ஞாயிறு, 14 மே, 2017

சோனியா தலைமையில் 14 கட்சிகள் கூட்டம் சென்னையில் நடத்த தி.மு.க., ஏற்பாடு

தி.மு.க., தலைவர் கருணாநிதியின், சட்டசபை வைர விழாவை ஒட்டி, சென்னையில், சோனியா உட்பட, 14 கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 19ல் நடக்கிறது. முன்னாள் பிரதமர், மன்மோகன் சிங், முன்னாள் லோக்சபா சபாநாயகர், மீரா குமார் ஆகியோரில் ஒருவரை, ஜனாதிபதி வேட்பாள ராக நிறுத்த, காங்கிரஸ் விரும்புகிறது. வட மாநில கட்சிகளின் தலைவர்களில் சிலர், காந்தி பேரன், கோபாலகிருஷ்ண காந்தி, சரத் யாதவ், சரத் பவார் ஆகியோரில், ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தும்படி வலியுறுத்து கின்றனர். இதனால், காங்., வேட்பாளரை அறிவிப்பதா அல்லது பொது வேட்பாளரை ஆதரிப்பதா என, முடிவு எடுக்க முடியாமல், காங்., தலைவர், சோனியா தடுமாறி வருகிறார்.
இருப்பினும், மாநில கட்சிகள் ஆதரவை பெற, அவற்றின் தலை வர்களை, சோனியா நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

அதன்படி, ஸ்டாலின், காதர் மொய்தீன், தேவகவுடா, பிஜு பட்நாயக், லாலு பிரசாத், முலாயம் சிங், மாயாவதி, மம்தா பானர்ஜி, டி.ராஜா,சீதாராம் யெச்சூரி உட்பட, 14 கட்சிகளின் தலைவர் களையும், தனித்தனியாக சந்தித்து, ஆலோசனை நடத்த சோனியா திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அவர் தொடர்பு கொண்ட, மாநில கட்சி தலைவர்கள் சிலருக்கு, 'செக்' வைக்கும் வகையில், சி.பி.ஐ., வழக்கு மூலம், மத்திய அரசு நெருக்கடி கொடுத்துள்ளது. இதனால், சோனியாவை சந்திக்கும் திட்டத்தை, மாநில கட்சிகளின் தலைவர்கள் சிலர் தவிர்த்தனர்; சோனியாவும் அதிர்ச்சி அடைந்தார்.

அவருக்கு, உணவு ஒவ்வாமை ஏற்பட்டு, மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அதை காரணம் காட்டி, மாநில கட்சிகளின் தலைவர்களை சந்திக் கும் திட்டத்தை, சோனியா ரத்து செய்துள்ளார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியதலைவர், காதர் மொய்தீன், கேரள மாநிலத்தை சேர்ந்த தேசிய பொதுச்செயலர், குஞ்சாலிக் குட்டி எம்.பி., உட்பட, ஆறு பேர், மே, 10ல், சோனியாவை சந்திக்க, டில்லி சென்றனர்.

ஆனால், அவரை சந்திக்க முடியாமல், ஏமாற் றம் அடைந்தனர். அவர்கள், காங்., பொதுச் செயலர், குலாம்நபி ஆசாத்தை மட்டும் சந்தித்து, ஜனாதிபதி< தேர்தல் குறித்து ஆலோசித்து உள்ளனர். ஜூன், 3ல், கருணாநிதியின் சட்ட சபை வைர விழா, சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

அந்த விழாவுக்கு, சோனியா உட்பட, 14 கட்சி தலைவர்களும், மாநில முதல்வர்களும் பங்கேற்க, தி.மு.க., - எம்.பிக்கள், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், அழைப்பிதழ்கள் வழங்கி வருகின்றனர். அன்று காலையில், சென்னையில், சோனியா தலைமையில், 14 கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யலாம் என்று, சோனியாவிடம், தி.மு.க., தரப்பு வலியுறுத்தியதாக தெரிகிறது.

- நமது நிருபர் - தினமலர்

கருத்துகள் இல்லை: