புதன், 14 ஜனவரி, 2026

ஈரான் மக்களுக்கு டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை - தொடர்ந்து போராடுங்கள் மக்களே

 hirunews : ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - ட்ரம்ப்பின் அதிரடி பதிவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானில் பல ஆண்டுகளாக இல்லாத வகையில் நடைபெற்று வரும் பாரிய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது சமூக ஊடக பதிவில், "ஈரானிய தேசபக்தர்களே, தொடர்ந்து போராடுங்கள் - உதவி அதன் வழியில் உள்ளது" என்று கூறியுள்ளார். 
அத்துடன் போராட்டக்காரர்கள் மீதான "அறிவற்ற கொலைகள்" (Senseless killing) நிறுத்தப்படும் வரை, ஈரானிய அதிகாரிகளுடனான அனைத்து சந்திப்புகளையும் தாம் இரத்து செய்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: