சிறீ ரெலோ அமைப்பின் மீது எந்தவொரு ஆதாரமுமற்ற குற்ற சாட்டுகளைச் சுமத்தியிருக்கும் இணையத்தளச் செய்திகளைக் கண்டிப்பதோடு, அவற்றை முற்றாக நிராகரிக்கிறோம். அண்மையில் வவுனியாவில் நடைபெற்ற கடத்தல் சம்பவத்திற்கும் எமது அமைப்பிற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை. இப்படிப் பட்ட செயல்களை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். மிக விரைவில் உண்மை நிலைப்பாடு வெளிவரும்போது, தவறான செய்திகளை வெளியிட்டு, மக்களையும் முட்டாளாக்கி, குற்றவாளிகளையும் மூடிமறைக்க முயலும் இந்த இணையத்தளங்களின் நோக்கம் என்ன? இவர்களுக்கும் இந்தக் குற்றச் செயல்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? அதனால் தான் இப்படியான செய்திகளை வெளியிடுவதன் மூலம் தம்மையும், சார்ந்தவர்களையும் காத்துக்கொள்ள செய்யும் முன்னேற்பாடா? முன்னொருமுறை வங்கி ஊளியர் ஒருவர் வவுனியாவில் கடத்தப்பட்ட போது, எமது அமைப்பின் மேல் இதே இணையங்கள் குற்றம் சாட்டினர். ஆனால் இறுதியில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, எமது அமைப்பிற்கும் அக்குற்றத்திற்கும் எந்த தொட்ர்பும் இருக்கவில்லை என தெளிவாகியது. இப்படியிருந்தும் ஏன் இந்தமாதிரியான செய்திகளை வெளியிடுகிறார்கள்? என சிறீ ரெலோ அமைப்பின் செயலாலாளர் நாயகம் திரு உதயராசா, இது சம்பந்தமான எமது கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் தெரிவித்தார்.
வவுனியா நகரில் நடை பெறும் காணி கொடுப்பனவு பற்றிய குற்றச்சாட்டுகளைப் பற்றி அவரிடம் வினவிய பொழுது, அதற்குப் பதில் அளித்த திரு. உதயராசா அவர்கள், நான் வன்னியைப் பிறப்பிடமாகக் கொண்டவன். திரு. நிமோ அவர்களும் அப்படியே. வெளி நாட்டிலிருந்து தாயக உறவுகளுக்கு உதவும் நோக்கோடு வன்னி வந்தவர். எமது பிரதேச மக்களே அதிகம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர். இதை விமர்சிப்பவர்கள் வன்னிப் பிரதேசத்தை சேராதவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களை, அரச காணிகளில் குடியேற்றும் நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளோம். அரச காணிகள் என்பது, அடர்ந்த காடுகளே. இவற்ரை வெட்டி, சீர் செய்து, தண்ணீர் வசதிகள், பாதை அமைத்தல், பாடசாலை, கழிப்பிட வசதிகள், போக்கு வரத்து வசதிகள் என ஒரு பாரிய மக்கள் குடியேற்ற்த்திற்கான சகல திட்டங்களையும் எமது அமைப்பே முன்னின்று கடந்த ஒன்றரை வருட காலமாகச் செய்து வருகிறது. இதற்கு பல உள்நாட்டு மற்றும் புலம் பெயர் உறவுகள் பல வழிகளில் உதவி வருகிறார்கள். மேலும் சகல தமிழ் கட்சிகளும் பாரபட்சமின்றி இந்த முயற்சிக்கு தமது ஆதரவினை தெரிவித்திருந்தன. இப்போது இங்கு குடிகொண்டுள்ள மக்களுக்கு காணி உறுதி சட்ட ரீதியாகப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியில், அரச அதிகாரிகளின் உதவியோடு அளத்தல், வரைபுகள் மற்றும் உறுதிகள் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்த திட்டத்திற்கான செலவுகளை எமது அமைப்பும், இங்குள்ள மக்களும் உள்நாட்டு மற்றும் புலம் பெயர் உறவுகளும் ஏற்றுக் கொள்ளுகிறோம். இதைத்தான் இந்த ஈனப் பிறப்புக்கள் கேவலமான முறையிலே விமர்சித்திருக்கிறார்கள். எமது தாயக உறவுகளுக்கு உதவாது போனாலும் பரவாயில்லை, இப்படியான கேவலமான செயல்களைச் செய்யமல் இருந்தாலே பெரிய உதவியாக இருக்கும். இப்பொழுது விளங்குகிறதா பாதிக்கப் பட்ட மக்களை எந்த மாடு முட்டுகிறதென்று? நெருப்பு. கொம் மற்றும் லங்க நியுஸ் வெப் ஆகியோர் தான். தாமும் உதவாமல், அந்த மக்களுக்கு உதவுபவர்களையும் விமர்சிக்கிறார்கள் என மனம் வருந்தினார்.
திரு கீரன் என்பவர் பற்றி கூறும் படி கேட்டதற்கு, திரு உதயராசா தொடருகையில், திரு.கீரன் அவர்கள் தமிழ் மக்கள் போராட்டதில், எண்பதுகளின் முதற் பகுதிகளிலேயே ஆர்வமுற்றவர். தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஆரம்ப கால சிற்பிகளில் ஒருவர். அதனால் வெலிக்கடைச் சிறையில் தனது இளமைப் பிராயத்தை கழித்தவர். தண்டனைகளின் கொடூரத்தால் மிகவும் பாதிக்கப் பட்டவர். இருந்தும் தமிழ் மக்களின் முன்னேற்றத்தில் தளராத ஆர்வமும் அக்கறையும் கொண்டவர். லண்டனில் வசிக்கும் அவர், யுத்தத்தால் பாதிக்கப் பட்ட சக உடன் பிறப்புகளுக்கு உதவ, நம் மண்ணில் கால் பதித்து, எம்மோடு கைகோர்த்து நின்று பல உதவிகளை முன்னின்று நடத்துபவர்.
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010
அமெரிக்க ராணுவத்தின் 43 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி!
இராக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ள அமெரிக்க ராணுவம் அந்நாட்டுப் பணத்தில் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பு செய்துள்ள ராணுவத்தின் பராமரிப்புச் செலவுகள் இராக் மக்களின் தலைமீதுதான் சுமத்தப்படுகிறது. எந்தநாட்டில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தாலும் அந்நாட்டின் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, அந்தக் கொள்ளைக்கு ஆகும் செலவையும் தலையில் கட்டி விடுவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வழக்கமான நடவடிக்கையாகும். இதுதான் தற்போது இராக் ஆக்கிரமிப்பிலும் நடந்துள்ளது.
இராக்கில் கொட்டிக்கிடக்கும் எண்ணெய் வளத்தின் மூலம் வரும் வருமானம் அமெரிக்க ராணுவப் பராமரிப்புக்கு திருப்பி விடப்பட்டது. இந்த வருமானத்திலிருந்து 2004 முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் ராணுவச் செலவுக்காக வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்திற்கான கணக்குக் காட்ட வேண்டிய பொறுப்பு அமெரிக்க பாதுகாப்புத்துறையின் தலைமையிடத்தின் வசம் இருந்தது. இந்தக்கணக்கை தணிக்கை செய்தபோது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவுக்கான கணக்கே இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. இராக் சீரமைப்பிற்கான சிறப்பு அதிகாரியின் கீழ் இந்தத் தணிக்கை நடத்தப்பட்டது.
மேலும் 30 ஆயிரம் கோடி ரூபாயை எந்தக் கணக்குகளில் செலுத்த வேண்டுமோ அந்தக்கணக்குகளில் செலுத்தவில்லை. இராக் பணத்தைச் செலவழிப்பதற்காக சில சிறப்பு கணக்குகளை துவக்கி அதில் பணத்தைப் போட வேண்டுமென்பது அமெரிக்க நிதித்துறையின் உத்தரவாகும். அந்த உத்தரவை அமெரிக்க ராணுவம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. பணம் எங்கே போனது என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான வேலை என்கிறது தணிக்கை அறிக்கை. வெறும் மூன்றாண்டு காலத்தில் மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் நிதியைத் தவறாகக் கையாளுதல் நடந்துள்ளது என்றால் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாயில் மோசடி நடந்திருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
தங்கள் தணிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள சிறப்பு அதிகாரி ஸ்டுவர்ட் போவன், திருட்டு மற்றும் நிதியைத் தவறாகப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதையே இது காட்டுகிறது என்கிறார். இந்த தணிக்கை அறிக்கையை அம்பலப்படுத்தியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் பத்திரிகை, இராக் மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில் தங்கள் அரசு தோல்வியடைந்து வருகிறது என்பதில் ஏற்கெனவே இராக்கியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதே வேளையில், கோடி, கோடியாகக் கிடைக்கும் எண்ணெய் வருமானம் எவ்வாறு செலவழிக்கப்படுகிறது என்ற கேள்வியையும் மக்கள் முன்னிறுத்துகிறார்கள் என்று அந்த பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.
இராக்கியர்களைப் பொறுத்தவரை இது ஒன்றும் புதிய செய்தியல்ல. ஏற்கெனவே 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டு நிர்வாகம் மேற்கொண்ட செலவில் சுமார் 43 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எந்தவித கணக்கும் வைக்கப்படவில்லை. ஆனால் அப்போதைய நிர்வாகமே அமெரிக்காவின் கையில்தான் முழுமையாக இருந்தது. தற்போது காகித அளவிலாவது மக்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. புதிய மோசடி குறித்து கருத்து தெரிவித்துள்ள இராக் பிரதமரின் ஊடக ஆலோசகர் அலி முசாவி, கணக்கு வைக்கப்படாத பணத்தை இராக் திரும்பப் பெறும் என்கிறார்.
ஆனால் இராக்கிற்குள் அமெரிக்க ராணுவம் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததிலிருந்து தற்போது வரை எந்த ஒரு செலவுக்கும் கணக்கு காட்டுவதில் அமெரிக்க ராணுவம் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் இராக்கியர்களின் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் எண்ணெய் வருமானத்தில் கணிசமான பகுதியை எடுத்துக் கொள்ளும் அமெரிக்கா, அதை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் வேறு பணிகளுக்கு திருப்பி விட்டுக் கொள்கிறது என்ற குற்றச்சாட்டை இராக்கிய மக்கள் முன்வைத்துள்ளார்கள். தற்போதுள்ள அரசு இது குறித்து பேச முன்வந்திருப்பதே மக்களிடம் கடும் கோபம் நிலவுவதைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

(தீக்கதிர்)
புலிகளின் 3,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளாக இருந்து சரணடைந்தவர்களில் சுமார் 3,000 பேர் இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். புலிகளின் முன்னாள் போராளிகள் 11,689 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதற்கு இனங்காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 3,000 பேரில் பல்கலைக்கழக மாணவர்கள் சிறுவர்கள் அங்கவீனமானோர் கர்பிணிகள் பிள்ளைகள் கொண்ட தாய்மார்கள் சிறு குற்றங்கள் புரிந்தோர் நீதிமன்றத்தால் நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டோர் ஆகியோரும் உட்படுவதாக பிரிகேடியர் சுதந்த ரணசிங்க மேலும் கூறியுள்ளார்.363 சிறுவர்கள் மற்றும் 231 சிறுமிகளும் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் பலவந்தமாக புலிகள் அமைப்பில் சேர்க்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் கிட்னி வியாபாரம் : ஆந்திராவில்தான் இந்த கொடுமை
ஐதராபாத்: இன்றைய நவீன உலகில் இன்டர்நெட் பயன்பாடு அளவில்லா வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக இணைய தளம் பலரை வலைக்குள் போட்டு தப்ப விடாமல் செய்து விட்டது. அன்றாட வாழ்வில் மனிதனின் முக்கிய தேவையாகவே நெட் உலகம் மாறிப்போய் விட்டது. அறிவியல் ரீதியான வளர்ச்சிக்கு ஒரு புறம் இருந்தாலும் , பொழுதுபோக்கு அங்கமாகவும், உதாரணத்திற்கு பேஸ் புக், டுவிட்டர் ஆகியவற்றின் அபார வளர்ச்சியை சொல்லலாம். ஆன்லைன் வர்த்தக ரீதியாக கோடிக்கணக்கான லாபம் ஈட்டும் ஸ்தலமாகவும் இருக்கிறது.
மனைவி முதல் மண்ணு வரை விற்க, வாங்கிட என பலவாறு ரகங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் கிட்னி விற்கும் தலம் என்பது உள்ளத்தை கிள்ளும் விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆந்திராவில் பலர் தங்களுடைய ஏழ்மை நிலைக்கு வழி தேடும் விதமாக கிட்னியை விற்க நாங்கள் ரெடி, உங்களுக்கு தேவையா ? உடனே அழையுங்கள் என்ற விளம்பரம் தாங்கிய இணைய தளம் வலம் வருகிறது. . கரீம்நகர் முசீராபாத் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் ன்பவர் தனது கிட்னி விற்க என்ற விளம்பரத்தை http://adbhai.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவரிடம் தொடர்பு கொண்ட ஒரு வாடிக்கையாளரிடம் அவர் போனில் கூறிய விவரம் வருமாறு :
எனக்கு பணக்கஷ்டம் இதனால்தான் நான் எனது கிட்னியை விற்க முடிவு செய்துள்ளேன். உங்களுடைய உறவினருக்கு கிட்னி வேண்டுமா நான் தருகிறேன், ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்கப்படுகிறது. நீங்கள் எந்த ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லுகிறீர்களோ அங்கு வந்து விடுகிறேன். நீங்கள் முழு சோதனைக்கு பின் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முன்னதாக நீங்கள் எனது பாங்க்., கணக்கில் பணத்தை வரவு செய்து விட வேண்டும் ஓகே., வா என முடித்துக்கொண்டார்.
தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட ஒரு விஷயத்தையும் கூறுகிறார். இப்படித்தான் ஒருவர் கூப்பிட்டு போனார். கடைசி நேரத்தில் எனது உறவினர் கொடுப்பதாக கூறி விட்டார். உங்கள் கிட்னி வேண்டாம் சாரி., என்று சொல்லி., ரூ. 10 ஆயிரமும் கொடுத்து அனுப்பினர் என்றார் சீனிவாஸ் .
இவர் ஒருவர் அல்ல., இது போல் பல இளைஞர்கள் தங்கள் விவரம் மற்றும் போன் நம்பருடன் தகவல்களை விளம்பர இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஆந்திராவில் கிட்னி வியாபாரம் தற்போது பரபரப்பு. என்ன கொடுமை இது !

ர கிருஷ்ணமூர்த்தி - MUSCAT,பாகிஸ்தான்
2010-08-01 14:49:29 IST
My sister died due to non availability of kidney in 1986.At that time no internet facility. If the facility was available at that time i could have saved my sister. I do not find any thing wrong in the advertisement. R Krishnamoorthy...
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-08-01 14:19:54 IST
கிட்னியை மற்றவருக்கு கொடுப்பது தவறில்லை!!பணகஷ்டம் என்பது அவர் அவரின் சூழ்நிலை!!பணகாரகளுக்கு பணம் வந்தவுடன் இந்த மாதிரியான ஆசையெல்லாம் வராது.ஏழைகள் பாதிக்க படுகிறார்கள்;ஆன் லைனில் கமிஷன் தரகர்கள் குறைவு!!நான் கூட எட்டு வருடமாக டையாலிஸ் செய்து வருகிறேன் பாரீஸில்!!மாற்று கிட்டினிக்கு முயற்சி பண்ண வில்லை!!!...
eswari - switzerland,இந்தியா
2010-08-01 13:53:06 IST
india is growing but still lot of people suffering poverty in india political zero that'why our country not shared with other people.one man having 20 house other one living in street.please help poor people....
நந்தகுமாரன் - Madurai,இந்தியா
2010-08-01 12:54:34 IST
Country is undeveloped. This has nothing to do with internet. People sold their children before 500 years before without any technology. India has beggers for more that 2000years & will continue to beg with advanced technology in the comming years....
singam - namakkal,இந்தியா
2010-08-01 11:43:11 IST
ஆமாய்யா .......இந்த விலை வாசி கொடுமை விட கிட்னி வியாபாரம் ஒன்றும் கொடுமை இல்லை ....சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் ?/ நடுத்தர வர்க்கமே இந்த விலை வாசி ல் காலம் தள்ளுவது சிரமம் ...கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ...கிட்னி தான் விற்க முடியும் ...இதற்கு இந்த அரசாங்கம் வெட்கி தலை குனிய வேண்டும் ...விலைவாசி கட்டு படுத்த முடியவில்லை என்றல் பதவி துறக்க வேண்டும் ...........மற்றவர்கள் மேல் பழி போடகூடாது ......முந்தானை முடிச்சிலிருந்து வெளி வந்தால் தான் நாடு உருப்படும் ...இல்லாவிடில் மனிதனை மனிதனே தின்னும் காலம் வெகு தூரத்தில் இல்லை ................
கங்கை அமரன,தாய் பாடிய தாலாட்டு தான் இளையராஜாவை உலகறிய
தாய் பாடிய தாலாட்டு தான் இளையராஜாவை உலகறிய செய்தது என்று இசையமைப்பாளரும், இளையராஜாவின் தம்பியுமான ் தெரிவித்தார்.
குற்றாலத்தில் சாரல் திருவிழாவின் இறுதிநாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இவ்விழாவி்ல் திரைப்பட இயக்குனர் கங்கை அமரனின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கங்கை அமரன் பேசியதாவது...
இன்று திரைப்படங்கள் தமிழ் பெயருடன் வெளிவந்தாலும் அதில் போதிய தமிழ் வார்த்தைகள் பாடல்களில் இல்லை. தமிழுக்காவே வாழும் முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார். அவர் தமிழுக்காற்றும் தொண்டிற்காக நம் தலைமுறையே அவருக்கு கடன்பட்டிருக்கிறது.
தமிழுக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. சிலர் பொறுப்புக்கு வந்திருந்தபோது ஆங்கிலத்தை தவிர வேறோன்றும் கிடையாது. அவர் பேச்சு, பேட்டி என அனைத்தும் ஆங்கிலம் தான். ஆனால் நம் முதல்வர் அப்படி அல்ல.
இன்று தமிழ்படங்கள், பாடல்களில் வீரம், அறிவு, தாலாட்டு உள்ளிட்ட நல்ல விஷயங்களை உள்ளடக்காமல் உள்ளது. அன்றைக்கு வந்த திரைப்படங்களில் நல்ல தகவல்கள் இருந்தன. ஆனால் இடைப்பட்ட காலங்களிலும் இது போன்ற திரைப்படங்கள் இல்லாமல் வெற்றிடம் இருந்தது. தற்போது சில திரைப்படங்கள் பழைய திரைப்படங்களை போன்று வெளிவந்து அந்த இடத்தை நிரப்புகிறது.
இன்று நாங்கள் உங்கள் முன்பும் உலகமறியும் அளவுக்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் எங்கள் தாய், எங்களுக்கு தாலாட்டோடு தமிழ் பற்றினை ஊட்டியதுதான். அன்னக்கிளி பாடலை எங்கள் தாய் தாலாட்டாக பாடினார். அந்த பாடலைதான் எங்கள் அண்ணன் இளையராஜா முதல் படத்தில் பாடினார். அந்த தாலாட்டு பாடல்தான் எங்களை உலகறிய செய்தது என்றார் கங்கை அமரன்.

பதிவு செய்தவர்: Music
பதிவு செய்தது: 01 Aug 2010 5:56 pm
what do you know about illayaraja.You know how many families lived because of him?Rehman lives for himself.Talking humble does not mean being humble.Grow your thougts instead of commenting on genius ,legend like ilayaraja.
பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 01 Aug 2010 3:58 pm
அன்னக்கிளி உங்கள் தாயார் பாடியப் பாடல்அல்ல வேறு ஒருவர் பாடியப் பாடல் அது. இளையராசா வெறும் இசையை மட்டும் அமைத்தார். பிரபல நடனப் பெண்மணி ஒருவர் இந்த விவரங்களை ஒரு தொலை காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
பிரகாஷ் ராஜ் சாடல்,மலேசியாவில் எந்திரன் ஆடியோ வெளியீடு
எனது படத்தின் ஆடியோ விழாவை தமிழகத்தில், தமிழர்கள்
மத்தியில்தான் நடத்துவேன். வெளிநாட்டுக்குப் போய் நடத்த மாட்டேன் என்று நடிகர்
பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். இதன் மூலம் எந்திரன் படத்தின் ஆடியோ விழாவை தமிழகத்தில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தியதை அவர் போட்டுத் தாக்கியுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. பிரமாண்டமான முறையில் இந்த விழாவை நடத்தியுள்ளனர்.
இதை மறைமுகமாக சாடியுள்ளார் பிரகாஷ் ராஜ். அவரது டூயட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இனிது இனிது. இப்படத்தின் ஆடியோ வெளியீடு, நண்பர்கள் தினமான இன்று நடந்தது. இதேபோல திருச்சி
, மதுரை, கோவை ஆகிய ஊர்களிலும் பாடல் வெளியீட்டு விழாவை நடத்துகிறார் பிரகாஷ் ராஜ்.
சென்னையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தனது வருங்கால மனைவியான போனி வர்மாவுடன் வந்திருந்தார் பிரகாஷ் ராஜ். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் போனி குறித்து கேட்டபோது, இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களுக்கும் இவர்தான் மாஸ்டர். இதற்கு மேல், வேறு எதையும் இப்போது கேட்க வேண்டாம். அதற்கான இடம் இதுவல்ல என்று புன்னகைத்தபடி கூறினார் பிரகாஷ் ராஜ்.
பின்னர் அவர் எந்திரன் பட ஆடியோ வெளியீட்டை மறைமுகமாக தாக்கிப் பேசுகையில், பிரம்மாண்டமாக தமிழ் படம் எடுத்துவிட்டு அப்படத்தின் பாடல்களை வெளிநாட்டில் சென்று வெளியிடுகிறார்கள். ஆனால் நான் அப்படிச் செய்ய விரும்பவில்லை. தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் வெளியிடவே விரும்புகிறேன் என்று போட்டுத் தாக்கினார்.

பதிவு செய்தவர்: ஜெயலலிதா
பதிவு செய்தது: 01 Aug 2010 7:31 pm
எந்திரன் ஆடியோ விழாவை தமிழகத்தில் நடத்தாமல் மலேசியாவில் நடத்தியதை கண்டித்து அமெரிக்கா வெள்ளை மளிகை முன்னாடி வைத்து எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இலங்கை கடற்படையினர் மீட்டனர்,தமிழக மீனவர்களின் இரண்டு படகையும
ரம் : இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால் கடலில் மூழ்கிய தமிழக மீனவர்களின் இரண்டு படகையும், இலங்கை கடற்படையினர் மீட்டனர். ராமேஸ்வரத்திலிருந்து கடந்த மாதம் 18 ல் மீன்பிடிக்க சென்ற மீனவர் செல்லத்துரையின் படகு மீது, இலங்கை மீனவர்கள் குண்டு வீசியதால், யரணைதீவு கடல் பகுதியில் கடலில் மூழ்கியது. இரண்டு நாளுக்கு பின் மூழ்கிய படகை மீட்க சென்ற மீனவர் பால்துரை படகின் மீதும், இலங்கை மீனவர்கள் வெடிகுண்டு வீசியதால் இவரது படகும் கடலில் மூழ்கியது. இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கரை பகுதியில் மீன்பிடிக்கச்செல்வதை தவிர்த்தனர். இதனால் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஏராளமான படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் கூறியதாவது: முன்பு இலங்கை கடற்படையினர் ராமேஸ்வம் மீனவர்களை தாக்கிய சம்பவம் நடந்தது. தற்பேது அவர்கள் பிரச்னை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில், இலங்கை மீனவர்கள் படகின் மீது வெடிகுண்டு வீசும் சம்பவம் தொடர்வதால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளதாக, தெரிவித்தனர்.இந்நிலையில், யரணைதீவு கடல் பகுதியில் மூழ்கிய இரண்டு படகையும், இலங்கை கடற்படையினர் மீட்டு தலைமன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வந்து கரையில் நிறுத்திள்ளனர். இரண்டு படகையும் ராமேஸ்வரம் கொண்டு வர,இலங்கை செல்வதற்காக படகின் உரிமையாளர்கள் மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளனர்.
இன்டர்நெட்டில் இலவசமாக கிடைக்கும் எந்திரன் படப் பாடல்கள்
வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே எந்திரன் படப் பாடல்கள் இன்டர்நெட்டில் படு தாராளமாக புழங்க ஆரம்பித்து விட்டது.ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள எந்திரன் படத்தின் ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் வைக்காமல் கோலாலம்பூரில் போய் வைத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த விழா நடந்த சில நிமிடங்களிலேயே அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் படு துல்லியமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையதளங்களில் வெளியாகி விட்டது. ஏகப்பட்ட இணையதளங்களில் எந்திரன் படப் பாடல்கள் கிடைக்கின்றன. சில தளங்களில் டவுன்லோட் செய்ய பணத்தையும் கறக்க ஆரம்பித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தனியாக இசை வெளியீடு நடத்தத் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இப்படத்தின் பாடல்களை இணையதளங்களில் இலவசமாக கேட்க முடிகிறது.மொத்தம் 7 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. வைரமுத்து, பா.விஜய்
, கார்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். பூம்பூம் ரோபோ டா என்று தொடங்கும் பாடலை யோகி பி, கீர்த்தி சகதியா, ஸ்வேதா மோகன, தன்வீர் ஷா பாடியுள்ளனர். அரிமா அரிமா பாடலை ஹரிஹரன், சாதனா சர்கம் உள்ளிட்டோர் பாடியுள்ளனர்.
காதல் அனுக்கள் பாடலை விஜய் பிரகாஷ், ஷ்ரேயாகோஷல் பாடியுள்ளனர். கிளிமஞ்சாரோ பாடலை ஜாவேத் அலி, சின்மயி பாடியுள்ளனர்.
இரும்பிலே ஒரு இதயம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், கஷன் கிரிஸியும் பாடியுள்ளனர். சிட்டின் டான்ஸ் ஷோகேஸை எஸ்.பி.பி, ரஹ்மான், அவரது மகள் கதீஜா ஆகியோர் பாடியுள்ளனர்.
புதிய மனிதா பாடலை பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி பாடியுள்ளனர்.மலேசியாவில் இசை வெளியீடு முடிந்த உடனேயே தமிழகத்திலும் ஆடியோ, சிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. ரஜினி
ரசிகர்கள்
ஆவலுடன் இதை வாங்கிச் செல்கின்றனர்.இதேபோல எந்திரன் பட வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பையும் பதிவு செய்து துல்லியமான முறையில் யூடியூபில் வெளியிட்டு விட்டனர். அதையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் தனியாக இசை வெளியீடு நடத்தத் தேவையில்லை என்று கூறும் அளவுக்கு இப்படத்தின் பாடல்களை இணையதளங்களில் இலவசமாக கேட்க முடிகிறது.மொத்தம் 7 பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. வைரமுத்து, பா.விஜய்
காதல் அனுக்கள் பாடலை விஜய் பிரகாஷ், ஷ்ரேயாகோஷல் பாடியுள்ளனர். கிளிமஞ்சாரோ பாடலை ஜாவேத் அலி, சின்மயி பாடியுள்ளனர்.
இரும்பிலே ஒரு இதயம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும், கஷன் கிரிஸியும் பாடியுள்ளனர். சிட்டின் டான்ஸ் ஷோகேஸை எஸ்.பி.பி, ரஹ்மான், அவரது மகள் கதீஜா ஆகியோர் பாடியுள்ளனர்.
புதிய மனிதா பாடலை பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி பாடியுள்ளனர்.மலேசியாவில் இசை வெளியீடு முடிந்த உடனேயே தமிழகத்திலும் ஆடியோ, சிடிக்கள் விற்பனைக்கு வந்து விட்டன. ரஜினி
பதிவு செய்தவர்: முஸ்தபா
பதிவு செய்தது: 01 Aug 2010 7:17 pm
ஐஸ்வர்யா ஐஸ்வர்யா என்று நாயா அலைந்து பைத்தியம் சாப விமோசனம் அடைந்சுருச்சு
பில்கிளிண்டன் மகள் செல்சியாவின் திருமணம் பல மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமாக
அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன் மகள் செல்சியாவின் திருமணம் பல மில்லியன் டாலர் செலவில் ஆடம்பரமாக நடந்து முடிந்துள்ளது. முன்னாள் அதிபர் கிளிண்டன், தற்போதைய அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தம்பதியினரின் ஒரே மகள் செல்சியா .
இவர் தனது பள்ளிப்பருவ நண்பன் மெஸ்வின்ஸ்கியை காதலித்து வந்தார். இவர் வங்கி முதலீட்டாளர். தனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நியூயார்க்கில் ஹட்சன்வெலி ரைபக் பிரசேத்தில் 500 ஏக்கர் பரப்பு கொண்ட எஸ்டேட் தேர்வு செய்யப்பட்டு இங்கு திருமணம் நடந்தது.
இந்த எஸ்டேட்டில் குளு, குளு., ஹூட்ஸன் நதியும் பாய்கிறது என்பது கூடுதல் சிறப்பு. முக்கிய அழைப்பாளர்களாக 500 பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட்டனர். கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருமணத்திற்கென 3 முதல் 5 மில்லியன் டாலர் வரை ( இந்திய ரூபாயில் 23 கோடி ) செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மோதிரம் மட்டுமே 1 மில்லியன் டாலராம்: திருமண செலவு விவரம் வருமாறு : நிச்சயதார்த்த மோதிரம் மட்டுமே 1 மில்லியன் டாலராம். திருமண உடைக்கு 25 ஆயிரம் டாலர், கூடாரத்திற்கு 600 ஆயிரம டாலர், பூக்கள் 500 ஆயிரம் டாலர், போட்டோ மற்றும், வீடியோ வகைக்கு 40 ஆயிரம் டாலர், பாதுகாப்பு வகைக்கு 200 ஆயிரம் டாலர் , இசை நிகழ்ச்சிக்கு 40 ஆயிரம் டாலர், டாய்லட் வகைக்கு 15 ஆயிரம் டாலர், மதுபான வகைக்கு 30 ஆயிரம டாலர் , உணவு பதார்த்தங்கள் 125 ஆயிரம் டாலர், திருமண கேக் மட்டும் 11 ஆயிரம் டாலர்
vinoth - chennai,இந்தியா 2010-08-01 18:12:50 IST
எது எல்லாம் பெரிய செலவா ஜெயலலிதா செய்யாத கல்யாணமா 100 கோடி அதுவும் 1 ரூபா சம்பளத்ல சரியா ஆகவே தலைப்பை மாறு... senthil - neyveli,இந்தியா 2010-08-01 18:11:48 IST
never beat amma, she is coming cm.please help your tamil peopels...please think them future... vsm ali - jiangmen,சீனா 2010-08-01 17:38:54 IST
புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.... ரவி - doha,ரீயூனியன் 2010-08-01 17:23:59 IST
அடேங்கப்பா...இது என்ன ஜுஜுபி...வெறும் 23 கோடிக்கே பீலா உடாதீங்க...எங்க அம்மா பத்து வருசத்துக்கு முன்னயே நூறு கோடி செலவழிச்சத அடிச்சிக்க இந்த உலகத்துல இனி ஒருத்தன் பிறந்து தான் வரணும். .... கோபி - Tiruchirappalli,இந்தியா 2010-08-01 17:03:21 IST
இது என்ன பெரிய திருமணம் எங்க அம்மா அவரது வளர்ப்பு மகன் கல்யாணத்திற்கே 100 கோடி செலவு செய்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆனா அதுக்கப்பரம் அவனியே துக்கி உள்ள வச்சிதுல்ல.... முனைவர்.பார்த்தசாரதி - chennai,இந்தியா 2010-08-01 15:50:12 IST
வாழ்க வளமுடன் செல்சிய கிளிண்டன் தம்பதி யர்க்கு வாழ்த்துகள்....

சுடக்கூடாது-ப.சிதம்பரம் எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம்
எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம்;சுடக்கூடாது-ப.சிதம்பரம்
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களில் ஒரு பகுதியினர் இன்னும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்ததும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்து இருந்தார். ஆனால் அதன்படி நடக்கவில்லை.
சமீபத்தில் சென்னைக்கு வந்த இலங்கை தமிழ் எம்.பி.க்கள் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து இலங்கை தமிழர்களின் நிலைமையை விளக்கினார்கள்.
முகாம்களில் அடைப்பட்டு கிடக்கும் தமிழர்களை சொந்த இடங்களுக்கு இலங்கை அரசு அனுப்பவில்லை. அதற்கு பதிலாக தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்களர்களை குடியமர்த்தி வருகிறது என்று தெரிவித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் மத்திய அரசு ஒரு குழுவை அனுப்பி மறுவாழ்வு பணிகளை ஆய்வு செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று விரைவில் ஒரு சிறப்பு பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார்.
இந்நிலையில் இன்று முதல்வர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேரில் சந்தித்தார்.
இச்சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் ப.சிதம்பரம்.
அப்போது, ‘’இலங்கைத்தமிழர் மறுவாழ்வுப்பணிகள் குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்தேன்.மறுவாழ்வுப்பணிகளை பார்வையிடுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி இந்த வாரம் இலங்கை செல்கிறார். வீடுகள்,கட்டுமானப்பணிகளை இந்திய அதிகாரி நேரில் ஆய்வு செய்வார்’’என்று தெரிவித்தார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து சுடப்படுகிறார்களே? என்ற கேள்விக்கு,
’’இந்த ஆண்டு ஒரு நிகழ்வுதான் நடந்துள்ளது. அது வருந்தத்தக்க விசயம். இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி கடலில் மீனவர்களை சுடக்கூடாது. அதை நாங்கள் இலங்கையிடம் வலியுறுத்தி கூறியுள்ளோம்’’என்று தெரிவித்தார்.
எந்த பிரச்சனையாக இருந்தாலும் கைது செய்யலாம். சுடக்கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி உள்ளோம்.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியில் நிறைய பேர் சேருகிறார்களே காரணம் என்ன? என்ற கேள்விக்கு, ’’ மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தமிழ்நாட்டில் திமுகவும் மக்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
அதனால் சமுதாய நோக்குடன் நல்ல எண்ணம் கொண்டவர்கள் இங்கு வந்து சேருகிறார்கள்’’என்று தெரிவித்தார்.

இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் கைது
பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரம் இன்றி யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இந்திய பிரஜையொருவர் ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இந்நிலையில், குறித்த இந்திய பிரஜையை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மூலமாகவே குறித்த இந்திய பிரஜை யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்துள்ளார். வவுனியா பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கே பி, பத்திரிகையில் வெளியாகாத நேர்காணல்கள் கீழே தரப்படுகின்றன
கே பி எனப்படும் குமரன் பத்மநாதனிடம் உள்ளுர் பத்திரிகை ஒன்று நடத்திய நேர்க்காணல் அண்மையில் பிரசுரமாகியிருந்தது. எனினும் அந்த பத்திரிகையில் வெளியாகாத நேர்காணல்கள் கீழே தரப்படுகின்றனபத்திரிகையாளர் - அரசாங்கத்துடன் உங்களுக்கு உள்ள பரிமாற்றங்கள் எவை?
கே பி – பரிமாற்றமா அதன் அர்த்தம் என்ன? என்ன சொல்கிறீர்கள்?
பத்திரிகையாளர் - அரசாங்கம் உங்களை வைத்து என்ன செய்யபோகிறது. ராஜபக்சவின் குடும்ப ஆட்சியில் நீங்கள் சிக்கியுள்ளீர்கள். நீங்கள் உங்களிடம் இருந்த பெருந்தொகை பணத்தை ராஜபக்சவின் உறவினர்களுக்கு பரிமாற்றியுள்ளீர்கள். இதன் காரணமாகவே உங்களை சிறையில் அடைக்காமல் சுதந்திரமாக வைத்திருக்கிறார்கள்.
கே பி –சிரிப்பு –அவ்வாறான பரிமாற்றம் எதுவும் கிடையாது.2003 ஆம் ஆண்டுக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இருந்த பொறுப்புகளில் இருந்து நான் விலகிக்கொண்டேன். அதன் பின்னர் நான் பெருந்தொகை பணத்தை என்வசம் கொண்டிருக்கவில்லை. அவையாவும் வீணான பிரசாரங்களாகும். எனக்கு இந்த விடயம் தொடர்பாக எதுவும் தெரியாது.
பத்திரிகையாளர் - கப்பல்கள் பற்றி என்ன கூறுகிறீர்கள்?கப்பல்களுக்கு என்ன நடந்தது? எந்த சகோதரருக்காக அதனை கொடுத்தீர்கள்?
கே.பி – பல கப்பல்கள் இறுதியுத்தத்தின் போது அழிக்கப்பட்டன. அங்கு கொடுப்பதற்கு ஒன்றும் இருக்கவில்லை.
பத்திரிகையாளர்- கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்படவில்லை. உங்களுக்கு அது பற்றி தெரிந்திருக்கும்தானே?
இரண்டு மூன்று கப்பல்கள் எஞ்சியிருந்தன. சுpல வேளைகளில் அரசாங்கம் அவற்றை கைப்பற்றியிருக்கலாம்.
பத்திரிகையாளர் - உங்களை எங்கே பிடித்தார்கள்?
கே பி – மலேசியாவில்
பத்திரிகையாளர் - தாய்லாந்தில் என்ன நடந்தது?
தாய்லாந்து தொடர்பாக கூறப்பட்டவை ஊகங்களாக இருக்கலாம். ஆனால் நான் மலேசியாவிலேயே பிடிக்கப்பட்டேன்.
உங்களை யார் பிடித்தது?
கே பி – மலேசிய புலனாய்வாளர்கள். என்னை விமான நிலையம் வரை அழைத்துச்சென்று அங்கு இலங்கையின் புலனாய்வாளர்களிடம் ஒப்படைத்தனர்
இதன் பின்னர் விமானத்தின் வர்த்தக வகுப்பில் அமரசெய்யப்பட்டு நான் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டேன்.
பத்திரிகையாளர் - என்ன நிபந்தனைகளுக்கு கீழ் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளீர்கள்? தற்போது என்ன நினைக்கிறீர்கள்?
கே பி – வீடு ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன். நான் ஏனைய கைதிகள் எண்ணுவதை போலவே உணர்வுகளை கொண்டுள்ளேன்.எனினும் நான் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வீடு எங்குள்ளது என்பது எனக்கு தெரியாது.
பத்திரிகையாளர் - உங்களை சமாதானத்துக்கு உதவுமாறு அரசாங்கம் அழைத்ததா?
கே பி – நாங்கள் அதனை பற்றி பேசினோம். நான் எனது மக்களுக்கு உதவவேண்டும். கஸ்டப்படுகின்ற மக்களுக்கு உதவவேண்டும் என நினைக்கிறேன்.
பத்திரிகையாளர் - யுத்தத்தின் இறுதிக்காலத்தில் உங்களது பணி என்னவாக இருந்தது?
கே பி –நாங்கள் யுத்தத்தை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் உட்பட பல தரப்புகளுடனும் பேசினோம். எனினும் அது முடியவில்லை
பத்திரிகையாளர் -உங்களின் பொறுப்புகள் எவை? ஆயுதக்கடத்தலா? அல்லது வங்கி வைப்புகளின் பொறுப்பாளரா?
கே பி – நான் சர்வதேச உறவுகளுக்கு பொறுப்பாக இருந்தேன்.நான் சமாதான முயற்சியாளராக செயற்பட்டேன்.
பத்திரிகையாளர் - உங்கள் வசம் அதிகளவு பணம் இருந்தது உண்மையா?
கே பி – 2003 ஆம் ஆண்டில் 2009 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் உள்ள நிலைமை எனக்கு தெரியாது. நான் 2003 ஆம் ஆண்டு எனது பொறுப்பை முடித்துக்கொண்டபோது அதிகளவு கடன்களே இருந்தன.
பத்திரிகையாளர்- இலங்கைக்கு எப்போது கடைசியாக விஜயம் செய்தீர்கள்?
கே பி – ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ சமாதான முன்னெடுப்புகளை மேற்கொண்டபோது கடைசியாக இலங்கைக்கு வந்தேன்
பத்திரிகையாளர்- மலேசியாவில் இருந்து இலங்கை வந்தபின்னர்மட்டக்களப்புக்கு போயிருக்கிறீர்களா?
கே பி - இல்லை. வன்னிக்கு சென்றிருந்தேன். புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலர் இலங்கைக்கு வந்து அரசாங்கத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை மேற்கொள்ள பயணித்த போது நானும் அவர்களுடன் வன்னிக்கு சென்றேன்.
பத்திரிகையாளர் - உங்களுடைய பழைய யுத்த களத்திற்கு சென்ற போது எவ்வாறு கவலைப்பட்டீர்கள்?
கே பி – முகாம்களுக்கு விஜயம் செய்தபோது போரின் காரணமாக பொதுமக்கள் அவலப்படுவதை கண்டு வருந்தினேன். எனக்கு அழுகை வந்தது. இந்தநிலையில் சமாதான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன்.
பத்திரிகையாளர்- நீங்கள் அரசாங்கத்துக்கு பணம் எதனையும் கொடுக்கவில்லையா?
கே பி – நான் சொல்வது உண்மையாகும். பணம் வழங்கியதாக கூறப்படுவது முற்றிலும் பொய்யான செய்தியாகும்
பத்திரிகையாளர்- உங்களுக்கு எத்தனை வயது?குடும்பம் பிள்ளைகள்?
கே பி – எனது மனைவியும் தாய்லாந்தில் இருக்கிறாள். 18 வயது மகளும் தாய்லாந்தில் இருக்கிறாள்.
பத்திரிகையாளர் - அவர்கள் உங்களுடன் நாளாந்தம் தொலைபேசியில் அல்லது ஸ்கைப்பில் பேசுகிறார்களா? அவர்கள் உங்களை பார்ப்பதற்கு வருகிறார்களா?
கே பி – வாரத்திற்கு மூன்று நாட்கள் அவர்களுடன் கதைப்பேன். சிலவேளைகளில் அவர்கள் என்னை பார்க்க வருவார்கள்.
பத்திரிகையாளர் - புலம்பெயர்ந்தவர்களின் குழுவுடன் நீங்கள் வன்னி சென்றீர்களா?
கே பி – வன்னிக்கு சென்றோம். அபிவிருத்தி தொடர்பாக அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சேவையாற்றுவது குறித்து ஆராய்தோம்
பத்திரிகையாளர் - யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்த யுத்தத்தில் அழித்துப்போன சொத்துக்கள் குறித்து உணர்கிறீர்களா?
கே பி – நாங்கள் கசப்பான அனுபவத்தை பெற்றிருக்கிறோம்
பத்திரிகையாளர்- சர்வதேசத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்ன?
கே பி – சிலர் உண்மையை பேசுகிறார்கள். பலர் பிரபா இன்னும் உயிருடன் இருப்பதாக கூறுகின்றனர். நான் முகாம்களுக்கு சென்றபோது அங்கு உள்ள இளைஞர்களும் யுவதிகளும் தாம் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவேண்டும் என கூறுகின்றனர். ஒரு சதவீதத்தினரே மீண்டும் யுத்தம் செய்யவேண்டும் என கூறுகின்றனர்
பத்திரிகையாளர் - தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் இலங்கையில் தோற்றம் பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?
கே பி – உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. எங்களது வாழ்நாளில் அவ்வாறு நடக்கும் என நாம் நம்பவில்லை. 35 வருட யுத்தத்தில் சிக்குண்டுண்டிருந்த நாம் இனி சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்
பத்திரிகையாளர் -உங்களது கைது பற்றி ஏதாவது அறிந்திருந்தீர்களா?
கே பி - இல்லை. ஆச்சரியமாக நடந்தது. ஹோட்டலுக்கு மலேசிய புலனாய்வாளர்கள் வரும் வரை எனக்கு எதுவும் தெரியாது
பத்திரிகையாளர் - அரசியலுக்கு வரும் நோக்கம் இருக்கிறதா?
கே பி - இல்லை. எனது மக்களின் பிரச்சினைகள் தீரும் வரை அவ்வாறான எண்ணம் இல்லை. நான் விடுதலையை விரும்புகிறேன். எனினும் பொறுத்திருந்து பார்ப்போம்.

சாவகச்சேரி,வள்ளலாரின், சமரச சுத்த சன்மார்க்க சபை மற்றும் சத்தியஞானகோட்டம் இலங்கை சாவகச்சேரி,
சாவகச்சேரி: வடலூரில் அவதரித்த வள்ளலாரின், சமரச சுத்த சன்மார்க்க சபை மற்றும் சத்தியஞானகோட்டம் இலங்கை சாவகச்சேரி, வேம்பிராயில் புதிதாக திறக்கப்படவுள்ளது. இந்த சபையில் வழிபாடு செய்வதற்கான திருநிலைக்கண்ணாடி, வடலூர் சித்திவளாகத் திருமாளிகையில், கடந்த ஜூன் 29 முதல் 48 நாட்கள் தொடர்ந்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. வரும் 15 ம் தேதி இது நிறைவுபெறுகிறது.>ஆக., 16 ல், மருதூர், கருங்குழி, நீரோடை, தருமச்சாலை, சத்தியஞானசபை, சித்திவளாகம் ஆகிய இடங்களுக்கு கண்ணாடி ஊர்வலம் செல்கிறது. பின், இலங்கைக்கு கண்ணாடி கொண்டு செல்லப்படுகிறது. ஆக., 17 முதல் செப்., 7 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா நாட்களில் வள்ளலார் குறித்த இசைநிகழ்ச்சி, கச்சேரி, கருத்தரங்கு, நாடகம்போன்றவை இடம்பெறுகின்றன. சத்திய ஞான கோட்டம் ஆக. 23 அதிகாலை 3.30 மணிக்கு நடக்கிறது. இத்தகவலை சாவகச்சேரி சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தலைவர் தெரிவித்துள்ளார்.இலங்கை சாவகச் சேரிக்குக் கொண்டு செல்லவுள்ள திருநிலைக் கண்ணாடியின் முன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) திரு அருட்பா முற்றோதல் நடைபெற உள்ளது.திரு நிலைக் கண்ணாடி வழிபாடு நிறைவுபெறல்.திங்கள்>திரு நிலைக் கண்ணாடியுடன், மருதூர், கருங்குழி, தீஞ்சுவை நீரோடை, மேட்டுக்குப்பம், வடலூர் சத்திய தருமச் சாலை, வடலூர் சத்திய ஞான சபை ஆகியவற்றில் வழிபாடு செய்து சுற்றி வரல் செவ்வாய் சென்னையிலிருந்து விமானம் மூலம் திருநிலைக் கண்ணாடியுடன் கொழும்பு வந்தடைதல். திரிகோணமலை சென்று பின்னர் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாடு செய்தல் புதன் மன்னார் சென்று திருக்கேத்தீஸ்வரத்தில் வழிபாடு செய்தல்.இரவு – சாவகச்சேரி வந்தடைதல் வியாழன் ஜீவ காருண்யம், உயிரிரக்கம் பற்றி 3 இடங்களில் ஊர்வலம் நடத்துதல்.யாழ்ப்பாணம்-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் துவங்குதல்..உயிரிரக்கத்தை வலியுறுத்தி இவ்வூர்வலம் நடைபெறும்.இந்து சமயப் பேரவையில் துவங்கி, சிவதொண்டன் நிலையத்தில் நிறைவடைதல்.வெள்ளி அளவெட்டி-காலை 8.00 மணிக்கு ஊர்வலம் கேணிக்கரை-வைரவர் கோயிலில் ஆரம்பித்து கும்பிளாவளை பிள்ளையார் கோவிலில் நிறைவடைதல்.இரவு – செல்வச் சன்னிதி அடைந்து திரு அருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் செய்தல் சனி சாவகச்சேரி..- ஊர்வலம் சிவன் கோவிலில் ஆரம்பித்து வேம்பிராய் பூத விராயர் கோயிலில் நிறைவடைதல்.ஞாயிறு வேம்பிராய்-எல்லாம் வல்ல அருட்தந்தை இராமலிங்கப் பெருமானை சிங்காதனத்தில் வைத்து..வணங்குதல். திரு அருட்பா பாராயணம் மற்றும் வழிபாடு செய்தல திங்கள் வேம்பிராய்-சத்திய தர்மச்சாலை திறப்பு விழா.செவ்வாய் சத்திய ஞான கோட்டத்தின் திருக்கதவம் திறப்பு விழா திறந்த பின் ஜோதி பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள நிலவறை வழிபாடு..நாள் ஒன்றுக்கு 6 முறை என்ற வீதத்தில் 8 நாட்கள் வழிபாடு 48 முறை நடைபெறல்.நிலவறை வழிபாடு நிறைவு செய்தலஇரவு 8 மணிக்கு-யந்திரப் பிரதிஷ்டை செய்தல் காலை 5.00 மணிக்கு திருநிலைக் கண்ணாடி வழிபாடு செய்து ஜோதி பீடத்தில் பொருத்துதல்.ஜோதி பீடம், சிற்சபை, பொற்சபை ஆகியவற்றிற்கு நீராட்டி முடிவைத்தல்.சத்திய ஞான கோட்டத்தில் உள்ளேயிருந்து வழிபாடு செய்தல்.காலை 5.00 மணி அருட்பெருஞ் ஜோதி தீபம் ஏற்றுதல் காலை 6.00 மணி – ஜோதி வழிபாடு துவக்கம். திரைகளை நீக்கி ஜாதி மத வேறுபாடின்றி ஜோதி தரிசனம் காண்பித்தல்.காலை 10 மணி மதியம் 1 மணி மாலை 7 மணி மற்றும் இரவு 10 மணிக்கு-வடலூரில் சத்திய ஞான சபையில் திரை நீக்கி 6 முறை அருட்பெருஞ் ஜோதி தரிசனம் காண்பிப்பது போன்று காண்பித்தல்.ஒரு புறம் ஜோதி தரிசனம் காண்பித்தல் மறு புறம் விசேட நிகழ்ச்சிகள்… சொற்பொழிவு..வள்ளலார் வரலாற்று நாடகம் திரு அருட்பா நடனம் மழையூர் சதாசிவம் திரு அருட்பா இசைக் கச்சேரி..முதலானவை மறுநாள் (7.9.2010) காலை 6.00 மணி வரை நடைபெறும் இந்த வைபவம் முடிவடைந்த பின்னர். வடலூரில் சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதப் பூசத்தின் போதும் 6 திரை நீக்கி ஜோதி வழிபாடு காண்பிப்பதைப் போன்றே. வேம்பிராய் சத்திய ஞான கோட்டத்திலும் அருட்பெருஞ் ஜோதி வழிபாடு நடைபெறும்.இந்த நிகழ்ச்சியில் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும், பல்வேறு நாடுகளிலுமிருந்தும் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் நலம் பெறும்படி தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்.கனகசபாபதி கேத்தீஸ்வரன், கே, விஜயலக்ஷ்மி, கே.தயானந்தன்.இது குறித்த விசாரணைக்கு தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் தொலைபேசி மற்றும் அலைபேசி எண்கள்.
பாலச்சந்தர் புகழாரம்,சினிமா வாழும் வரை மதராசப்பட்டினம் படம் பேசப்படும்
இதுவரை நான் பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினத்திற்கும் இடம் உண்டு. என்ன ஒரு சினிமா!. மாபெரும் கலை விருந்தாக அமைந்துள்ளது மதராசப்பட்டினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் இயக்குநர் கே.பாலச்சந்தர்.விஜய்யின் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராசப்பட்டினம் அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்து சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை இயக்குநர் கே.பாலச்சந்தர் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக இயக்குநர் விஜய்க்கு அவர் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம்...
அட்டன்பரோவின் காந்தி அனைவருக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. மங்கள் பான்டே ஆத்தன்டிக்கான படம். லகான் ஒரு சாகச உணர்வைக் கொடுத்தது. அதேசமயம், உங்களது மதராசப்பட்டினம் பிரமிக்க வைத்துள்ளது.
இப்படத்தின் சாதாரண விளம்பரம் முதல், அனைத்து புரமோக்களும் இது ஒரு பீரியட் படம் என்பதை கட்டியம் கூறின படத்தின் தொடக்கக் காட்சி லண்டனில் விரியும்போது, ஒரு அழகான வயதான பெண்ணிலிருந்து தொடங்கும் காட்சியும், அப்படியே ஒரு இளம் பெண்ணின் காலிலிருந்து காட்சி தொடருவதும் பிரமாதமான கலைநயம், மாபெரும் கலை விருந்து.
உங்களது நாயகியைப் பற்றி நான் கொஞ்சம் சொல்ல வேண்டும். அவர் திரையில் நடந்து வரும் காட்சியின்போது வெளிப்படையாக சொல்கிறேன் எனது மனம் துள்ளிக் குதித்தது. ஒரு நாயகியின் முகத்தில் அழகும், புத்திசாலித்தனமும் ஒருசேர துள்ளித் திரிந்ததை நீண்டகாலத்திற்குப் பிறகு இப்போதுதான் நான் பார்க்கிறேன்.
அவரது நடை, அதிகாரபீடத்தின் ஆணவம், புத்திசாலித்தனம் என எல்லாவற்றையும் மிக அழகாக வெளிப்படுத்தியுள்ளார் படத்தின் நாயகி. இளம் பெண் முதல் பாட்டி வயது வரையிலான அனைத்து காட்சிகளையும் மிக நுட்பமாக நடித்துள்ளார். மிகவும் அசாதாரணமான நடிப்பு அது.
மல்யுத்தப் போட்டியை அவர் பார்க்கும் காட்சியில் நான் மிகவும் வியந்து போனேன். மணலில் ஒரு ஸ்டூலில் அமர்ந்து, தலையைச் சாய்த்தபடி, முகத்தை கூர்மையாக வைத்துக் கொண்டு, தலை முடி கலையாமல் ரசித்துப் பார்த்தபடி, எந்தவித சலனமும் இல்லாமல், தனது உணர்வுகளை கண்களில் மட்டும் வெளிப்படுத்தும் அக்காட்சியில், அவரது நடிப்பு மிகுந்த வியப்பைக் கொடுத்தது.
நீங்கள் நினைப்பதை உங்களது நடிகர்களுக்கு சரியாக புரிய வைக்கக் கூடிய கம்யூனிகேஷன் ஸ்கில் உங்களிடம் நிறைய இருப்பதை அந்த ஒரு காட்சியின் மூலம் நான் புரிந்து கொண்டேன்.
உங்களது கேமராமேன், காஸ்ட்யூமர், கலை இயக்குநர், உங்களது திறமை என அனைத்தும் சேர்ந்து ஒவ்வொரு காட்சியையும் பிரமாதப்படுத்தியுளள்ளது. ஒவ்வொரு பிரேமிலும் அழகு நடமாடுகிறது.
உங்களது நாயகியை, சோபியா லாரன், கிரேஸ் கெல்லிக்கு இடையில் வைக்கலாம். ஒரு நாள் அவர் ஹாலிவுட்டில் மிகப் பெரிய ஸ்டாராக வருவார்.
சாதாரண ஆர்யா, நடிகர் ஆர்யாவாக இதில் உருமாறியுள்ளார். உங்களது கேரக்டர் அவரை சிறந்த நடிகராக காட்டியிருக்கிறது. அவருடைய திறமையை அவருக்கே புரிய வைத்துள்ளது. தனது பாத்திரத்தை மிகச் சரியாக செய்துள்ளார் ஆர்யா. நீங்கள் தேர்வு செய்துள்ள ஒவ்வொரு நடிகரும், நடிகையும் சிறந்த முறையில் பங்காற்றியுள்ளனர்.
படத்தில் வரும் கழுதைகள் கூட அழகாக இருக்கிறது. ஒருவேளை அதற்கும் போட்டோ செஷன் வைத்து தேர்வு செய்தீர்களோ என்னவோ! அவ்வளவு அழகாக இருக்கின்றன அவை.
படத்தில் பங்காற்றியுள்ள ஒவ்வொரு டெக்னீஷியனும் கதையோடு ஒன்றிப் போயிருக்கிறார்கள். உங்களையும், உங்களது கலைஞர்களையும் பாராட்டுவதோடு, இப்படிப்பட்ட வாய்ப்பையும்,உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பையும் வைத்து நம்பிக்கையுடன் உங்களை சுதந்திரமாக செயல்பட விட்ட உங்களது தயாரிப்பாளர் கல்பாத்தி
அகோரத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது.
படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் முழுமையாக, நிறைவாக உள்ளன. தேவைக்கு அதிகமாக எதுவுமே இல்லை. இதில் வரும் சென்னை நான் 17 வயதில் பார்த்த சென்னை. அப்போதெல்லாம் நீங்கள் பிறந்திருக்கவே மாட்டீர்கள். ஆனாலும், எனது நினைவுகளும், உங்களது கற்பனையும், அப்படியே ஒத்துப் போகின்றன. அந்த அளவுக்கு தத்ரூபம் இருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.
என்ன ஒரு சினிமா, எழுந்து நின்று சல்யூட் செய்ய விரும்புகிறேன். மிகச் சிறந்த முயற்சி இது விஜய்.
படத்தின் இசை மிகவும் ரம்மியமாக உள்ளது. படத்தின் மூடுக்கேற்ற இசை. ஒரு காதல் கதைக்கு ஏற்ற இசை. ஒரு படத்தின் நாயகனையும், நாயகியையும், அவர்களின் காதலையும் மிக அழகாக காட்டியிருப்பது நீண்ட நாட்களுக்குப் பிறகு இதில்தான் என்று கருதுகிறேன்.
உங்களிடம் நிறைய திறமை உள்ளது. அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் விட்டு விடாதீர்கள். எதைச் சொல்ல விரும்புகிறீர்களோ அதை அப்படியே சொல்லுங்கள், பாதை மாறிப் போய் விடாதீர்கள். படம் முடிந்து, விளக்குகள் போட்டு, அனைவரும் கிளம்பிச் சென்ற பின்னரும் கூட எனது மனதில் உங்கள் படம் நீண்ட நேரமாக நிழலாடிக் கொண்டிருந்தது. எனது இதயம் முழுதும் உங்களது படம்தான் ஓடிக் கொண்டிருந்தது.
நான் இதுவரை பார்த்த தலை சிறந்த பத்து திரைப்படங்களில் நிச்சயம் மதராசப்பட்டினமும் ஒன்று.
விஜய், நீங்கள் இந்திய சினிமாவை நிச்சயம் மேலும் ஒரு படி உயர்த்துவீர்கள் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.
ஆஸ்கர் விருது கிடைத்தால்தான் ஒரு படம் தலை சிறந்தது என்ற குறுகிய கருத்தை நான் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அந்தவிருதைப் பெறும் படம்தான் உலகின் தலை சிறந்த படைப்பு என்பதிலும் எனக்கு உடன்பாடு கிடையாது. என்னைப் பொறுத்தவரை, எந்தப்படம் காலத்தையும், தலைமுறைகளையும் தாண்டி நிற்கிறதோ, பேசப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்த படைப்பு.
அந்த அடிப்படையில், அந்தத் தகுதியில் பார்த்தால் மதராசப்பட்டினம் சினிமா வாழும் வரை பேசப்படும், நீடித்து நிற்கும்.
இந்தப் படத்துடன் தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவியுங்கள் என்று கூறியுள்ளார் கே.பாலச்சந்தர்.
இளங்கோவனை மீது நாம் தமிழர் இயக்கம் பாய்ச்சல்
வாய்க்கொழுப்புடன் பேசிக்கொண்டு திரியும் இளங்கோவன் அரசியலை விட்டு ஒதுக்கப்படுவது உறுதி என்று நாம் தமிழர் இயக்க செய்தி தொடர்பாளர் கூத்தன் கூறியுள்ளளார்.இதுகுறத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெரியாரின் பேரன் என்று கூறிக்கொண்டு பகலிலும் தன்னிலை மறந்து பேசும் குணம் கொண்டவர் சோனியாவின் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இளங்கோவன், சமீபத்திய பேட்டி ஒன்றில் வழக்கம் போல் வாய்க்கு வந்த படி உளறிக்கொட்டி இருக்கின்றார். இதனைப் படித்தால் அவர் இன்னும் அரசியலில் பாடம் கற்கவில்லை என்று தெரிகின்றது.
அவர் தனது பேட்டியில் சில முத்துக்களை உதிர்த்திருக்கின்றார். அவருக்கு நாம் பதில் அளிக்க கடமைப்பட்டுள்ளோம்.
”அண்டை நாடுகளோடு பிரச்னை ஏற்படும்போது சுமுகமாகப் பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, வன்முறையைத் தூண்டக் கூடாது. இலங்கை அரசு தமிழ் மீனவன் மீது தாக்குதல் நடத்தினால் பேசித்தீர்க்க வேண்டும். ஆனால் சீமான் வன்முறையைத் துண்டுகின்றார் என்று கூறியிருக்கின்றார் தன்னிலை மறந்த இளங்கோ.
சாதாரண மனிதர்கள் இடையே பிரச்சனை இருந்தால் பேசித்தீர்க்கலாம். ஆனால் இங்கு நம் மீனவர்களை அடிப்பதே இலங்கை அரசு தானே, காலம் காலமாக இது நடக்கின்றது. எத்தனை தடவை முறையிட்டும் இது தீரவில்லை. இலங்கை அரசு துளி கூட கேட்க வில்லை. இந்தநிலையில் சீமானைக்குறை கூறுவதை விட்டு விட்டு இதனைத்தடுக்க துப்பில்லாத அவர் ”அன்னை” என்று கூறிக்கொண்டு திரியும் சோனியாவை கண்டனம் செய்வதே உண்மையாக இருக்கும்.
இது போக அவருக்கு நாம் சொல்லிக்கொள்வதற்கு நிறைய இருந்தாலும் சிலவற்றை மட்டும் கூற விரும்புகின்றோம்.
சென்ற தேர்தலில் மான மறவன் முத்துக்குமார் மரணத்தை கொச்சைப்படுத்தியதாலும், ஈழப்போருக்கு எதிராக காங்கிரஸ் பேருதவி செய்ததாலும் தமிழ் மக்கள் சீமானின் தலைமையில் அவருக்கு நல்ல பாடம் அளித்தார்கள். அதன் பின்னாவது அவர் பாடம் கற்றிருக்க வேண்டும்.
ஆனால் அதன் பின்னும் அவர் பாடம் கற்க வில்லை என்று தெரிகின்றது. மாறாக வாய்க்கொழுப்புடன் இன்னும் பேசிக்கொண்டு திரிகின்றார். இதே நிலை தொடர்ந்தால் வரும் தேர்தலுடன் அவர் அரசியலை விட்டே ஒதுக்கப்படுவது உறுதி என்று நாம் தமிழர் இயக்க செய்தி தொடர்பாளர் கூத்தன் கூறியுள்ளளார்.
Comments poopathi
தமிழ் நாட்டு அரசியல்வாதிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில நேர்மையானவர்களில் இளங்கோவன் முதன்மையானவர்.பெரியாரின் பேரன் என்ற தகுதி அவருக்கே மிகச்சரியாக பொருந்தி இருக்கிறது.சந்தர்பவாதம் அவரிடம் இல்லை. யதார்த்தவாதி வெகு ஜன விரோதி என்ற கருத்துக்கு உரித்தானவர்.
ஈழவிவகாரங்களில் சரியான அணுகுமுறை கொண்டிருப்பவர்,யாருக்கும் பயப்படாமல் நெஞ்சில் துணிவோடு ஆணித்தரமாக தன கருத்துக்களை எப்பொழுதும் சொல்லத்தயங்கதவர்.
சீமா நெடுமாறன் வைக்கோ போன்றவர்கள் இளங்கோவனின் கால்தூசிக்கு கூட நிகராக மாட்டார்கள்.கூலிக்கு மாரடித்து மாரடித்து நம்பியவர்களை நடுக்கடலில் தள்ளியவர்கள் எல்லாம் இளங்கோவனை பற்றி பேசுவது விந்தை.
கருணாஸ், சீமான் தன் சுயநலத்துக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறா
நான் ஒரு சாதாரண நடிகன். அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. தமது அரசியல் இலாபத்துக்காக சீமான் என்னை பலிகடாவாக்கப் பார்க்கிறார்” என்று ஆவேசப்படுகிறார் நடிகர் கருணாஸ் என அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் கருணாநிதி.
இவர் தன் மனைவி மற்றும் மகனுடன் கடந்த 23 ஆம் திகதி கொழும்பு வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சூரியன் எப்.எம்.மின் ஆண்டு விழாவில் சமூகமளிப்பதும் பின்னர் கதிர்காமத்துக்குச் சென்று மகனுக்கு மொட்டை போடுவதுமே அவரது இலங்கை நிகழ்ச்சி நிரல். சூரியன் எப்.எம்.மின் அஷ்ரஃப் இவருக்கு நண்பர். கருணாஸின் பேட்டிகள் சூரியனில் ஒரிபரப்பாக காரணமாக இருந்த அஷ்ரஃப் விடுத்த வேண்டுகோளை கருணாஸ் ஏற்றிருக்கிறார். அதன் பிரகாரம் நடிகர் சங்கத்திடமும் முறைப்படி அனுமதி கேட்டு பயண ஏற்பாடுகளைச் செய்த சமயத்தில்தான் கரடி புகுந்த மாதிரி சீமானின் ஆட்கள் புகுந்து கருணாஸ¤க்கு எச்சரிக்கை விடுத்ததோடு அவரைப் பற்றிய அவதூறு குறுந்தகவல்களையும் அனுப்பி இலங்கைப் பயணத்தைக் குலைத்திருக்கிறார்கள். இப்போது மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் கருணாஸ்.
தனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை கருணாஸ் தொலைபேசி ஊடாக வாரமஞ்சரிக்கு விவரமாகத் தெரிவித்தார். மலேசிய தலைநகரில் நடைபெறவுள்ள எந்திரன் பாடல் வெளியீட்டு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக விமான நிலையம் நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கும் போதே அவர் வாரமஞ்சரியுடன் தொடர்பு கொண்டார்..
மஞ்சரி: உண்மையில் என்ன நடந்தது?
கருணாஸ்: சூரியன் அஷ்ரஃப் ஒரு நல்ல பையன். அடிக்கடி என்னுடன் பேசுவார். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அவர் தனது சூரியன் எப்.எம்.மின் ஆண்டு விழா ஜுலை 25 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்து கொள்ள குடும்பத்துடன் வாருங்களேன் என்றும் அன்புடன் அழைப்பு விடுத்தார். என் மகனுக்கு எட்டு வயதாகிறது. இன்னும் மொட்டை போடவில்லை. முருகன் எங்களுக்கு இஷ்ட தெய்வம். நான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவன். எங்கள் உறவினர்கள் இலங்கையில் இருந்திருக்கிறார்கள். போய் வருவார்கள். என் ஆயா கதிர்காமக் கந்தனைப் பற்றி அடிக்கடி சொல்வார். முருகனை வணங்குவார். எனவே நானும் என் மகனுக்கு கதிர்காமத்தில் மொட்டை போடலாம் என்று தீர்மானித்தேன்.
நாங்கள் எங்கள் செலவிலேயே வருகிறோம். சூரியன் வைபவம் முடிந்ததும் எங்களை கதிர்காமத்துக்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினேன். இலங்கையில் செலவுகள் சூரியன் பொறுப்பேற்கும் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இதன் பிரகாரம் ஏற்பாடுகளை நான் செய்தேன்.
நாங்கள் பயணிப்பதற்கு இரண்டு நாள் இருக்கையில் காலை 9.49 க்கு எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறு முனையில் பேசியவர் தன்னை மகேந்திரவர்மன் என அறிமுகம் செய்து கொண்டதோடு தான் ‘நாம் தமிழர்’ கட்சிப் பிரமுகர் என்றார். என்ன விஷயம் என்று கேட்டேன். நீங்கள் இலங்கைக்குப் போகக் கூடாது என்றார். இலங்கையில் தமிழர்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கே உலக விசாரணை வரவிருக்கிறது. இப்படியான ஒரு நாட்டுக்கு நீங்கள் போவதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். எனவே இலங்கைக்குப் போகக்கூடாது. பயணத்தைக் கைவிடுங்கள் என்றார் அந்த நபர்.
எனக்கு இதைக்கேட்க அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் நான்கு தினங்களுக்கு முன்னரேயே நான் இலங்கைக்கு பயணப்படுவதாகவும் அதற்கான காரணத்தையும் கைப்பட எழுதி திரைப்படச் சங்கத்தின் ராதாரவியிடம் கொடுத்து அவர் அனுமதியையும் வாங்கி இருந்தேன். அதில் நான் எந்தவொரு பொது நிகழ்விலோ, படப்பிடிப்பிலோ அல்லது கலை நிகழ்ச்சியிலோ கலந்து கொள்ளப்போவதில்லை என்றும்விளக்கமாகக் கூறியிருந்தேன். அலுவலகம் ஒன்றில் நடைபெறும் ஆண்டு விழாவிலும் பின்னர் கதிர்காம பூஜை வழிபாட்டிலும் கலந்து கொள்ளவே செல்கிறேன் என்று சொன்னதும் ராதாரவி அதற்கு சம்மதம் தந்து வழியனுப்பினார். எனது நிலை இப்படித் தெளிவாக இருக்க என்னைத் தடுக்க இவர் யார்? அதுவும் தொலைபேசியில் மிரட்டுவதற்கு? என்ற எரிச்சல் என்னில் ஏற்பட்டது.
நான் என்பக்க நியாயத்தைச் சொன்னேன். அவர் அதைக் கேட்கவில்லை. கொழும்பில் உங்கள் வருகைபற்றி போஸ்டர் போட்டிருப்பதாக அங்கிருக்கும் எமது தோழர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னார்.
அதற்கு நான், அங்கே ஒரு தமிழ் ரேடியோ பல வருடங்களாக தமிழ் மொழியில் ஒலிபரப்பு சேவையை நடத்தி வருகிறது. இவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தமிழ் சேவை நடக்கிறது என்பதே நமக்கெல்லாம் ஒரு பெருமைதானே! நான் ஒரு கலைஞன் என்ற வகையில் வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றியே தீருவேன். நான் வருவதாக அவர்களிடம் வாக்குக் கொடுத்து விட்டேன். வாக்கை மீற முடியாது என்று நான் பதில் சொன்னதும் மறுமுனையில் பேசியவருக்கு ஆத்திரம் வந்தது. சரி போவதாக இருந்தால் அதன் பின் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டார்.
மஞ்சரி: அதன் பின்னர் என்ன நடந்தது?
கருணாஸ்: அன்றிரவே அவர்கள் என்னைப்பற்றி அவதூறான எஸ்.எம்.எஸ். தகவல்களை அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். நான் திரட்டிய தகவலில் 254 பேருக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிங்கள அரசு விடுத்த அழைப்பை ஏற்று பத்து இலட்சம் ரூபா தொகை பேசி உளவாளியாக இலங்கை செல்கிறார் கருணாஸ், அவரை வாழ்த்தி அனுப்புங்கள் என்பதுதான் அந்தச் செய்தி. எனது தாய் ஒரு சிங்களப் பெண் என்றும் தகவல் பரப்பப்பட்டிருந்தது.
மறு தினம் நான் ஸ்டூடியோவில் உத்தமபுத்திரன் படப்பிடிப்பில் இருந்தேன். எனக்கு வந்த ஒரு அழைப்பு இலங்கைக்கு செல்லாதே! உயிரோடு திருப்பமாட்டாய் என்றது. இன்னொரு அழைப்பில் வந்தவர் ஈழத் தமிழர் இறப்பைக் கொண்டாடவா போகிறாய்? என்று சிடுசிடுத்தார். அப்போதுதான் இவர்கள் என்னைப்பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பி இருப்பதை புரிந்து கொண்டேன். நான் இலங்கைக்கு போக நினைத்தது நல்ல காரியத்துக்காக. அதை அப்படியே இவர்களின் சுயநலத்துக்காக மாற்றி விட்டார்கள் என்பது அப்போது தான் எனக்கு புரிந்தது.
அன்றைய தினம் இரவு என் வீட்டுக்கு மூவர் வந்தார்கள். இலங்கைக்குப் போகக்கூடாது என்றார்கள்.
மஞ்சரி: நீங்கள் என்ன சொன்னீர்கள்?
கருணாஸ்: என்னைப் பற்றி அவர்களிடம் சொன்னேன், 1985 ஆம் ஆண்டு புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடிவிற்று 25 ஆயிரம் ரூபா நிதி சேகரித்து இலங்கை அகதிகளுக்காக அனுப்பி வைத்த தமிழ் உணர்வாளன் நான். அன்று முதல் இன்று வரை நான் அப்படித்தான் இருந்து வருகிறேன். தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு நாம்செய்யக்கூடிய உருப்படியான உதவி என்றால் அது அவர்களுக்கு கல்வியூட்டுவதுதான். சூர்யா, விஜய் போன்ற நடிகர்களிடம் சொல்லி இலங்கை அகதி மாணவர்கள் கல்லூரிகளில் படிப்பதற்கான கட்டணங்களை செலுத்த ஏற்பாடு செய்திருக்கிறேன். நானும் 25 மாணவர்களை தத்து எடுத்து படிப்பித்து வருகிறேன்.
ஈழப் பிரச்சினை இன்று நேற்று வந்தது அல்ல. 40 வருடங்களுக்கு மேலாக இருந்துவரும் பிரச்சினை அப்போது இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள்? கடந்த காலங்களில் இங்கிருக்கும் தமிழ் அகதிகள் பல நெருக்கடிகளில் சிக்கியிருக்கிறார்கள். அப்படித் தகவல் வரும் போதெல்லாம் நான் அவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி, கையைக் காலைப் பிடித்து பிரச்சினைகளைத் தீர்த்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நான் உண்மையாகவே ஒரு தமிழ் உணர்வாளன். என்னிடம் கோடிக்கணக்காக பணம் இருக்குமானால் 25 என்ன, அகதி முகாம்களில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் இலவசமாக கல்வி அளித்திருப்பேன். எனவே எனக்கு ஆத்திரம் வருவது நியாயம்தானே?
மஞ்சரி: அவர்களிடம் என்ன கூறினீர்கள்?
கருணாஸ்: தமிழகத்தில் மூன்று இலட்சம் அகதிகள் இருக்கிறார்களே உங்களில் ஒருவராவது அவர்களைச் சென்று பார்த்திருப்பீர்களா என்று கேட்டேன். நான் அரசியல்வாதியல்ல எம்.பி, எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாது என்றேன். முன்னர் பர்மா அகதிகள் தமிழகத்தில் இருந்தார்கள். இப்போது பர்மா அகதி முகாம் இங்கே கிடையாது. அவர்களின் பிள்ளைகள் எல்லாம் படித்து பெரிய மனிதர்களாகி விட்டார்கள். கோடீஸ்வரர்களாகி விட்டார்கள். நான் அவர்களிடம் சென்று இந்த இலங்கை அகதிகளின் கல்விக்கு, உயர் கல்விக்கு உதவும்படி கேட்டிருக்கிறேன்.
மாணவர்களிடம் காசு தர வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட மாணவர்கள் கற்கும் கல்லூரிகளில் அவர்கள் பெயரில் பணம் கட்டிவிட்டால் போதுமானது. இப்படி தமிழ்ப் பற்றாளனாக என்னால் முடிந்த உதவிகளை காதும் காதும் வைத்தமாதிரி செய்து வருகிறேன். என்னைப்போய் இவர்கள் மிரட்டுவதா? மறுநாளே நான் பொலிஸ் கமிஷனர் அலுவலகம் போய் மனு கொடுத்தேன். என் துயரத்தையும் மனக் கஷ்டத்தையும் சொன்னேன். இப்போது அந்த நபர் வர்மன் முன்ஜாமின் வாங்கியிருப்பதாக கேள்விப்படுகிறேன்.
மஞ்சரி: இப்போது நிலை என்ன?
கருணாஸ்: இலங்கை அரசிடம் பணம் வாங்கிக் கொண்டதாகவும் ஐந்து இலட்சம் அட்வான்ஸ் வாங்கியதாகவும் சொன்னது மிகப்பெரும் மோசடி. இந்தப் பிரசாரம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. செய்ததை சொல்லிக் காட்டுவது தமிழ் மரபு அல்ல. நான் செய்த சின்னச் சின்ன உதவிகளை எல்லாம் வெளியே சொல்ல வைத்துவிட்டார்களே என்ற உணர்வு என்னில் இருக்கிறது. மன உளைச்சல் ஏற்பட்டிருக்கிறது. நான் இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டிய தினத்தன்று நடிகர் சங்கத்தில் கூட்டம் வைத்திருந்தார்கள். கூட்டம் இருக்கும்போது நான் அங்கே இருக்க வேண்டும் அல்லவா? அதனால் கொழும்பு செல்லவில்லை.
மஞ்சரி: கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது?
கருணாஸ்: சாதகமாகத்தான். நட்சத்திரங்கள் தனிப்பட்ட அல்லது தொழில் ரீதியாக வெளிநாடு செல்லலாம். அவர்கள் செல்லாமா வேண்டாமா என்பதை நடிகர் சங்கம் மட்டுமே முடிவெடுக்க வேண்டும். நடிகர்களை வெளி அமைப்புகள், தனிநபர்கள் பயமுறுத்தவோ கட்டுப்படுத்தவோ அனுமதிக்க முடியாது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சரி: இப்படி மிரட்டுவதும் ஒரு வகையான பயங்கரவாதம் அல்லவா?
கருணாஸ்: நடிகர் சங்கம் நல்ல முடிவெடுத்திருப்பது நிறைவைத்தருகிறது. இவர்கள் தமது இருப்புக்காக நட்சத்திரங்களை ஆட்டிப்படைக்க முயல்கிறார்கள். கலையை அரசியலாக்க வேண்டாம் என்பதே என் கோரிக்கை. எப்படி எல்லாம் என்னைப்பற்றி பொய்ப் பிரசாரம் செய்திருக்கிறார்கள்? இன்று தமிழ் உணர்வு தனக்கு மட்டுமே இருப்பதாகக் கூறும் சீமான் எப்படி தம்பி படத்தில் பூஜா என்ற சிலோன் நடிகையை நடிக்க வைத்தார்? சீமான் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 15 வருடங்களாக எனக்கு அவரைத் தெரியும். இலங்கை அகதிகளுக்காகத் துடிக்கும் இவர்கள் இலங்கை அகதிகளுக்காக என்ன செய்திருக்கிறார்கள்?
மஞ்சரி: அசின் விவகாரம் எப்படி?
கருணாஸ்: அவர் ஒரு மலையாளி, தெலுங்கில் நடித்துக் கொண்டிருந்தவரை தமிழுக்கு அழைத்து வந்தார்கள். இப்போது ஹிந்திப்படவுலகில் இருக்கிறார். அவர் ஒரு சாதாரண நடிகை. தமிழ் நடிகை அல்ல. அவரிடம் தமிழ் உணர்வை எதிர்பார்க்க முடியாது. அவர் தான் விடுத்த அறிக்கையில் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்றும் எனினும் நடிகர் சங்கத்துக்கு கட்டுப்படுவேன் என்றும் கூறி இருக்கிறார். அவரது பிரச்சினை மறுபரிசீலனைக்காக உயர் மட்டக் குழுவிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சரி: எந்திரன் படம் எப்படி வந்திருக்கிறது?
கருணாஸ்: சுப்பராக வந்திருக்கிறது. ஒரு பிராந்திய மொழிப்படத்துக்காக அதிக செலவு செய்யப்பட்டிருப்பது எந்திரனுக்குத்தான். மொத்தம் 140 கோடி ரூபா செலவு செய்து உலக தரத்துக்கு படம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழன் என்ற வகையில் நாம் அனைவரும் இப்படி ஒரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதற்காக பெருமைப்பட வேண்டும்.

Thinakaran -
யுத்த குற்றங்களை வெளியிடுவது, சட்டவிரோதமானது ,அமெரிக்க
| யுத்த குற்றங்களை வெளியிடுவது, சட்டவிரோதமானது என அமெரிக்க நீதிமன்ற திணைக்களம் விடுத்துள்ள தீர்மானத்தினால், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான நிபுணர் குழு பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
| இந்த நிலைப்பாடு காரணமாக, வன்னியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை தொடர்பான தகவல்கள் தொடர்பில் செயற்படுவதற்கும், இது குறித்து இலங்கை அரசாங்கத்திடம் விசாரிப்பதற்கு அந்த குழுவுக்கு முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்கத்தின் உயர் மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவின் முன்னிலையில் போர்க்குற்றங்களை வெளியிடுவதற்கு, சில இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் போர்க்குற்றம் தொடர்பாக விசாரணை மேற்கொள்வது, ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என, அமெரிக்காவின் சட்ட வல்லுனர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்து இலங்கைக்கும் பொருந்தும் என திவயின செய்திவெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் பான் கீ மூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஹீரோவுக்கு சமமான மரியாதை எனக்கிருக்கிறது
அழகிய தீயே', ‘மொழி', ‘அபியும் நானும்' படங்களையடுத்து ‘இனிது இனிதுÕ படத்தை தயாரித்துள்ளார் பிரகாஷ்ராஜ். இது பற்றி பிரகாஷ் ராஜ் கூறியது: நான் தயாரிக்கும் படமாக இருந்தாலும் இதில் எனக்கு வேடம் இல்லை. முழுக்க இளைஞர்கள் நடிக்கிறார்கள். இதற்காக 2000 மாணவ&மாணவிகளை நேர்முக தேர்வுக்கு அழைத்து. அதில் 51 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தெலுங்கில் வெற்றி பெற்ற ‘ஹேப்பி டேஸ்Õ படமே ‘இனிது இனிதுÕ. 4 வருட கல்லூரி வாழ்க்கையை சொல்கிறது கதை. கே.வி.குகன் இயக்கியுள்ளார். மீண்டும் ஹீரோவாக நடிப்பீர்களா என பலரும் கேட்கிறார்கள். நான் ஏன் ஹீரோவாக வேண்டும். பிரபல ஹீரோவுக்கு என்ன மரியாதை இருக்கிறதோ, அதே மரியாதை எனக்கிருக்கிறது. ஹீரோவுக்கு சமமாகவே இருக்கிறேன். இதுவே போதும். ‘காஞ்சிவரம்Õ, ‘சிங்கம்Õ போன்ற படங்களில் நடித்ததுபோல் எல்லாவித வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என நிரூபித்திருக்கிறேன். இதுவே எனக்கு திருப்தியாக உள்ளது. இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறினார்.
இலங்கையில் ராகுல்?!விகடன் செய்தி
இலங்கை விவகாரத்தில் தனக்கு சாதகமாக சில விஷயங்களை செய்துகாட்டத் துடிக்கிறதாம் காங்கிரஸ். 'அவஸ்தைப்படும் மக்களுக்கு நல்லது செய்தால் பழைய கோபங்களைத் தணிக்க முடியும்' என்று சொல்லி இருக்கிறாராம் ராகுல். இதன் முதல் கட்டமாக இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் மகன் நமல் ராஜபக்ஷேவுடன் ராகுல் காந்தி போனில் பேசினார். ராகுலை சந்திக்க அநேகமாக இன்னும் சில நாட்களில் நமல் டெல்லி வர இருக்கிறார். அடுத்த சில வாரங்களில் நல்லெண்ணப் பயணமாக ராகுல் காந்தியே அங்கே பயணிக்கலாம். 'எங்களுக்குப் பகை புலிகள்தானே தவிர, ஈழத் தமிழர் அல்ல'
Comments poopathi
இந்த செய்தி ஆனந்த விகடனில் கழுகார் பகுதியில் வந்துள்ளது. இது வழக்கமான விகடனுக்கே உரிய கப்சா ரக வாணமோ தெரியவில்லை

ராமர் படத்தில கவர்ச்சி காட்சிக்கு சென்சார் எதிர்ப்பு
ராமர்' படத்தில் வினய் தத்தா, அனுமோல் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை சென்சார் அதிகாரிகள் சமீபத்தில் பார்த்தனர். பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், பாடல் காட்சி ஒன்றில் அதிக கவர்ச்சி இருந்ததுதான். அதே போல வன்முறை காட்சிகளும் அதிகமாக இருந்ததாம். இந்த காட்சிகள் படத்துக்கு அவசியம் என இயக்குனர் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஏ சான்றிதழ்தான் தர முடியும் என அதிகாரிகள் கூறிவிட்டனர். யூ சான்றிதழ் வேண்டும் என்று டைரக்டர் ஆதிராஜாவும், தயாரிப்பாளரும் வாதம் செய்துள்ளனர். ‘குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் யூ தர முடியும்Õ என அதிகாரிகள் கூறினார். வேறு வழியில்லாமல் அதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்களாம். இதையடுத்து அந்த காட்சிகளை வெட்டியுள்ளனர். அதன் பின் படத்துக்கு யூ சான்றிதழ் தரப்பட்டுள்ளது. சாந்திக்கு ஆதரவாக போராட குதிக்கும் கனடா வீராங்கனை!
டெல்லி: ஆண் தன்மை மிக்கவராக அறிவிக்கப்பட்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள தமிழக வீராங்கனை சாந்தி செளந்தரராஜனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய கனடா நாட்டு சைக்கிள் வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி.
தோஹா ஆசிய விளையாட்டு
ப் போட்டியில் தடகளத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் சாந்தி. ஆனால் அவருக்கு பின்னர் பாலின சோதனை நடத்தி அதில் அவர் ஆண் தன்மை மிக்கவர் என்று அறிவிக்கப்பட்டு, பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.
இதனால் மனம் ஒடிந்து போன சாந்திக்கு தமிழக முதல்வர்
கருணாநிதி
ஆறுதல் கூறி, சாந்தி பிறந்த மாவட்டமான புதுக்கோட்டையில் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், இடைக்கால பயிற்சியாளர் வேலையை வழங்கினார். ஆனால் சம்பள உயர்வு தராமல் தான் அலட்சியப்படுத்தப்படுவதாக கூறி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் சாந்தி.
இந்த நிலையில் சாந்தி மீதான தடையை அகற்ற களத்தில் குதித்துள்ளார் கனடா வீராங்கனை கிறிஸ்டன் ஒர்லி. இவரது கதையும் சோகமானதுதான். கிறிஸ் என்ற பெயரில் ஆணாக இருந்தவர் கிறிஸ்டன் ஒர்லி. ஆனால் வளரவளர பெண் தன்மை அவருக்குள் குடியேறியது. தான் வித்தியாசமானவராக இருப்பதை உணர்ந்த கிறிஸ், மருத்துவர்களை அணுகியபோது, உனக்குள் பெண் தன்மை அதிகரித்து வருவதாக தெரிவித்தனர். அறுவைச் சிகிச்சை மூலம் முழுமையாக பெண்ணாக மாறுமாறும் அறிவுறுத்தினர்.
இதனால் மனம் உடைந்த கிறிஸ் 3 முறை தற்கொலைக்கு முயன்றார். இருப்பினும் பின்னர் மன நல ஆலோசனைகளைப் பெற்று முழுமையான பெண்ணாக மாறினார். இன்று கனடாவின் வெற்றிகரமான சைக்கிள் வீராங்கனைகளில் இவரும் ஒருவர்.
முழுமையான பெண்ணாக மாறியது முதல் தன்னைப் போல பிரச்சினையை சந்திப்போருக்கு உதவி செய்வதை ஒரு பணியாகவே செய்து வருகிறார் கிறிஸ்டன்.
தென் ஆப்பிரிக்க சைக்கிள் வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்கு, கடந்த ஆண்டு பெர்லினில் நடந்த உலக சாம்பியன்போட்டியின்போது சாந்திக்கு ஏற்பட்டதைப் போன்ற பிரச்சினை உருவானது. செமன்யா ஆண் தன்மை மிக்கவர் எனறு கூறி 11 மாத கால தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்காக கடுமையாக வாதாடினார் கிறிஸ்டன். இதன் விளைவாக சமீபத்தில் செமன்யா மீதான தடையை உலக சைக்கிள் சங்கம் நீக்கியது.
இந்த நிலையில், தற்போதுசாந்திக்காக குரல் கொடுக்க முன்வந்துள்ளார் கிறிஸ்டன். இதுதொடர்பாக சாந்திக்கு இமெயில்களை அனுப்பி தொடர்பு கொண்டுள்ளார். இதுகுறித்து கிறிஸ்டன் கூறுகையில், காஸ்டர் செமன்யா விவகாரத்தில் நான் வெற்றி பெற்றேன். அதேபோல சாந்திக்கும் நான் உதவப் போகிறேன் என்று கூறியுள்ளார்.
செமன்யாவுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டபோது ஒட்டுமொத்த தென் ஆப்பிரிக்காவும் அவருக்காக அணி திரண்டது. போராட்டங்கள் வெடித்தன. சட்ட ரீதியான அணுகுமுறைகளும் உலக சைக்கிளிங் கழகத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
ஆனால் சாந்தி விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. சாந்தி பாலின சோதனையில் தோல்வியடைந்து விட்டார் என்ற ஒற்றை வரியோடு இந்திய தடகளச் சங்கம் நின்று விட்டது. மத்திய அரசும் இதுகுறித்து கவலைப்படவில்லை. விளையாட்டு அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை. யாருமே இதைப் பெரிய விஷயமாகவே நினைக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் விடிய விடிய ஒரே செய்தியை ஒளிபரப்பி பொழுதைப் போக்கும் ஆங்கில டிவி சானல்களும் சாந்தி குறித்து அலட்டிக் கொள்ளவே இல்லை.
இந்த நிலையில் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் ஒருவர் தனக்காக போராட களத்தில் இறங்கியுள்ளது சாந்திக்கு பெரும் மன ஆறுதலைக் கொடுத்துள்ளது.
இதுகுறித்து சாந்தி கூறுகையில், எனக்கு கிறிஸ்டன் ஒர்லி மெயில்கள் அனுப்பியுள்ளது உண்மைதான். என்னை மீண்டும் ஓட வைக்க அவர் விரும்புகிறார். எனக்கு அவர் உதவி வருகிறார் என்றார். அத்தோடு நில்லாத சாந்தி, எனக்காக அனைவரும் உதவுமாறு தயை கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன் என்றார் கண்களில் எட்டிப் பார்த்த கண்ணீருடன்.
இப்போதாவது சாந்திக்காக இந்திய இதயங்கள் துடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பதிவு செய்தவர்: நாதன்
பதிவு செய்தது: 31 Jul 2010 9:07 pm
எல்லா தடா கள வீரங்கனைக்களுமே ஆண் தன்மை கொண்டவர்களே இதில் சாந்தியை காட்டிக்கொடுத்தது இந்தியாவை சேர்ந்த மலையாளிகளே பொறாமையில் காட்டிக்கொடுத்தாங்கள் அவங்களை தான் தமிழ் விளையாட்டுத்துறை தலையிலே தூக்கிக் கொண்டாடுராணுக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)