புதன், 14 ஜனவரி, 2026

பராசக்தி ! அடப்பாவிகளா...இந்த படத்துக்கா நெகட்டிவ் ரிவ்யூ பரப்பிட்டு இருக்கீங்க?!

Kathija Sheikhmohamed   :  பராசக்தி ! அடப்பாவிகளா...இந்த படத்துக்காயா நெகட்டிவ் ரிவ்யூ பரப்பிட்டு இருக்கீங்க?!
இந்த படத்துல திமுக புகழை பரப்புற மாதிரி ஒண்ணுமே இல்ல. அண்ணா 3 ஸீன்ல வர்றார்.. 
கலைஞர்  கருணாநிதி கேரக்டரையும் அதே மாதிரி 3 ஸீன்ல தான் காட்டுறாங்க. 
அழுத்தமாவும் காட்டல. அவர் தான் கருணாநிதினே கடைசியில் கண்ணாடி போட்டு வர்ற ஒரு காட்சியில் தான் தெரியுது. 
இது முழுக்க 1960களில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய கல்லூரி மாணவர்களை பற்றிய படம். 
நான் இங்கே அபுதாபியில் பார்த்தது uncut version. சில இடங்களில் நம்ம மக்கள் எவ்ளோ கஷ்டப்பட்டுருக்காங்கனு நினைச்சு அழுகையே வந்துடுச்சு. 


இது வெறும் தமிழ்நாட்டுக்காக மட்டும் எடுத்த படம் இல்ல!! 
மத்த மாநிலங்கள்லையும் இந்தி திணிப்பை எதிர்த்து பல பேர் போராடி இருக்காங்க. 
அந்த போராட்டத்தில் உயிரையும் விட்ருக்காங்க. 
அவங்க எல்லாரும் ஒன்றிணைந்து தன் தாய் மொழியை காப்பாற்ற இந்தி திணிப்பை எதிர்த்து என்னவெல்லாம் செஞ்சாங்கன்றது தான் முழு கதை. 
சிவகார்த்திகேயன், அதர்வா, ஸ்ரீலீலா, ஜெயம் ரவிலாம் அவங்கவங்க ரோலுக்கு ஏத்த மாதிரி நல்லா நடிச்சுருக்காங்க. 

அதுலயும் வில்லன் ரோலில் ஜெயம் ரவியை பார்த்து நிஜமாவே அவ்ளோ ஆத்திரம் வந்தது. 
ஸ்க்ரீன்க்குள்ள போய் முடியை ஆஞ்சு விடுற அளவுக்கு ஆத்திரம். 
அவ்ளோ பொருத்தமான நடிப்பு. 
நெகட்டிவ்னு சொன்னா வேகமா போய்ட்டு இருக்குற கதையில் ஸ்பீட் பிரேக்கர் மாதிரி லவ் சீன்ஸ். 

அதனால அநாவசியமாக பாடல்களை உள்ள திணிச்சுருக்காங்க. 
அதே மாதிரி மாணவர்கள் போராட்டத்தை தாண்டி வில்லன் ஹீரோவை பழிவாங்குற ஒரு நார்மல் படம் மாதிரி தோணவும் செஞ்சது. 
தயவுசெய்து இங்க வந்த நெகட்டிவ் reviewவை யாரும் நம்பாதீங்க.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடியதால தான் நாம இன்னைக்கு ஓரளவுக்காவது இந்தி ஆதிக்கத்துக்கு கீழ இல்லாம எதிர்த்து நிக்குறோம். 

இந்தி கத்துகிட்டா என்னனு கேட்குறவனும் இந்த படத்தை கண்டிப்பா பார்க்கணும். 
அதுலையே அதனால மத்த மொழியை தாய் மொழியாக கொண்ட மக்களுக்கு என்னென்ன பாதிப்புனு தெளிவா காட்டி இருப்பாங்க. 
உங்க ரசிக சண்டை, மத சண்டை, கட்சி சண்டையில் நம்ம தாய் மொழிக்காக போராடி உயிரை விட்ட தியாகிகளை அசிங்க படுத்தாதீங்க. அது உங்களுக்கு தான் அசிங்கம்.

கருத்துகள் இல்லை: