ்த்துக்கள் சொன்னார் ஷீலா. அப்போதே "நான் டெல்லிக்கு வரும்போது அவசியம் நாம் சந்திக்க வேண்டும்' என்று ஜெ. சொல்லியிருந்தார். அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்தது. நட்பு ரீதியிலான சந்திப்பு என்றாலும் டெல்லி அரசியல் குறித்து ஷீலாவிடம் நிறைய பேசியிருக்கிறார் ஜெயலலிதா'' என்கின்றனர்.

பா.ஜ.க. தரப்பிலிருந்து ரவிசங்கர் பிரசாத்-ஜெ.வை சந்தித்தார். ""தமிழக பா.ஜ.க.விடம் தேர்தல் பற்றி விசாரித்தபோது அ.தி.மு.க. ஜெயிக்கும் என்றுதான் சொன்னார்களே தவிர இந்த அளவுக்கு அபரிமிதமான வெற்றி கிடைக்கும் என்று சொல்லவே இல்லை'' என்று ரவிசங்கர் சொல்ல உற்சாகமானார் ஜெ. மேலும், ""ஜூலையில் தொடங்கும் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பா.ஜ.க. எடுக்கும் இஷ்யூவுக்கு அ.தி.மு.க. ஒத்துழைப்பு தரவேண்டும்'' என்று ரவிசங்கர் கேட்டுக்கொள்ள... ""அதை அப்போதைக்குப் பார்த்துக்கொள்ளலாம்'' என்கிற ரீதியில் பதில் சொன்னாராம் ஜெ.

இந்தப் பயணத்தின்போது... மத்திய அரசுப் பணியில் உள்ள தமிழக கேடரை சேர்ந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து உரையாடினார். இந்தச் சந்திப்பில் ஐ.ஏ.எஸ். அதி காரிகளான ஆனந்த், சந்திரமௌலி, சக்தி கந்த தாஸ், ஸ்கந்தன், கோபாலன், சுமிதா நாகராஜன், மிருதியுங் சிங் சாரங்கி, அஜய் பட்டாச்சார்யா, ஃபரூக்கி, அசோக்குமார் குப்தா, சசிசேகர், ராஜீவ் சௌபே, சுப்ரியா சாகு, முருகானந்தம், ஜேக்கப் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் கலந்துகொண்டனர். விஜயகுமார் ஐ.பி.எஸ்.சும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பில் ""தமிழகத் தைச் சேர்ந்த திறமையான, நேர்மையான அதிகாரிகள் எல்லாம் டெல்லியில் உட்கார்ந்துகொண்டால் எப்படி? உங்களின் ஆலோசனைகள் மத்திய அரசுக்கு பயன்பட்டால் மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?'' என்று ஜெ. கேட்க... ஒரு அதிகாரி, ""அப்படி இல்லைங்க மேடம். தமிழகத்தின் மீது எங்களுக்கு அக்கறை இருக்கிறது. ஆனால் மாநில அரசு பணியில் இருக் கும்போது ஒரு துறையிலே நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அதனால் துறை ரீதியாக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் முற்றுப்பெறுவதே இல்லை. இதனால் சோர்வு ஏற்பட்டுவிடுகிறது'' என்றார் பகிரங்கமாகவே. மற்றொரு அதிகாரி ""நல்லா வேலை செய்கிற அதிகாரிகளுக்கு சரியான துறை கிடைக்காதபோது இயல்பாகவே வெக்ஸ் ஆகி விடுகிறோம்'' என நேருக்கு நேராய் சொன்னார்.

"ஜெ.'வோ, ""இப்படியெல்லாம் சொல்கிறீர் கள். ஆனால் மாநில பணிக்கு வாருங்கள் என்றால் மறுத்துவிடுகிறீர்களே?'' என்று கேட்க...

""பாஸ்ட் ஈஸ் பாஸ்ட் மேடம். இப்போது சொல்லுங்கள். நாங்கள் மாநில பணிக்குத் திரும்ப ரெடியாக இருக்கிறோம். திறமைக்குத் தகுந்த துறையை ஒதுக்குங்கள்'' என்றனர்.

மத்திய அரசு பணியில் உள்ள தமிழக கேடர் அதிகாரிகள் விரைவில் மாநிலப் பணிக்கு திரும்பும் வகையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் விரைவில் நடக்கும். தற்போது பட்ஜெட் தொடர்பான பணிகள் நடந்து வருவதால், பட்ஜெட்டுக்கு முன்னதாக இந்த மாற்றம் இருக்கலாம் அல்லது பட்ஜெட் முடிந்ததும் நிச்சயம் இருக்கும் என்று நம்புகிறது அதிகாரிகள் தரப்பு.



விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸிடம் ""மாநிலப் பணிக்கு வருமாறு அழைத்தும் ஏன் தயங்குகிறீர்கள்?'' என்று தனிப்பட்ட முறையில் ஜெ. கேட்டதாகவும், அதற்கு விஜயகுமார், ""நான் ரிட்ட யர்டு ஆக இன் னும் 8 மாசம் தான் இருக்கு. அந்த நாட்களில் என்ன சாதிக்க முடியும்னு எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் தயக்கம்'' என்று கூறிய தாகவும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கூறப்படு கிறது. பிரதமரின் சந்திப்பை முடித்துக்கொண்டு பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெ., வழக்கம்போல், தி.மு.க.வை கடுமையாகச் சாடிவிட்டு, ""காங்கிரசுக்கு ஆதரவு தேவை என்றால் அது என்னிடம் வந்து கேட்கட்டும். நானாக ஆதரவு தரவேண்டிய அவசியமில்லை'' என்றார் அதிரடியாக.

ஒரு இணையதள நிருபர் ப.சி. பற்றி கேட்க, ""எம்.பி. தேர்தலில் அவர் மோசடித்தனமாக வெற்றி பெற்றார். அப்படிப்பட்டவர் உள்துறை அமைச்சர் பதவியிலே உட்கார்ந்திருக்கிறார். அவர் தகுதியற்றவர். பதவி விலக வேண்டும்'' என... சென்னை ஏர்போர்ட்டி லேயே ப.சி. மீது எழுந்த எரிச்சலை படபடவென்று கொட்டி... காங்கிரஸ் தரப்பை திகைக்க வைத்து விட்டே தமிழகத்துக்கு ஃப்ளைட் ஏறினார் ஜெ.