minnambalam.com :; , “மலையிலதான் தீ பிடிக்கீது ராசா என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா” என பாடியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாரை பத்தி சொல்றீருய்யா?
விஜய்யை மையமா வைச்சுதான் எல்லா கட்சிகளும் பம்பரமா சுத்துறாங்கப்பா..
பிரதமர் மோடி ஜனவரி 23-ந் தேதி சென்னை வர்றாரு இல்லையா.. அந்த மீட்டிங்குல விஜய்யையும் மேடை ஏத்திவிடனும்னு ரொம்பவே ஒரு தரப்பு முயற்சிக்குது..
அதே மாதிரி சிபிஐ விசாரணைக்காக டெல்லிக்கு விஜய் போறதுக்கு முன்னாடியும் கூட ரொம்பவே சீரியசாக ’டெல்லி லாபி வாலாக்கள்’ நிறைய பேரு விஜய்க்கு வலை விரிச்சாங்களாம்..
ஓஹோ.. இது என்னய்யா புதுசா இருக்கே..
இதை பத்தி தவெக தரப்புல நாம பேசுனப்ப, “தளபதியை டெல்லிக்கு வர சொல்லி சம்மன் வந்ததில் இருந்தே, “நாங்க அமித்ஷாவுக்கு நெருக்கமானவங்க”ன்னு சில பேர் விடாம எங்ககிட்ட பேசுனாங்க..
அவங்க எல்லாமே, “நீங்க ஓகேன்னு சொல்லுங்க.. டெல்லி சிபிஐ விசாரணைக்கே நீங்க வராம ”வேலையை” கச்சிதமா முடிச்சு தர்றோம்.. அதே மாதிரி சுப்ரீம் கோர்ட்டுல இருக்கிற ‘ஜனநாயகன்’ கேஸையும் டீல் செஞ்சு தர்றோம்..”னு அடுக்கடுக்கா பிராமிஸ்களை அள்ளி வீசுனாங்க..
இப்படி டெல்லியில இருந்து ஓயாம கால்ஸ் வந்ததால தளபதி சீரியசா டிஸ்கஷன் செஞ்சாரு.. அதுல, “என்னோட ஒவ்வொரு படத்துக்கும் சின்ன சின்ன பிரச்சனை எல்லாம் வந்துருக்கு.. ஆனா இந்த படத்துக்குதான் இவ்வளவு பெருசா பிரச்சனை வந்துருக்கு.. இதை எப்படியாவது நாம சரி செஞ்சுதான் ஆகனும்.. ‘ஜனநாயகன்’ படத்தை சுமூகமாக ரிலீஸ் செஞ்சுதான் ஆகனும்.. எனக்கு அது ரொம்பவே முக்கியம்னு”னு சொன்னாரு தளபதி.
அதே நேரத்தில, “நடக்குறது எல்லாம் நடக்கட்டும்.. நாம சிபிஐ விசாரணைக்கு போயிருவோம்… யார்கிட்டயும் டீலிங் வேண்டாம்”னும் தெளிவா சொன்னாரு தளபதி என்றனர்.
தவெக நிர்வாகிகள் சிலர்கிட்ட பேசுனப்ப, “ஆமாங்க சார்.. டெல்லியில் இருந்து ஏகப்பட்ட கால்ஸ் வந்துச்சு.. எங்களுக்கு அவங்க மேல எல்லாம் நம்பிக்கையே கிடையாது..
ஏன்னா ஜனநாயகன் பட கேஸ், சென்னை ஹைகோர்ட்டுல தலைமை நீதிபதி பெஞ்ச் முன்னாடி விசாரணை நடக்குது.. அப்ப திடீர்னு அட்டர்னி ஜெனரல் துஷார் மேத்தாவே, சென்சார் போர்டு சார்பா ஆஜரானாரு.. எங்களுக்கு எதிரா டெல்லி எவ்வளவு சீரியசா இருக்குன்னு இது காண்பிக்கலையா?
ஏன்னா அட்டர்னி ஜெனரல் ஒரு கேஸ்ல ஆஜராகனும்னா பிஎம் ஆபீசில் இருந்தோ ஹோம் மினிஸ்டிரியில் இருந்தோ, லா மினிஸ்டருக்கு கால் போகனும்.. அப்படி போனதான் அட்டர்னி ஜெனரல் ஆஜராவாரு.. அந்த அளவுக்கு டெல்லி எங்களை டார்கெட் செய்யுது..
இப்படி எல்லாம் பின்னும் பிறகும் சிக்கல் வரும்னு தெரிஞ்சுதான் எங்க தலைவரும் ஏற்கனவே பாஜகவை நேரடியாக அட்டாக் செய்யுறதை குறைச்சாரு.. ஒரு கட்டத்துல பாஜக, ஒன்றிய அரசுன்னு சொல்றதை கூட நிறுத்திட்டாரு.. ஆனாலும் டெல்லி எங்க மேல ரொம்பவே சீரியசா குறி வெச்சிருச்சு பாருங்க சார்..
உண்மையில இவ்வளவு சீரியசா பிரச்சனையானதுல எங்க தலைவருக்கு ரொம்பவே ஷாக்தான்..
அதே மாதிரி ஏற்கனவே இப்படி லாபியிஸ்டுகள்கிட்ட சிக்கியதால டிடிவி தினகரனை கைது செஞ்சு திஹார் ஜெயில்ல போட்டாங்க.. அந்த கேஸே 9 வருஷமா வந்துகிட்டே இருக்கு.. அன்புமணியும் இதே மாதிரி கேஸை சந்திச்சுகிட்டு இருக்காரு.. இதை எல்லாம் புரிஞ்சுகிட்டுதான் தலைவர், “லாபியிஸ்டுகள்கிட்ட எதுவும் வெச்சுக்கவே வேணாம்”னு கறாராவே சொல்லிட்டாரு என்கின்றனர்.
அதோட, “சிபிஐ விசாரணைக்கு டெல்லி போனதுல இருந்தே காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கிறாரு.. அமித்ஷாவை சந்திக்கிறாருன்னும் கிளப்பிவிட்டுகிட்டே இருந்தாங்க.. இதை எல்லாம் கால்குலேஷன் பண்ணிதான் 2-வது நாள் விசாரணைக்கு சிபிஐ கூப்பிட்டப்ப கூட நாங்க பொங்கல் முடிஞ்சு வர்றோம்னு சொல்லிட்டு வந்தோம்..” என்றனர்.
அத்துடன், “இதே மாதிரி பிரதமர் மோடி சென்னையில கலந்துக்கிற ஜனவரி 23-ந் தேதி மீட்டிங்குலயும் தளபதியை கலந்துக்க சொன்னாங்க.. நீங்க ‘கூட்டணி’க்கு மட்டும் வாங்க.. மோடி கூட மேடையேறுங்க.. சீட் ஷேரிங் எல்லாம் அப்புறமாக டீல் பேசிக்கலாம்.. நீங்க மட்டும் மோடிஜி கூட மேடையேறிட்டா போதும்.. ஜனநாயகன், சிபிஐன்னு எல்லா பிரச்சனையும் அப்படியே சால்வ் ஆகிடும்”ன்னும் ரொம்பவே பேசி பார்த்தாங்க.. ஆனாலும் தலைவர் ஒரேயடியா என்ன நடந்தாலும் நடக்கட்டும்.. முடியாது”ன்னு சொல்லிட்டார் என்கின்றனர்.
ஆச்சரியமாத்தான் இருக்கு.. சரி.. 23-ந் தேதி மோடி மீட்டிங்குல யாரெல்லாம் மேடை ஏறுறாங்களாம்?
இதை பத்தி பாஜக சீனியர்கள்கிட்ட பேசுனப்ப, “எங்க கூட்டணியில அதிமுக, பாமக, தமாகா, அமமுக எல்லாம் இருக்காங்க.. இபிஎஸ், அன்புமணி, ஜிகே வாசன், டிடிவி தினகரன் எல்லாம் மோடிஜியுடன் மேடையேறுவாங்க.. ஜான் பாண்டியன்கிட்டேயும் பேசி முடிச்சுட்டோம்.. அவரும் 23-ந் தேதி மீட்டிங்குல மேடை ஏறுவாரு..
தேமுதிககிட்ட பேசினோம்.. பேசுறோம்.. பேசிகிட்டே இருக்கிறோம்.. அவங்க திமுக முடிவு சொல்லட்டும்னு வெயிட் பண்றாங்களாம்..
டாக்டர் கிருஷ்ணசாமிகிட்டேயும் பேசுனோம்.. அவரு விஜய் கட்சியோட கூட்டணி அமைக்கிறதுல சீரியசா இருக்கிறாராம்.. ஆனா விஜய் சைடுல இன்னும் கதவையே திறக்கலையாம்” என சொல்கிறார்கள் என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக