வெள்ளி, 9 டிசம்பர், 2022

மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்.. முழு விபரம் ... சென்னையில் மழை

 மாலை மலர் :  வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.
நள்ளிரவில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். மாண்டஸ் புயல், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

2022 8:25 AM புயல் கரையை கடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படும் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது சம்மந்தப்பட்ட மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என தமிழக மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி கூறி உள்ளார். மின் கம்பங்கள், ஜேசிபி இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தேவைக்கு ஏற்ப வைக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களில் மட்டும் மின் தடை செய்ய வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின் ஊழியர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

 9 டிசம்பர் 2022 8:00 AM மாமல்லபுரத்திற்கு தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு- தென்கிழக்கு திசையில் 170 கி.மீ. தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. புயலின் நகர்வு வேகம் அதிகரித்துள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் கூறி உள்ளது.

 9 டிசம்பர் 2022 7:41 AM மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை நடைபெற இருந்த டிப்ளமோ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை நடைபெற இருந்த தேர்வுகள் வரும் 17ம் தேதி நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 2022 7:41 AM அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு மாண்டஸ் புயல் எதிரொலியாக நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக பல மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. FB ShareTwitter

 9 டிசம்பர் 2022 7:40 AM மாண்டஸ் புயல் மாமலல்புரத்திற்கு தென்கிழக்கில் 135 கிமீ தொலைவில் உள்ளது. மாமல்லபுரத்தை புயல் நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை பெயது வருகிறது.

 9 டிசம்பர் 2022 6:53 AM சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

 9 டிசம்பர் 2022 6:11 AM மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில், சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

 9 டிசம்பர் 2022 6:11 AM மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர் மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: