ஞாயிறு, 24 ஜூலை, 2022

இலங்கைக்கு 3-வது கட்ட நிவாரணப் பொருட்கள்! கனிமொழி எம்பி கையசைத்து அனுப்பி வைத்தார்

கனிமொழி கருணாநிதி எம்.பி., “பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான நோக்கத்துடன் உதவும் வகையில் ரூ.123 கோடி மதிப்பில் அத்தியாவசியப் பொருட்களை அனுப்ப ஒன்றிய அரசிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி சென்னையை தொடர்ந்து 2-ஆம் கட்டமாக தூத்துக்குடியில் இருந்து ஏற்கனவே நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3-வது முறையாக நேற்று தூத்துக்குடியில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.123 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்கள் அனுப்ப முடிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது வரைரூ.174 கோடிக்கு அதி கமானநிவாரணப்பொருட் கன் அனுப்பப்பட்டுள்ளது.
யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற அடிப்படையில் தமிழர்கள் / மனிதர்கள் உலகில் எந்த மூலையில் அவதிப்பட்டாலும் தமிழினம் வேடிக்கை பார்க்காது.
இந்த இலட்சியத்தை கடைப்பிடிக்கும்,   தந்தை பெரியார் வழியில் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி தமிழகத்தில் நடந்து வருகிறது. அந்த அழகான தீவிலே வாழும் மக்கள் நல்ல முறையிலே நிம்மதியான வாழ்க்கை வாழவேண்டும் என்று வாழ்த்தி வாழக்கூடிய பொருளாதார வளர்ச்சியும் பெறக்கூடிய நிலைக்கு திரும்ப வேண்டும் விரைவிலே .
நாம் இன்று அனுப்பும் இந்த சிறு உதவியை இங்கிருந்து அனுப்புவதில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம்,  இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என முதலமைச்சர் உட்பட நாம் எல்லோரும் விரும்புகிறார்.” என மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: