செவ்வாய், 14 ஜனவரி, 2025

ஈழ விடுதலைப் போராட்டத் தோல்வியை நேர்மையான விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இல்லை.

 Jawahar Dra :  சிறையில் இருந்தபோது ஒரு அனுபவம்.
தி.மு.க.வில் ஒரு பிளவு வந்த நேரம்.
சிறையில் எங்களோடு இருந்த ஈழத்தமிழர்களில் மிகப்பெரும்பானையானவர்கள் கலைஞருக்கு எதிராகவே இருந்தனர்.
அது அவர்களது ஈழம் சார்ந்த நிலைப்பாடு என்பதால் எங்களுக்கு வருத்தமில்லை.
நாங்கள் கலைஞரையே ஆதரித்தோம்.
இதுவல்ல விசயம்.
தமிழ்நாட்டில் ஈழம் சார்ந்த அரசியல்தான் இருக்க வேண்டும், திராவிட அரசியல் இருக்கக் கூடாது என்கிற நிலைப்பாட்டைக் கண்டு முதலில் அதிர்ந்தோம் பின்னர் எதிர்த்தோம்.
ஈழச்சிக்கலை, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோள் மேல் போட்டுக்கொண்டு வேலைபார்த்து, வேலைபார்த்து சிறைச்சாலைகளை நிரப்பியவர்கள் அனைவரும் திராவிடர், திராவிட இயக்கத்தவர்களே!


LTTE அய்யையும், திராவிடர் இயக்கத்தையும் வேறு வேறாக எண்ணாதவர்கள் சிறையை நிரப்பி தன் வாழ்நாட்களை அதுவும் வாழ வேண்டிய நாட்களை இழந்துகொண்டிருந்தனர்.
ஆனால் பார்ப்பானால்தான் தங்களுடைய ஈழம் சிக்கலில் இருக்கிறது என்பதையோ,
அந்தப் பார்ப்பன எதிர்ப்பு இயக்கங்களின் பிரச்சாரத்தாலும் ஆதரவாலும்தான் ஈழச்சிக்கலைத் தீர்க்க இயலும் என்றோ அவர்களுக்குப் புரியவில்லை.
புரிய வைக்க முயன்றபோதும்  இயலவில்லை.
சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்ப்பதில் சிங்களவர்களது நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.
அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சேது கால்வாய்த் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தூத்துக்குடி மட்டுமல்ல காங்கேசன் துறைமுகமும் உலகத் துறைமுகமாகும். பிறகு சிங்களவன் ஈழத்தைப் பிரிக்க விடவே மாட்டான் என்பதுதான்.
இதை எதற்கு சொல்ல வருகிறேன் என்றால் ஈழ மக்களின் உரிமை, அரசியல் என்பவை வேறு, தமிழ்நாட்டின் உரிமைகள், அரசிய  என்பவை வேறு என்பதை அவர்கள் புரிந்து அவர்களின் நலன் அடிப்படையில் முடிவுகளை எடுத்தனர்.
ஆனால் நாமோ Heroism த்துக்கு அடிமையானவர்கள் போல விமர்சனப் பார்வையின்றி ரசிகர்கள் போன்று இருந்தோம்.
சே - குவேரா மனிதாபிமானமுள்ள போராளி. ஆனால் அவரின் பொலீவியப் புரட்சி தோற்றதன் அக, புறக் காரணங்களை அலசி ஆராய்கிறோம்.
ஆனால் ஈழத் தோல்விக்கு ஒரேடியாக துரோகம் மட்டுமே காரணம் என்று கண்ணை மூடிக்கொண்டு புலம்புகிறோம்.
பெரியார் விமர்சிக்கப்படலாம்.
ஏற்றுக்கொள்கிறோம்.
ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத் தோல்வி, LTTE தோல்வி, பிரபாகரன் தோல்வி என்பதை நேர்மையான விமர்சனக் கண்ணோட்டத்தில் பார்ப்பதே இல்லை.
பார்ப்பவரைத் துரோகி என்கிறோம்.
விமர்சனப் பார்வையோடுதான் நாங்கள் உதவிகள் செய்தோம்.
விமர்சனங்களையும் விடவில்லை உதவிகளையும் விடவில்லை.
இது போன்ற பாராதூரமான பார்வையை நாம் வைத்திருந்தால் அது மக்களிடம் சென்றிருக்கும்.
ஈழ அரசியலை வைத்து தமிழ்நாட்டு சமூகச்சிக்கலை, அரசியலை சீமான் குழப்பி வயிறு வளர்க்க இயன்றிருக்காது.

கருத்துகள் இல்லை: