
முதல்வரின் உத்தரவையடுத்து வயநாட்டைச் சேர்ந்த நூருதீன் ஷேக் என்பவர் நேற்று அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். இவர் ஒரு வீடியோ பிளாக்கர். தன் பிளாக்கில் ஹனானை தவறாக சித்திரித்து வீடியோ வெளியிட்டார். இதைத் தொடர்ந்தே மற்றவர்களும் ஹனான் மீது பாய்ந்தனர். கேரள முதல்வர் உத்தரவையடுத்து, ஹனானிடம் மன்னிப்பு கேட்டு மற்றோரு வீடியோவை நூருதீன் ஷேக் வெளியிட்டார். எனினும், கைது நடவடிக்கையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
ஹனானுக்கு ஆதரவாக கேரள மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஜோசஸ்பினும் களமிறங்கியுள்ளார். சமூக வலைதளங்களில் கண்டபடி விமர்சிப்பதை 'சைபர் குண்டாயாயிஸம்' என்றும் அவர் விமர்சித்துள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அச்சுதானந்தனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாணவி ஹனான் , தனக்கு எந்த உதவியும் வேண்டாம். நிம்மதியாக பணி செய்ய விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள அரசு எடுத்த நடவடிக்கைக்கு நன்றியும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக