ஈரானின் பாரசீக விரிவாக்க திட்டம்
Ahmed Ashraff : எமிரேட்ஸ்சை, இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்தும் நிலைக்கி தள்ளிவிட்டது யார் ?
வளைகுடா நாடுகள் , இஸ்ரேலுடன் எந்தவிதமான உறவுகளையும் கொண்டிருக்கவில்லை . ,
ஈராக் , லெபனான் , சிரியா , யமன் நாடுகளை, ஈரான் , கூலிப்படைகள் மூலம் தனது ஆதிக்கத்துக்கு உட்படுத்தியது .
இதைக் கண்டு, எமிரேட்ஸ் சிறிய நாடு என்ற வகையில் பயந்தது .
குறிப்பாக ஈரான் , எமிரேட்ஸுக்கு சொந்தமான அபூ மூஸா , தன்புல் குப்ரா , தன்புஸ் ஸுக்ரா என்ற மூன்று தீவுகளை ஆக்கிரமித்துள்ளது .
நேரடி பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ அல்லது சர்வதேச மத்தியஸ்த்தம் மூலமாகவோ சர்ச்சையைத் தீர்க்க ஈரான் மறுக்கின்றது .
காரணம் உத்மானிய , பிரிட்டிஷ் ஆவணங்கள் எமிரேட்ஸுக்கு சொந்தமானவை எனஉறுதிப்படுத்துகின்றன
இந்த சூழ்நிலையில் ,அது இஸ்ரேலின் உதவியை நாடியது .
அதன் விளைவு , அதனுடன் இராஜதந்திர உற்றவை ஏற்படுத்தியது .
ஈரானின் , பாரசீக விரிவாக்க திட்டம் , இஸ்ரேலுக்கு சாதகமாக அமைந்தது . அது , ஈரானின் பயமுறுத்தளைக் காட்டி ஊடுருவியது .
எமிரேட்ஸின் இஸ்ரேல் உறவைக் கண்டிக்கும் ஷீயாக்கள் , இயக்கவாதிகள் "அதற்க்கு ஈரான் தான் காரணம்" என்பதை மறந்துவிட்டார்கள் .
மத்திய கிழக்கில் அமைதி ஏற்படுவதாக இருந்தால் , இஸ்ரேல் + ஈரான் ஆக்கிரமிப்பு ஒழியவேண்டும்
எமிரேட்ஸ், ஈரானியர்கள் நாட்டுக்குள் நுழைவதை தடைசெய்துள்ளது . இதில் , ட்ரான்சிட்டில் வருவதும் அடங்கும் . ஏற்கனவே ஈரானின் 400 பில்லியன் டொலர்களை வங்கிகளில் முடக்கியுள்ளது . இராஜதந்திர உறவுகளை துண்டித்துள்ளது.
அங்கு , 8000 ஈரானிய கம்பனிகள் உள்ளன . இவைகள் 300 பில்லியன் டொலரை முதலீடு செய்கின்றன . 5 இலட்சம் ஈரானியர்கள் வாழ்கின்றனர் . பெரும்பாலானவர்கள் துபாயில் வசிக்கின்றனர். இவர்கள் பின்கதவால் நாட்டுக்கு பணம் அனுப்புகின்றனர் . இதன் மூலம் ஈரான் பாரிய நன்மை அடைந்தது . ஆனால் அது நன்றி மறந்து, எமிரேட்சை தாக்கியது.
ஈரானுக்கு உதவுவது , பாம்புக்கு பால் ஊட்டுவதற்கு சமமாகும் . நஞ்சைக் கக்கியே தீரும் .
நல்லது செய்பவனை அப்பாவியாகவும் , கொடியவனை வீரனாகவும் நோக்குபவர்கள் திருந்தவேண்டும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக