வியாழன், 16 ஜனவரி, 2025

பிரிட்டன் மருத்துவமனையில் கத்திக்குத்து: கேரளா செவிலியர் கவலைக்கிடம்

 தினமணி : பிரிட்டனில் உள்ள ராயல் ஓல்தம் மருத்துவமனையில் பணியில் இருந்த கேரளா  செவிலியர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அச்சம்மா செரியன் என்ற  மலையாள பெண் செவிலியர், இரவுப் பணியில் இருந்தபோது, ரூமோன் ஹாக் என்பவரால் கத்திக்குத்துக்கு ஆளானார்.
50 வயதாகும் பெண் செவிலியர் உடலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்கு தொடர்ந்து உயிர்காக்கும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.



அவரது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்கள், உயிருக்கு ஆபத்தானவையாக இருப்பதாகவும் காவலர்கள் கூறியிருக்கிறார்கள்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

தற்போது, செவிலியரின் உயிர் காக்கும் சிகிச்சைகள் கிடைப்பதிலேயே எங்களது முழு கவனமும் இருக்கிறது. அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அவருடன் பணியாற்றும் செவிலியர்களுக்கும் எங்களது சார்பில் ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: