News18 : கருத்து வேறுபாட்டில் மனைவியை குத்திக்கொலை செய்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தொட்டமெட்டரை கிராமத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் 30 வயதான சுரேஷ். ஓசூரில் தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி காவியா டாட்டா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் வைஷ்ணவி என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை சுரேஷின் வீடு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படாமல் இருந்துள்ளது. வீட்டிற்குள் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுக் கொண்டே இருந்தது. அதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் சுரேஷ் தூக்கில் தொங்கியபடி சடலமாகக் கிடந்துள்ளார். அருகில் அவரது மனைவி காவ்யா கழுத்தில் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
அதிர்ச்சியில் உறைந்துபோன அப்பகுதி மக்கள், சம்பவம் குறித்து உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இரு உடல்களைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், பூட்டிய வீட்டிற்குள் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரும் தகராறு வெடித்திருக்கிறது. ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை இழந்த கணவன் சுரேஷ் ஆத்திரத்தில் மனைவி காவியாவை கழுத்திலேயே கத்தியால் குத்தியிருக்கிறார். இந்த கொடூரத் தாக்குதலால் நிலைகுலைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்த காவியா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்து விட்டார்.
advertisement
ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என நொந்து போன கணவன் சுரேஷ், வீட்டிலிருந்த பாத்திரங்களை அடுக்கி வைத்து அதன்மீது ஏறி உத்தரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன், மனைவி இருவரும் தங்களுக்கு ஒரு கைக்குழந்தை இருக்கிறதே என சற்றும் யோசிக்கவில்லை. இருவரும் உயிரிழந்து விட்ட நிலையில், குழந்தை வெகுநேரகமா அழுது கொண்டே இருந்துள்ளது.
காலை பத்து மணிக்கு மேல் ஆகியும் குழந்தைதொடர்ந்து அழுது வந்தததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போதுதான் இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. கணவன் மனைவி இருவரும் பூட்டிய வீட்டிற்குள் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக