செவ்வாய், 18 நவம்பர், 2014

அகத்தியனின் மகள் நடித்த வெண்ணிலா வீடு பாரதிராஜாவின் பாராட்டு,

செந்தில்-விஜயலட்சுமி நடிப்பில், வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘வெண்ணிலா வீடு’. நடுத்தர குடும்பத்தை மையமாக வைத்து வெளியான இப்படம், மக்களிடையும், ஊடகங்கள் இடையும் பெரும் பாரட்டைப் பெற்றது.
இதற்கிடையில், இப்படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் வெற்றி மகாலிங்கத்தை அழைத்து பாராட்டியதுடன், தனது கைப்பட பாராட்டு கடிதம் ஒன்றையும் எழுதிக்கொடுத்துள்ளார்.
அந்த கடிதத்தில் பாராதிராஜா கூறியதாவது:
இன்று திரைப்படங்கள் வெட்டு, குத்து, வன்முறை என வேறு ஒரு தளத்துக்கு சென்றுவிட்டது. இது பார்வையாளர்களின் குறைபாடு அல்ல, படைப்பாளிகளின் குறைபாடு. காட்சிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது, கதை வறட்சியாக இருப்பதை பார்க்கும்போது வருத்தம் அளிக்கிறது.
ஆனால், ‘வெண்ணிலா வீடு’ வெள்ளித்திரையில் சொல்ல மறந்த வெண்பனி வீடு.டைரக்டர் அகத்தியனின் மகள்தான் இதில் நடிக்கும் விஜயலட்சுமி,

இந்த சமூகம் எவ்வளவு தான் விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டாலும், வாழ்விலும் நடைமுரையில் அவன், கடந்து வந்த பாதை, பாசம், உறவுகள், மண்வாசனையை விட்டு விலகுவதில்லை.
குறைந்த செலவில் கதை, கதாபாத்திரம், உறவுகள் கொண்டு சரியான கலவையில் கட்டப்பட்ட உன்னுடைய வெண்ணீலா வீடு, நமது கிராமத்தின் கலாச்சாரத்தை நான்கு அறைக்குள் வைத்து வீடு கட்டி விளையாடி வெற்றி கண்டது கண்டு பெருமை அடைகிறேன். வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் பாராதிராஜ கூறியிருந்தார். /tamil.chennaionline.com

கருத்துகள் இல்லை: