வியாழன், 16 ஜனவரி, 2025

ஆடிட்டர் குருமூர்த்தி : நான் வச்சிருக்கிறதே கறுப்பு பணம் ....காஞ்சி பெரியவாளுக்கு ஒதுக்கி விடுவேன்

 ராதா மனோகர் : துக்ளக் ஆசிரயர்  ஆடிட்டர்  குருமூர்த்தி அண்மையில் காஞ்சி சின்ன பெரியவாள் முன்னிலையில் ஒரு பெரிய ஒப்புதல் வாக்குமூலத்தை உளறினார்.
நான் வச்சிருக்கிறதே கறுப்பு பணம் .. கறுப்பு பணம் எனக்காக வச்சிருக்கறதில்ல.. மத்ஹவாளுக்கு கொடுக்கிறதுக்காக ...அதாவது (பெரியவாளுக்கு?
தான் பாம்பே டையிங் நஸ்லி வாடியாவின் அடியாளாக இருந்து அன்றைய ரிலையன்ஸ் திருபாய் அம்பானிக்கு எதிராக பத்திரிகைகளில் எழுதியும் இதர வழிகளிலும் வேலை பார்த்ததாக அவர் கூறியுள்ளதாக எனக்கு தெரிகிறது,
பாம்பே டையிங் என்வலப்பில் சுமார் முப்பத்தி ஐந்தாயிரம் இருந்ததாகவும் அதை மாற்றி வேறு ஒரு கவரில் வைத்து காஞ்சி மடம் என்று எழுதி வைத்து விட்டு டெல்லி சென்று விட்டதாக கூறியுள்ளார், பின்பு சி பி ஐ தனது வீட்டை சோதனை இட்ட பொழுது தான் அந்த கவரில் காஞ்சி மடம் என்று எழுதி இருந்ததால் தப்பி விட்டேன் என்றும் இல்லையென்றால் தான் பாம்பே டையிங் நஸ்லி வாடியாவிடம் கையூட்டு பெற்று விட்டதாக எண்ணி இருப்பார்கள் , கதையே முடிந்திருக்கும் ,


. பின்பு அந்த பணத்தை காஞ்சி மகா பெரியவாள் கேட்டதாகவும் தான் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல அதன் பின் தனது வருமானத்தை காசாக வாங்குவதில்லை.ஆனாலும் கரன்சியாக வரும் பணத்தை அப்படியே வேறு கவரில் வைத்து தர்ம காரியங்களுக்கு மட்டுமே உபயோகித்து விடுவதாக திருவாய் மலர்ந்த அருளியுள்ளார் .
அவர் மேலும் அதுபோன்ற தர்மகாரியங்கள் செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களால் என்னன்ன செய்ய முடியும் என்னன்ன கொடுக்க முடியும் என்பதையும் ஒரு துண்டு கடுதாசியில் எழுதி  கொடுக்கவும் என்று  குஞ்சு பெரியவாள்   முன்னிலையில் அறிவிப்பு செய்தார்.
அவர் கூறிய தர்ம காரியம் என்னவென்றால்  பார்ப்பன அரசியல் சமுக அடாவடி இத்தியாதி இத்தியாதி .
ஏனெனில் பேச்சின் ஆரம்பத்திலேயே அவர் கூறினார் காஞ்சியின் மகா மகா பெரியவாள் உயி்ரோடு இருக்கும்போது தன்னிடம் நாட்டின் அரசியல் பொருளாதாரம் போன்ற எராளமான விவகாரங்களை விவாதிப்பராம் , நம்மவா எல்லாத்தையும் கவனிக்கணும் என்றாராம் ! தட்ஸ் ஆல் யுவர் ஆனர்!
மீள் பதிவு - July 22, 2018

கருத்துகள் இல்லை: