வெள்ளி, 15 மார்ச், 2024

டெல்லியில் பாஜக எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு! தோல்வி பயத்தில் பாஜக !

 Kalaignar Seithigal -Praveen :  நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா என பல மாநிலங்களிலிருந்து மொத்தமாக 195 பேரை வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. ஆனால், இதில் பாஜக சார்பில் தற்போது எம்.பி.களாக இருக்கும் 6 எம்.பி.களை மீண்டும் வேட்பாளராக நியமிக்காமல் பாஜக தலைமை புறக்கணித்துள்ளது. 

மேலும், 6 தொகுதிகளில் புதிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பாஜக சிட்டிங் எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு : இந்தியா கூட்டணியால் தோல்வி பயத்தில் பாஜக !

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த தேர்தலை ஆம் ஆத்மீ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியாக சந்தித்ததால், பாஜகவுக்கு எதிராக வாக்குகள் வெகுவாக சிதறியது. இதன் காரணமாக 7 தொகுதியிலும் பாஜக வெற்றிபெற்றது.

ஆனால், தற்போது ஆம் ஆத்மீ, காங்கிரஸ் கட்சிகள் டெல்லியில் இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி உடன்பாடு செய்து தேர்தலை சந்திக்கிறது. இதனால் பெரும் அச்சமடைந்துள்ள பாஜக புதிய வேட்பாளர்களை அறிவித்துள்ளது. டெல்லியில் பாஜக எம்.பி.க்கள் மீது கடும் அதிருப்தி உள்ள காரணத்தால், புதிய வேட்பாளர்களாவது வெற்றிபெறுவர்களா என்ற எண்ணத்தில் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை: