ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞர் அன்று ராஜினாமா செய்திருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்கும்?

Velmurugan Balasubramaniyan
2009 ஈழப்போரின் போது கலைஞர் ராஜினாமா செயதிருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஈழத்தில் எதுவும் மாறியிருக்காது...ராஜபக்சே அதே போல போரை நடத்தி புலிகளை அழித்திருப்பார்.
மாறாக, தமிழ்நாட்டில், நாம்தான் கீழ்கண்டவற்றை இழந்திருப்போம் -
கோவை டைடல் பார்க்,
மதுரை டைடல் பார்க்,
திருச்சி IT பார்க்,
அண்ணா நூற்றாண்டு நூலகம்
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்
திருச்சி IIM (Indian Institute of Management)
செம்மொழி பூங்கா, சென்னை(தாவரவியல் பூங்கா)
அடையார் தொல்காப்பிய பூங்கா(சூழியல் பூங்கா, 145 ஏக்கர்)
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி(2010)
விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி(2010)
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி(2010)
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி,(2010)
மத்திய பல்கலை கழகம், திருவாரூர் (2009)
அண்ணா பல்கலைக்கழகம், மதுரை (2010)
புதிய தலைமை செயலகம்(தற்போது, மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை)
மாம்பழத்துறையாறு அணை, கன்னியாகுமாரி (2011)
இருக்கன்குடி அணை, விருதுநகர் (2009)
மீஞ்சூர் கடல்நீர் சுத்தேகரிப்பு நிலையம்(2010)
நெம்மேலி கடல்நீர் சுத்தேகரிப்பு நிலையம்(2010)
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம்

செம்மொழி மாநாடு, கோவை..
..இன்னும் பல.
இவையெல்லாம், ஈழப்போரிற்கு பிறகு, கலைஞரால் கொண்டு வரப்பட்ட வந்த திட்டங்கள். இன்னும் பல திட்டங்கள் என எல்லாவற்றையும் இழந்திருப்போம்.
மீண்டும் ஜெயலலிதாவை மக்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். இந்த திட்டங்கள் எதுவும் நடைபெற்றிருக்காது.
1991-ல் புலிகளுக்கு ஆதரவாக திமுக இருந்ததாக கூறி திமுக அரசு கலைக்கப்பட்டது. திமுகவினர் வீடுகள் தாக்கப்பட்டன. ஆனால், அதன் பிறகு வந்த தேர்தலில் மக்கள் ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்தனர். ஜெயலலிதா புலிகள் இயக்கத்தை தடை செய்தார்.
பிரபாகரனை தூக்கிலிட வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார் ஜெயலலிதா. அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் தந்தவர் சீமானின் மாமனார் காளிமுத்து. இதுதான், இவர்களின் ஈழ நாடகம்.
ஈழப்போரின் போது திமுக அரசு ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்று சொல்லும் சீமான் மற்றும் சில நடுநிலைகளுக்கு எந்த தொலைநோக்கும் கிடையாது.
இந்த அரைவேக்காடுகளுக்கு அரசியலும் தெரியாது. அனுபவமும் கிடையாது. உணர்ச்சியில் திரியும் ஆட்டு மந்தைகள்.
மக்கள் இது போன்ற உணர்ச்சியில் பேசி திரிபவர்களை நம்புவது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போல. அப்படி செய்துதான் இன்று அனுபவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: