செவ்வாய், 11 நவம்பர், 2014

90 ஆயிரம் Passport விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கும் லக்னோ பாஸ்போர்ட் அலுவலகம்

உத்தரப்பிரதேசம் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில் 90 ஆயிரம் விண்ணப்பங்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இம்மாதம் வரை இந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சுமார் இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றதாகவும், கடந்த ஆண்டு வரப்பெற்ற விண்ணப்பங்கள் உள்பட சுமார் 2.1 லட்சம் பாஸ்போர்ட்கள், விண்ணப்பதாரர்கள் பற்றிய விபரங்கள் சரிபார்ப்புக்கு பின்னர் இந்த ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. எனினும், விண்ணப்பதாரர்கள் பற்றிய விபரங்களை சேகரித்து தகவல் அளிக்கும் போலீசாரின் விசாரணை நிலையில் சுமார் 69 ஆயிரம் விண்ணப்பங்களும், பூர்த்தி செய்யப்படாத தகவல்கள் மற்றும் தகவல் பிழைகளால் 8 ஆயிரம் விண்ணப்பங்களும்,
விபரங்கள் சேகரிக்கப்பட்டு அலுவலகப் பணிகள் நிறைவு பெறாத நிலையில் 13 ஆயிரம் விண்ணப்பங்களும் இங்கு கிடப்பில் போடப்பட்டுள்ளதாக இந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. maalaimalar.com

கருத்துகள் இல்லை: