சனி, 16 மார்ச், 2024

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நாகார்ஜுனா-வின் அன்னபூர்ணா ஸ்டூடியோஸை வாங்கியது! ஆந்திர அரசு நிலம் அம்பானியின் வசமாகிறது

 tamil.goodreturns.in : தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான்களில் அக்கினேனி நாகேஸ்வர ராவும் ஒருவர். தெலுங்கு ரசிகர்களின் பல பரம்பரைகளை கவர்ந்தவர். 271 படங்களில் அவர் நடித்துள்ளார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் வேறு பாருமில்லை, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா-வின் சந்தை, நாக சைதன்யா-வின் தாத்தா.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோவையும் கட்டியிருந்தார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஸ்டுடியோ கட்ட விரும்பிய 22 ஏக்கர் நிலத்தை 1976-ல் அப்போதைய ஆந்திர அரசு அவருக்கு ஒதுக்கியது.
ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள - நிலத்தை அரசு ஒதுக்கியது.


ஒரு ஏக்கருக்கு ரூ.7,500 முதல் ரூ. 8,000 வரையிலான பெயரளவு விலையில் நடிகர் அதைப் பெற்றார். முழு நிலமும் அவருக்கு ரூ 1.5-1.8 லட்சத்துக்கு தரப்பட்டது. அதில் அக்கினேனி நாகேஸ்வரராவ் அன்னபூர்ணா ஸ்டுடியோவைக் கட்டினார். அந்த நிலத்தின் விலை தற்போது ஏக்கருக்கு 30 கோடி ரூபாய். இப்போது, மொத்த நிலத்தின் மதிப்பு 600-650 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.

அனில் அம்பானி தலைமையிலான திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ரிலையன்ஸ் மீடியாவொர்க்ஸ் இப்போது அன்னபூர்ணா ஸ்டுடியோவைக் கைப்பற்றியுள்ளது.

இதுபற்றி ரிலையன்ஸ் மீடியாவொர்க்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் அர்ஜுன் கூறுகையில், "திரையுலகில் இது போன்ற ஒப்பந்தம் இதுவே முதல்முறை. பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக நாட்டிலேயே இரண்டாவது பெரிய தெலுங்குத் திரையுலகில் எங்களின் இருப்பை விரிவுபடுத்த முடியும்.

அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவின் புதிய சகாப்தத்தைத் தொடங்கினார், தெலுங்குத் துறையில் அவரை விவரிக்க சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை முதன்முறையாக உருவாக்கப்பட்டது.
இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிக்காக, ஜனவரி 26, 1968 அன்று இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவரது நண்பரும் மற்றொரு புகழ்பெற்ற நடிகருமான என்.டி.ராமராவ் அவர்களால் தூண்டப்பட்ட பிறகும், அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவரது சகாக்களைப் போலல்லாமல், அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

ஆந்திரப் பிரதேச முதல்வராக என்.டி.ராமராவ் பதவியேற்றபோது அக்கினேனி நாகேஸ்வர ராவுக்கும் முக்கியமான பதவிகள் வழங்கப்பட்டன, ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.

Story Written by: I.Jayachandran

கருத்துகள் இல்லை: