வெள்ளி, 15 மார்ச், 2024

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் list.. நாளை கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து

 tamil.oneindia.com - Nantha Kumar R :  சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ள தொகுதிகளின் பட்டியல் குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. நாளை மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட உள்ளார்.
இந்நிலையில் தான் தேர்தல் தேதிக்கு முன்பாக லோக்சபா தேர்தல் களம் என்பது சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.



‛‛ஓராண்டு காத்திருக்கணும்''.. திமுக கூட்டணியில் கமல் எப்போது ராஜ்யசபா எம்பியாவார் தெரியுமா? விபரம்‛‛ஓராண்டு காத்திருக்கணும்''.. திமுக கூட்டணியில் கமல் எப்போது ராஜ்யசபா எம்பியாவார் தெரியுமா? விபரம்

திமுக, அதிமுக, பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட உள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அதிமுக, பாஜகவை பொறுத்தமட்டில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முழுமையாக முடிவடையவில்லை. இழுபறி நீடித்து வருகிறது. மாறாக திமுக கூட்டணியில் கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை என்பது முடிவடைந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன.

நாமக்கல்லின் ராசி அப்படி! ஒருமுறை வென்றால் அடுத்து தோல்வி தான்.. வெல்லுமா கொமதேக.. திக்திக் திமுகநாமக்கல்லின் ராசி அப்படி! ஒருமுறை வென்றால் அடுத்து தோல்வி தான்.. வெல்லுமா கொமதேக.. திக்திக் திமுக

திமுக கூட்டணியில் இன்னும் வைகோவின் மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் 10 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகளும், புதுச்சேரி தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தான் திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை போட்டியிட்ட 7 இடங்களை மீண்டும் வழங்க திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, விருதுநகர், ஆரணி, தேனி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட 7 தொகுதிகள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது. அதேபோல் கடந்த முறை காங்கிரஸ் வென்ற திருச்சி, கரூர் தொகுதிகளுக்கு பதில் வேறு 2 இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது.

‛‛பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி''.. லோக்சபா தேர்தலில் 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!‛‛பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி''.. லோக்சபா தேர்தலில் 5 வாக்குறுதிகளை அறிவித்த காங்கிரஸ்!

அதன்படி திருச்சிக்கு பதில் மயிலாடுதுறையும், கரூருக்கு பதில் ஈரோடு தொகுதியையும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்க திமுக முடிவு செய்துள்ளதாம். தமிகத்தில் இந்த 9 தொகுதிகள் தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து பறிக்கப்படும் திருச்சி லோக்சபா தொகுதி வரும் தேர்தலில் வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. அதேபோல் கரூரில் திமுகவும் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் எம்பிக்களாக உள்ள திருநாவுக்கரசர் (திருச்சி தொகுதி), ஜோதிமணி (கரூர் தொகுதி) ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: