ஞாயிறு, 24 ஜூலை, 2022

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் : "15 நாட்கள் தான் டைம்! விளக்கம் கொடுங்க.." அறநிலையத்துறை ..

Vigneshkumar  -  Oneindia Tamil  :  சிதம்பரம்: சிதம்பரம் கோயில் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக அறநிலையத் துறை முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது.
இப்போ 10%, பின்னாடி 90%. பெருங்களத்தூர் அருகே 2 & 3 BHK வீடுகள் @ 67 லட்சம்* முதல்
சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்தது.
இந்த சிறப்புக் குழு கடந்த மாதம் சிதம்பரம் கோயிலில் ஆய்வு நடத்த நேரடியாகச் சென்றது. இருப்பினும், சிறப்புக் குழு ஆய்வு நடத்தச் சிதம்பரம் தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை.
இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்தச் சூழலில் கடந்த ஜூலை 19ஆம் தேதி கடிதம் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி இருந்தனர்.
அதில் வரும் 25ஆம் தேதி நகை சரிபார்ப்பு ஆய்வு நடத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று முன்தினம் தீட்சிதர்கள் பதில் கடிதம் எழுதி இருந்தனர்.

அதில் 1956இல் இருந்து நகைகள் ஆய்வு மற்றும் சரி பார்ப்பதற்கு நாங்கள் ஒத்துழைப்பு தருவதாகவும் இருப்பினும் தீட்சிதர்கள் சிலர் வட இந்தியாவில் நடைபெறும் வேத பாராயண விசேஷ நிகழ்ச்சிகளுக்குச் சென்று உள்ளதாலும் ஆய்வுக்குக் குறுகிய கால அவகாசமே இருப்பதாலும் தங்களது ஆய்வினை வரும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்குப் பின் எங்களிடம் முன்கூட்டியே தெரிவித்து ஆய்வு மேற்கொள்ளக் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த கருத்துகளைப் பொதுமக்கள் தெரிவிக்காமல் என்று அறநிலையத்துறை அறிவித்து இருந்தது. அப்போது அறநிலையத் துறைக்கு சுமார் 19 ஆயிரம் மனுக்கள் வந்தாக கூறப்பட்டு இருந்தது. அதில் பெரும்பாலான மனுக்கள் நிர்வாகத்திற்கு எதிராகவே இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனிடையே இன்று சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளது.

அதில் சிதம்பரம் கோயில் நிர்வாகம் தொடர்பாக அறநிலையத்துறைக்கு மொத்தம் 19,405 மனுக்கள் வந்ததாகக் கூறப்பட்டு உள்ளது. அதில் பெரும்பாலான மனுக்கள், அதாவது 14,098 மனுக்கள் நிர்வாகத்திற்கு எதிராக உள்ளதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. எனவே, சிதம்பரம் கோயில் நிர்வாகம் மீது பக்தர்களின் 28 குற்றச்சாட்டுகள் குறித்து 15 நாட்களில் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது.

ரூபாய் 10 ஆயிரம் தந்தால் பிரசாரம் வீடு தேடி வரும் என்று கூறி வசூல் செய்யும் தொகைக்கு ரசீது வழங்குவதில்லை என்றும் பல பக்தர்கள் புகார் அளித்துள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. மேலும், நடராஜர் கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்களைத் தீட்சிதர்கள் தரக்குறைவாகப் பேசி அவமதிப்பு செய்வதாகப் புகார் எழுந்துள்ளதாக அந்த நோட்டீஸில் கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது

கருத்துகள் இல்லை: