வெள்ளி, 4 அக்டோபர், 2013

தலைக்கு10 லட்சம் அறிவிக்கப்பட்ட பக்ருதீன் சென்னையில் பிடிபட்டான்

போலீஸ் பக்ருதீன் பிடிபட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள் மதுரையில் பாஜக மூத்த தலைவர் அத்வானி வரும் பாதையில் பைப் வெடிகுண்டு வைத்ததாக பதியப்பட்ட வழக்கில் போலீஸ் பக்ருதீன் உட்பட 4 பேரை முக்கிய குற்றவாளிகளாக சிபிசிஐடி போலீசார் அறிவித்திருந்தனர். மேலும் இவர்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சம் பரிசு என்றும் தமிழ்நாடு முழுவதும் போஸ்டர் ஒட்டினர் போலீசார்.
இந்த சூழ்நிலையில் சென்னை புறநகர் பகுதியில் திருவள்ளூர் மாவட்ட எல்லையில் முக்கிய குற்றவாளியான போலீஸ் பக்ருதீன் பதுங்கியிருக்கும் தகவல் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
உயர்மட்ட அளவிலேயே இந்த தகவல்களை பரிமாறிக்கொண்டு குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றி வளைத்தனர் போலீசார். அந்த அதிரடி வளைப்பில் போலீஸ் பக்ருதீன் வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி அளவில் போலீசாரிடம் சிக்கி கொண்டான்.
போலீஸ் பக்ருதீன் சிக்கிக் கொண்ட தகவல் கசிய ஆரம்பித்த அதேவேளையில்தான் சென்னை யானைகவுளியில் திருப்பதி குடை ஊர்வலம் துவங்கியது. இதனால் ஏதேனும் விரும்ப தகாத அசம்பாவிதங்கள் நடந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில் அங்கு பாதுகாப்பு உடனடியாக பலப்படுத்தப்பட்டது.
குடை செல்லும் பாதையில் ஆயிரக்கணக்கான போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டனர். இது குடை ஊர்வலத்தில் பங்கேற்ற பொதுமக்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. ஏனென்றால் எந்த வருடமும் திருப்பதி குடை ஊர்வலத்திற்கு இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டதில்லை என்பதுதான் இதற்கு காரணம்.
இதுகுறித்து காவல் உயர் அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, முத-ல் அப்படி ஏதும் நடக்கவில்லை என்று மறுத்தவர்கள் பின்னர் போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபடவில்லை என்று மட்டும் தெரிவித்திருந்தனர்.
நமக்கு முன்னர் கிடைத்த தகவ-ன்படி போலீஸ் பக்ருதீன் பெரியமேட்டில் தனது நண்பருக்கு சொந்தமான ஒரு விடுதியில் தங்கியிருந்தார், அன்றைக்குத்தான் அவர் கைது செய்யப்பட்டார் என்று தெரியவந்தது. இதுபற்றி போலீசார் மறுத்தாலும் போலீஸ் பக்ருதீன் சென்னையில் பிடிபடவில்லை என்றுதான் சொன்னார்களே தவிர, பிடிபடவில்லை என்று சொல்லவில்லை. தற்போதைய தகவ-ன்படி சிபிசிஐடி மற்றும் க்யூ பிரிவு போலீசார் ரகசிய இடத்தில் வைத்து போலீஸ் பக்ருதீனை விசாரித்து வருகின்றனர் என்று தெரிய வந்ததுள்ளது.
வருகிற 17ஆம்  தேதி சென்னை மியூசிக் அகாடமில் நடக்கும் ஒரு விழாவில் குஜராத் முதல் அமைச்சரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி பங்கேற்க உள்ள நிலையில் போலீஸ் பக்ருதீன் பிடிபட்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாக கருதப்படுகிறது. போலீஸ் பக்ருதீன் பிடிபட்டுள்ளதால் அவருடைய மற்ற கூட்டாளிகள் எளிதில் போலீசில் சிக்கலாம் என்று கருப்படுகிறது.
போலுஸ் பக்ருதீன் சுற்றி வளைக்கப்பட்டபோது, போலீசாரிடம் எந்த எதிர்ப்பும் காட்டாமல் அமைதியாக கைதுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.nakkheeran.in

கருத்துகள் இல்லை: