செவ்வாய், 31 ஜூலை, 2018

பாஜக தலித் பெண் எம்எல்ஏ வந்து சென்ற கோவிலை கங்கை நீரால் கழுவிய பாஜக ...

Chinniah Kasi :லக்னோ, ஜூலை 30 - தலித் பாஜக பெண் எம்.எல்.ஏ. வந்து சென்ற கோயிலை, ிஷா வந்து சென்றதால், கடவுளின் கோபம் அடைந்துள்ளதாகவும், ஒரு துளி மழைகூடபெய்யவில்லை என்றும்கூறியுள்ளார். மேலும், தெய்வங் களின் கோபத்திலிருந்து கிராம மக்களை காப்பாற்ற வேண்டுமானால், ஆலயத்தை சுத்தப் படுத்த வேண்டும் என்று கூறி, அதன்படி கோவில் வளாகத்தை கங்கை நீராலும் கோவில் சிலையை கங்கை, யமுனா மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்றுநதிகளின் மூலமும் கழுவிவிட வைத்துள்ளார்.
கங்கை நீரால் கழுவிவிட்ட மூடத்தனம் உத்தரப்பிரதேசத்தில்
நடந்துள்ளது.உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம், முஸ்காரா கர்ட் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு, ராத் தொகுதியை சேர்ந்த பாஜக பெண் எம்எல்ஏ-வான மனிஷா அனுராகி கடந்தஜூலை 12-ஆம் தேதி, விழாஒன்றுக்காக வந்து சென்றுள் ளார்.

இதையடுத்து, ஊர்ப்பஞ்சாயத்தைக் கூட்டிய சுவாமி தயானந்த மகந்த் என்பவர், எம்எல்ஏ மன இது தற்போது சர்ச்சையாக மாறிய நிலையில், மனிஷா வழிபட்ட ‘ரிஷி த்ரோம்’ கோயில், பல நூற்றாண்டுகளாகவே பெண்கள் வழிபடத் தடை விதிக்கப்பட்ட கோயில் என்றும்,இது மகாபாரத காலத்தில் இருந்து இருக்கும் கோயிலென்றும் கதைவிடத் துவங்கியுள்ளனர்.

ஒரு பெண் இந்த கோயிலின் எல்லை சுவரைத் தொட்டாலும், அந்த பகுதி பஞ்சம் போன்ற இயற்கைப் பேரழிவை எதிர் கொள்ளவேண்டி இருக்கும் என்றும் மக்களை மிரட்டி நம்ப வைத்துள்ளனர்.இதனிடையே, தலித் பாஜகபெண் எம்.எல்.ஏ. மனிஷா அனுராகி, கோவிலுக்குள் பெண்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது தனக்கு தெரியாது என்று அப்பாவித்தனமாக கூறி உள்ளார்.

கருத்துகள் இல்லை: