இதற்கு முன்னர் ஒருபோதும் அரசியலில் ஈடுபட்டிராத, தெருவில் திரியும் விடலைப் பையன்களை மூளைச்சலவை செய்வது இலகு. இவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட அரசியல் கொள்கை இருக்காது. அவ்வப்போது டிரென்ட் ஆகும் விடயங்களை பிடித்துக் கொள்வார்கள். உதாரணத்திற்கு எட்டு வழிச்சாலை, நீட் எதிர்ப்பு போராட்டங்களை தாங்கள் (மட்டுமே) நடத்தியதாக உரிமை கோருவார்கள்.
தற்போது தேர்தலில் விவசாயி சின்னம் அறிவிக்கப் பட்டதும்,
விவசாயம் பற்றி அரைகுறையாக அறிந்து கொண்ட பிரச்சினைகளை பற்றிப்
பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு இதை கைவிட்டு விட்டு வேறொரு
விடயத்தை பற்றிப் பேசுவார்கள். இது தான் லும்பன் அரசியல்.
ஜேர்மனியில் ஹிட்லர் காலத்தில் நடந்த மாதிரி, தமிழகத்தில் தற்போது நடக்கும் இது போன்ற அரசியல் மாற்றங்கள் ஆபத்தானவை. தனிமனித வழிபாடு, திராவிட எதிர்ப்பு போன்ற நாம் தமிழர் அரசியல் போக்குகள், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் எழுந்துள்ள வலதுசாரி- Populist அரசியலை பிரதிபலிக்கிறது.
இந்த பொபுலிஸ்ட் அரசியல்வாதிகள் இவ்வளவு காலமும் இலைமறைகாயாக பேசப் பட்டு வந்த இனவாதக் கருத்துக்களை வெகுஜன தளத்திற்கு நகர்த்தி வருகின்றனர். இது சமூகம் எந்தளவு ஆபத்தான வரலாற்றுக் கட்டத்தில் வந்து நிற்கின்றது என்பதை கோடிட்டுக் காட்டுகின்றது. மக்கள் இப்போதே விழிப்படையா விட்டால், அன்று ஜேர்மனியில் நடந்ததைப் போன்று பெரும் போர், பேரழிவுகளை நோக்கிச் செல்வதை தவிர்க்க முடியாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக