tamil.oneindia.com - Shyamsundar : கலிபோர்னியா: கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட காட்டுத்தீ அந்நாட்டையே உலுக்கி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் வணிக மையங்கள் சாம்பல் ஆகி உள்ளன.
ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் இன்னமும் பலருக்கும் சந்தேகமாக உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை ஏற்படுத்திய சம்பவமாக பார்க்கப்படுகிறது. அந்த நாட்டின் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாக மாறி உள்ளது, இதனால் இழப்புகள் இதுவரை $135 பில்லியனைத் தாண்டிவிட்டதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்த இழப்பு $150 பில்லியனை எட்டக்கூடும்.. அல்லது அதை தாண்ட கூடும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா இதுவரை கண்டிராத பேரிடர் மூலம் ஏற்பட்ட இழப்பு ஆகும். முக்கியமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
$8 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஏற்படும் என்று மார்னிங்ஸ்டார் மற்றும் ஜேபி மோர்கன் போன்ற நிறுவனங்களின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படி ஏற்பட்டது: ஆனால் இதில் ஒரு விஷயம் மட்டும் இன்னமும் பலருக்கும் சந்தேகமாக உள்ளது. இந்த காட்டுத்தீ எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
போர் நடக்கும் நாடு போல.. தரைமட்டமாக மாறிய கலிபோர்னியா.. ஆனா.. இந்த ஒரு விஷயம்தான் இடிக்குது!
1. ஒரே நேரத்தில் 5 இடங்களில் எப்படி காட்டுத்தீ ஏற்பட்டது?
2. மின்னல் தாக்கி காட்டு பகுதியில் தீ ஏற்பட்டு பின்னர் அது பரவும். ஆனால் இந்த முறை கடந்த 10 நாட்களாக அங்கே மின்னல் ஏற்படவில்லை.
3. மின் கசிவு காரணமாக காட்டுத்தீ ஏற்படும். ஆனால் அதுவும் இந்த முறை புகாராக வைக்கப்படவில்லை.
You May Also Like
காஸா மக்களை கொல்ல வெடிகுண்டில் கையெழுத்து போட்ட கேப்டன் அமெரிக்கா ஹீரோ.. இப்போ என்ன ஆச்சுனு பாருங்க
4. இனி இரண்டு வாய்ப்பு மட்டுமே உள்ளது. விபத்தாக எங்காவது யாரவது தீயை ஏற்படுத்தி இருக்கலாம்.
5. அப்படி இல்லை என்றால் விஷமிகள், தீவிரவாத அமைப்புகள் வேண்டும் என்றே தீயை ஏற்படுத்தி இருக்கலாம்.
இதில் தீ விபத்திற்கு எது காரணமாக இருக்கும் என்று தொடர் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மோசமான சேதம்:
இந்த காட்டுத்தீ காரணமாக 29,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ஏற்கனவே கருகிவிட்டன, மேலும் 2,93,000 குடியிருப்பாளர்கள் வெளியேறி உள்ளனர்.
வீடுகள், பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களை தீ நாசமாக்கி உள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள், கட்டிடங்கள் கருகி உள்ளன. 5 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
கிட்டத்தட்ட அங்கே 4 லட்சம் கோடி ரூபாய்க்கு நாசம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக பாலிசேட்ஸ் தீ அதாவது பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை மிக மோசமாக அமைந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸுக்கு அருகிலுள்ள கடலோர நிலப்பரப்பு ஆகும் இது. இங்கே இப்போது கடுமையான காட்டுத்தீ ஏற்பட்டு உள்ளது. அங்கேதான் அதிக அளவில் ஹாலிவுட் பிரபலங்கள் , கோடீஸ்வரர்கள் உள்ளனர். அமெரிக்காவில் காட்டுத் தீ அதிகம் ஏற்படும் பகுதிகளில் கலிபோர்னியா மாகாணம் முக்கிய இடத்தில் இருக்கிறது. கடந்த ஒருவருடம் மட்டுமே கலிபோர்னியாவில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட காட்டுத் தீக்கள் ஏற்பட்டது. ஒரே மாதத்தில் கலிபோர்னியாவில் இங்கே 2-3 முறை தீ ஏற்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக