
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் தென்னிந்திய திருக்கோயில் பரிபாலன சபை ஆகியவற்றின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன. பயிற்சி பெறும் மாணவர் களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். இதில் பயிற்ச்சி முடித்த மதுரை எஸ்.ஆலங்குலத்தை சேர்ந்த மாரிச்சாமி கடந்த 2017ல் தமிழ்நாடு இந்து அறநிலை துறையால் தேர்வு அறிவிக்கபட்டு அதில் தேர்வாகி தமிழகத்தின் பார்பணரல்லாத பிற்படுத்தபட்ட தேவர் சேர்வை சமுதாயத்தை சேர்ந்தவர் முதன் முதலாக மதுரை அழகர் கோவிலுக்கு கட்டுபட்ட ஐயப்பன் கோவிலில் அர்ச்சராக பணியாற்றிவருகிறார்.


ஆனால் சைவ சிவாச்சாரிகள் சங்கம் உச்ச நீதிமன்றத்திற்கு போய் அரசானைக்கு இடைகால தடை வாங்கியது. ஆனாலும் தொடர்ந்து புத்தகங்களை தேடி தேடி படித்து வந்த நிலையில் 2017ல் அரசு இந்து அறநிலை துறையால் கோயிலில் அரச்சகராவதுக்கான தேர்வு அறிவிக்கபட்டு அதில் பிராமணரல்லாத தேவர் சமூகத்தை எனக்கு அர்ச்சகராகும் வாய்ப்பு 2018 பிப்ரவரி1ம்தேதி அளிக்கபட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன். கலைஞர் அய்யாவுக்கு கோடி நன்றி. என் கனவு நினைவாகியது. தற்போதுள்ள எடப்பாடி அய்யாவுக்கும் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இறைவனுக்கு செய்யும் இத்திருப்பணியை கொஞ்சமும் குறைவில்லாமல் செவ்வனே செய்வேன். மேலும் என் கூட வேதம் பயின்ற அனைத்து சாதினரும் இப்பணியை செய்ய அரசு ஆவனம் செய்யவேண்டும்’’என்று முடித்து கொண்டார் மாரிச்சாமி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக