ஞாயிறு, 14 மே, 2017

சைபர்' தாக்குதலால் 100 நாடுகளில் கம்ப்யூட்டர்கள்... ஆந்திர போலீஸ் துறையிலும் பரவியது 'வைரஸ்'

சியாட்டில்:அமெரிக்காவின், என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு ஏஜன்சியிடம் இருந்து திருடப்பட்ட, மென்பொருள் தாக்குதல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்தியா உட்பட நுாற்றுக்கணக்கான நாடுகளில், ஏராளமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களில், இணைய தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆந்திர மாநில போலீஸ் துறையைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், இந்த இணைய தாக்குதலில் முடங்கி உள்ளன. கம்ப்யூட்டர் செயல்பாடுகளை முடக்கக் கூடிய, மென்பொருள் வைரஸ் தாக்குதல்கள், ஸ்வீடன், பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் நிகழ்ந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ஊடகங்கள், முதலில் செய்தி வெளியிட்டன. தீயாக பரவியது  ; கம்ப்யூட்டர்களில் நமக்கு தெரியாமல் நுழைந்து, அவற்றின் செயல்பாடுகளை முடக்கும், 'மால்வேர்' எனப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்கியது. 'அவஸ்ட்' என்ற, கம்ப்யூட்டர் வைரஸ்களை தடுத்து அழிக்கும், மென்பொருள் நிறுவனம், இதை கண்டறிந்தது. அந்த வைரஸ், காட்டுத் தீ போல், உலகம் முழுவதும் உள்ள ஏராளமான நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களுக்கு பரவத் துவங்கி உள்ளதாக, அவஸ்ட் கூறியுள்ளது. வைரஸ் கண்டறியப் பட்ட சில மணி நேரங்களில், உலகம் முழுவதும், 75 ஆயிரம் கம்ப்யூட்டர்களில், இணைய தாக்குதல் நடந்துள்ளது.


இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, உக்ரைன், சீனா, இத்தாலி, எகிப்து உள்ளிட்ட, 99 நாடுகளில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, ஸ்பெயினில்,
தொலை தொடர்பு நிறுவனம் உட்பட, பல நிறுவனங் கள், இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளன.மிக மோசமான தாக்குதல், பிரிட்டனில், பெரிய மருத் துவமனைகளில் உள்ள, பிரதான, 'சர்வர்' கம்ப்யூட் டர்களை பதம் பார்த்துள்ளன.

இதனால், அந்த மருத்துவமனைகளில் கம்ப்யூட்டர் களை இயக்க முடியாமல், நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் உள் துறை அமைச்சகம், பிரான்சின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான, ரெனால்ட் ஆகியவையும், வைரஸ் தாக்குதலுக்கு தப்பவில்லை.

இந்த வைரஸ் தாக்கப்பட்ட கம்ப்யூட்டரில், 'உங்கள் கம்ப்யூட்டரை, வைரஸ் தாக்குதலில் இருந்து விடுவிக்க வேண்டுமானால், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 'பிட்காயின்' கரன்சியாக செலுத்துங்கள்; சில காலத்துக்கு பின், நீங்கள் செலுத்த வேண்டிய தொகை அதிகரிக்கப்படலாம்' என்ற, எச்சரிக்கை வாசகம் தோன்றுகிறது.இதனால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், அந்த தொகையை செலுத்தினாலும், கம்ப்யூட்டர் முடக் கம் சரியாகி விடும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

ஆந்திராவிலும் பாதிப்பு

நம் நாட்டில், ஆந்திர மாநில போலீஸ் துறையைச் சேர்ந்த, 102 கம்ப்யூட்டர்கள், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து, கம்ப்யூட்டர் அவசர நிலை குழு இயக்குனர், குல் ஷன் ராய் கூறுகையில், ''ஆந்திராவில், போலீஸ் நிலையங்களில், 102 கம்ப்யூட்டர்கள், இணைய தாக்குதலால் முடங்கி உள்ளது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது; குறிப்பாக, விண்டோஸ் இயங்கு தளத் தில் செயல்படும் கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படு கின்றன,'' என்றார்.

இந்தியாவிலும்,ரஷ்யாவிலும்,பழைய, 'விண் டோஸ் எக்ஸ்பி' இயங்குதளம் மூலம் ஏராளமான கம்ப்யூட்டர்கள் செயல்படுகின்றன. இதனால், இந்த கம்ப்யூட்டர்கள், இந்த வைரசால் எளிதில் தாக்கப்படும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

நிதியமைச்சர்கள் கவலை

உலகம் முழுவதும், கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்களால், முன்னணி நிறுவனங்கள் திண்டாடி வரும் நிலையில், 'ஜி - 7' எனப்படும், வளர்ந்த நாடுகளின் நிதியமைச்சர்கள், இணைய பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, இத்தாலியின் பாரி நகரில், ஜி - 7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கலந்து கொள்ளும் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, இத்தாலியின் நிதியமைச்சர் பியர் கார்லோ படோன், ''முன்னணி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை செயலிழக்கச் செய்யும் வகையில் நடந்து வரும் இணைய தாக்குதல் சம்பவம் துரதி ருஷ்டவசமானது. இத்தகைய தாக்குதல்களை தடுப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டிய தருணம் வந்துள்ளது,'' என்றார்.

நிபுணர்கள் தீவிர முயற்சி

பிரிட்டனின், என்.எச்.எஸ்., எனப்படும், தேசிய சுகாதார சேவை அமைப்பு, லண்டன் முதல் ஸ்காட்லாந்து வரை, 45 இடங்களில் மருத்துவ மனைகளை நடத்தி வருகிறது. இவற்றின் கம்ப்யூட்டர்களை, வைரஸ் தாக்கியுள்ளதால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர் பான விஷயங்கள், அறுவை சிகிச்சை அளிப்ப தற்கான கால அட்டவணைகள் உட்பட அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதை யடுத்து, மருத்துவமனை கம்ப்யூட்டர்களை செயல்பட வைக்கும் முயற்சிகளில், பிரிட்டனின் முன்னணி கம்ப்யூட்டர் பாதுகாப்பு மைய நிபுணர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தினமலர்

கருத்துகள் இல்லை: