புதுச்சேரியில், ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் தலையீடு அதிகம் உள்ளதாக ஆளும்கட்சி மட்டுமல்லாமல், எதிர்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் கிரண்பேடிக்கு எதிராக இருந்தாலும், மக்கள் ஆதரவு அவருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆளுநரிடம் அளிக்கப்படும் புகார் தொடர்பாக, அவர் நேரில் சென்று நடவடிக்கை எடுப்பதே இதற்கு காரணம்.
அண்மையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு ஒதுக்கப்பட்ட 159 முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்களில், 88 இடங்களை மட்டும் நிரப்பிய செண்டாக் அதிகாரிகள், 71 இடங்களை தனியாரிடமே அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செண்டாக் அலுவலகம் சென்ற கிரண்பேடி, தவறு செய்யும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என பகிரங்கமாக எச்சரித்தார். பார்பன கிரண் பேடி தனது மகள் சாய்னா பேடிக்கு பழங்குடி மக்களுக்கு உரிய மருத்துவ படிப்பு இடத்தை போலி சான்றிதழ் மூலம் பெற்றார் .. ஆனாலும் சாய்னா பேடிக்கு படிப்பு வராது என்பதால் தொடரவில்லை . ஒரு பழங்குடி மாணவருக்கு கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பை சட்டவிரோதமாக வீணடித்த தில்லுமுல்லு பேடி
கிரண்பேடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கிரண்பேடியின் இந்த அதிரடி காட்சிகள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த கல்வி ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையில், ஆளுநர் கிரண்பேடி இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகள் தெரியாமல் ஆட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.
உண்மைக்கு புறம்பான வாக்குறுதிகளை கொடுத்து மாணவர்களை தவறாக வழிநடத்தி வருவதாக கிரண்பேடி மீது குற்றம்சாட்டிய நாராயணசாமி, ஆளுநரின் பதவிக்கு மரியாதை கொடுத்து இதுநாள்வரை அவரை பற்றி பேசாமல் இருந்ததாக குறிப்பிட்டார்.
அதிகாரிகளையும், அரசியல் கட்சி தலைவர்களையும் ஊழல் பேர்வழிகள் என, சமூக வளைத்தளங்களில் கிரண்பேடி விமர்சிப்பதாக குற்றம்சாட்டிய நாராயணசாமி, அரசு நிர்வாகத்தில் கிரண்பேடி தலையிடுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.
இதனிடையே நாராயணசாமியின் இந்த குற்றசாட்டுக்கு பதிலளித்த கிரண்பேடி, தனக்கு மாணவர்களின் நலனே முக்கியம் எனவும், அது சார்ந்தே தனது பணியை மேற்கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மாலைமலர்
1 கருத்து:
ஆளுநர் கிரண்பேடி அவர்கள் கறை படியா கரங்களுக்கு சொந்தக்காரர். சந்தேகம்னு வந்தா என்னை கேளுங்க நான் பாண்டிச்சேரிக்காரன். இங்கு அறிக்கை விடும் அரசியல்வாதிகள் தான் ஊழல்வாதிகள்.
கருத்துரையிடுக