ஞாயிறு, 29 ஜூலை, 2018

புலம்பெயர் தமிழர்களால் கடும் பிரச்னையை எதிர்நோக்கும் ஈழ அகதிகள்

 வெளிநாட்டுல வாழ்ற பணக்கார அகதிகள். அவர்களது கோஷங்களால் திமுகவை பகைக்கிறார். ஆனால் இனி தொடர்ந்து இந்தியாவில் வாழ விரும்பும் எங்களுக்கு இது பாதகமாக இருக்குமே. எங்களை பற்றி யாரும் யோசிப்பதில்லை”
Shalini : “குழந்தை பிறந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தைக்கு அதற்குள் ஆதார் அட்டை கொடுத்துவிட்டார்கள். அதில் இலங்கை அகதி என்று குறிப்பிட்டிருக்கு.
இலங்கை அகதி என்றால் அகதி முகாமில் தான் இருக்க வேண்டும், குறைந்த பட்சம் மாதமொரு முறை கணக்கெடுக்கும் போதாவது.
கல்வி வசதி உண்டு, முகாமில் மாதம் தலைக்கு ஆயிரம் ரூபாய் உதவி தொகை தருவார்கள், மாண்ய விலையில் மளிகை பொருட்களும் உண்டு. 10x10 லைன் வீடு இலவசம் தான். மருத்துவ வசதி இலவசம்.
போர் முடிந்த பிறகு விரும்புவோர் இலங்கைக்கு திரும்பலாம் என்றாலும், பெரும்பாலோர் அங்கு போக விரும்பவில்லை, போனவர்களும் பெரியவர்கள் மட்டும் தான்- சொத்தை விற்றுவிட்டு இந்தியா திரும்ப தான் யத்தனிக்கிறார்கள். ஏன் என்றால் இளைஞர்கள் யாருக்கும் சிங்களம் தெரியாது, ஶ்ரீலங்கா என்பது கிட்ட தட்ட வெளிநாடு மாதிரி தான். அதுவும் போக அங்கே ஒரு இரண்டாம் தர பிரஜையாக வாழ விரும்பவில்லை. இந்தியாவிலேயே இருக்க தான் விருப்பம்.
ஆனால் ஒரு சிக்கல், இன்னமும் இந்திய குடி உரிமை கிடைக்கவில்லை. அதனால் சட்ட பூர்வமாக வெளிவேலைக்கு போக முடியாது, பெரிய வீடு வாடகைக்கு போகவோ, வாங்கவோ முடியாது.


குடியுரிமை கிடைத்தால் வசதியாக வாழலாம்.
ஆனால் அதற்காக யாரை நாடுவது?
தற்போதைய இந்திய மத்திய அரசோ ரொய்ங்கா இஸ்லாமிய அகதிகளுக்கு ஆதரவு கூட தரவில்லை. அகதிகளை அவர்கள் பாரமாக நினைக்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் முயன்றால் தான் இது முடியும். ஆனால் தற்போதுள்ள அரசியல்வாதி யாருக்கும் இது பற்றி அக்கறை இல்லை. உதவி கேட்டு போக இனி யார் இருக்கிறார்கள்? அதிமுகவில் யாரும் இது பற்றி இது வரை கண்டுக்கொள்ளவில்லை. ஒரு வேளை திமுக ஆட்சிக்கு வந்தால் போய் பார்த்து நிலவரத்தை எடுத்து சொல்லவாவது முடியும். ஆனால் திமுகவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்த விடாமல் தடுக்கிறார்களே?”
“யாரு தடுக்குறா?”
“வெளிநாட்டுல வாழ்ற பணக்கார அகதிகள். அவர்களது கோஷங்களால் திமுகவை பகைக்கிறார். ஆனால் இனி தொடர்ந்து இந்தியாவில் வாழ விரும்பும் எங்களுக்கு இது பாதகமாக இருக்குமே. எங்களை பற்றி யாரும் யோசிப்பதில்லை”
அசவுகர்யமான ஒரு மௌனம்......
“ஆனா ஒண்ணு மட்டும் நல்லதா ஆயிடுச்சு, அகதி முகாம்ல யாரும் ஜாதி பார்க்குறதில்லை!”

கருத்துகள் இல்லை: