செவ்வாய், 13 ஜனவரி, 2026

நடிகர் விஜெயின் பினாமி விமான கம்பனி

Vijay Changed His Plane Mid-Campaign, Here's The Per-Day Cost Of His Private  Jet To Coimbatore

Giri Sundar  : இன்று சினிமா நடிகன் தனி விமானத்தில் CBI அலுவலகத்திற்கு டெல்லி சென்றார்...
அந்த விமானம் FlySBS Aviation Limited என்ற நிறுவனத்திற்கு சொந்தமான Embraer Legacy 600 Jet வகை விமானம்...
இதன் உரிமையாளர்களாக அறியப்படுபவர்கள் 
தீபக் பரசுராமன், அம்பாசங்கர் மற்றும் கண்ணண் ராமகிருஷ்னன் ஆகியோர்...
இவர்களின் பின்புலங்கள் மற்றும் அரசியல் தொடர்புகள் பொதுவெளியில் இல்லை, ஒரு போட்டோ கூட இல்லை, ஏவியயேசன் துறையில் நிபுணர்கள் என்பதாக அறியமுடிகிறது, வாடகை விமான நிறுவனம் ஆரம்பிக்கும் அளவு பின்புலம் இல்லை...
இந்நிறுவனம் 2020 ல் தொடங்கப்பட்டுள்ளது....
இது சென்னையை தலைமையிடமாக கொண்டு சென்னையிலிருந்து மட்டுமே சர்வீஸ் உண்டு...


வாடகை விமானம்தானே என்று வாடகை எவ்வளவு என்றும் முன்பதிவு செய்யலாமா என்று தேடினால் Website இல்லை...
போன் நம்பர் தந்திருக்கிறார்கள், அதுவும் ஆள் யாரென்று தெரிந்து கொண்டுதான் Rate சொல்வார்களாம்...
சரி போவுது போ நாம என்ன போகவா போறோம் என்று இது போன்ற விமானங்களுக்கு வாடகை எவ்வளவு என்று தேடினால்
ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் முதல் 8 லட்சம்  வரையாம் 
இதுபோக 
Airport லேண்டிங், பார்க்கிங், ஹேண்ட்லிங் கட்டணம் ஒரு 5 லட்சம் வருமாம்
Night Halt னா 1.5 லட்சமாம்...
அதாவது அந்த சினிமா நடிகன் இந்த விமானத்தை உண்மையிலேயே வாடகைக்குதான் எடுத்துட்டு டெல்லி போய்ட்டு இன்றே வந்துவிட்டால் 
60 லட்சம் செலவு
நாளைக்கு வந்தால் 70 லட்சம் செலவு...
மற்ற செலவெல்லாம் சேர்த்தால் தோராயமாக 1 கோடி ரூபாய் ஆகும்...
டெல்லி போய் வர...
அந்த சினிமா நடிகனின் ரசிக கண்மணியான நீ என்ன நிலையில் இருக்கிறாய் என்று சிந்தனை செய்துகொள்...
நீ 1 கோடி எப்பொழுது சம்பாரிப்பாய் என்று ஏதேனும் ஐடியா இருக்கா?
ரேசனில் கொடுக்கும் 3000 த்தை லைன்ல நின்னு வாங்கிட்டு போய் அந்த நடிகனுக்கு கட்டவுட் வைத்து பாலபிஷேகம் பண்ணிட்டிருக்க...
அவன் படத்துல உன்னை வாழ வைக்கும் கருத்து சொல்வதில்லை, உன்னை குடிகாரனாக்கி, போ+ தை பொருளுக்கு அடிமையாக்கி, க* த்தி, அ* று* வாள் துப்பாக்கி … .. எப்படி பயன்படுத்தறதுனு சொல்லிக்கொடுக்கிறான்...
“ டாடி மம்மி வீட்டில் இல்லை … விளையாடுவோமா ? என் உச்சி மண்டையில்ன்னு ..” நீ மட்டையாக , உருப்படாமல் போக அனைத்தும் நிறைவேறும் … 
நீயும் உன் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்த பின்னால் அவன் விமானம் ஏறி லண்டண் போயிருவான் ஏன்னா அவன் குடும்பத்த பத்திரமா லண்டண்ல வச்சிருக்கான்...
41 என்ன இன்னும் பலர் போய் சேர்ந்தாலும் பணம் கொடுத்து வாயை அடைக்க வலுவுள்ள பின்புலம் .. அந்த படிப்பு, . பெற்றோர்
என அனைத்தையும் தொலைத்து விட்டு மரம் , மட்டை கம்பம் என அனைத்தின் மீதும் ஏறி கை கால் உடைந்து மொத்தமாக ஒழிந்தே போவாய் ..
--பகிர்வு..

கருத்துகள் இல்லை: