சனி, 10 டிசம்பர், 2022

உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதி இவையெல்லாம் சமணர் கோவில்களாகதானே இருந்தது

May be an image of text that says 'உத்திரமேருர் சுந்தரவதன பெருமாள் கோயிலில் இருக்கும் ஆதிநாதர் உருவம்.வைணவ கோயிலில் சமண உருவம் எப்படி வந்தது? தோழர் திருமா கூற்று உண்மைதானே???'

ஆலஞ்சியார்  :  ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..
மணிமேகலை குண்டலகேசி பௌத்தவ காப்பியம்..
..சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்..
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..
சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது

May be an image of monument

மணிமேகலையும் குண்டலகேசியும்.. பௌத்தனத்தை தழுவியதால் அது பௌத்தத்தை பேசியதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.. அதனால்தான் தமிழர்களின் ஐப்பெரும் காப்பியங்களை முன்னமடுக்காமல் ராமாயணத்தையும் மகாபாரதத்தையும் அடிக்கடி பேசுகிற விவாதிக்கிற சூழலை திட்டமிட்டே செய்துவந்தனர் .. அறிவாசான் பெரியார்  தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராக தான் போனான் என்பார்..
..
சமணர்களையும் பௌத்தவர்களையும் கொன்று கழுவேற்றிதான் பிராமண மதம் இங்கே காலூன்றியது .. பௌத்த விகாரங்களை அழித்தும் சமணர்களின் கோவில்களை இடித்தும் தான் இங்கே கோவில் வந்ததென்பதை அறிவுசார்ந்த ஆய்வுகளோடுதான் திருமா பேசினார்.. உடனே பார்பனர்கள் திருமாவிற்கெதிராக களமிறங்கினர் கோவில்களை இடிக்க சொல்கிறானென்றெல்லாம் திரித்து கூறினார் அப்போது திராவிட கழகம் தான்  திருமாவிற்கு ஆதரவாக கருத்தரங்களை நடத்தியது ..மசூதிகளை இடிக்கவேண்டுமென சொல்கின்றீர்களே .. சமணர் பள்ளிகளை இடித்துதானே கோவில்கள் உருவானதென்ற உண்மையை சொன்னவுடன் தீக்குளிப்பேன் என்று சொன்ன எச்.ராசா இன்னமும் சொன்னதை செய்யவில்லை.. சமணர்கள் வழிபாட்டுதலம் குகைகள் கோவில்களாக உருமாறியிருக்கிறதே .. உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதி இவையெல்லாம் சமணர் கோவில்களாகதானே இருந்தது
..
ஆம்..
ஏழாம் நூற்றாண்டில் சமணர்கள் 8000 மேற்பட்டவர்கள் கழுவேற்றினார்கள் சமணர்களையும் பௌத்தவர்களை வீழ்த்தி இங்கே ஆரியர்கள் காலூன்றினார்கள் அரசர்களின் கையிலாக்கி ஆரியர்கள் தங்களின் மதத்தை இங்கே வேகமாக பரப்பினார்கள் இதுதானே வரலாறு .. மன்னர்கள் சமணத்தை துறந்து சைவ மதத்தை பின்பற்றி போதுதான் இங்கே சைவ வைணவ கோவில்கள் வந்தது இன்றைக்கு சில கோவில்களில் சமணபடுக்கைகளை காணலாம்..
தமிழனுக்கு ஏன் இந்திய துணைகண்டத்திலேயே ஆரிய மதம் வந்துதானே தவிர அதன் பூர்வீகம் இந்த பூமியல்ல..
..
தமிழனுக்கு மதம் என்பதே ஆரியர் வரவிற்கு பிறகும் பின்.. தொடர்ந்து வந்த மொகலாய ஆங்கிலேயர் வரவிற்கு பிறகே தவிர.. அதற்கு முன்பில்லை சமண சமயத்தையும் தொடர்ந்து பௌத்தமுமே அவனை முதலில் ஆட்கொண்டது .. இப்போது கூட காஞ்சியிலும்..  மாமல்லபுரத்திலும் நிறைய சமண வரலாற்று சுவடுகளை காணலாம்.  சமணத்தை அழித்து சைவமும் வைணவமும் வளர்ந்தது.. சமணசமயத்தை வளர்த்த அரசர்கள் பின் மாறி ஆரியமதத்திற்கு வந்ததாகவும் அதன்பிறகு கோவில்கள் அதிகளவில் வைணவத்தை பறைசாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள்.. இல்லை அது புனைவென்றும் ஒட்டுமொத்தமாக சைவ மதத்தை மாற மன்னர் பணித்ததை மறுத்ததால் கழுவேற்றம் நடந்ததாக சொல்லபடுகிறது.. இதிலிருந்தே சமணமே இங்கே நிலைத்திருந்தது என்பதும்
ஆரிய மதமான வைணவமும் சைவமும் வந்தேறிய மதங்களென்றும்  உறுதியாகிறது.. இதெல்லாம் ரவிக்கு தெரியாதா.. ரிஷிகளின் பூமி என கதையளக்கிறார்.. பாரதி பிறந்தநாளை கூட நட்சத்திரம் பார்த்து நடத்துவதிலிருந்தே எந்தளவு பார்பன மதத்தை முன்னெடுத்து நம் மீது "இந்துமதம்" என நம்ப வைத்திருக்கிறார்களென புரியும் ..
..
இந்த மண்ணின் பூர்வகுடிகள் மதங்களை பின்பற்றிவர்களாக இல்லையென்கிறார் வரலாற்று ஆய்வாளர் இலங்கை யாழ்பாண பல்கலைகழக பேராசிரியராக இருந்த சிவ சுப்ரமணியம் .. ஆம் தமிழனின் வாழ்வியல் இயற்கையோடு பிணைந்திருந்தது அவன் இயற்கையை போற்றியே வாழ்ந்தான் .. வணங்குதல் என்பது அவனுக்கு வரவு தான் .. இதில் சாதியும் மதமும் இடைசொருகலாய் வந்து தலையில் வைத்து கொண்டாடுகிற இழிவை எப்போது தூக்கியெறிபோகிறோம் .. சாதியென்றும் மதமென்றும் பிரிந்து நமக்குள் பகையை மட்டுமே வளர்த்திருக்கிறோம் மதம்பிடித்து அலைகிறோம்.. நமக்கு முதலில் அறிமுகமான சமண நெறி சிறந்த வாழ்வியலாக இருந்தது வாழ்வியல் பயிற்சிக்கானதாக இருந்தது ..
..சமணம் - ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: