ஞாயிறு, 14 மே, 2017

ஹாஜி மஸ்தான் ,வரதராஜ முதலியார் போன்றோர் சிவசேனாவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார்கள்!

Image may contain: 3 people, eyeglasses and textStanley Rajan:  ஹாஜி மஸ்தான் கதையினை பலமுறை படமாக எடுத்துவிட்டார்கள், சில சர்ச்சைகள் வந்தது, இப்பொழுது ரஜினியினை வைத்து எடுக்க கிளம்பி அடுத்த சர்ச்சை மஸ்தானின் வளர்ப்பு மகன் வடிவில் வந்திருக்கின்றது
மஸ்தான்களில் பல மஸ்தான்கள் உண்டு, குணங்குடி மஸ்தான் எனும் அற்புதமான கவிஞன் உண்டு, இவர் ஹாஜி மஸ்தான் அதாவது மூத்த மஸ்தான் அல்லது பெரிய மஸ்தான் எனும் பெயரில் அழைக்கபட்டவர்
ராமநாதபுரம் பனைகுளம்தான் சொந்தவூர், மருதநாயகத்தின் மண்ணும் அப்பகுதியே. விவசாயம் இன்று பொய்க்கதொடங்கியது அல்ல அது 1920களிலே பொய்த்து அன்றே பலரை மும்பைக்கும் வெளிநாடுகளுக்கும் தள்ளியது
அப்படி சிறியவயதிலே மும்பைக்கு சென்றவர் மஸ்தான், சைக்கிள் கடையில்தான் வேலை செய்தார், பின் கால சூழலில் கடத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டார் என்று சர்ச்சை உண்டு, அது சுதந்திரம் பெற்று கோவா நமக்கா போர்த்துகீசியருக்கா என்ற யுத்தமெல்லாம் நடந்த காலங்களிலே மும்பை கடற்கரை இவரின் ஆதிக்கத்தில் வந்தது

இவரோடு பின்னர் இணைந்தவர்தான் வரதராஜ முதலியார், மஸ்தானின் நண்பர் என்பதால், பாய் என அழைக்கபட்டு வர்தா பாய் என்றே மாறிவிட்டவர்
இவர்கள் காலத்தில் இன்னும் பலர் இருந்தாலும், இவர்கள் இருவரும் பெரும் சக்திகளாயினர், பால்தாக்கரேயின் தமிழர் வெறுப்பு மிரட்டல் காலங்களில் இருவரும் அதனை எதிர்த்து தில்லாக நின்ற காலங்கள் உண்டு
காலம் செல்ல செல்ல வர்தா பாய் இந்துக்களின் காவலனாகவும், மஸ்தான் இஸ்லாமியரில் குறிப்பிட்ட புள்ளியாகவும் வளர்ந்து நின்றனர், அன்றைய மும்பையில் இந்து முஸ்லீம் மோதல் எல்லாம் இல்லை அது எல்லாம் பாபர் மசூதிக்கு பின்னால் வந்த விஷங்கள்
மஸ்தான் கூடுமானவரை தன் அடையாளத்தை நல்ல விதமாக கொண்டிருந்தார், அவர் டான் தான் ஆனால் அவர் மீது வழக்கோ, இல்லை வேறு சர்ச்சைகளோ இருந்ததில்லை, மும்பையின் அனைத்து சந்தைகளையும் ஆட்டி வைத்த தமிழர் அவர், திரையுலகம், கடல் , தங்கம், வைரம் என எல்லாமும் அவர் கட்டுப்பாட்டில் இருந்தன‌
1980களில் மும்பை நிலவரம் மாற தொடங்கியது, காவல் துறை தாதாயிசங்களை ஒழிக்க தொடங்கியது, வரதராஜ முதலியாரை குறிவைத்து விரட்டினார் தவான் எனும் அதிகாரி, ஒருமுறை அவரை கைதுசெய்யும்பொழுதுதான் மூதாட்டி ஒருவர் தன்னையே கொழுத்தி செத்தார், அந்த சம்பவ காட்சி வரதராஜரின் வாழ்க்கை படமான நாயகனிலும் உண்டு
தமிழரின் பெரும் கொந்தளிப்பினை அடுத்து வரதராஜரை சென்னைக்கு அனுப்பினர்ர் போலிசார், ஆனால் மஸ்தான் மும்பையிலே இருந்தார், பின் சென்னையில் வரதராஜ முதலியார் இறந்தபின் அவரின் இறுதிசடங்கில் மஸ்தான் வந்திருந்தார் என்பார்கள், வரதராஜரின் சாம்பலை மும்பைக்கு கொண்டு சென்றது அவர்தான்
வரதர் மீது வழக்கு உண்டு, ஆனால் மஸ்தான் மீது ஒரு வழக்கும் இல்லை, அவ்வளவுதான் வித்தியாசம் மற்றபடி இருவருமே மும்பை தமிழரின் பாதுகாவலர்களாகத்தான் திகழ்ந்தார்கள், ஈழபோராட்ட தொடக்க கால போராளியான செல்லகிளிக்கு வரதராஜர் மும்பையில் வழங்கிய பாதுகாப்பு சிங்களனை அதிரவைத்த காலமும் இருந்தது
ஆனால் சீமான் மும்பையில் இதெல்லாம் பேசமாட்டார், மாறாக தமிழரை விரட்டிய பால்தாக்கரேயினை மராட்டிய பெருமகன் என்பார். வர்தா பாய் , ஹாஜி மஸ்தான் தமிழராக இருந்தும் பேசமாட்டார்
ஏன் என்றால், பேசிவிட்டு இவர் மும்பையினை தாண்டவேண்டும் அல்லவா? அதற்காகத்தான், அங்கிள் அப்படித்தான்
வீரப்பன், பிரபாகரன் வரிசையில் நிச்சயம் வரதராஜ முதலியார், ஹாஜி மஸ்தான் எல்லாம் வருவார்கள் ஆனால் சீமான் பேசமாட்டார், பேசினால் மும்பையில் தமிழர்களே அழைத்து வைத்து சீமானை விரட்டி அடிக்கும் நிலை வரலாம், அதனால் "மராட்டிய பெருமகன் பால்தாக்கரே" என்பதோடு அன்னார் சரி..
ஹாஜி மஸ்தானுக்கும் வரத ராஜனுக்கும் இடையிலான நட்பு பெரிது, ஒரே வித்தியாசம் வரதராஜர் களத்தில் இறங்குவார், மஸ்தான் பின்னணியில் விளையாடுவார்
இந்த குழுக்கள்தான் பின்பு சோட்டா ராஜனாகவும், தாவூத் இப்ராஹிமாக மாறின, தாவூத் மஸ்தானின் இடத்தைத்தான் பிடித்திருந்தான், மும்பை திரையுலகம் ,கிரிக்கெட் என சகலமும் அவனிடம் இருந்தன, மஸ்தானே அவனுக்கு வழிகாட்டி, ஆனால் பாகிஸ்தான் வலையில் விழுந்த தாவூத் இப்பொழுது தேசதுரோகியாக பாகிஸ்தானில் வாழ்கின்றான்
வர்தாபாயின் இடத்தை பிடிக்க நினைத்த சோட்டா ராஜன் இன்னும் தலைதெறிக்க ஓடிகொண்டிருக்கின்றார், இது இன்றைய நிலவரம்
நாயகன் படத்தில் கூட ஒரு அழகான காட்சியில் மஸ்தான் வேடம் வரும், கமலும் ஜனகராஜூம் டான்களை சந்திக்கும் காட்சியில் கோலியின் சரக்கு கடலில் சிக்கிகொண்டதாக காட்டுவார்கள் அல்லவா? , பின் கமல் குயிலியோடு ஆடி சரக்கினை கடத்தியபின், துறைமுகத்தை கொடுப்பார் அல்லவா அந்த‌ அமைதியான வேடம்தான் மஸ்தானுக்குரியது
ஏற்கனவே வரதராஜரின் கதையினை நாயகன் என மணிரத்தினம் எடுத்துவிட்டார், இனி இன்னொருவன் அதனை விட திறமையாக எடுக்கமுடியாது என்பதால் ரஞ்சித்தின் கவனம் ஹாஜி மஸ்தான் பக்கம் சென்றிருக்கலாம்
மணிரத்தினம் வர்தாபாய், ஹாஜிமஸ்தானை கதையினை இணைத்து சக்கரவர்த்தி என்றொரு படத்தினை கமல், ரஜினி வைத்து எடுக்க நினைத்தார் ஆனால் கைகூடவில்லை
இது ரஞ்சித் பொறியினை தட்டிவிட்டது, கபாலி பட்ட பாட்டில் இலங்கை, பர்மா, பிஜூ,மேற்கு இந்திய தீவுகள், ரீ யூனியன் ஐலண்ட், கயானா என தமிழ் வம்சாவழிகள் வாழும் இடங்களில் இருந்த டான்கள் கதைகளை படமாக எடுக்கும் திட்டத்தினை ரஞ்சித் கடாசிவிட்டார்
கபாலியிலே ரஜினியின் கபாலத்தை திறக்க நினைத்தவர் ரஞ்சித், என்னமோ ரஜினி மறுபடியும் சிக்கிகொண்டார், கமலில் நாயகனுக்கு போட்டியாக ரஜினிக்கு மஸ்தான் வேடத்தை கொடுத்து வரலாற்றில் நிறுத்தி பக்கத்தில் தானும் நிற்க ரஞ்சித் நினைத்திருக்கலாம்
ரஞ்சித் நினைக்காத அல்லது மறந்துவிட்ட சம்பவங்கள் நிறைய‌
மாவீரன் திப்பு சுல்தானின் வேடத்தில் ரஜினியினை நடிக்க வைக்கவே முடியவில்லை, இந்துத்வா சக்திகள் அப்படி மிரட்டின‌
திப்பு சுல்தானுக்கே அப்படியென்றால் மஸ்தானின் வேடத்தில் ரஜினியினை நிம்மதியாக விட்டுவிடுவார்களா என்ன?
இப்பொழுது முதல் மிரட்டல் ஹாஜிமஸ்தான் மகன் தரப்பில் இருந்துதான் வந்திருக்கின்றது, இது உண்மையினை எடுக்க வேண்டும் அவரை தியாகியாக காட்ட வேண்டும் என்ற மிரட்டல்
அப்படி எடுத்தால் அடுத்த மிரட்டல் எங்கிருந்து வரும்? தாவூத் இப்ராஹிமுக்கு வழிகாட்டிய மஸ்தான் வேடத்தினை காந்தி, நேரு அளவிற்கு சித்தரிப்பதா? என அடுத்த சர்ச்சை இப்பக்கம் வெடிக்கும்
நாயகன் மணிரத்னம் பாணியில் நல்லவரும் இல்லை கெட்டவரும் இல்லை என முடித்தால் படம் நாயகனின் காப்பியாகிவிடும், இதற்கா ரஜினி என்றாகிவிடும்
எப்படியோ ரஜினிக்கு மறுபடியும் சிக்கல் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை, சிக்கலை தொடங்கிவிட்டிருப்பவர் யார் என சொல்லி தெரியவேண்டியதில்லை
மணிரத்னம் கில்லாடி, நாயகன் படத்தில் பால்தாக்கரே வேடம் வராமல் பார்த்துகொண்டார், யாரும் கேள்வி கேட்கவுமில்லை
ஹாஜி மஸ்தான் கதையில் கண்டிப்பாக பால்தாக்கரேவும் அவரின் சிவசேனாவும் வரும், வரமால் எடுக்க முடியாது, பிறகு ரஜினி பிரச்சினையினை தேடியா போகவேண்டும்?
தெரிந்தே தலை கொடுத்திருக்கின்றார் ரஜினி, அவ்வளவுதான் சொல்லமுடியும், இந்த சிக்கல்கள் பெரும் எதிர்வலைகளை கொண்டுவரலாம்...
ஒவ்வொன்றாக வரும்...அதுவும் இப்பொழுது நாடு இருக்கும் நிலையில் நிச்சயமாக நிறைய வரும், பார்த்தானே போகின்றோம்..

கருத்துகள் இல்லை: