ஞாயிறு, 14 ஜூலை, 2013

நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டுக் கூறும் நரேந்திரமோடியின் திமிர்!

நரேந்திரமோடி ஒரு திருந்தாத ஜன்மம்!
நான் ஒரு இந்துத் தேசியவாதிதான்!
குஜராத்தில் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளும் சரியானதே!

நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டுக் கூறும் திமிர்!
நரேந்திரமோடியின் மதவெறி கக்கும் நச்சுப் பேட்டி!

அகமதாபாத் ஜூலை 13- நான் ஒரு இந்துத் தேசிய மதவாதிதான் என்று குஜராத் முதல் அமைச்ச ரும், பிஜேபி யின் பிரதம ருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளவ ருமான நரேந்திரபாய் தாமோதர தாஸ் மோடி பேட்டி அளித்துள்ளார். இதற்குத் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்துள்ளார்.
குஜராத் கலவரம்
கடந்த 2002ஆம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் பயங்கர வகுப்பு கலவரம் மூண்டு ஏராளமானவர் கள் பலியானார்கள். அப்போது அந்த மாநி லத்தின் முதல் அமைச் சராக பதவி வகித்தவர் நரேந்திரமோடி.
தற்போது பா.ஜனதாவின் தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நரேந்திரமோடி, கட்சி யின் அடுத்த பிரதமர் வேட்பாளராக அறிவிக் கப்பட்டுள்ளார். அதன் பிறகு, முதன் முறையாக வெளிநாட்டு செய்தி நிறு வனத்துக்கு நரேந்திர மோடி அவருடைய இல் லத்தில் பேட்டி அளித்தார். அப்போது குஜராத் கலவரம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வருவது உங்களை கஷ்டப்படுத் தியதா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதில் அளித்து நரேந்திரமோடி கூறியதாவது:
நான் ஏதாவது தவறு செய்து இருந்தாலோ அல்லது திருடியிருந்தாலோதான் அது போன்ற மனக்கஷ் டம் வரும். இந்த பிரச் சினையில் அது போன்று எதுவும் இல்லை. இந்த கலவரத்தின்போது நான் மேற்கொண்ட நடவடிக் கைகள் சரியானவை தான். இந்த கலவரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக்குழு, நான் குற்றமற்றவன் என்று நற் சான்றிதழ் வழங்கி உள் ளது. அதே நேரத்தில் மற் றொரு கோணத்திலும் இந்த பிரச்சினையை பார்க்க வேண்டும்.
சிறுபான்மையினரை நாயோடு ஒப்பீடு
நாம் ஒரு காரை ஓட்டிச் சென்றால், அல்லது வேறு ஒருவர் ஓட்ட நாம் பின்னால் அமர்ந்து செல்லும் போது எதிர்பாராதவித மாக காரின் சக்கரத்தில் ஒரு நாய்க்குட்டி (பப்பி) சிக்கிக்கொண்டால் கூட மனதுக்கு கஷ்டமாக இருக்குமா? இருக்காதா?, நிச்சயம் அது வேதனை அளிப்பதாகத்தான் இருக்கும். நான் முதல் அமைச்சராக இருக் கிறேனோ இல்லையோ, நான் ஒரு மனிதன். எங்கு எந்த கெட்ட விஷயம் நடந்தாலும் மனதுக்கு வேதனையாகத்தான் இருக்கும்.இவ்வாறு நரேந்திரமோடி கூறி னார். (சிறுபான்மையி னரை நாய்க் குட்டி யோடு ஒப்பிட்டுள்ளார்) மற்றொரு கேள்விக் குப் பதில் அளித்த நரேந்திரமோடி, நான் இந்துவாகப் பிறந்ததால் இந்து தேசியவாதி என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறு கையில், நான் தேசிய வாதி. நான் ஒரு தேச பக்தர். இதில் தவறு ஒன்றும் இல்லை. நான் இந்துவாக பிறந்தவன். எனவே என்னை இந்து தேசியவாதி என்று நீங் கள் கூறிக்கொள்ள லாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:-
எது மதச்சார்பின்மை?
இந்தியாவுக்கு மதச்சார்பற்ற தலைவர் அவசியம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. ஆனால், மதச் சார்பின்மை என்பதற்கு என்ன விளக்கம்? என்னைப் பொறுத்த வரை, எனது மதச்சார் பின்மை எதுவென்றால், இந்திய நாட்டிற்கே முதலிடம்.
எனது கட்சியின் தத்துவம் எதுவென்றால், அனைவருக்கும் நீதி, யாரையும் தாஜா செய்வ தாக இருக்கக்கூடாது என்பதாகும். இதுதான் எங்களுடைய மதச் சார்பின்மை. என்னை எதேச்சாதி காரி என்கிறார்கள். நீங் கள் உங்களைத் தலைவர் என்று அழைத்துக் கொள்ள வேண்டுமா னால், உறுதியானவ ராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் தலைவராக உயரும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. இவை நாணயத் தின் இருபக்கங்களாகும்.
தலைவர் என்பவர் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அப்படி இருந்தால் தான் அவரை தலைவராக ஏற்றுக்கொள்வார்கள் அதே நேரத்தில், ஒருவர் எதேச்சாதிகாரியாக இருந்தால், அவரால் எப்படி பல ஆண்டுகள் அரசை நடத்த முடியும்? குழு முயற்சி இல்லாமல் நீங்கள் எப்படி வெற்றி பெற  முடியும்?
வாக்குகள்
முஸ்லிம்கள் உள் ளிட்ட சிறுபான்மை மக் களுடைய வாக்குகளை எப்படி என்னால் திரட்ட முடியும் என்று கேட்கிறீர்கள்? அனைத்து வாக்காளர் களையும் இந்தியர்களா கவே நான் பார்க்கிறேன். இந்த நாட்டை இந்து-முஸ்லிம், இந்து-சீக்கியர், இந்து-கிறிஸ்தவர் என்று பிளவுபடுத்த நான் விரும்பவில்லை.
அனைவருமே இந்த நாட்டின் குடிமக்கள். அனைவரும் வாக்காளர் கள், எல்லோரும் என் நாட்டு மக்கள். ஜன நாயக நடைமுறையில் மதத்தை சொந்த நோக் கத்துக்கான கருவியாக பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
சர்ச்சைக்கு பதிலடி
இதற்கிடையில், பேட்டியின்போது நரேந்திரமோடியின் நாய்க்குட்டி தொடர் பான சர்ச்சைக்குப் பதில் அளித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன், சிறுபான்மையோரை தாஜா செய்வதற்காக மோடியின் கருத்து தவ றாக பொருள் காணப் பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
கட்சிகளின் தலைவர்களின் கண்டனங்கள்!
இது தொடர்பாக காங்கிரசின் பொதுச் செயலாளர் அஜய் மக் கான் செய்தியாளர்களி டம் கூறியது:
குஜராத் கலவரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மோடி தெரிவித்த கருத்து கடும் கண்டனத்துக்கு உரியது. இது அவரது மூர்க் கத்தனமான சிந்த னையை வெளிப்படுத்து வதாகவும், இந்தியாவின் கொள்கைக்கு மாறாக இருப்பதையும் காட்டு கிறது. இதற்கு அவர் உடனடியாக மன்னிப்பு கேட்பது அவசியம் என் றார் அவர்.
சமாஜவாதி கட்சி: சமாஜவாதி கட்சியின் செய்தித் தொடர்பாளர் கமால் ஃபாரூக்கி கூறு கையில், "மோடியின் கருத்து மிகவும் வேதனை அளிக்கக் கூடிய, அவ மதிக்கும் வகையில் அமைந்த, மிகவும் வருத்தமளிக்கக்கூடிய கருத்தாகும். அவர் எவ் வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்கிறாரோ அவ்வ ளவு நல்லது என்றார்.
எதிர்ப்பாளர்களுக்கு நரேந்திர மோடி பதில்
தனது பேட்டிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி யதைத் தொடர்ந்து நரேந்திர மோடி, நேற்று இணையதளம் டுவிட்ட ரில் கூறி இருந்ததாவது:-
நமது கலாசாரத்தில் அனைத்து விதமான உயிர்களும் மதிக்கப்படு கின்றன. போற்றப்படு கின்றன. நான் ராய்ட்டர் நிறுவனத்துக்கு அளித்த ஒரிஜினல் பேட்டியைப் படித்து மக்களே நல்ல தீர்ப்பு வழங்கட்டும். இவ்வாறு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
(இதன் மூலம் நாயோடு சிறுபான்மையினரை ஒப்பிட்டதை நியாயப் படுத்துகிறார் மோடி)

கருத்துகள் இல்லை: