வியாழன், 16 ஏப்ரல், 2026

பிரேமலதா திருமாவை அவமதித்தாரா?

   Mkishore Kumar  : ஒரு காலத்தில சேரிகளில் எம்.ஜி.ஆருக்கு பிறகு கேப்டன் விஜய்காந்திற்கு தான் அதிக ரசிகர் மன்றங்கள் இருந்துச்சு... படங்கள் மூலம் தன்னை உழைக்கும் மக்களில் ஒருவரா பிரதிபலிச்சாரு ஆரம்ப காலங்கள...
பட்டியல் மக்களின் பேரன்ப கொண்டவரா இருந்தாரு..
இருந்து ஒரு பயனுமில்ல பட்டியல் மக்களுக்காக என்ன போராடினாரு, சாதி ஒழிப்புக்கு எதிராக என்ன போராடினாரு கேட்டா எந்த ஒரு பெரும் வரலாறும் கிடையாது.
பட்டியல் மக்களின் நம்பிக்கையை சுரண்டி கொண்ட மற்றுமோர் சாதி இந்து சூப்பர் ஸ்டார் சொல்லலாம் விஜய்காந்த். ஆனா வெளிப்படையான தன் சாதிய அதிகாரத்தை  எங்கையும் மக்கள் மீது திணிச்சதான சம்பவங்கள் தெரிஞ்சி இல்ல.
ஆனா ப்ரேமலதா படுபயங்கரமான சாதி வெறியர் என்பதை மேடை போட்டு அவரே தன்னை பிரசூரபடுத்தியுள்ளார்.


தோழர் திருமா அவர்கள் அரசியலில்  அனுபவத்தில் மூத்த தலைவர், தனிப்பட்ட வெறுப்பு விருப்பு தாண்டி கூட்டணி Ethics அடிப்படையிலாவது மேடை நாகரிக்கத்தின் அடிப்படையில் ப்ரேமலதா திருமா அவர்களுக்கு மதிபளித்திருக்க வேண்டும்.
ஆனால் பெரும் மக்கள் கூட்டத்தின் முன்பு துளியும் எந்த ஒரு Regret, Guilt - இன்றி தோழர் அவமரியாதை செய்துள்ளார்.
எப்படிபட்ட சாதி சங்க கட்சிகளும் ஒரே மேடையில் தோழர் திருமாவை சந்திக்கும் போது கருத்து வேறுப்பாடுகள நகர்த்தி மூத்த தலைவர் என்ற அடிப்படையில் உரிய மரியாதையை வழங்கியுள்ளார்கள், அன்புமணியாகவே இருந்தாளும் சரி அதுவே சரித்திரம்.
ஆனால் ப்ரேமலதா செய்தது அருவருப்பின் உச்சகட்டம்.  தலித் தலைவரையே அவமதித்து புறக்கணிக்கும் ப்ரேமலதா எப்படி தன் கட்சியான தேமுதிக மூலம் தங்களின் தொகுதியில் உள்ள பட்டியல் மக்களுக்கு பணியாற்றுவார்கள், மதிப்பளிப்பார்கள்? 
ப்ரேமலதாவும், தேமுதிகவும் பட்டியல் சமூகத்திற்கு எத்தகைய ஆபத்தானவர்கள் என்பதையே இது வெளிக்காட்டுகிறது.
இத்தனை விமர்சனங்களுக்கு பின் பிரேமலதா விளக்கம் தந்தாரா? மன்னிப்பு கேட்டாரா? 
இல்லை திமுக தலைவர்கள் தான் இத்தகைய அருவருக்கதக்க செயலை கண்டித்தார்களா?
தேமுதிகவை வெற்றி பெற செய்வது எல்லா வகையிலும் ஆபத்தே முன்பு சொன்னது போல தொக்கு சபை நிலை வந்தால் முதலில் திமுக கூட்டணி உடைத்து NDA-வில் இணைவது தேமுதிக பட்சோந்திகளாகவே இருக்கு.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
PS: பட்டியல் மக்கள் எந்த விதத்திலும் தேமுதிகவை ஆதரிக்கவோ, வாக்களிக்கவோ கூடாது. மீறி செய்வது நம் சுயமரியாதையில் நாமே துப்பிக்கொள்வதாகும்

கருத்துகள் இல்லை: