செவ்வாய், 6 டிசம்பர், 2022

பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு .

தினமணி : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு  அரசு, சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது.


பரந்தூர் விமான நிலையம் - சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும், விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும், 2069-70 ஆம் நிதியாண்டு வரை போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை: