minnambalam.com - Mathi : “நீங்களும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இணைந்து தமிழ்நாட்டை மட்டுமல்ல எதிர்காலத்தில் இந்தியாவையும் வழிநடத்துங்கள்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Rahul Gandhi) பங்கேற்ற நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. வேண்டுகோள் விடுத்தார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ராகுல் காந்தி இன்று பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் நீலகிரி மக்களவை தொகுதி எம்.பி.யான ஆ.ராசா பங்கேற்று பேசியதாவது: இந்திய நாட்டின் அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள “We, the people of india, having solemnly resolved to constitute india into a Sovereign Socialist Secular Democratic Republic” என்று சொல்கிற அந்த மதச்சார்பின்மையை, ஜனநாயகத்தை, இறையாண்மையை சோசலிசம் என்கிற சமதர்மத்தைக் காப்பாற்றுகின்ற நம்முடைய அருமைக்குரிய தலைவர் (ராகுல் காந்தி), இந்த நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு வருகை தந்துள்ளார். அவருக்கு என்னுடைய வணக்கத்தையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கிறேன்.
அரசியல் சாசனத்தை உங்களோடு சேர்ந்து நாங்களும் காப்பாற்றுவோம். இந்த கூடலூர் மண், மதச்சார்பற்ற மண். இங்கே இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள் எல்லோரும் இருக்கிறார்கள். இது இந்தியாவுக்கான பன்முகத்தன்மையை கொண்டிருக்கிற மண்.
இந்த மண்ணில் இருந்து நீங்களும் எங்களுடைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டை மட்டுமல்ல இந்திய நாட்டையும் எதிர்காலத்தில் வழிநடத்துங்கள்.. அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள். இவ்வாறு ஆ.ராசா எம்.பி. பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக